Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஷ்! இது வேடந்தாங்கல்! – 4

அந்த கௌன்சிலர் அனுப்பிய காணொளி பிரகாசமாய் அவனது கைபேசியில் இரைச்சல் ஒலியுடன் ஒளி வீசியது. செல் ஃபோன் காணொளி அவனது முழு  கவனத்தையும் இழுத்தது. அந்த காணொளியில் இரண்டு பெண்கள் ஐஸ் கிரீம் கடையில் சுமார் இரண்டு மணி நேரம் பேசுகிறார்கள். ஐஸ்கிரீம்  கடையில்  பேசி  முடிந்ததும்  இரண்டு பெண்களும் ஒரு டிசைனர் டிரஸ் கடையில்  நுழைகிறார்கள்.

பவித்ரா  என்று  கௌன்சிலர் பி.ஏ மூலமாக அடையாளம் காட்டப்பட்டவள் மற்றவளுக்கு  பத்து  நெக்லஸ் கழுத்தில் வைத்துப் பார்க்கிறாள். இருவர் முகமும் தெளிவாக இல்லை. பின்னே ஒன்றும் வாங்காமல் அடுத்த கடைக்குப் போகிறார்கள். அது சிறுவர்களுக்கான கடை. அங்கே ஒரு பார்பி பொம்மை வாங்குகிறாள்  பவித்ரா. அவர்கள்   சென்ற  மற்ற கடைகளில் நுழைவாயிலில்தான் சி.சி.டி.வி  இருந்தது. அதனால்   உள்ளே நடந்தது தெரியவில்லை.

நான்கு  மணி  நேரம்  கடந்த பிறகு வெளியே ஆட்டோவில் பவித்ரா தனியாக  ஏறுகிறாள். அவள்  தோழி (ஸ்ரீ) ஒரு பைக்கில் செல்கிறாள். பைக் நம்பர் தெளிவாக இல்லை. அவள் முகமும் கொஞ்சமும் தெளிவாக இல்லை. அந்த பைக்காரன்  முகத்திலோ  ஹெல்மெட். வெறுப்படைந்த வெங்க்ட செல்போனை தலையணை  மீது  விசிறி விட்டு   கணகளை  மூடினான்.

மறுநாள்  குளித்துவிட்டு உடை மாற்றுவதற்குள் அவன் கைபேசிக்கு பத்து அழைப்புகள் வந்திருந்தன. ‘ஆகா பத்தா?’ என்று மனதில் நினைத்தவன்  வந்த அழைப்புகளை  ஒரு பார்வை பார்த்துவிட்டு பிஸ்டலை அதன் உறையில் சொருகி தோள்பட்டை பேட்ஜை  சரிசெய்துவிட்டு  தனது  ஜீப்பின்  சாவியை   எடுத்துக்கொண்டு   கிளம்புவதற்கு   எத்தனித்தான்.

தனது  அலுவலகம் வந்து சேர்ந்தபோது அவன் கைக்கடிகாரம் மணி எட்டு என்று   காண்பித்தது.  அவன்  உள்ளே  நுழைந்ததும் ஏ.எஸ்.ஐ கோபிநாத் அவனிடம்   நேராக வந்தார். வந்தவர் தனது நேரத்தை வீணாக்காமல் வெங்கட்டிடம்   மட மடவென்று   பேச ஆரம்பித்தார்

“கௌன்சிலர்  பேசினார் வெங்கட். பவித்ரா கேஸ் பற்றிய எல்லா விபரமும்  உன்னிடம்   தரச்சொன்னார். இந்தாப்பா   இந்த   ஃபைல்ல  இருக்கு. ஆர் யு பாசிடிவ்?  இந்த  கேஸை   சால்வ்   பண்ண    முடியும்னு   நினைக்கிறியா? ”

வெங்கட் அவர் கேள்விக்கு பதிலாக சிரித்தான். ‘ஆம்’ என்ற அர்த்தம் பொதிந்திருந்த  சிரிப்பு. ஏ.எஸ்.ஐ  கோபிநாத் வேறேதும் கேட்காமல் “அப்படினா வா என்னுடன்.  ஒரு  காஃபியுடன்  பேசுவோம். ” என்றார்.




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super thuppariun kathaiya


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Bala Sundar says:

      Its a Love story .very Little detective part.

You cannot copy content of this page