முகங்கள்-29
2257
11
முகங்கள் – 29
அடுத்த ஷாட்டிற்காக அவசர அவசரமாக சந்தனாவை தயார் செய்து கொண்டிருந்தாள் ஒப்பனை கலைஞர் ஜான்சி. அணிமணிகளை அணிவிக்கும் போது ஜான்சியின் கையில் இருந்த ஒரு செயின் சந்தனாவின் கவனத்தை ஈர்க்க, அதை கூர்ந்து பார்த்தாள்.
“என்ன அது?” – சந்தனா
“தாலி செயின் மேம்” – ஜான்சி
“தாலி? ” – புருவம் சுருக்கினாள்.
“எஸ் மேம்”
“அது எதுக்கு?”
“இந்த ஷாட்டோட காஸ்ட்யூம்ல இதுவும் ஒண்ணுதான் மேம்”
“ஓ!” – அவளுடைய முகம் இறுகியது.
“என்ன ஆச்சு மேம்?” – சட்டென்று அவளுடைய இயல்புத்தன்மை மாறியதை கவனித்து விசாரித்தாள்
“இல்ல… ஒண்ணும் இல்ல… அதை அங்க வைங்க… நானே போட்டுக்கறேன்” – ஜான்சியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து கைபேசியில் கவனமாக இருப்பது போல் பாவனை செய்தாள்.
ஆனால் தயங்கி நின்றாள் ஜான்சி இவள் மறந்துவிட்டால் டைரக்டரிடம் இவள் அல்லவா வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும்! – கையில் சங்கிலியை பிடித்தபடி அப்படியே நின்றாள்
“வாட்?”- புருவம் சுருக்கினாள் சந்தனா. அவள் முகத்தில் எரிச்சல் தெரிந்தது.
“இப்பவே போட்டுக்கோங்க மேம். ஷாட்டுக்கு நேரமாயிடும்”
“ஐ நோ… வச்சுட்டு போங்கன்னு சொல்றேன்ல…” – கோபத்தில் வெடுவெடுத்தாள்.
எல்லோரும் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் என்ன கை பொம்மையா! நினைத்தபடி அனைவரும் ஆட்டிவைப்பதற்கு! ருத்ரன் முதல் இந்த ஜான்சி வரை அனைவரும் அவளை கட்டாயப்படுத்துகிறார்களே! அதிலும் இவள்… தாலியை கையில் வைத்துக் கொண்டு அணிந்துகொள்… அணிந்துகொள்… என்று கட்டாயப்படுத்துகிறாளே !!முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அலைபேசியை தட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது
“நந்தினி ரெடியா?”- சத்தமிட்டபடியே கேரவேனுக்குள் நுழைந்தான் ருத்ரபிரதாப்
“ரெடி சார்…” – பதட்டத்துடன் பதிலளித்தாள் ஜான்சி
அதே நேரம் ருத்ரனின் அலைபேசி ஒலியெழுப்ப அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன், “சொல்லுங்க தீனா” என்று பேசிக்கொண்டே சந்தனாவை பார்த்தான்.
முகத்தில் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். என்ன ஆச்சு என்று யோசித்தபடியே ஜான்சியை பார்த்தால் அவள் கையில் ஏதோ ஒரு சங்கிலியோடு நின்றுக் கொண்டிருந்தாள்.
அலைபேசியில் பேசுகிறவனுக்கு செவிகொடுத்தபடியே, ‘என்ன?’ என்று ஜான்சியிடம் புருவம் உயர்த்தினான்.
அவள் தன் கையிலிருந்த செயினை காட்டி, ‘மேடம்க்கு போடணும் சார்’ என்று முணுமுணுத்தாள்
‘இவ்வளவுதானா…’ என்கிற அலட்சியத்துடன், அவள் கையிலிருந்து பிடுங்கி சந்தனாவின் கழுத்தில் அணிவித்தவன், ஃபோனில் “எல்லாத்தையும் என்கிட்டதான் கேட்கணுமா? கான்ட் யூ திங்க் ஆஃப் யுவர் ஓன்?” என்று கத்தினான்.
எதை எடுத்தோம் எதை போட்டோம் என்கிற எந்த சிந்தனையும் இல்லை அவனிடம். எல்லாம் நடிப்பு… எல்லாம் போலி… எல்லாம் மாயை… இதுதான் அவனுடைய வாழ்க்கை. –
ஆனால் இறுகிய உடலும் அகல விரித்த விழிகளுமாக தன்னை உக்கிரமாக பார்த்துக் கொண்டு நிற்பபவளைக் கண்டு துணுக்குற்ற ருத்ரன், “நா அப்புறம் கூப்பிடுறேன் வை…” என்று கூறி அலைபேசியை அணைத்துவிட்டு, “யூ கேன் கோ…” என்று ஜான்சிக்கு ஆணையிட்டுவிட்டு “நந்தினி…” என்றபடி அவளிடம் நெருங்கினான்.
அவனை எரித்து விடுவது போல் முறைத்தவள் எதுவுமே பேசாமல், சட்டென்று அங்கிருந்து விலகி வெளியேறினாள்.
***********************
சாதாரண சீன் தான் சமையலறையில் டீ போடுவது போலான காட்சி, பக்கத்தில் தன்வன்யா,
“ஆக்ஷன் ” என்ற அவனது குரலுக்கு கட்டுப்பட்டவள் போல் அந்த காட்சிக்கான அவளது நடிப்பை தொடங்கினாள் சந்தனா. ஆனால் சற்று முன் நடந்த சம்பவத்தால் சூழ்ந்த குழப்பம் அவள் மனதை ஆக்கிரமித்திருக்க, தன்னை மறந்து டீ கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தை துணியில்லாமலே பிடித்து இறக்கிவிட்டாள்.
அவள் வலியை தன்னுள் அடக்க “கட்” என்று கத்திக் கொண்டு எழுந்தான் ருத்ரன். அவனது ‘கட் ‘ கேட்டதும் ‘ஸ்ஸ்…ஸ்’ என்று கையைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்துவிட்டாள்.
எல்லோரது முகத்திலும் கலவரம். அருகிலிருந்த தன்வன்யா செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நிற்க,”வாட்டர்” என்று கத்திக்கொண்டே இரண்டெட்டில் அவளை அடைந்து விட்டடான் ருத்ரன் பிரதாப்.
அவனிடம் ஒரு தண்ணீர் பாட்டில் நீட்டப்பட்டது, அதனை அவசரமாக வாங்கி அவளது சிவந்திருந்த கைகளின் மீது ஊற்றினான். காயத்தின் மேலே மென்மையாக ஊதிவிட்டான். சூடு பட்டது அவளுக்காக இருந்த பொழுதிலும் வலி அவனது கண்களில் தெரிந்தது.
“ஆர் யூ மேட்? அறிவில்ல? துணியை பிடிச்சு எடுக்கனும்னு தெரியாது?” இடை இடையில் அவளிடம் எரிந்து விழுந்தான்.
திட்டிக்கொண்டே ஃபர்ஸ்ட் எய்ட் பாக்சிலிருந்த ஆயின்மண்ட்டை போட்டுவிட்டான்.
சூடுபட்ட வலியை விட அவன் காட்டும் கோபம் தான் அதிகமாக வலித்தது. அவனது அக்கறை அவளுக்கு அழுகையை கொண்டுவந்தது, கண்கள் கலங்க அவனிடமிருந்து கையை உறுவிக்கொள்ள முயன்றாள். தனது பிடியில் கூடுதல் அழுத்தம் கொடுத்தபடி, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன், அவள் விழிகளில் நிறைந்திருந்த கண்ணீரைக் கண்டு உதட்டைக் கடித்தான். உள்ளே ஏதோ பாய்வது போலிருந்தது. இதயத்திற்குள் சுருக்கென்று வலிப்பது போலிருந்தது. கண்களை ஒருமுறை மூடித் திறந்து, “ரொம்ப வலிக்குதா?” என்றான் மென்மையாக.
பதில் சொல்வதற்கு முன் அவளுடைய கண்களில் திரண்டிருந்த கண்ணீர் முத்துக்களாக கன்னத்தில் வடிந்தது. அவ்வளவுதான்… அதற்கு மேல் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அவன்.
“மேடமை கேரவேனுக்கு கூட்டிட்டு போங்க” என்றான் தன்வன்யாவிடம்.
சந்தனாவை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு இவன் அடுத்த காட்சி எடுப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஆனால் வேலையில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. ஏகப்பட்ட குளறுபடிகள். கலங்கிய அவளுடைய விழிகளும் சூடுபட்டு சிவந்த அவளது விரல்களும் அவன் கண்ணெதிரில் தோன்றி அவனுடைய கவனத்தை சிதறடித்தன.
வெகு நேரம் போராடிப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் தோல்வியை ஏற்றுக் கொண்டு இடைவேளை அறிவித்துவிட்டு அவளைத் தேடி கேரவனுக்கு வந்துவிட்டான்.
சோபாவில் சாய்ந்த வண்ணம் விழிமூடி படுத்திருந்தாள் சந்தனா. ருத்ரபிரதாப்பை பார்த்ததும் அவளருகில் அமர்ந்திருந்த நர்ஸ் எழுந்து நின்றாள். அதோடு அவனது கண் அசைவை புரிந்து கொண்டு சத்தமில்லாமல் வெளியேறியும் விட்டாள்.
தன்னை மறந்து உறங்குகிறவளை எழுப்பிவிடக் கூடாது என்கிற அக்கறையோடு பூனை போல் நடந்து வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான். மடிமேலிருந்த அவளது கையை மென்மையாக பற்றியவன் சிவந்திருந்த விரல்களை பார்த்தான். மனம் வலித்தது.
இந்த காயத்திற்கு மட்டும் அல்ல… இவளுடைய அனைத்து காயங்களுக்கும் நீ ஒருவன் தான் காரணம் என்று உள்ளேயிருந்து மனசாட்சி கூக்குரலிட்டது.
மற்றவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டாலும் அது சுயநலம் தானே! தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு பெண்ணின் உணர்வுகளோடு விளையாடுவது தவறு என்று நன்றாக தெரிந்தும் அவனால் தவிர்க்க முடியாததை நினைத்து அவனுக்கே அவன் மேல் எரிச்சல் வந்தது. ஆனால் காலத்தின் கட்டாயத்தை யாரால் மாற்றமுடியும். குறைந்தபட்சம் இந்த சூடேனும் படாமல் இருந்திருக்கலாம், மனதிற்குள் அவன் நினைக்கவும் தன் கைகளை யாரோ தொடும் உணர்வு தோன்ற பதட்டத்துடன் கண்களை திறந்தாள் சந்தனா.
பற்றியிருந்த அவளது கையை வருடி “இட்ஸ் மீ, கூல் ” என்றான் ருத்ரன்.
ஆனால் அவனை பார்த்ததும் உள்ளே எரிச்சல் மூண்டது அவளுக்கு. இவன் செய்யும் தவறுகள் இவனுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது. அவள் திடமாக இருக்க வேண்டும் எல்லாம் கொஞ்ச நாள் தான் என்று உள்ளுக்குள் உருபோட்டுக்கொண்டு தன்னை தேற்றிக்கொள்ள முயலும் பொழுதெல்லாம் எதையாவது செய்து இவளை பலவீனப்படுத்துகிறான். எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு செயலில் இறங்கும் அதிபுத்திசாலிக்கு அவளது இதயக்குமுறல் தெரியவில்லையே!! மனக்காயம் பத்தாதென்று இப்போது இந்த விரல்களில் வேறு, எரிச்சல் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
அவளது மென்கரத்தில் பதித்திருந்த அவனது பார்வையை விலக்கி அவளது விழிகளை ஊடுருவி, “ஹௌ டூ யூ பீல் நௌ” என்றான் அக்கறையோடு.
அந்த அக்கறை அவள் இதயத்தின் அடியாழத்தைத் தொட்டுப்பார்த்து. அவனுடைய மென்மையான ஸ்பரிசம் அவள் மனதிற்குள் இனம்புரியாத உணர்வுகளை ஊற்றெடுக்கச் செய்தன. கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. இதுவரை அவனை கரித்து கொட்டிய மனம் அதற்கு நேர்மாறான உணர்வை உண்டாக்கியது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அவளது பிரச்சனையும் அவன் தான் அதற்கான தீர்வும் அவனேதான். மனதின் உண்மையை மனதிற்குள்ளேயே அழுத்தி
“ம்….பெட்டர்..” – தரையை பார்த்தபடி முணுமுணுத்தாள்.
அவளுடைய தாடையை பற்றி முகத்தை நிமிர்த்தி கண்களை சந்தித்து, “ரொம்ப பெயினா இருக்கா?” என்று கேட்டான்
இந்த கரிசனம் தான் வலிக்கிறது என்று சொல்ல முடியாமல் மௌனமானவளின் முகம் உணர்வு போராட்டங்களினால் சிவந்து போனது.
“என்ன ஆச்சு?” – அவளுடைய முகமாற்றத்தை கவனித்து கேட்டான்.
பதில் சொல்ல முடியாமல் கீழே குனிந்தபடி ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை குறுக்காக ஆட்டினாள்.
“ஏய்… என்ன பாரு… லுக் அட் மீ…” என்று அவள் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கண்களுக்குள் பார்த்து, “ஐம் வித் யு… உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்… பிலீவ் மீ…” என்றான் தீவிரமாக.
அதை சொல்லும் பொழுது அவனுடைய முகத்தில் பிரதிபலித்த உணர்வுகள் அவளது மனதில் அழுத்தமாய் பதிய, தன் மனப்போராட்டங்களினால் தளர்ந்திருந்தவள், தன் கட்டுப்பாட்டையும் மீறி அவன் தோள்களில் சாய்ந்தாள். இதயக்கூட்டிற்குள்ளிருந்த துக்கம், குழப்பம், அவளுள் என்னதான் நடக்கிறது என்று புரியாத கேள்வி இவை எல்லாம் சேர்ந்து கண்ணீர் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது அவள் கண்களிலிருந்து.
ஓரிரு நொடிகள் சிலை போல் அமர்ந்திருந்த ருத்ரபிரதாப், தன்னிலைக்கு திரும்பியவனாய், இன்னும் அவளுடன் நெருங்கி அமர்ந்து அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளது கழுத்தில் அவன் அணிவித்திருந்த தாலி சரிந்து அவனது நெஞ்சை தொட்டது.
“இட்ஸ் கோயிங் டு பீ ஓகே… இட்ஸ் ஆல் கோயிங் டு பீ ஓகே… ரிலாக்ஸ் .. ரிலாக்ஸ்…. ” என்று அவளுடைய முதுகை வருடி ஆறுதல் கூறினான்
அந்த அணைப்பும் ஆறுதலும் அவளை வெகுவாய் அமைதிப்படுத்தியது. அவளுடைய உணர்வு போராட்டங்கள் மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்தன. நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று உணர்ந்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் விலக இருவருக்குமே மனமில்லை. அங்கே வார்த்தைகளுக்கும் வேலையில்லாமல் போனது, எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை… யாரோ கேரவனின் கதவை தட்டியதும் வேறு வழியில்லாமல் இருவரும் விலகினார்கள்.
“ஆர் யு ஓகே நௌ?” – அவனுடைய கனிந்த குரல் அவளிடம் இழைந்தது. அவள் மெல்லிய புன்னகையுடன் தரையை பார்த்தாள், அவளது புன்னகை ருத்ரபிரதாப்பின் முகத்தில் பிரதிபலிக்க எழுந்துச் சென்று கதவைத் திறந்தான்.
வெளியே நின்றிருந்த பிரகாஷ் “புரோடியூசர் சந்திரசேகரன் வந்திருக்கார், இந்த பக்கமா வந்தாராம், நம்முடைய ஷூட் இங்க நடக்கிறது தெரிஞ்சு பாக்கலாமேன்னு வந்தாராம்,வரசொல்லவா?” என்று கேட்டான்
சில வினாடி யோசித்தவன் “ஓகே வர சொல்லு” என்றான்.
“இங்கயேவா?” – ஹீரோயினுடைய கேரவேனுக்கு வர சொல்கிறானே என்கிற வியப்புடன் கேட்டான்
ருத்ரனோ சில நிமிடங்கள் கூட அவளிடமிருந்து விலகியிருக்க முடியாத மனநிலையில் இருந்தான். எனவே, “ஆமாம்… இங்கேயே வர சொல்லு” என்றான் அழுத்தமாக. அதற்கு மேல் விவாதம் செய்யாமல் அங்கிருந்து அகன்றான் பிரகாஷ்.
சற்று நேரத்திலேயே பிரகாஷ் குறிப்பிட்ட அந்த தயாரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டதும் தீயை மிதித்தது போல் சட்டென எழுந்து நின்றுவிட்டாள் சந்தனா. முகம் வெளிறி கண்கள் சிவந்து, விரைப்பாக நின்றவளை பார்த்து குழப்பமுற்றான் ருத்ரபிரதாப்
முகங்களின் தேடல் தொடரும்……
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இந்த சந்திரசேகரன் யார்,எதற்காக இவரை பார்த்தவுடன் சந்தனா இவ்வளவு பதட்டம் அடைகின்றார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Very very interesting pa .santhana enn ippati payappatura.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Adutha epila soldrene pa. Thank u for the comments. Thodarnthu ungal atharavai ethirparkirene
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Glory Queen says:
Romba suspense ah iruku ya
Yena nadakuthune therila
Completed story nu padika arambichen but IPO waiting daily
First time ongoing story padikiren
Sema
Congrats
Keep it up ya
Daily update panuvengala reply
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
first time ennoda ongoing story padikarathula ennaku romba santhosham. Thank u. Daily one update undu pa. But saturday and sunday holiday
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Punitha. Muthuraman. says:
ரெண்டுபேரும் கொஞ்சம் நெருங்கினா உடனே ஸ்பீட்பிரேக் போடறீங்க.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Speed breakera ?Ha ha ha …. super…. nice commemt pa. Thank u
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Nice episode super,,
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u raji
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
adutha thiruppamaa………yaar ithu……………..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Adutha episodla soldrene pa. Comment potadharku nandri