முகங்கள்-20
2319
11
அத்தியாயம் – 20
மெல்ல மெல்ல கண்களை திறக்க முயன்றாள் , ஏதோ மங்கலாக தெரிந்தது. மீண்டும் கண்களை மூடித்திறந்தாள் இப்போது கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. அவளது கையை யாரோ பிடித்திருப்பது போல் தோன்றியது. யார் என்று பார்த்தவள் அதிர்ந்தாள், ருத்ரபிரதாப் தான் அவளது கையை பிடித்துக் கொண்டிருந்தான். சட்டென உதறி தன் கையை விடுவித்துக் கொண்டாள்.
அசைவு தெரிந்ததும் எழுந்து நின்ற ருத்ரபிரதாப்பின் கண்கள் கோபத்தில் சிவந்தன.
அஷ்வினும் அங்குதான் இருந்தான், அவன் பார்க்க தனது கையை அவள் உதறியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை .
உடனே அவனிடம் திரும்பி “அஷ்வின் ப்ளீஸ் லீவ் அஸ் அலோன் “என்றான்
ஆனால் அவனோ நந்தினியை பார்த்தான், அவள் எதுவும் பேசாததால் “டேக் கேர் நந்தினி” என்று விட்டு வெளியேறினான்
“ஆர் யூ ஓகே? ” – என்று கேட்ட ருத்ரபிரதாப்பிற்கு பதிலேதும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள்
கோபத்தில் அவனது வெண் நிற முகம் செக்கொழுந்தாகியது. இருப்பினும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.அவளருகிலிருந்த சேரில் மீண்டும் அமர்ந்து கொண்டான்
உணவு இடைவேளையின் போது அவனை தேடிக்கொண்டு வந்துவிட்டான் பிரகாஷ்
படுக்கையில் காய்ந்த சிறகாய் கிடந்தவளை கண்டதும் துணுக்குற்றான்
“என்னாச்சி ருத்ரா? ”
“லேசான மயக்கம் அவ்ளோதான் ”
“ஏன்? ”
“லோ பீபி ”
“வேற எதுவும் சீரியசா இல்லையே? ”
“அதெல்லாம் எதுவும் இல்ல ”
ருத்ரனின் முகத்தில் எதை படித்தானோ “ருத்ரா ஆர் யூ ஓ.கே? ” என்று கேட்டான்
சில நொடி மௌனம் காத்த ருத்ரன்
“ஐ ஆம் நாட் ” என்று மெதுவாக கூறினான்
“ருத்ரா ” நட்போடு அவன் தோள் பற்றி பிரகாஷ் விளிக்கவும்
“இதோ, இவ தான் காரணம், அமைதியா இருந்தே என்ன கொல்றா ”
“நீ எந்த முடிவெடுத்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும், ஆனால் இந்த திருமணம்….” முடிப்பதற்கு பயந்தவன் பாதியிலேயே நிறுத்தினான்
“அதுக்கும் இவதான் காரணம், என்னோட எல்லா பிளானும் நாசமா போச்சு, எல்லாம் இந்த இர்ரெஸ்பான்சிபிள் இடியட்டால ” கட்டிலில் படுத்திருந்தவளை காட்டி ஆக்ரோஷமாக கத்தினான்
அதற்கு மேல் தூங்குவது போல் நடிக்க முடியவில்லை அவளால் கட்டிலிலிருந்து ஆவேசமாக எழுந்தவள்
“நான் தான் உங்களை பிரஸ் மீட் கொடுக்க சொன்னேனா? நம்மோட பேர் கிசு கிசுல கூட சேர்ந்து வந்துட கூடாதுன்னு நினைச்சேன், ஏன் இன்னைக்கு காலையில உங்க அபிப்ராயமும் அதுதானே. அதுக்குள்ள என்ன வந்தது? ” கோபமாகவே கேட்டாள்
“அஷ்வின் வந்துட்டான்” ருத்ரனும் அதே கோபத்தில் பதிலளித்தான்
“அதுக்கு…..இவ்வளவு பெரிய நாடகமா? செத்தாலும் சாவேனே தவிர இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” உறுதியாக கூறினாள்
“ஹலோ …. எக்ஸ்க்யூஸ்மி, எனக்கும் அந்த ஐடியா துளிகூட இல்ல.” திட்டவட்டமாக கூறினான் ருத்ரபிரதாப்
குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்
“ருத்ரா என்னடா ” கேட்டேவிட்டான் பிரகாஷ்
அவனுக்கு பதிலளிக்காமல் அவள் கட்டிலருகே சென்றவன்
“நான் சொல்லப் போறதை நல்லா கேட்டுக்கோ, பத்து நாள்ல ஷுட் முடிக்கதான் நான் பிளான் பண்ணேன், பட் நீ கோஆப்ரேட் பண்ணலை, அதுக்குமேல அஷ்வினை டைவர்ட் பண்ணவும் முடியல, அவன் வந்துட்டான். அவன் உன்கிட்ட வந்தா, பேசினா, இப்படி எல்லாமே ஆபத்துன்னு தான் நான் இப்படி ஒரு அனவுன்ஸ்மென்ட் பண்ண வேண்டியதா போச்சு, பட் யூ டோன்ட் ஒர்ரி, இந்த படம் முடிஞ்சதும், நமக்குள்ள மனஸ்தாபம்னு நியூஸ் பரப்புவோம், அப்புறம் பிரேக் அப் தான், காதல் தோல்வின்னு பட வாய்ப்பை நீ தள்ளிப்போடவும் இது உதவும்” நீண்ட உரையாற்றி முடித்தவன் அவள் பேச இடைவேளை கொடுத்தான்
“அப்போ, படம் முடிஞ்சதும் நான் என் வழில போகலாம்? அப்படி தானே? ” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்
சில நொடி அமைதிக்கு பின் “நிச்சயமா போகலாம் ” என்றான்
“இது போதும்” சந்தோஷமாகவே பேசினாள்
“அதுக்கு படம் சீக்கிரம் முடியனும் ” என்று எச்சரிப்பது போல் பேசியவன் அவளது பதிலை எதிர்ப்பார்காமல் “இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ, பட் நாளையிலிருந்து டைட் ஷெட்யூல் இருக்கு, நீ வா பிரகாஷ், இன்னிக்கு பூட்டேஜ் எங்க? ” என்று பிரகாஷுடன் பேசிக்கொண்டே அந்த ரூமைவிட்டு வெளியேறினான்
ஓர் அசிஸ்டன்ட் மேக்அப் ஆர்டிஸ்ட்டை அழைத்து,” நந்தினி மேடத்தை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்கோங்க ” என்று கட்டளை பிறப்பித்துவிட்டே தன் அறைக்கு சென்றான்
அவனது அறைக்குள் நுழைந்ததுமே “பாவம்டா அவ, என்ன இருந்தாலும் ஒரு பொண்ணோட உணர்வுகளோட நீ விளையாடுறது சரியில்லை ருத்ரா, சாரி டு சே திஸ்” என்றான் பிரகாஷ்
பிரிட்ஜை திறந்து ஒரு குளிர்பானத்தை எடுத்து குடித்தவன்
“இட்ஸ் மை ஸ்டைல் “என்றான் கூலாக
“பிரேக்கப்புக்கு என்ன காரணத்தை சொல்ல போற? ”
பாட்டிலை பிரகாஷிடம் நீட்ட அவன் வேண்டாமென்று சைகை செய்ததும் மீண்டும் பிரிட்ஜினுள் வைத்து மூடியவன் “ஆயிரம் காரணம் சொல்லலாம், நம்ம இன்டஸ்ட்ரீல இது சர்வ சாதாரணம், பட் அதுக்கு அவசியமென்ன? ” சூட்சமமாக சிரித்தவனிடம்
“வாட் டு யூ மீன்? ” அதிர்ச்சியாக வாய்பிளந்தான் பிரகாஷ்
“பிரேக்கப் ஆனாதான ரீசன் வேணும்? ” மர்மச்சிரிப்புடன் ருத்ரன் கூற குழப்பத்துடன் அவன் முகம் பார்த்தான் பிரகாஷ்
முகங்களின் தேடல் தொடரும் ….
Next Ud-Monday
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
superrrrrrrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
poovizi vizi says:
supera pokuthu( i am new to this site ) intha kathayin name thaan ennai irthathu ippathaan ellaavarraiyum padithen rompa nalla pokuthu …..thrillinga iruku….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
poovizi vizi says:
hi thamizhil post pota mudiyalai ……………
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Ruthra vanthen unna kolai panniruven ipati potu kulappura appa pirakasu nee eppatithan avana samalikkiriyo.sis avanthan appati kolappurana neenga chinna epiya poturinga.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
ருத்திரனுக்கு சந்தனாவை முன்பே தெரியுமா,சந்தனாவை எக்காரணம் கொண்டு தன் கையை விட்டு போகவிடமாட்டார்போல,அதற்கு ஒரு காரணம் நந்தினி மரணம் சம்பந்தப்பட்டது என்றாலும் கூட இன்னமும் ருத்திரனுக்கு சந்தனாவை தன் கை நழுவ விடாமைக்கு அதையும் மீறிய ஏதோ ஒன்று இருக்கின்றது,அது சந்தனா மீதான காதலா,இப்போ ஏன் சந்தனாவுக்கு பொய்யான நம்பிக்கை கொடுக்கணும்,தன் வேலைக்காக என்றாலும் இப்படி சந்தனாவை ஏமாற்றுவது தப்பு.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
ha ha ha….. sema…..
interesting……
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Ennamo plan pannitan….ennadhu dhaan theriyala….but nalla kulapura rudhrapratap
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepashvini Writes says:
நாங்க தலையை பிச்சிக்கிறதுல உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா, இந்திரா..
ப்ளீஸ் சந்தனா மாதிரி
நாங்கலும் பாவம் இல்லையா ..😢😢
ருத்ரான்👈 இவன் என்ன மாதிரியான ஆளு, இவன் கேரெக்டேரையே, புரிஞ்சிக்க முடியலையே..😲
ஹ்ம்ம் அவன் பிரெண்ட்ட் பிரகாஷ்ல கூட புரிஞ்சிக்க முடியலயே…😢
ருத்ரனின் மனதில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்துகொள்ள ஆவலுடன் நான்🙋🙋
தீபஷ்வினி…😍
பி.கு: இந்த அத்தியாயம் ரொம்ப சின்னது😡😡
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Shamika Nazruk says:
ஏன் இத்தனை சிறிய அத்தியாயம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Adappavi .. Enna than da namburathu … Padapidippu nalla mudiyanumnu marubadiyum poiyaaaa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
😳😳😳