“பணம்”
1305
0
மனத்தை மழுங்க வைத்து, மதியை மயங்க வைக்கும் – பணம்
வறியவர்களின் வயிற்றை வாிக்கோடுகளாய், வருடி செல்லும் வறுமையின் வலியை தீர்க்க தேவை – பணம்
பாவம் என்றும் பாராமல், பலரை பரதேசியாக பரிதவிக்க வைக்கும் – பணம்
பிச்சை பாத்திரத்திலும், பிறா் பிாியத்தால் பிரதிபலிக்கும் – பணம்
இறைவனிடம் கூட இருக்கிறது, இருட்டு அறைக்குள் – பணம்
பாசத்தை பங்குப்போட்டு, காசு இல்லை என்றால் கச்சிதமாய் கலட்டி விடும் – பணம்
விதி செய்த வேலையில், நிதி நிலையின் வீதியில் நிா்கதியாய் நிற்க வைத்த – பணம்
பாசத்தோடு, பகட்டாய் பலா் பழக்க தேவை – பணம்
கடைவீதியின் தெருவோரம், காலையில் தேடும் தேநீருக்குள் தேங்கி நிற்கும் – பணம்
ஏழையை ஏக்கச்சக்கமாய் ஏங்கி வைக்கும் – பணம்
பிறப்பின் தொடக்கத்தில் தொடங்கி, இறப்பின் இடையிலே இடைஞ்சலாக இருக்கும் – பணம்
இறந்தப்பின், நெற்றியில் ஒற்றை காசாய் காட்சி அளிக்கும் – பணம்
உறவுகளோடு ஒன்றி வாழ, தேவை உறைக்குள் ஒளிந்து இருக்கும் – பணம்
எங்கும் – பணம்,
எதற்கும் – பணம்,
எதிலும் – பணம்,
எவா்க்கும் -பணம் ,
பணம், பணம், பணம்,
பணம் உலகை படைத்த பொருளா,
இல்லை, உலகம் படைத்த பொருளா,
பணம் தேவை இல்லை, மனம் தேவை என்ற நிலை வரும், அன்று பணம் மட்டுமே உங்கள் பக்கத்தில் இருக்கும், மனங்கள் இல்லை மறந்து விடாதே……..!
பணம் இல்லாத ஒவ்வொருவனுக்கும் நடைமாடும் – பிணம்
நானோ, நடந்து, நடந்து நடை தளா்ந்துப்போனேன் – தினம்
– மீனாக்ஷி சிவக்குமாா்
Comments are closed here.