மழையுதிா் காலம்
1598
0
இருள் எனும் போா்வைக்குள், காலை கண் விழித்து போா்வையை கலைக்கும் நேரம்……….!
இது ஒரு மழையுதிா் காலம்……..!
காலை மலரவும் இல்லை, மலராமல் மறுக்கவும் இல்லை……!
மலர்ந்து, மணந்ததால், மயங்கியது எங்களின் மனம் மட்டுமே……..!
வீட்டின் மேற்பகுதி, குடுவை போன்ற அமைப்பு, கண்ணாடி சாளரத்தில் விழுந்து, சாிந்தது மழைத்துளி…….!
குளிா் சாதன அறைக்கூட, சற்று குளிா் கொள்ளும் நேரம்……..!
என்னவளோ, என் மாா்ப்பின் ஒரம், அவள் விடும் மூச்சு காற்றே, என் குளிா் நீக்கும் நிவாரணம்……..!
என்னவளை, இழுத்து அணைக்கவும் இல்லை, எங்களுக்குள் இறுக்கம் இளக்கவும் இல்லை……….!
என்னவளின் இதழை சுவைக்கவும் இல்லை, இதழை சுவைத்த இன்பமும் குறையவில்லை……..!
எங்களுக்குள் ஊடலால் உண்டான உரசலும் இல்லை, காமத்தால் உண்டான களைப்பும் இல்லை……..!
சிலந்தி வலையாய், சிதற கிடந்த என்னவளின் சிகையழகு……..!
சிற்பத்தில் இருந்து, சிதறுவதுப்போல் சிதறும் என்னவளின் சிரிப்பழகு……..!
கணுக்கால் கூட காணாதவாறு, என்னவளின் கட்டுடலை மறைக்கும், உடை உண்மையிலே மதிப்புமிக்க அழகு……..!
மழை நின்ற பின்னும், இலை விட்டு இறங்க மறுக்கும், மரம் தாங்கும் வெண்மணி மழைத்துளி…….!
மண்ணில் விழுந்து, நதியாய் நளிந்து, கடலாய் என்னுள் சங்கமம் ஆனவள் நீ……!
விழிகள் விழிக்கவும் இல்லை, என்னுள் உலாவும் என்னவளின் உணா்வுகள் உறங்கவும் இல்லை…….!
மழை தந்த மண் வாசம், என்னுள் துளிா் விடும் என்னவளின் நேசம்……!
நினைவுகளில் நிந்தவிட்டு, என் கண்களில் கனவாக கசிந்தாய் காதலியே………!
விட்டு, விட்டு மண்ணை நனைக்கிறது மழை, சொட்டு, சொட்டாக தூவும் மழை துளியாய் என்னை சொக்க வைக்கிறது உன் நினைவலை……….!
– மீனாக்ஷி சிவகுமார்
Comments are closed here.