முகங்கள்-31
2230
8
முகங்கள் – 31
முகம் கழுவிக்கொண்டு வந்த நந்தினி டிரெஸ்சிங் டேபிளின் முன் நின்று தூவாலையால் முகத்திலிருந்த நீர்த்துளிகளை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள்
அப்போது ரூம் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த சந்தனாவை உட்காரச் சொல்லி சைகை செய்தவள் மீண்டும் முகம் துடைப்பதை தொடர்ந்தாள்
இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்த சந்தனா “மேடம் நீங்க எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க, இதோ உங்க கையை பாருங்க அப்படியே பட்டு போல மென்மையா, தொட்டாலே கூசும் போல இருக்கு ,என் கையை பாருங்க பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு சொரசொரப்பா இருக்கு ” என்று தன் மனதில் வெகுநாளாக இருந்த கேள்வியை கேட்டேவிட்டாள்
சட்டென சிரித்து விட்டாள் நந்தினி. சிரிப்பினூடே “நீயும் அழகு தான், என்னை விடவும் அழகு. அது மட்டுமா? நீ என்னை மாதிரியே இருக்கேன்னு தானே எனக்கு டூப்போட உன்னை பிடிச்சு இழுத்துகிட்டு வந்திருக்கார் ருத்ரன் ”
“அட அதை ஏன் இப்போ ஞாபகப்படுத்துறீங்க. அவரை பாத்தாலே எனக்கு கோவம் கோவமா வருது, ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அவளை கட்டாயப்படுத்தறது மிருகத்தனம், ருத்ரன் ஒருகாட்டு மிராண்டி, ” என்று ஆவேசமாக அடுக்கிக் கொண்டே போனாள்
“ஸ்..ஸ் போதும், இவ்வளவு வெறுப்பு ஆகாது சந்தனா, ” ஏனோ அவளுக்கு வலித்தது
“பின்ன என்ன மேடம் நான் பாட்டுக்கு குளம் குட்டைன்னு விழுந்து குளிச்சுகிட்டு நீச்சலடிச்சுகிட்டு ஆடிப்பாடிகிட்டு இருந்தேன், சித்தியை தவிர எல்லாமே எனக்கு நல்லாதான் இருந்தது, எல்லாத்தையும் கெடுத்துட்டார், இதோ இந்த செயற்கை விக் முடியும் , மாறுவேஷமும் எனக்கு தேவையா ? எல்லாம் அவரால் வந்தது அவரை பார்க்கும் போதெல்லலாம் கோவம் தாறுமாறா வருது ” என்று அவள் தரப்பு நியாயத்தை கூறினாள். மறுக்கமுடியாத உண்மை தான், ஆனால் படம் என்று வந்துவிட்டால் ருத்ரன் நியாய அநியாயத்தை எல்லாம் பார்ப்பதில்லை, அது மட்டுமில்லாமல் நந்தினி டூப்பே இல்லாமல் இவ்வளவு கஷ்டமான காட்சியில் நடித்திருக்கிறாரே என்று அவளுக்கல்லவா பேரும் புகழும் வாங்கிக் கொடுக்க ஆசைபட்டிருக்கிறார். அதில் அவனது படம் நன்றாக வசூலிக்கப் போவது கூடுதலான பிளஸ் ‘ என்று நந்தினி தன்னுள் நினைத்துக்கொண்டாள்
ஆனால் சந்தனா ருத்ரனை தவறாக நினைப்பதையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் “இப்படி நெகட்டிவ்வா யோசிக்காத சந்தனா. ருத்ரனுக்கு உன் மேல அதிக அக்கறை இருக்கு. உன்னை வேற எங்கயும் தங்க வைக்காம என்னோட பத்திரமா தங்க வெச்சிருக்கார், தப்பானவங்களை உன் பக்கம் கூட விடமாட்டார், நீயே நல்லா யோசிச்சு பார், மித்ரனோட பிஏ உன்கிட்ட வழிஞ்சபோது ஒரு முறை முறைச்சாரே, அதுக்கப்புறம் அவன் உன்கிட்ட எவ்வளவு மரியாதையா பேசறான், அதுமட்டுமில்லை உன்னை என்கிட்ட விட்டுட்டு எப்படி தயங்கி தயங்கி போனார் தெரியுமா? அப்படி ஒரு ருத்ரனை நான் பார்த்ததே இல்லை” என்றவளது முகம் கலையிழந்துவிட்டிருந்தது.
நல்லவேளையாக அதனை சந்தனா கவனிப்பதற்குள் நந்தினியின் செல்போன் அலரியது
ஸ்பீக்கர்ல போடு என்று சந்தனாவிடம் சைகை காண்பித்தவள், கண்ணாடியின் முன் நின்று தலையை கோதிவிட்டபடி தன் கண்களில் லேசாக துளிர்த்திருந்த கண்ணீரை தூவாலையால் ஒற்றினாள்
“ஹாய் நந்தினி, இன்னைக்கு நைட் டின்னர்க்கு வரியா பிளீஸ், ஐ லவ் யூ, ஐ நீட்யூ, ” என்றது குளரலான எதிர்முனை
சட்டென திரும்பியவள் விரைந்து வந்து ஃபோனை எடுத்து ஸ்பீக்கரை ஆப் செய்து சந்தனாவை ஏறிட்டாள், அவளது முகத்தில் வேதனையும் அருவருப்பும் ஒரு சேர தோன்றியது. அதனை பார்த்த சந்தனா புரிந்துகொண்டு அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
மனதிற்குள் ‘நம்ம மேடம் எல்லாத்துலயும் நல்லவங்க தான், ஆனா இந்த மாதிரி கால் அடிக்கடி வர்றதுதான் பிடிக்கலை ‘என்று நினைத்துக்கொண்டாள்
ஆனால் நந்தினி இதுபோன்ற போன்களை ஆதரிப்பதில்லை என்று அவளுக்கு தெரியாது. இப்படி பேசுபவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு அது தரும் தைரியத்தில் உலருபவர்கள்தான். அவர்களை எப்படி கையாள்வதென்று இத்தனை வருட திரைத்துறை அனுபவத்தில் நன்றாக கத்துக்கொண்டாள்.
ஆனால் அந்த அனுபவம் வரும் முன் விழுந்த முதல் அடியை அவளால் என்றும் மறக்கமுடியாதுதான். முதலும் கடைசியுமாய் விழுந்த அடி.
*************************************
அன்று நந்தினி ஒரு துணை நடிகரின் திருமணவிழாவுக்கு கிளம்பினாள் உடன் சந்தனாவையும் அழைத்துச் சென்றாள்.
அங்கே மணமக்களுக்கு பரிசு கொடுத்துவிட்டு இவர்கள் கீழே இறங்கும் பொழுது நந்தினி சந்திரசேகரை பார்த்துவிட்டாள், சிரிப்பை எப்போதும் தக்கவைத்திருக்கும் அவளதுமுகம் சட்டென இருண்டது. நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்பின.
எல்லா திரைத்துறை ஆட்களையும் சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்த சந்தனாவின் கைப்பற்றி “வா வீட்டுக்கு போகலாம்” என்றாள்
“என்னாச்சு மேடம் இப்போதானே வந்தோம், சாப்பாடு கூட சாப்பிடலையே ” இந்த பிரம்மாண்ட திருமணத்தின் உணவை ருசிக்க ஆசைபட்டாள் சந்தனா
“ம்..ச்..போகலாம்னு சொன்னா கேக்கனும் ” என்று மண்டபத்தின் வாயிலை நோக்கி அவள் நடக்கவும் வேறு வழியின்றி அவளை பின் தொடர்ந்தாள் சந்தனா
ஆனால் லாபியில் இவர்களது காருக்காக காத்திருக்கும் பொழுது “ஹாய் நந்தினி, ஹௌ ஆர் யூ? ” என்று நந்தினியின் பின்னே வந்து நின்றார் சந்திரசேகரன்.
யார் கண்ணில் படக்கூடாதென்று நினைத்தாளோ அவனே வந்து முன்னே நிற்பதை என்னவென்று சொல்வது, ஆனால் இந்தத்துரையில் முகம்திருப்புவதும் தவறு, அதனால் வேறு வழியின்றி ” ஐ ஆம் ஃபையின் சார், ஹௌ ஆர் யூ ” என்றாள், மனதிற்குள் கார் சீக்கிரம் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்
“ஐ ஆம் ஃபைன், வில் யூ ஜாயின் மீ ஃபார் டின்னர் ” என்று கேட்டவரை ஓங்கி அரையவேண்டும் என்று எழுந்த எண்ணத்தை உள்ளே அடக்கிக்கொண்டு “சாரி சார், எனக்கு நைட் ஷூட் இருக்கு ” என்ற போது இவளது கார் லாபிக்குள் நுழைந்தது
“ஓகே சார், குட்நைட் ” என்று சிரித்தார்போல் விடைபெற்று காருக்குள் விழுந்தாள் இதயம் படபடத்தது.
தன் மன உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டுமென்று எவ்வளவு போராடினாலும் சில விஷயங்களில் அவளால் அது முடியாமல் போனது.
அமைதியாக மட்டுமில்லாமல் ஓர் இறுக்கத்துடன் அமர்ந்திருக்கும் நந்தினியிடம் என் பேசுவதென்று புரியாமல் அமைதி காத்தாள் சந்தனா, ஆனால் நந்தினி பேசலானாள்
“எப்பவும் ‘நீங்க ரொம்ப அழகுன்னு சொல்லுவியே ‘ அந்த அழகு எவ்வளவு ஆபத்தானதுன்னு எனக்கு தான் தெரியும், ருத்ரன் மாதிரி நல்லவங்களும் இங்க இருக்கத்தான் செய்றாங்க, ஆனா இவனை மாதிரி மிருகங்களுக்கும் இங்க பஞ்சமில்லை. ” கண்கலங்க நந்தினி பேசுகையில் சந்தனாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
நந்தினியின் வலியை சந்தனாவால் தெளிவாக உணர முடிந்தது.
அவள் சொல்லாமல் விட்டதையும் இவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆதரவாக அவளது கரம்பற்றி “எதுக்கு இவ்வளவு கஷ்டம், நடிப்பை நிறுத்திடலாமே? ” என்று சந்தனா கேட்டது தான் தாமதம்
ஓர் கசப்பான புன்னகை அவள் முகத்தில் வந்து சென்றது. கண்களை டிஷ்யூவால் ஒற்றி எடுத்தவள்
“உனக்கு சொன்னா புரியாது சந்தனா, இது புலி வாலை பிடிச்ச கதை தான், அப்படி விட்டாலும் பிரச்சனைகள் நம்மை தொரத்தும், ஆனா இத்தனை வருஷ அனுபவத்துல இவங்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரிஞ்சுகிட்டேன்” என்றவளை விழிவிரித்து பார்த்தாள் சந்தனா.
ஆனால் நந்தினி அத்துடன் முடித்துவிடவில்லை
“உனக்கு ஒன்னு தெரியுமா? நான் உன்ன மாதிரி இருக்கத்தான் ஆசைப்படறேன்.” என்று தன்னை ஏக்கமாக பார்த்தவளை விசித்திரமாக பார்த்தாள் சந்தனா
முகங்களின் தேடல் தொடரும்…
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Flashbackla sandhana thiriyama pesuranga super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u rajee….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Ruthra ippo iruppathu yaar.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
ennama, ennanaiyea kolaparengaleama….. thank u for the comment saranya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Ippo irukkurathu santhanava illa … Nanthini ya … Iranthathu nanthiniya illa Santhana va… 🤔🤔🤔🤔
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Ippadium yosikalamo..????? Commentirku nandri