பெண்ணினம்
1819
4
கரு ஒன்று, பெண் என்று உரு பெறும் முன்னே, நுட்பத்தின் உதவியோடு நூதனமாய் என்னுள் நுழைந்து, சிசுவாகவே என்னை சிறையிட்டு சிதைக்கும் உன் சிந்தனையில் தொடங்கியது, என் இனத்திற்கு எதிரான உன் இனத்தின் முதல் வன்முறை……!
கருக்குள்ளே, என்னை சிசுவாகவே சிதைக்கும் உன் சிந்தனையை சிறப்பாக சிதைத்து, பிரமஞ்சத்தில் புதுமை நாட்ட, புது மலராய் பிறந்து வந்தேன்……!
பக்குவமாய், நான் வளரும் முன்னே, என் பச்சிளம் வயதிற்குள்ளே, உன் இனம் இழைத்தது என் இனத்தின் மேல் பாலியல் வன்முறையை…….!
இதுதான், என் இனத்தின் பருவத்தின் படிக்கட்டுகளை முழுவதுமாய் பாழாக்க உன் இனம் எடுக்கும் முயற்சியோ……..!
உன் இனத்தின் பாலியல் வன்முறையில் இருந்து,பத்திரமாக தப்பித்து பச்சிளம் வயதிலிருந்து பதின் பருவத்தில் வந்து நின்றேன்…….!
உன் இனம் காதல் என்ற கடிதத்தோடு, என் முன் வந்து நின்றது. விருப்பம் இல்லை என்றேன், விரும்ப வேண்டும் என்றது, விலகிச்சென்றேன், விரட்டி, விரட்டி வந்தது……..!
கோபமாக விறுக்கென்று திரும்பினேன், அகத்தை அலட்சியப்படுத்தி, முகத்திற்கு முன் அவிழ்த்தது அமிலத்தை……!
உருகியது என் இனத்தின் உருவம்….!
காதல் என்ற கவண் கொண்டு, உன் இனம் எறிந்த கல் படாமல் கச்சிதமாய் கடந்து, கழித்து கொண்டு இருந்தேன் என் காலத்தை…….!
காலை மறைந்து, மாலை மலா்ந்து, இரவு ஒன்று இருக்கையில், காா் இருள் சுழ்ந்த களத்தில் என் இனத்தின் கற்பை களவாடின, உன் இனத்தின் கயவர்கள் அறிவாயா நீ……!
அவா்கள் களவாடியது என் இனத்தின் கற்பை மட்டும் அல்ல, பெண் இனத்தின் கனவுகளையும் தான்…….!
தாயாக உன்னை தாலாட்டியதும், தங்கையாக உன்னுடன் விளையாட்டியதும், தாரமாய் உன்னை தாங்கிப்பிடித்தும், தோழியாய் உன்னை தேற்றியதும், உதிரத்தால் உனக்கு உணவு ஊட்டியதும், உள்ளத்தால் உனக்கு உயா்வு ஊட்டியதும், என் இனம் தான்…….!
ஆனால், நீயோ ஆண் என்ற அதிகாரம் கொண்டு என் இனத்தின் ஆணி வேரை ஆட்டிப்படைக்கிறாயே……..!
உன் பிறப்பிடம் பெண் என்பதை மறந்து விட்டாயா நீ……..!
வழி எங்கும் வன்முறையை கொண்டு நீ வரவேற்றாலும், வன்முறை இடையே வழி வகுத்து வளா்ந்து வரும் என் இனம், இது ஒரு மெல்லினம்…….!
அன்னையாய், அமைதியாய், அகிம்சையாய் இந்த அகிலத்தை ஆளும் அசாத்தியமான சக்தி பெண்ணினம்………!
பெண்மையை போற்றுவோம், பெருமிதம் கொள்வோம்………!
– மீனாக்ஷி சிவகுமார்
4 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
துளசி says:
வாழ்த்துக்கள்…அருமை❤
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Wow sema feel ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Meenakshi Sivakumar says:
Thank you sir. Please support me. Ur read my கடைவிழியின் கண்ணீர் poem also.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Gayathri says:
Really awesome.. Nice one.. The real fact