முகங்கள்-41
2047
8
முகங்கள் 41
கிருபாகரனின் நம்பரை டயல் செய்து விட்டு படபடக்கும் இதயத்தோடு சந்தனா காத்திருக்க, எதிர்முனையில் கம்பீரக் குரல்
“கிருபாகரன் ஹியர் ” என்றதும் பட்டென போனை வைத்து விட்டாள்.
முகம் முழுவதும் வியர்வைத்துளிகள், தன்னையும் மீறி எங்கே கத்தி அழுதுவிடுவோமோ என்று பயந்தவள் தன் கைகளால் வாயை அழுந்த மூடிக்கொண்டு சுவற்றோரம் சரிந்து அமர்ந்தாள், கண்கள் இலக்கில்லாமல் இங்கும் அங்கும் அலைபாய்ந்தது. பயத்தில் முகம் வெளிறியது. தன்னால் இது முடியாது! முடியவே முடியாது!
விம்மி வெடித்த தன் இதயத்தை அடக்க அவள் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அழைத்தது.
அழைப்பது யார்? கிருபாகரனாக இருக்குமோ? எடுக்கலாமா கூடாதா? ஒரு வேளை ருத்ரபிரதாப்பாக இருந்தால்? ஐயோ!!! எடுக்காவிட்டால் இங்கே நேரில்லேயே வந்துவிடுவான், கள்ளச்சாவியுடன் சுற்றும் குள்ளநரி!
நடுங்கும் கைகளுடன் போனை எடுத்து காதுக்கு கொடுத்தாள்.
அவளது ஹலோவை தொடர்ந்து “ந…ந்தி…னி… நந்தினி தானே….!!! கிருபாகரன் பேசறேன் இது மார்பிள் ரெசாட் ரூம் 203 யோட நம்பர்னு எனக்கு தெரியும், டோன்ட் வொர்ரி, நான் இருக்கேன்…. ஸ்பீக் அவுட், ”
“……….” இதயம் எக்குத்தப்பாய் அடித்தது,’ சொல்லிவிடலாமா? கூடாதா? ருத்ரனுக்கு தண்டனை கட்டாயம் கிடைக்கவேண்டும் தான்,ஆனால்……..’ அவளது மூளை வேகமாக யோசிக்கும் பொழுதே “நந்தினி……. நீங்க எதுக்கும் யாருக்கும் பயப்படவேண்டாம், உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு தெளிவா தெரியுது, அது அந்த குகைக்குள்ளே இருந்துதான் ஆரம்பம்னும் எனக்கு தெரியும், பட் எதையோ எல்லாரும் மறைக்கறீங்க, அப்பாவியா ஒரு பொண்ணு செத்து…….. ” அவன் முடிப்பதற்குள்
“இ…….ல்………லை!!!!!!! ” என்று கத்திவிட்டாள் சந்தனா
“………”
“செ……த்……த…..து ச….ந்…..த….னா இல்லை!!!!! ந……ந்……தி……னி!!!!! ”
“வாட்???!!!! ” அதிர்ச்சியானான் கிருபாகரன்
“எஸ் ……..ருத்ரன் ஒரு கொலைகாரன், அவன் என்னை காதலிச்சான், அதுக்கு நந்தினி தடையாய் இருந்தாங்கன்னு அவங்களை கொன்னுட்டான், என்னை மிரட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு நந்தினியா மாத்திட்டான், சுயநலக்காரன்,ஏதாவது செஞ்சு என்னை கல்யாணமும் செய்துக்குவான்!!!! அப்புறம்!!!! ….. ஐயோ!!!!! ” கதறி அழுதாள்
கிருபாகரனுக்கு துளியும் விளங்கவில்லை. நந்தினி கொலை செய்யப்பட்டாளா? சந்தனாதான் நந்தினியாக இருக்கிறாளா? காரணம் காதலா? அவனது மூளை ஏதேதோ யோசிக்க எதிர்முனையில் அழுகுரல் கேட்க தன்னை நிலைபடுத்திக்கொண்டான்
“ந……ந்…. சாரி சந்தனா, ப்ளீஸ் அழாதீங்க, இதுக்கு மேல நாம ஃபோன்ல பேசறது சரின்னு எனக்கு தோணலை நாம நேர்ல மீட் பண்ணலாமா? ”
“நோ…… நான் எங்க வந்தாலும் ருத்ரனின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. ” திட்டவட்டமாக மறுத்தாள்
ஃபோனில் பேசுவது ஆபத்தானது என்று தெரிந்தும் வேறு வழியின்றி அவளிடம் பேசலானான், பிறகு அவள் பேசாமலே இருந்துவிட்டால் உள்ளதும் போய்விடுமல்லவா
“ஓ கே…. ஓகே….நான் கேட்கும் கேள்விக்கு நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க, ருத்ரனுக்கு உங்க மேல காதல் இருப்பதில் தப்பு எதுவும் இல்லை,ஆனால் அதுக்காக நந்தினியை ஏன் கொல்லனும்? ”
“ஏன்னா நந்தினி ருத்ரபிரதாப்பை உண்மையா நேசிச்சாங்க” மூக்கை உரிஞ்சிக்கொண்டே பதிலளித்தாள்
தலையில் கையை வைத்துக்கொண்டான் கிருபாகரன், முக்கோண காதல்
“நந்தினி ருத்ரனை காதலிச்சது உண்மையா? சாட்சி ஏதாவது இருக்கா? ”
“”இருக்கு, எனக்கே இப்போதான் தெரிஞ்சுது, ரொம்ப நாளாவே எனக்குள்ள ஒரு கேள்வி, நந்தினியை ஏன் ருத்ரபிரதாப் கொலை செஞ்சான்னு? ருத்ரபிரதாப்போட பல ஃபோட்டோஸ் நந்தினி மேடம் கேரவன்ல இருக்கு சில ஃபோட்டோஸ் பின்னாடி “ஐ லவ் யூ ” எழுதியிருக்கும் சில ஃபோட்டோஸ்ல நந்தினியின் லிப்ஸ்டிக் கரையிருக்கும், இதை எல்லாம் இன்னைக்கு பொள்ளாச்சியிலிருந்து வரும்போதுதான் பார்த்தேன்,
“ருத்ரன் என்னை நேசிச்சது எனக்கு தெரியும், ஆனால் எனக்கு அவனை துளியும் பிடிக்காது, ஆனால் என்னை நெருங்க விடாம நந்தினி தான் தடுக்கராங்கன்னு நினைச்சு அவங்களை கொன்னுட்டான், என்னை நந்தினியா மாத்தி அவன் கூடவே வெச்சுகிட்டான், அவனோட கேவலமான ஆசைக்கு என்னை கட்டாயப்படுத்துறான், என்னை காப்பாத்துங்க!!! ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க!!! ” கதரியழுதாள்
சந்தனாவின் வாக்குமூலத்தை கேட்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டான் கிருபாகரன்.
ஏதோ சரியில்லை என்று தோன்றியதால் தான் இந்த கேசை அவன் இத்தனை நாள் முடிக்காமல் வைத்திருந்தான், ஆனால் இப்படி ஒரு உறையவைக்கும் உண்மையை அவன் எதிர்பார்க்கவில்லை.
ஒரு பெண்ணிண் உயிரை எடுத்துவிட்டு இன்னொரு பெண்ணை ஆள்மாராட்டம் செய்ய வைத்து ‘காட்.!!!!! ‘
எதிற்முனையின் அவளது மன்றாடலை கவனித்து “ப்ளீஸ் சந்தனா காம் டவுன், உன்னை அந்த கொலைகார ருத்ரபிரதாப்பிடமிருந்து காப்பாற்றுவது என் பொறுப்பு ”
“இ…..ல்…..லை……..உங்களால என்னை காப்பாத்த முடியாது, எனக்கு ஏதேதோ மருந்து மாத்திரை கொடுக்கிறாங்க, நான் மயக்கமா இருக்கும் போது என்னென்ன இன்ஜக்ஷன் போட்டாங்களோ???? எனக்கு எல்லாமே கொஞ்ச கொஞ்சமா மறக்குது, நான் சாகப்போறேன், நான் சாகத்தான் போறேன் ” எதிர்முனையில் கிருபாகரன் சமாதானப்படுத்த முயன்றது எதுவுமே அவளது காதில் விழவேயில்லை,
கிருபாகரின் போலீஸ் முளை எல்லா கோணத்திலும் யோசித்தது. சந்தனாவின் மேல் இருந்த காதலுக்காக நந்தினியை கொன்றான் என்றால் அவனால் எப்படி மாத்திரை கொடுத்து சந்தனாவை கொல்ல முடியும்? சந்தனா இப்போது பயத்தில் இருக்கிறார் சற்று நேரம் தன் மனதிலிருப்பதை கொட்டி தீர்த்துவிட்டாள் தெளிவு கிடைக்கும் என்று எதிர்முனையில் காத்திருந்தான்
வெறிபிடித்தவள் போல் ஏதேதோ கத்திமுடிக்க “சந்தனா நீங்க ரொம்ப ஸ்டிரஸ்ட்டா இருக்கீங்க நான் சொல்றத கேளுங்க, நம்ம நேர்ல மீட் …… ” கிருபாகரன் பேசிக்கொண்டிருக்கும் போதே அறை கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் சந்தனா
அவளது கண்கள் பயத்தில் அகல விரிந்தது, வெளுத்திருந்த அவளது முகம் மேலும் வெளிறியது,
“ஐயோ ருத்ரா ” போனை டொக்கென வைத்து விட்டாள். ஆனால் அங்கிருந்து நகர்வதற்குள் ருத்ரபிரதாப் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.
வியர்க்க விறுவிறுவிருக்க அவள் ஃபோனுக்கருகில் நிற்பதை கவனித்தவனின் புருவம் முடிச்சிட்டது, இரும்பினும் நிதானமாக அவளருகில் வந்து “யார் போன்ல ” சாதாரணமாக கேட்டான்
“வ…….ந்…….து…….. மி…..த்….ரன் ” ஏதோ வாயில் வந்ததை உளரினாள்
“மித்ரனா??? என்னவாம் அந்த ராஸ்கலுக்கு?? ” அவனது முஷ்டி இறுகியது
“தெ…..ரி….ய…..லை…..”
அவளை கூர்ந்து பார்த்தான், அவளது கண்களை படிக்க முயன்றான், அதில் எதை கண்டானோ “ஃபோன் ரொம்ப நேரமா என்கேஜ்டா இருக்கே? ” சந்தேகம் எழுப்பாவண்ணம் சாதாரணமாக கேட்பது போல் கேட்டான்
“ஏ…..தே….தோ ….உளரினான் ” என்று அவள்தான் உளரலாக பதிலளித்தாள்
ருத்ரனின் சந்தேகம் உறுதியானது ஃபோனை நெருங்கியவன் அதிலிருந்த ரிடயல் பட்டனை அழுத்தி ரிசீவரை காதுக்கு கொடுத்தான்
சந்தனாவின் உடல் நடுங்கியது, இதயம் அதிவேகமாக அடித்துக்கொண்டது, இமைகள் படபடத்தன ருத்ரபிரதாப்பை ஒருவித பயத்துடன் பார்த்துக்கொண்டு நின்றாள்
போன் எடுக்கப்பட்ட போதும் எதிர்முனையில் யாரும் பேசவில்லை,சில நொடிகள் காத்திருந்த பின் தொடர்பை துண்டித்தவன் சந்தனாவை நெருங்கி தன் பாக்கெட்டிலிருந்த கைகுட்டையை அவளிடம் கொடுத்து “வியர்வையை துடை, ஏசி கூட போடாம என்னதான் செய்ற ” பேசிக்கொண்டே ஏசி ரிமோட்டை எடுத்து ஆன் செய்தான்
‘
அவளது கைகள் இயந்திரமாய் வியர்வையை துடைத்தாலும் கண்கள் தொலைபேசியிலேயே நிலைத்திருந்தது
ஏசியை ஆன் செய்து விட்டு திரும்பியவன் அவளது பார்வையின் பொருள் புரிந்து
“ஓ மித்ரனா? சரியான தொடை நடுங்கி, பேசவேயில்லை, இனி உன்னை தொந்தரவு செய்யமாட்டான், நீ சாப்டியா? ” முற்றிலும் சம்பந்தமில்லாத கேள்வியோடு முடித்தான்
லேசாக குறையத்தொடங்கியிருந்த அவளது பயம் அவன் சாப்பாடு என்றது மீண்டும் அதிகரித்தது, ‘அதில் ஏதாவது கலந்திருந்தால்? ‘
“வே…..ண்….டா…ம்…. பசிக்கலை “என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்
“வேண்டாமா? இன்னைக்கு பூராவும் நீ சாப்பிடலையே? ” சந்தேகத்துடன் பார்த்துவைத்தான்
“வயிறு சரியில்லை ப்ஸீஸ் வேண்டாம் ” கண்களாள் மன்றாடினாள்
அதில் அவனது மனம் இளகியது. “ஓ கே …. நீ தூங்கி ரெஸ்ட் எடு, இன்னைக்கு நைட் ஷுட் இருக்கு நான் அங்க போறேன், குட் நைட் ” ஏன்று விடைபெற்று கிளம்பனான்.
அவன் கதவை சாத்திவிட்டு வெளியேறியதும் வேகமாக ஓடிச்சென்று கதவை லாக்செய்து விட்டு அதிலேயே சாய்ந்து சிலநிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.. ‘அப்பாடி போய்விட்டான், நல்லவேளை நைட் ஷுட் இருக்கிறது, பக்கத்து அறையிலிருந்து அவளை நோட்டமிடவும் அவன் இருக்கமாட்டான் ‘ நிம்மதி பெருமுச்சை வெளியேற்றியவள் மெத்தையில் விழுந்து விழிமூடினாள்.
முகங்களின் தேடல் தொடரும்……
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இப்பகுதி நன்றாக இருந்தது.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
pochi … sandhana thappu panita… pinadi reason therium po feel panuva…
பொய் மெய் எது வென்றாலும் ருத்ரனின் காதல் வென்றால் சரி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Wow super interesting ah poguthu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
MUTHU SELVI says:
Super mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Kirunaake adirsiyaana visayam
Sandana vittuttu ponaannu ninaikiraai nee
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
poovizi vizi says:
interestinga pokuthu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
interesting udsis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u sis