Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-35

முகங்கள் -35

 

ஹோட்டல் அறையின் சிட்அவுட்டில் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தான் ருத்ரபிரதாப். கையில் புகைந்து கொண்டிருந்த  சிகரெட்டின் நெருப்பு அவன் விரலை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

 

‘சந்திரசேகரனிடம் தப்பு இருப்பது உறுதி, அதற்கு அவரது முக இறுக்கமே போதுமானது. நந்தினியின் முதல் படம் இவரது தயாரிப்பு தான். ஆனால் அதற்குபிறகு நந்தினியின் எந்த படமும் அவரது தயாரிப்பில் வெளிவரவில்லை. அப்படியென்றால்? . அவரை நந்தினி நிராகரித்து வந்திருக்கிறாள். தன்னை நிராகரிக்கும் ஒரு நடிகையை தேடி ஒரு தயாரிப்பாளர் போகிறார் என்றால்?

 

ருத்ரபிரதாப்பின் முகம் சிவந்தது,  முஷ்டி இறுகியது, உடல் விரைத்தது.

 

எங்கோ ஏதோ புரிந்தது போல் இருந்தாலும் இதுதான் என்று அடித்து சொல்ல ஆதாரம் ஏது?

 

இதில் சந்தனாவும் பாதிக்கப்பட்டிருக்கிறாளோ?

 

வலியுடன் சிந்தித்தவன் சிட்டவுட்டின் கைபிடியில் ஓங்கி ஓர் அடி அடித்தான். நல்லவேளை அவன் எதிரில் சந்திரசேகரன் இல்லை.

 

உடனே ஏதோ தோன்ற சிகரட்டை ஆஷ்டிரேயில் அழுத்திவிட்டு தன் செல்போனை கையிலெடுத்தான்

 

இரண்டாவது முறையாக முயன்றும் போன் எடுக்கப்படவேயில்லை.

 

ஒரு வேளை பாத்ரூமில் இருக்கிறாளோ என்று நினைத்து பத்து நிமிடம் கழித்து மீண்டும் முயற்சித்தான். அப்போதும் அவள் எடுக்கவில்லை.

 

அவ்வளவுதான் ருத்ரபிரதாப்பின் பொறுமை காற்றில் பறந்தது. பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக பக்கத்து அரையை நோக்கி நடக்கலானான்

 

************************************

 

இரவு உணவிற்கு முன் புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் சந்தனா.

 

டிரசிங் டேபிளின் மேலிருந்த புத்தகத்தை எடுக்கப்போனவள் அதனை விடுத்து தன்னிச்சையாய் டிராயரை திறந்தாள் உள்ளே…!!!….!! ருத்ரன் அவளுக்கு அணிவித்த தாலிச் செயின் இருந்தது.

 

அறையிலிருந்த தொலைபேசி அடித்தது….

 

ஆனால் அதன் சத்தம் தான் அவளுக்கு கேட்கவில்லை.

 

முழுகவனமும் அந்த செயினில் தான் இருந்தது

 

மெதுவாக அதனை வெளியே எடுத்தவள் உள்ளங்கையில் வைத்தாள் ,அன்று ருத்ரன் இதனை அணிவித்ததும், அதை தொடர்ந்த பல சம்பவங்களும் அவள் கண்முன் வந்து சென்றன. மென்மையாக கையிலிருந்த செயினை வருடிக்கொடுத்தாள்.

 

மீண்டும் தொலைபேசி அடித்தது, இப்போது அவளுக்கு தெளிவாகவே கேட்டது ஆனால் எடுக்கத்தான் மனமில்லை, அவளது நினைவை முழுதாய் ஆக்கிரமித்திருந்தான் ருத்ரபிரதாப்.

 

அருகிலிருந்த டேபிளை அடைந்தவள் அங்கிருந்த லேப்டாப்பை உயிர்ப்பித்தாள். அதில் ருத்ரபிரதாப் சிரித்துக்கொண்டிருந்தான். அபூர்வமான படம், ஃபோட்டோ ஷுட் அல்லது விழாக்களில் தான் அவன் சிரித்து பார்க்கமுடியும்.

 

இமைகொட்டாமல் அவனையே  பார்த்துக்கொன்டிருந்தாள் ,இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சிரிக்கும் அவன் உதடுகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அப்போது “சட் ” என்ற சத்தத்தோடு அறை கதவு திறக்கப்பட்டு அவளது சிந்தனையை கலைத்தது.

 

ஒருவித பதட்டத்தோடு அவள் வாயிலை பார்க்க, அதே பதட்டத்தோடு அங்கே நின்றிருந்தான் ருத்ரபிரதாப், கடந்த சில நிமிடங்களாக அவளது நினைவில் நின்றவனை நேரில் பார்த்ததும் அவளது பதட்டம் இருந்த இடம் தெரியாமல் ஓடிமறைந்தது.

 

லேப்டாப்பின் நினைவு வர பட்டென அதனை மூடிவிட்டு முகத்தில் முடிந்தவரை கோபத்தை  முயன்று வரவழைத்தவள்.

 

அவனது கைகளில் இருந்த சாவியை கேள்வியாய் பார்த்தாள்.

 

அதற்குள் அவனுமே அவனது முக உணர்வை மாற்றிக்கொண்டிருந்தான். அவள் தொலைபேசியை எடுக்காமலிருந்தது அவனுள் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் மூர்ச்சையாகிவிட்டாளோ என்று பார்க்கத்தான் ஓடிவந்தான். இப்போது அவள் நன்றாகத்தான் இருக்கிறாள் என்று உணர்ந்ததும் நிம்மதியடைந்துவிட்டபோதும்

 

“ஃபோனை ஏன் எடுக்கலை? ” அவனும் கோபமாகவே கேள்வியெழுப்பிக்கொன்டு உள்ளே வந்தான்

 

அவனது கேள்விக்கு பதிலளிக்காமல், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு “இந்த கதவை நான் லாக் பண்ணியிருந்தேனே!!  ” அவனை குற்றம்சாட்டினாள்.  அவளது கோபத்தையும் மீறி உதட்டின் ஓரத்தில் புன்னகை அரும்பியதை அவன் கவனிக்கவில்லை

 

அங்கே கிடந்த டீபாயின் மீது சாவியை பொத்தென போட்டவன் அப்பாவி போல் அவளை பார்த்தான்

 

அவளது புன்னகை விரிந்தது, எங்கே அவனை பார்த்து வெளிப்படையாக சிரித்து விடுவோமோ என்று அஞ்சியவள் அவனுக்கு முதுகாட்டி திரும்பி நின்று கொண்டு ” தேவையில்லை, அது உங்க கிட்டயே இருக்கட்டும், இன்னொரு சாவி செய்யும் டைம் சேவ் ஆகும் ” என்றாள்

 

அவளது பதிலில் ருத்ரனின் முகம் பிரகாசமானது

 

அவன் சாவியை எடுத்துக்கொண்ட சத்தம் கேட்டது ஆனால் வெளியேறிய காலடி சத்தமோ கதவை சாத்தும் சத்தமோ கேட்காததால் சந்தேகத்துடன் திரும்பியவள் அதிர்ந்தாள்

 

காரணம் அவளது பெட்டில் கைகள் இரண்டையும் பின்னே வைத்து ஊன்றி கால்மேல் கால் போட்டு சட்டமாக அமர்ந்திருந்தான் ருத்ரபிரதாப்.

 

அதிர்ச்சியை உள்ளே மறைத்தவள்

 

“எனக்கு தூக்கம் வருது ருத்ரா!” என்று மறைமுகமாக அங்கிருந்து அகலச்சொன்னாள்

 

“சோ?!!!! ” புருவம் இரண்டையும் உயர்த்தி அவன் கேட்டது அவனும் விடுவதாக இல்லை என்று சொல்லாமல் சொல்லியது

 

பொறுமையை இழுத்துப்பிடித்து “சோ சிம்பிள் நீங்க போனாதானே நான் தூங்கமுடியும் ”

 

“போக முடியாதே ” அவளது கண்களை பார்த்து  உறுதியுடன் பேசியவனை குழப்பத்துடன் ஏறிட்டாள்

 

அவளது குழப்பத்தை தனக்கு சாதகமாக்கி அவளருகில் சென்றவன்  அவள்  மென்கரத்தை பற்றினான்.

 

நடுங்கிய உதடுகளுடன் “ப்ளீஸ் கோ ” என்றாள்

 

“போகமாட்டேன் ” என்றான் திட்டவட்டமாக

 

“என்ன? “அவனது கண்களை பார்த்தாள்

 

அவளை நெருங்கியவன் அவள் மேல் சாய, அவன் அவளை உரசி விடாதபடி பின்னோக்கி வளைந்தவள் கண்களை இறுக மூடிக்கொள்ள , அவனோ அவளுக்கு பின்னால் இருந்த  லேப்டாப்பை திறந்தான்.அவன் முழுதாக அவள் மேல் சாய்ந்திருந்தான், அவளால் அசையவும் முடியவில்லை ஏனெனில் அவளது கையை அவன் இறுக பற்றியிருந்தான்,  அவனது முகம் அவளுக்கு மிக மிக அருகாமையில். இன்னொருகையால் லேப்டாப்பை சுட்டிக்காட்டி

 

” இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்காம நான் எப்படி போக முடியும்?   ” புருவத்தை உயர்த்தி தலையை சாய்த்து கேட்கும் அவனையே இமைகாமல் பார்த்தாள்.

 

‘கண்டுபிடித்து விட்டானே’ அவளது முகம் செங்கொழுந்தானது.

 

அந்த வெட்கசிவப்பில் தன் வசமிழந்தான் ருத்ரபிரதாப்

 

“…..”

 

அவளது இடையை தன் கரத்தால் சுற்றிவளைத்தவன் லேப்டாப்பின் அருகிலிருந்த செயினை பார்த்துவிட்டான்

 

“இந்த செயின்????!!!!”

 

சுற்றிவளைத்த இடையைபற்றி அவன் தன்புறம் இழுக்கவும், நிலைதடுமாறி அவன் மேல் விழுந்தாள்.

 

தன் நெஞ்சில் விழுந்தவளின் தாடையை பற்றி நிமிர்த்தியவன்.

 

” உன்னையும் உன் உணர்வுகளையும் உனக்குள்ளேயே ஒளிச்சு வெச்சுக்காத, ப்ளீஸ் ஸ்பீக் அவுட்” அவளது தோளை பற்றியவன்

 

“சொல்லு!!!!! சொல்லிடு!!!!!!! ” என்று உலுக்கினான். அவனுக்கு உண்மை தெரிய வேண்டும், அதுவும் அவளது வாய்மொழியாக. அவனது வற்புறுத்தலின் தாக்கம் தாங்காமல் மூர்ச்சையாக அவன் கைகளிலேயே துவண்டு விழுந்தாள் சந்தனா.

 

முகங்களின் தேடல் தொடரும்…




6 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    எதனால் சந்தனா எப்போது பார்த்தாலும் மயங்கிவிழுகின்றார் ,அவருக்கு என்ன பிரச்சனை,தன் மனதில் உள்ளதை மறைகமல் மனம் திறந்து சொல்லுவாரா சந்தனா ருத்திரனிடம்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    superrrrrrrrrr


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Punitha. Muthuraman. says:

    Very nice.💐💐💐


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Haran Kiruba says:

    wow super ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Vilaathi villa avvlo virupamaa aval mel


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Interesting

You cannot copy content of this page