Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi5

காஃபி ஷாப்பில் கோபிநாத் சொன்னார் “பவித்ரா கேஸை ஏ.எஸ்.ஐ ராஜன் தான் டீல் பண்ணான். என் கூட ஒண்ணா டிரைனிங் இருந்தவன் தான். நல்ல பையன். பவித்ரா கேஸால் அவனுக்கு நிறைய பிரச்சனை. டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு கிளம்பிட்டான். இப்ப அவன் லைஃப்ல நல்லா செட்டில் ஆகிட்டான். ஒரு பெண் குழந்தை இருக்கு. ”
“ ‘ராஜன்’ அவருக்கு என்ன பிரச்சனை? ”
“ராஜன் அந்த பொண்ணு ஸ்ரீயோடு ஏதோ கனக்ட் ஆகிட்டான். அதான் வினையே. ஸ்ரீ எஸ்கேப் ஆகிடுச்சு. அதான் பிரச்சனை. கிடைச்ச அக்கூயூஸ்டை கோட்டைவிட்டதால் ரிசைன் பண்ணும் நிலை வந்திடுச்சி. அந்த பொண்ணு முக ராசி அப்படி. பசங்க விழுந்திடுறாங்க வெங்கட். போலீஸ்காரங்ககூட விழுந்திடுறாங்கப்பா.”
“கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கிறியா? அதுல நந்தினி தேவின்னு ஒரு கேரக்டர் வரும். ஸ்ரீயும் அது போலதான். ராஜன் நந்தினிகிட்டயிருந்து தப்பிச்சிட்டான். ஒரு போலிஸ்காரனை தேற்றவே ஒரு மாதம் ஆகிடுச்சு. ராஜனைத்தான் சொல்றேன். யாராவது பிரச்சனையைத் தேடிப் போவாங்களா? ”
ஏ.எஸ்.ஐ கோபிநாத் வாயை மூடிக்கொண்டே இருந்திருக்கலாம். ‘அக்லி ட்ரூத்’ படத்தின் லிப் லாக் காட்சியை விழுந்து விழுந்து ரசித்தவன் நந்தினி தேவி என்று வர்ணித்த பெண்ணை விடுவானா? அழகை தள்ளி நின்றே ரசிக்கும் நம்ம வெங்கட் விடுவானா? ரோஜா பூப்பது பார்த்துப் பார்த்து ரசிக்கவே பறிப்பதற்கில்லை என்று நம்பும் நம்ம வெங்கட் ஸ்ரீயை பார்க்காமல் விடுவானா? கரும்பைக் கடிக்காதே உன் பல் உடையப் போகுது என்று சொல்வது போல இருந்தது வெங்கட்டிற்கு.
ஆனால் இப்போது அதைவிட மற்றொரு விஷயம் அவனுக்குத் தெரிய வேண்டியிருந்தது. அதனால் தனது கேள்விகளை பட்டென்று கேட்டான் “ராஜனுக்கும் ஸ்ரீக்கும்?.. ”
வெங்கட் கேட்க நினைப்பதை புரிந்துகொண்டு சொன்னான் “ஆமாம் வெங்கட். இருவருக்கும் அஃபேர் இருந்தது. ஏட்டையா சொல்லித்தான் எனக்கே தெரியும். கௌன்சிலர் ஆளுங்களிடம் அவன் மாட்டிக்காம இருக்க டிபார்ட்மன்ட்தான் ஹெல்ப் பண்ணுச்சு. அந்த பொண்ணு கௌன்சிலர் ஆளுங்களுக்கு பயந்து ராஜனிடம் இருந்து எஸ் ஆகிடுச்சு. ஆளை பிறகு கண்டேபிடிக்க முடியல. அக்கூயூஸ்டை கோட்டை விட்டதுக்காக டி.எஸ்.பி ராஜனை டிரான்ஸ்பர் செய்துட்டார். கேஸிலிருந்து வெளியே வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றானது. ”
“நீ கூடவா ஸ்ரீயைப் பார்த்ததில்லை? சும்மா கதை விடாத.. கோபி. ”
“நிஜம் வெங்கட். ஏட்டையா தான் பார்த்திருக்கார். அவர் தான் எங்களிடம் ஸ்ரீயை பற்றிச் சொன்னதே. . ”
“எந்த ஏட்டையா?”
“நம்ம காமராஜர். மறந்திட்டியா? மகளிர் காவல் நிலையத்தில் பத்மான்னு ஒரு எஸ்.ஐ இருப்பாங்களே.. ப்ரஸ்காரனுங்க தலையில வச்சி கொண்டாடுவாங்களே? அவுங்க அப்பா தான்.. ஸ்ரீ கேஸை ராஜனும் அவுங்களும் தான் டீல் பண்ணாங்க. ”
“சென்னைக்குப் போய் பத்து வருஷம் ஆச்சுல்ல. அதான் மறந்திடுச்சு. மதுரை இப்பதான் செட்ஆகுது.. இப்ப ஞாபகம் வந்திடுச்சு. பத்மா மேடம் பார்க்கணுமே.. ஏட்டையா நம்பர் கொடு. ”
“ஏட்டையா போன வருடம் தவறிட்டார். பத்மா இப்ப கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்காங்க வெங்கட். அவுங்களுக்கு சிவியர் ஹார்ட் அட்டாக். ஒரு மாதம் முன்புதான் அட்டாக் வந்தது. ரெசிக்னேஷன்கூட கன்பர்ம் ஆகிடுச்சு. ”
“இந்த கேஸ_க்கு டெட் என்ட்னு பெயர் வை. எங்கிட்டு திரும்பினாலும் முட்டுது.” என்று கடுப்பில் கூறினான் வெங்கட்.

காஃபிக்கு பில் கொடுத்துவிட்டு இருவரும் காவல் நிலையத்திற்குள் சென்றனர். வெங்கட் தனது குறிப்பேடில் ராஜனுடைய விலாசத்தை குறித்துக் கொண்டான். வெங்கட் தனது ஜீப்பில் கிளம்பியதும்… ஏ.எஸ்.ஐ தனது செல்பேசியை எடுத்து பத்து எண்களை அழுத்தி அழைப்பு பட்டனை அழுத்தினார். எதிர்முனையில் பேச்சு குரல் கேட்டது.
“சார் சொல்லுங்க. நான்தான் மசூத் பேசுறேன்.”
“மசூத் ஸ்ரீயை பத்திரமா பார்த்துக்கோ. கேஸ் வெங்கட் கைக்கு போயிருச்சு. ஜாக்கிரதை. ஸ்ரீயுடன் பேசணும். ஃபோனை கொடு. ”
மறுமுனையில் பெண் குரல்.. “கோபி சார் அவருக்கு எதுவும் பிரச்சனை வருமா? ”
“ஸ்ரீ.. பயப்படாதேமா.. உன் புருஷனுக்கு எதுவும் ஆகாது. நாங்க இருக்கோம்ல? விட்டிடுவோமா? குட் நியுஸ் சொன்னான் உன் புருஷன். உன் பெரிய பொண்ணு வரப்போகும் குட்டித் தம்பியைப் பற்றிதான் ஒரே பேச்சாமே? உன் வீட்டுக்காரன் தான் சொன்னான். டாக்டர்கிட்ட செக்கப்பிற்கு சரியா போகணும். பழையதை நினைக்க கூடாது சரியா? மசூத்கிட்ட ஃபோனைக் கொடு. ”
“சரிங்க சார். உங்க வைஃப் நல்லாயிருக்காங்களா? ”
“நல்லாயிருக்காம்மா.. மசூத்கிட்ட கொடும்மா.. ”
“ம். ஃபோனை அவர்கிட்ட தர்றேன்… ”




Comments are closed here.

You cannot copy content of this page