முகங்கள்-33
2064
6
முகங்கள் 33
ஷூட்டிங் முடிந்து களைப்பு தீர நீச்சல் குளத்தில் நீந்தி விட்டு படியேறிய சந்தனாவின் முகத்தில் அதிருப்தி . ‘என்ன தான் இருந்தாலும் அருவியில் குளிப்பதுபோல, நதியில் நீந்துவது போல வருமா? ஏதோ ஒரு குட்டையில் மிதப்பதுபோல் அல்லவா இந்த நீச்சல் குளம் இருக்கிறது. மனதில் பழைய நினைவுகள் மேலோங்க, அப்படியே தங்கையின் முகம் நினைவில் வந்து நின்றது. பாவம் நான் இல்லாமல் கஷ்டப்படுவாள். இந்த உலகிலேயே எனக்காக ஏங்கும் ஒரே ஜீவன் அவள் மட்டுமே. ருத்ரபிரதாப் கொடுத்த பெரும் பணத்தை வைத்து சித்தி தங்கைக்கு திருமணம் கூட ஏற்பாடு செய்திருக்கலாம், அதை பார்க்க எனக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ?
தன் வாழ்வில் நடந்த எல்லாம் கடவுளின் திட்டமிட்ட சதி என்றே அவள் நம்பினாள். இல்லையென்றால் அவளது அம்மா ஏன் சாக வேண்டும், அது போதாதென்று ஒரு சித்தி ஏன் வரவேண்டும், அவ்வப்போது சித்தியை திட்டி அவளை ஆதரிக்கும் தந்தை எதற்காக இறைவனடி சேர்ந்தார். ருத்ரன் ஏன் அவளது ஊருக்கு வர வேண்டும்? வந்தவன் ஏன் நீர்விழ்ச்சியை கண்காணிக்க கேமிரா பொருத்த வேண்டும்? அன்று இவள் ஏன் குளிக்க போகவேண்டும்? அதனை பார்த்துவிட்டு அவன் ஏன் அவளை இங்கே கட்டாயப்படுத்தி அழைத்து வர வேண்டும்? அந்த வீடியோவில் இன்னும் என்னென்ன பதிவானதோ !!! . அதைபற்றி அவனிடம் கேட்பது ‘அப்பன் குதிருக்குள் இல்லை ‘ கதையாகிவிடும், இப்படி அந்த கடவுள் ஏன் பழிவாங்குகிறார் என்றுதான் புரியவேயில்லை.
ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லதாய் அந்த குடிகார கோபியிடமிருந்து தப்பித்தாள். அவன் சித்தியிடம் என்ன தான் தூபம் போட்டானோ, அவனுக்கு தான் எப்போதும் பரிந்து பேசுவாள். இதில் அவனோடு திருமணம் என்று பேச்சு வேறு அரசல் புரசலாக அவளது காதில் விழுந்தது.அந்த அறிவுகெட்ட கோபிக்கு பேராசைதான். சரி தன்னிடம் இந்த விஷயம் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். அதற்குள் தான் ருத்ரபிரதாப் என்ற புயல் தாக்கி அவளது வாழ்க்கை திசைமாறி விட்டதே….இப்படி பலதரப்பட்ட நினைவுகளோடு நடந்த சந்தனாவின் தோள் மீது ஒர் கை அழுத்தமாக விழுந்தது.
அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தவள் உறைந்து விட்டாள். அங்கே சந்திரசேகரன் வழிசல் சிரிப்புடன் நின்றிருந்தான்
அவளுள் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டது, சில்லிட்டிருந்த கைகள் மேலும் சில்லிட்டது. தண்ணீர் முத்துக்களுடன் வியர்வை முத்துக்கள் கலந்தன. எதுபேசவும் நா எழாமல் வேரூன்றி நின்று விட்டாள்.
அவளது முகத்தை பார்த்ததும் குழப்பமுற்ற சந்திரசேகரன் உடனே தன் முகபாவத்தை மாற்றிக்கொண்டு “நீ நந்தினியோட புது அசிஸ்டன்ட் தானே? சூப்பராதான் இருக்க” அவளது தோளில் அழுத்தம் கொடுத்து ஒரு மாதிரி சிரித்தான்
அவனது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள திமிரினாள். “அட என்ன நீ துள்ளுர, நான் பெரிய புரோடியூசர், அடுத்த படத்துல உன்ன கதாநாயகி ஆக்கிறேன்” அவனது பிடி மேலும் இறுகியது.
அவளது கரத்தை பற்றி வேமாக அவன் இழுக்க தடுமாறி அவன் மேல் விழுந்தவளின் இடையை அவர் பற்றவும்,
“சந்தனா!!!!! ” மாடியிலிருந்து நந்தினியின் கிரீச்சிட்ட குரல் கேட்வும் சரியாக இருந்தது
நந்தினியை பார்த்ததும் செயலிழந்திருந்த புலன்கள் விழித்துக் கொள்ள தன் பலத்தை ஒன்று திரட்டி சந்திரசேகரின் பிடியிலிருந்து திமிரி தன்னை விடுவித்துக் கொண்டவள், வேகமாக ஓடிச்சென்று நந்தினியின் கைகளுள் சரண் புகுந்தாள்.
அவளது நடுங்கும் உடலையும் வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத்தையும் உணர்ந்தவள். அவளை இறுக அணைத்து முதுகினை வருடிக்கொடுத்தாள். “ஷ்…ஷ்… ஒன்னுமில்லை….ஒன்னுமே இல்லை…..நான் இருக்கேன்ல…. டோன்ட் வொர்ரர்ரி… ஷ்…ஷ்… காம் டவுன். ” அவளை சமாதானப்டுத்திக்கொண்டே சந்திரசேகரனை முறைத்தாள்.
அவளது பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினார் சந்திரசேகரன்
சந்தனாவுடன் சேர்ந்து நந்தினியின் உள்ளமும் குமுறியது. இதோ இப்படித்தானே அவளும் கதறி அழுதாள் விடுவிடு என்று மன்றாடினாள். விடவில்லையே. குடிபோதையில் அவளை … அவளை…. இன்று வரை ஒரு இரவும் அவளால் தூக்க மாத்திரையின் துணையில்லாமல் தூங்க முடியாததின் காரணமும் இவன் தானே.
ஆண்களை கண்டாலே மனதினுள் எழும் ஆத்திரத்தை அடக்க பெரும்பாடு படுகிறாளே அதற்கான காரணமும் இவனே தான்.
ருத்ரபிரதாப் ஒருவன் மட்டுமே அந்த வெறுப்பையும் தாண்டி அவளுள் சென்றவன். ஆனால் அவள் அவனுக்கு தகுதியானவள் இல்லையே. இதோ இந்த சந்தனா, பரிசுத்தமானவள். இவள்தான் ருத்ரனுக்கு தகுதியானவள், அவனது காதலுக்குரியவளும் கூட.
இந்த உண்மை நந்தினியை சுக்குநூறாக கிழித்தது. இருப்பினும் உண்மையை யாரும் மாற்றமுடியாதே. தெரிந்து நடந்தாலும் பலவந்தப்படுத்தப்பட்டாலும் நம் சமூகத்தில் கெட்டுப்போனவள் பெண்ணாகத்தானே இருக்கிறாள். கற்பை பெண்ணிற்கு மட்டும் படைத்த இயற்கையை உளமாற சாடினாள் நந்தினி. ஆணின் கற்பை சோதிக்க சோதனை உண்டா? இது என்ன நியாயம்? இது என்ன உலகம்? மகளை வெளியே போகாதே என அடக்கி வைக்கும் பெற்றோர் மகனை கண்டிப்பதில் ஏன் தீவிரம் காட்டுவதில்லை? அவனுக்கு எந்த சோதனையும் இல்லை என்கின்ற மெத்தனம் தானே?
கண்களில் தேங்கிய கண்ணீரையும் மனதில் பொங்கிய எண்ணங்களையும் சந்தனாவிற்கு தெரியாமல் மறைத்தவள், அவளை சமாதானப்படுத்தி படுக்க வைத்தாள்
இங்கே நடந்தது ருத்ரபிரதாபிற்கு தெரிந்துவிடக்கூடாதே! தெரிந்தால் அவனது கோபத்தை அவளால் தாங்க முடியாது.
நல்லவேளையாக ருத்ரபிரதாப்பிற்கு எதுவும் தெரியவில்லை. சந்தனா ருத்ரபிரதாப் இருக்கும் திசைப்பக்கமே திரும்ப மாட்டாள் அதனால் அவள் சொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நிம்மதியுற்றாள் நந்தினி.
நாட்கள் செல்லச்செல்ல ருத்ரன் சந்தனாவை நெருங்க வெளிப்படையாகவே முயன்றான். அதற்கு நந்தினியையே பயன்படுத்தத் தொடங்கினான்.
“நீ வந்தாதான் சந்தனாவும் வருவாள், ப்ளீஸ் ” என்று கேட்கையில் இவளால் மறுக்கமுடியாமல் போனது. கேட்பது ருத்ரனாயிற்றே
ஆனால் சந்தனாவிற்காக அவனது கண்களில் தெரியும் காதல் நந்தினியை தூங்கவிடாமல் செய்தது. ருத்ரன் மிகவும் நல்லவன் தப்பாக இதுவரை நந்தினியை ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது. நடிக்க சொல்லி கொடுத்தாலும் ஒரு டாக்டர் நோயாளியின் கையை பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். வேலையை தவிர அவளிடம் வேறு பேசவே மாட்டான். இப்போது சந்தனாவை பற்றி மட்டும் பேசுகிறான். தப்பான நோக்கிலல்ல காதலோடு.
இதனால் பூப்போன்ற நந்தினியின் இதயம் கருகுவது தெரியாமல், அதன் விளைவுகளும் புரியாமல் ருத்ரபிரதாப் காதல் கனவில் இருந்துவிட்டான்
முகங்களின் தேடல் தொடரும்…..
6 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Nice superrrrrrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Super nice ud .pavam patathil natikkum heroines ellarum eppati patta kastaththaium thanki vaaranga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
NICE UD SIS
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sony Sri says:
Nice eee
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rusha Seevaamirtham says:
Nice update.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Kadal sadurangam vabareethamaagivittatho