முகங்கள்-36
2596
12
முகங்கள் 36.
காரிடாரில் இங்கும் அங்கும் இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தான் ருத்ரபிரதாப். தன் மேல் மயங்கிச் சரிந்த அவளது முகம் அவன் நினைவைவிட்டு அகல மறுத்தது.
ஓர் படபடப்புடன் அவனை எதிர்கொண்டான் பிரகாஷ். “ஒன் மோர் பேட் நியூஸ் ருத்ரா ”
“…….”
“சந்திரிகா ஃபிளைட் ஏறிட்டாங்க ”
“…..”
“ருத்ரா ப்ளீஸ் ஏதாவது ரியாக்ட் பண்ணு, நீ எப்போதும் சொல்லுவியே ‘இட்ஸ் எ ஓல்ட் நியூஸ்னு ‘ அதையாவது சொல்லு, உன்ன இப்படி பாக்க முடியல ” குரல் தழுதழுத்தது
“……”
ருத்ரனின் மூளை வேலை செய்ய மறுத்தது. இப்போது நடக்கும் எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தான் என்னும் குற்றஉணர்வு அவனை கூர் ஈட்டியை போல் குத்தி குடைந்துகொண்டிருந்தது. அவனது தோள்களை பற்றி நிறுத்திய பிரகாஷ் ஏதோ பேச எத்தனிக்கையில் கதவை திறந்து கொண்டு டாக்டர் சியாமளா வெளிப்பட்டார்
பிரகாஷின் கைகளை உதறித் தள்ளியவன் சியாமளாவிடம் விரைந்தான்
“என்னாச்சு? ” டாக்டரின் கண்களை பார்த்து கேட்டான்
“சேம், பிபீ பிலக்சுவேட் ஆகுது”
“மயக்கம் தெளிஞ்சிடுச்சா, நான் அவங்களை பாக்கலாமா? ” பதட்டத்துடன் கூடிய அவசரம் காட்டினான்
“இல்ல இப்போ ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்திருக்கேன் தூங்கராங்க, அவங்களோட மென்டல் ஸ்டேடஸ்கு அவங்களுக்கு நல்ல தூக்கம் வேணும், பட் அவங்களுக்கு சரியான தூக்கம் இல்லைன்னு தெரியுது. அவங்களுக்கு ஸ்டிரெஸ் கொடுக்காதீங்கன்னு எத்தனைமுறை சொல்றது. ஷீ இஸ் வீக், டோன்ட் போர்ஸ் ஹர் டு டூ எனி திங் ,ஷீ நீட் ரெஸ்ட். ”
“சாரி, இட் வோன்ட் ஹேப்பன் அகய்ன் ” (இனி இது போல் நடக்காது) என்றான்
“இட் ஷுட் நாட் ஹாப்பன் ” (‘இனி நடக்க கூடாது ‘) என்று அழுத்தி கூறிய சியாமளா “கண்ட்டினியூ த சேம் டேபிளட்ஸ்” (‘அதே மாத்திரையை தொடருங்கள் “) என்று முடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்
சந்தனாவின் தூக்கம் கலைந்ததும் தன்னை அழைக்குமாறு நர்சிடம் கேட்டுக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான் ருத்ரபிரதாப், அவனை தொடர்ந்து பிரகாஷும் உள்ளே நுழைந்து கதவை சாத்தினான்
பொத்தென படுக்கையில் அமர்ந்தவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். அவனருகில் அமைதியாக அமர்ந்த பிரகாஷிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
சிலநொடிக்கு பின் சடார் என எழுந்தவன், தன் பாக்கெட், டிரஸ்சிங் டேபிள்,மெத்தைக்கடியில், தலையணைக்கடியில் என்று தீவிரமாக எதையோ தேடினான்
அவன் தேடுவதை கவனித்த பிரகாஷ் தன் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை எடுத்து அவன் புறம் நீட்ட, அதனை வினோதமாக பார்த்த ருத்ரபிரதாப், அவசரமாக பிடிங்கி தூக்கி எரிந்தான்.
‘வேண்டான்னா சொல்ல வேண்டியது தானே, அதுக்கு எதுக்கு தூக்கி போடனும், வேற என் தான் தேடறான்,? ‘ சிந்தித்துகொண்டே அவன் தூக்கியெரிந்த சிகிரட்டை பாவமாக பார்த்தான்
அதற்குள் போர்வைக் குள்ளிருந்த செல்போனை எடுத்தவன், அதனை ஆன் செய்து காதுக்கு கொடுத்தான்
“டாக்டர் ஷர்மா ஹியர் ” என்றது எதிர்முனை
“நீங்க சொன்ன மாதிரியே தான் எல்லாம் நடந்திட்டிருக்கு ஷர்மா ”
“எஸ் ஐ நோ, இப்பதான் சியாமளா பேசினாங்க ”
“ஐ கான்ட் சீ ஹர் லைக் திஸ்” அவனது குரல் கரகரத்தது
“அவங்களை முழுசா நந்தினி ஆக்கனும்ங்கிறதுதானே உங்கள் விருப்பம்? ”
“ஆ….மாம்….,ஆனால்? ”
“நம்ம கொடுக்கற மருந்தோட வீரியம் அதிகம், அது கொடுக்கும் விளைவு தான் இந்த மயக்கம்”
“அப்போ டேப்லட்சை நிறுத்திட்டா எல்லாம் சரியாகிடுமா? ”
“நோ, இட்ஸ் டூ லேட் ”
“அப்போ வேற ஆன்ட்டிடோட் கொடுத்து சரி பண்ணுங்க ”
“நோ ”
“தென் ஃபார் வாட் த ஹெல் யூ ஆர் எ டாக்டர்? கோ டு கிளீன் த சீவேஜ்” ‘கோபத்தில் மரியாதையை மறந்தவன், போனை விசிறி அடித்தான், நல்லவேளையாக அது மெத்தையில் விழுந்து தன் உயிர் காத்துக்கொண்டது
“ச்…சே…” என்று மீண்டும் மெத்தையில் தொப்பென விழுந்தான் ருத்ரபிரதாப்
ஷர்மாவிடம் பேசும் வரை அவனது முகத்தையே பார்த்துக்கொண்டு அமைதி காத்த பிரகாஷ், அவன் தன் கட்டுப்பாட்டை இழந்து பேசுவது புரிந்து கலவரமாவதற்கும் ருத்ரபிரதாப் போனை தூக்கி எரியவும் சரியாக இருந்தது, உடனே மெத்தையில் இருந்த போனை எடுத்து காதுக்கு கொடுத்தான் பிரகாஷ்
“ஹலோ யூ தேர், ஷர்மா? ஹலோ … சா….சாரி… மிஸ்டர் ஷர்மா, ஹீ இஸ் சோ டிஸ்டர்ப்ட் வெரி சாரி”
“இட்ஸ்..ஓகே பிரகாஷ் ஐ கேன் அன்டர்ஸ்டான்ட், இஸ் ஹீ இன் லவ் வித் ஹர்?”
“இ….ல்…லை அப்படியெல்லாம் இல்லை ஷர்மா “மழுப்பலாக பதிலளித்தான்
“அப்போ அந்த பிரஸ் மீட்? ”
“அது …. அது ஜஸ்ட் ஒரு டைவர்ஷனுக்கு? “ஏதோ வாயில் வந்ததை உளரி கொட்டினான்
“ஓகே இட் இஸ் நன் ஆப் மை பிசினஸ், பட் இட் இஸ் வெரி டேன்ஜரஸ் ” (‘அது எனக்கு தேவையில்லாத விஷயம்தான், ஆனா அது ரொம்ப ஆபத்தானது ‘ )என்று எச்சரித்தார் ஷர்மா
“ஓகே டாக்டர் நான் இதைப் பத்தி ருத்ரன்கிட்ட பேசுறேன், இப்போ இந்த தொடர் மயக்கம், பிபி பிளக்சுவேஷன், அன் கன்ட்ரோலபிள் ஸ்டிரஸ் இதையெல்லாம் குறைக்கவோ சரி பண்ணவோ வழியே இல்லையா? ஒரு ஹெட் டாக்டரா நீங்க என்ன அட்வைஸ் பண்றீங்க? ” நிதானமாக கேட்டான்
சில நொடி அமைதிக்கு பின் எதிர்முனையில் ஷர்மாவின் குரல் கேட்டதும் ஸ்பீக்கரை ஆன் செய்தான் பிரகாஷ்
ஷர்மா பேசியது ருத்ரபிரதாபின் மனதில் ஆழமாக பதிந்தது
“ஓ.கே,டாக்டர் நாங்க டிரை பண்றோம்,தேங்க்யூ சோமச் ” என்று தொடர்பை துண்டித்தவன் ருத்ரபிரதாபின் அருகில் அமர்ந்தான், ஆனால் எதுவும் பேசவில்லை,அவன் தீவிர சிந்தனையில் இருப்பது நன்றாகவே புரிந்தது
சில நிமிடங்களுக்கு பிறகு பெட்டிலிருந்து எழுந்த ருத்ரபிரதாப் வேகமாக சென்று கப்போர்டை திறந்தான், அதிலிருந்த தனது கிட் பேக்கை எடுத்து துணிகளை அதனுள் திணிக்கலானான்,
அவனது நோக்கம் தெளிவாக புரிந்து விட, அவனருகில் சென்ற பிரகாஷ் ஏதோ பேச முயல்கையில் ருத்ரனின் போன் அலறியது, இயந்திரமாய் அதனை எடுத்து காதுக்கு கொடுத்தவன் தீவிரமாக கவனிக்கலானான், அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ், ஆனால் எப்பொழுதும் போல் அவனால் எதையும் கிரகிக்க முடியவில்லை,
“ஷிட் ” எரிச்சலுடன் போனை தூக்கி கீழே எரிந்தான்,இந்த முறை அது சுக்குநூராக உடைந்தது
“என்னாச்சு ருத்ரா? ” கலவரமானான் பிரகாஷ்
“அஷ்வின் கிருபாகரனை மீட் பண்ணப் போயிகிட்டு இருக்கான் ” அவனது குரல் இறுகியிருந்தது
“என்ன??!!!??? ”
“….”
“அவனை ஸ்டாப் பண்ண முடியாதா? ”
“நோ ”
“அப்போ, என்ன பிளான்? ” தவிப்புடன் பிரகாஷ் கேட்கும்பொழுதே , தன் கிட் பேக்கின் சிப்பை வேகமாக இழுத்து மூடியவன்
“பிளான் இது தான், லிசன் கேர்ப்புலி, ஃபர்ஸ்ட் கெட் மீ எ நியூ போன், நெக்ஸ்ட் கேரவனை ரெடி பண்ண சொல்லு, அந்த நர்சை கூப்பிட்டு திங்ஸை பேக் பண்ணி ரெடியா இருக்க சொல்லு, நான் அசிஸ்டன்ட் டைரக்டர்சை பார்த்து இஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு வரேன், ஷர்மா சொன்னதை செஞ்சு பாத்திடலாம் குவிக், ” என்று மூச்சுவிடாமல் பேசியவன் பிரகாஷின் தோள்களை தட்டி அவனை துரிதப்படுத்தினான்.
“ருத்ரா பிளீஸ், நான் சொல்றதை கேளு, அஷ்வின் இஸ் வெரி டேன்ஜரஸ் ”
“ஐ டோன்ட் கேர், அவனால என்ன கிழிக்க முடியுமோ கிழிச்சிக்கட்டும், ஐ வில் ஃபேஸ் த கான்சிகுவன்சஸ்” (‘அதன் விளைவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன் ‘ ) என்றவனின் கண்களில் ஓர் வெறித்தனம் தெரிந்தது
“காம்டவுன் ருத்ரா பிளீஸ், ஈவினிங் சந்திரிகா வேற வந்துடுவாங்க, அப்போ நந்தினி இங்க இல்லன்னா பெரிய பிராப்ளம் ” நிலைமையின் தீவிரத்தை அவனுக்கு உணர்த்த முயன்றான்
“ஸ்….ஸ்….டா…..ப் பிட், “என்று கத்தியவன் பிரகாஷின் இரு தோள்களையும் ஆவேசமாக பற்றி உலுக்கினான் “லுக்…இப்போ எனக்கு எது முக்கியம்னு படுதோ அதைத் தான் செய்ய போறேன் .மத்த எல்லாம் எனக்கு குப்பைக்கு சமம்” அவனது உறுதியான குரல் பிரகாஷை யோசிக்க வைத்தது
இருப்பினும் அவனது முரட்டுத்தனத்தை புறம்தள்ளி அவனது கண்களை பார்த்து பேசினான் பிரகாஷ் “அவங்கள முழுசா நந்தினியாக்கதான் நம்ம முயற்சி பண்றோம், பட் அவங்கள அங்க கூட்டிட்டு போனா திரும்பவும் அவங்களை நம்ம சிச்சுவேஷன்கு அடாப்ட் பண்ண வைக்கிறது ரொம்ப கஷ்டம், டிரை டு அன்டர்ஸ்டான்ட்.”
“இ….இ…இல்லை..அதைபத்தி எனக்கு கவலையே இல்லை, அவ கடைசி வரைக்கும் சந்தனாவாவே இருக்கட்டும், நந்தினியா மாறவே வேண்டாம், அன்டர்ஸ்டான்ட்?, டூ வாட் ஐ செட்,”( ‘புரிஞ்சதா? நான் சொன்னதை மட்டும் செய் ‘) என்று கட்டளையிட்டவன் ரூமைவிட்டு வெளியேறினான்
“டேய் எல்லாம் சரியா நடக்கும்போது இப்படி குழப்பாத டா ” என்று பிரகாஷ் கத்துவதை கேட்க அங்கே சுவர் மட்டுமே இருந்தது
முகங்களின் தேடல் தொடரும்….
12 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Gayathri sankar says:
antha tablets sapdrathunala than santhanaku rudhrana pidijiruka?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Ha ha ha…. நம் உடலில் மனமும் மூளையும் எப்போது என்ன செய்யுமென்று யாருக்கும் தெரியாது, ஏன் நமக்கே தெரியாது. Thanks for the comment. Thodarnthu aadharavu kodungal. Nandri
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
கொலையும் செய்துவிட்டு அதனை மறைத்தும்வைத்துவிட்டு ,ஆள்மாறாட்டமும் செய்துவிட்டு ,இப்போ உலகத்திலேயே இல்லாத நந்தினி போல் இந்த சந்தனாவை மாற்ற முயல்கின்றார்களே,இவர்களின் கொடுமையை தட்டிக்கேட்க யாருமே இல்லையா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Hi thadsayani….. hmm…thatti keattuta pochi….. ungalathu commentirku nandri
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
NICE UD
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u ugina
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
ரொம்ப சுவாரஸ்யமான பதிவு…
உணர்ச்சிகளின் பிடியில் ருத்ரா….
காதலின் பிடியில் சிக்கி தவிக்குது
அவனது உண்மை குணம்…
ரொம்ப ரொம்ப நல்ல முன்னேற்றம் கதையில்….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Nandri thozhi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Ippo dandanaa mattume kannirkku tetoyiraalaa ruthraa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Hmmm….. appadi thannu ennakum thonuthu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jenni Nila says:
Interesting..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u jenni