முகங்கள்-23
2210
26
முகங்கள் – 23
“ஷ்…ஷ்….ஷப்பாடா… ஒரு வழியாய் இன்றைய ஷூட் முடிஞ்சதுடா சாமி ” தொப்பென சோபாவில் விழுந்தான் பிரகாஷ்.
இரண்டு கோப்பைகளில் விஸ்க்கியை ஊற்றி ஒன்றை பிரகாஷின் புறம் நீட்டினான் ருத்ரபிரதாப்.
அதனை பெற்றுக்கொண்டு ஒரே மிடறில் வாயினுள் கவிழ்த்து விழிமூடி விழுங்கியவன், “தேங்க்ஸ் ருத்ரா, வர வர புதுசு புதுசா தலைவலி வருது, அதுக்கெல்லாம் பெஸ்ட் மருந்து இது தான், சர்வலோக நிவாரணி” என்று ருத்ரனை உற்றுப் பார்த்தான்.
ஆனால், இவனது பேச்சில் ருத்ரனின் கவனம் இருக்கவில்லை, அவனது புருவம் முடிச்சிட்டிருந்தது, எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
வேறு வழியின்றி அமைதி காத்தான் பிரகாஷ். இனி அவனாக பேசினால்தான் உண்டு.
சில நிமிடத்திற்கு பிறகு, “நேற்று நந்தினிக்கு வந்த எஸ்எம்எஸ் ல மித்ரனோடது ஏதாவது இருந்ததா பிரகாஷ்” – அவனது பார்வை கோப்பைக்குள் இருந்த திரவத்தின் மீது நிலைத்திருந்தது.
இரண்டாவது ரவுன்டை கோப்பைக்குள் ஊற்றிக் கொண்டிருந்த பிரகாஷ் ஸ்விட்ச் போட்டார் போல் திரும்பினான். பாட்டிலில் இருந்த விஸ்க்கி கிழே ஊற்றியது, அதனை விடுத்து, “ஆ….ஆங்….வந்…தது…. ருத்ரா!, ஏன்?” மனதிற்குள் ஏதோ உறுத்த தட்டுத் தடுமாறி பதிலளித்தான்.
“என்னன்னு? ” அவனது கண்கள் கூர்மைபெற்று கோப்பையை விட்டு பிரகாஷை அடைந்தன.
“அ…அ…அது…வ..ந்..து ” உதடுகள் தந்தியடிக்க தொடங்கி விட்டது பிரகாஷிற்கு. அவனையே உறுத்து விழித்த ருத்ரனின் பார்வையின் தாக்கத்தை பிரகாஷால் தாங்க முடியவில்லை.
“வேண்டாம் ருத்ரா, விட்டுடேன், இந்த பீல்டுல இதெல்லாம் சகஜம்தானே…” – அவனை சமாதானம் செய்ய முயன்றான்.
“நாங்க கமிடட்னு அனவுன்ஸ் பண்ணின பிறகு தப்பான எஸ்எம்எஸ் அனுப்பறது எந்த ஃபீல்டா இருந்தாலும் தப்புதான்” – சீற்றத்துடன் எழுந்தவனை பீதியோடு பார்த்தான் பிரகாஷ்.
நல்லவேளையாக கதவு தட்டப்பட்டது. இருக்கையிலிருந்து எழுந்துவிட்டதால் ருத்ரனே சென்று கதவை திறந்தான். ‘அப்பாடா ‘என்றிருந்தது பிரகாஷிற்கு.
அவன் நினைத்ததும் சரியாகிவிட்டது ருத்ரனுக்கு எதிரிகள் அதிகரிக்கிறார்கள் ‘முதல் எதிரி சந்தனாதான். அதில் துளியும் சந்தேகமில்லை, அடுத்து கிருபாகரன், அஷ்வின், சஞ்சய், இன்றைக்கு இந்த லிஸ்ட்டில் புதுவரவு மித்ரன் ‘ம்..ம்.. இன்னும் என்னல்லாம் நடக்குமோ!” மனதிற்குள் இருக்கும் பயத்தை இன்னொரு பெக்கை ஊற்றி போக்க முயற்சித்தான் பிரகாஷ்.
ருத்ரன் கதவை திறக்க வெளியே தேவ் நாயர் நின்றிருந்தான்.
“சார்… சஞ்சய் உங்களை தேடி வந்துட்டிருக்காரு, உள்ளே அனுப்பட்டுமா இல்லை, ஏதாவது சொல்லி திருப்பி அனுப்பிடவா?” என்று கேட்டான்.
“நேரா இங்க வந்தா உள்ள விடு தேவ்” அர்த்தத்துடன் தேவ்வை பார்த்தான், அவனும் புரிந்துகொண்டவனாய் தலையசைத்து விட்டுச்சென்றான்.
சந்தனாவின் ரூமினுள் சஞ்சய் நுழைந்த அன்று இரவே தேவ்வை சந்தனாவிற்கு காவல் வைத்து விட்டான் ருத்ரன். சந்தனாவிற்கே தெரியாமல் அவளை காவல் காத்த தேவ் நாயர் அனாவசியமாக யாரையும் சந்தனாவை நெருங்க விடுவதில்லை, ஆனால் மித்ரனை அவனால் தடுக்கமுடியவில்லை. கதையின் நாயகன் ஏதாவது பிரச்சனையாகிவிட்டால் படபிடிப்பு நிறுத்தப்படும். அதனால் ருத்ரனின் காதுகளில் மித்ரனை பற்றி போட்டு வைத்ததோடு சரி.
கதவை மூடிவிட்டு உள்ளே வந்த ருத்ரனிடம், “யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தேவ்கிட்ட சொல்லிட்டு தானே வந்தோம் ” அலுப்புடன் கேட்டான் பிரகாஷ்.
“வர்றது சஞ்சய், ஸ்டாப் பண்ண முடியாது வரட்டும்” என்ற ருத்ரன் தளர்வாய் சோபாவில் சாய்ந்தான்.
சில வினாடிகளில் கதவுதட்டப்பட்டு உள்ளே நுழைந்த சஞ்சய் நேரே ருத்ரனின் முன் வந்து நின்று கைநீட்டி “கங்கிராஜுலேஷன்ஸ் ருத்ரன், கமிட்டாயிட்டீங்க டிரீட் இல்லையா” நக்கலுடன் சேர்ந்து வன்மம் இருந்தது அவன் குரலில்.
அதனை அங்கிருந்த இருவராலும் தெளிவாக உணரவும் முடிந்தது. ஆனால் பதிலளிப்பவனும் சாமானியனில்லையே!
“ஓ…. தேங்க்யூ சஞ்சய், ஒரு கிராண்ட் டிரீட்க்கு ஏற்பாடு செய்துடலாம், ஒய் டோன்ட் யூ ஜாயின் அஸ் ஃபார்த டிரிங்க் நவ்” என்று இருக்கையை காண்பித்தான் ருத்ரன்.
பிரகாஷ் மனதிற்குள் கடுப்பானான். “சும்மா கிடக்குற சனியன தூக்கி பனியன்குள்ள போட்டுக்கனுமா, அவனே போறேன்னாலும் கூப்பிட்டு வம்பிழுக்கறானே!” என்று நினைத்தபடி ருத்ரனை முறைத்தான்.
“ஒய் நாட்” என்று சிரித்தபடியே அமர்ந்தான் சஞ்சய்.
இரண்டு மூன்று ரவுன்ட் எந்த பிரச்சனையுமில்லாமல் சென்றது. நான்காவது ரவுண்டில் சஞ்சய் பேசினான்.
“நாம ஒரு டீல் போட்டுக்கலாமா ருத்ரன்?” ‘பீடிகை அதிகமா இருக்கே! கூர்ந்து கவனித்தான் பிரகாஷ்.
“என்ன டீல்?” – சாதாரணமாகவே கேட்டான் ருத்ரன்
சிறு அமைதிக்கு பின், “ஒ….ஒரே…. ஒரு நாள்…. சந்தனாவை…. என்னுடன்…. அனுப்பி வைக்கணும்” என்றவனது கண்களில் இச்சையும் எதிர்பார்ப்பும் இருந்தது.
உலகம் எதிர் திசையில் சுற்றுவது போல் இருந்தது பிரகாஷிற்கு. ‘எப்படி இந்த தைரியம் வந்தது இவனுக்கு!’ – அதிர்ச்சியோடு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
உண்மையில் போதையின் வீரியம் இல்லாவிட்டால் இந்த டீல் பேசும் தைரியம் அவனுக்கு வந்திருக்காது. அளவுகடந்த ஆசையும் மதுபோதை கொடுத்த துணிவும் அவனை அப்படி பேச வைத்தது.
கண்கள் கோபத்தில் சிவந்துவிட்டாலும் நிதானத்தை கைவிடாமல், “ம்ம்ம்… சொல்லு சஞ்சய், ஏதோ டீல்னு சொன்ன போலருக்கு!” என்றான் அலட்சியமாக.
“ம்ம்ம்… எஸ்… டீல் தான்… நா கேட்டபடி சந்தனாவை அனுப்பிவிட்டால் குகைக்குள் நடந்த ரகசியம் ரகசியமாகவே இருக்கும்” என்றான் கயமையுடன்.
“அனுப்பாவிட்டால்??!!! ” சிவந்திருந்த கண்கள் எங்கே வெளியே வந்துவிடுமோ என்று அஞ்சுமளவிற்கு அவனை முறைத்துப் பார்த்தான் ருத்ரன்.
“நீ நந்தினியை கொன்னுட்டு சந்தனாவை நந்தினியா நடிக்க வெக்கறேன்னு சாட்சி சொல்லுவேன், தட்ஸ் ஆல்”
அவன் பேசுவதை முழுமையாகக் கேட்டுவிட்டு இருக்கையில் சாவதானமாக சாய்ந்து அமர்ந்தான். அவனுடைய அலட்சிய பாவம் சஞ்சயை யோசிக்க வைத்தது. அதற்ககு தகுந்தாற் போல் தான் அவனும் பேசினான்.
“ரைட் பிரகாஷ்… மிஸ்டர் கிருபாகரன் போன் நம்பரை சஞ்சய் கிட்ட கொடுத்துடு. கோ அகெட் சஞ்சய்” என்று கூறி இருக்கையில் நன்றாக சாய்ந்து கண் மூடினான்.
அவனை குழப்பத்துடன் பார்த்தான் சஞ்சய். சிறு படப்படப்புடன் என்றாலும் தன் செல்லை எடுத்து நம்பரை தேடினான் பிரகாஷ்.
“நல்லா யோசிச்சு தான் பேசுறியா ருத்ரா? ” – கேட்ட சஞ்சய்க்கு குரலே எழும்பவில்லை.
சட்டென எழுந்த ருத்ரன் சஞ்சய்யின் நாற்காலியின் இரண்டு கைபிடியிலும் அழுந்த கை பதித்து, “காசு கொடுத்து நந்தினிய கொல்ல சொன்ன நீயே தைரியமா கம்ப்ளைன்ட் கொடுக்கும் போது எனக்கு என்னடா கவலை, நீ உன் வாக்குமூலத்தை கொடு நான் என்னுடையதை தரேன், சிம்பிள்…” என்றவனை அந்த அறையிலிருந்த இருவருமே அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
முகங்களின் தேடல் தொடரும்….
26 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
wow.!!!! interesting…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
HAYOOOOOO INNUUUUMM KULAPIA ADIKEERANAYYYYYYYYYYY
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hi mam
நந்தினியின் இறப்பு கொலைதான் அது நிச்சயமாச்சுது,அப்போ சஞ்சய் & ருத்திரன் கொலைகார்ர்கள்,எதற்காக சந்தனாவை நந்தினி என்று வெளியுலகுக்கு காட்டிக்கொள்கின்றனர்,இதன் பின்னணி என்ன,சந்தனாவை இந்தப்படத்தில் நடிக்கவைக்கவேண்டுமென்றால் அது இலகுவாக முடிந்திருக்குமே இவ்விருவருக்கும்,அது ஏன் நந்தினியை பயன்படுத்தி சந்தனாவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தணும்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ungalin commentirku nandri. Eppodum pol ungalathu periya……..yosika veaikum commentai padika ennaku santhoshame. Nandri
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ha ha ha….
ஒவ்வொரு epi யும் ஆர்வமா இருக்கு…
i like ruthra…
i knw he s dng wrng.
bt i lik his attitude….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ha ha…. even i like rudra. – thank u for ur cimments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
எப்பா!ஜெகஜாலகில்லாடிடா ருத்ரா நீ.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
S… because he is rudran – thank u for ur valuable comments pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Aka periya twist irukkum pola .super very interesting .
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank u da
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Twist mela twist ah irukkae…. Sanjay yean nanthiniya kolla sonnan… Nice viru viru nu kathai nagaruthu adutha kattathai nokki ….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank u pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Idhu ennada pudhu twist? Sanjay ah kolla sonnadhu?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yosiungal, nalai therindhuvidum tozhi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
சஞ்சய் போட்ட cardஐ அவனுக்கே திருப்பி விட்டான் ருத்ரன் intelligent
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank u pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Woaaw super.நிச்சயமாக இது
ருத்ரனின் மொய்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ha ha ha… nalai parpome. – commentirku nandri
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice ud sis……lot of suspense…….
Waiting for that…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank u pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nazi jenmangal
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hmm…… ippadiyum sila pear. Saranya – thank u for ur comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Santhana Enna bommaiya … Unakku enakku nu potti poda … Ava uyirulla pen da muttal Sanjay …
Athane ithukellam bayantha avan ruthrane illa … Vachan la aappu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ha ha ha….. ruthranuku mathavangalai bayamuruthi than palakam. Thank u for the comments pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice update.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank u lalitha