Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi 9

ஹேம்நாத்
ஹேம்நாத்தும் பவித்ராவும் ஒரு சொகுசு காரில் சென்னை சென்ற டைந்தனர். பார்ட்டிகாரன் காரில் போகும் போது பவித்ரா அந்த காரின் பிரம்மான்டத்தை கண்டு திடுக்கிட்டாள். கதவை திறக்கத் தெரியாமல் முழித்தாள்.
சன்னலை கீழே மேலே ஏற்றத் தெரியாமல் அசடு வழிந்தாள். ஆனால் ஹேம்நாத் அவளுக்கு உதவுவதாக காண்பித்துக்கொண்டு செய்த பீத்தல்கள் எக்கச்சக்கம். அவன் முன்னேயிருந்த பட்டனைத் திருகி ஏ.சி காற்றை ஹேம்நாத் அவனது முகம்பார்த்து வீச வைத்தான்.
அவன் சில்லரைத்தனம் சகிக்காமல் ஆறு மணிநேரமும் தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வழியில் அவள் பார்த்த பல ரகமான வீடுகளும் அப்பாவுடன் கிரவுன்டில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளும் அவள் மனதில் ஆழிப் பேரலைகள் ஓங்கி எழச்செய்தது. அந்தக் குழந்தைகளிடம் பொறாமையும் வீடுகளிடம் பேராசையும் தோன்றியது. அழகான அப்பார்ட்மென்ட்களைப் பார்க்கும்போது சொல்லவே வேண்டாம் கடவுளை கரித்துக்கொட்ட ஆரம்பித்திடுவாள்.
சென்னையில் இறங்கியதும் வேறு கார் ஜம்மென்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்றது. மதுரையிலிருந்து அவர்கள் வந்த கார் இப்போது வந்த காருடன் போட்டி என்ன? பக்கத்தில் நின்று ஹார்ன்கூட அடிக்கத்தகுதி கிடையாது. ஹேம்நாத் கார் டிரைவருடன் ஏதோ பேசினான். பிறகு அவர்கள் வந்து நின்ற புதிய காருக்குள் ஏறி அமர்ந்தனர். அவர்கள் ஏறியதும் கார் நூற்றி இருபதில் பறந்தது. ஆனால் பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டே அலுங்காமல் குலுங்காமல் பறப்பதுபோலதான் பவித்ரா உணர்ந்தாள்.
காரின் மேல்பாகம் அகல திறந்து உள்ளே உட்கார்ந்திருந்த பவித்ராவிற்கு சல சலவென காற்றை முகத்தில் அடித்தது. ஹேம்நாத் பவித்ரா மகாபலிபுரம் போய்சேரும் வரை உடன் இருந்தான். மகாபலிபுரத்தில் ஒரு அழகிய வீட்டின் முன்பாக கார் போய் நின்றது. வீடு வந்ததும் அவளிடம் ஹேம்நாத் கூறினான்
“பவி பக்கத்தில் ஒரு ரிசார்ட்டில் எனக்கு ‘பார்ட்டி’ ரூம் போட்டிருக்கான். நம்ம மதுரை வார்ட் கௌன்சிலருடைய மச்சினன்தான் இந்த பார்ட்டி. ஊரிலேயே விஷயத்தை சொல்லியிருப்பேன். கட்சிக்காரன் என்றால் ஸ்ரீ பயப்படுமே அதான் சொல்லலை. நீ பார்த்து கவனமாக நடந்துக்கோ. உன் செல் கையில வச்சிக்கோ. நான் காலையில பத்து மணிக்கு கூப்பிடுறேன். ”
ஹேம்நாத் விட்டுச்சென்றதும் பவித்ரா வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கே வேலையாட்கள் இருவர்தான் இருந்தனர். இப்போது அவளுக்கும் புரிந்தது. ஏன் ஹேம்நாத் ஸ்ரீ யை அழைச்சிட்டு வர துடித்தான் என்று நன்றாகவே புரிந்தது. புளியங்கொம்பை விட மனசு வருமா? பார்ட்டிக்காரன் புளியங்கொம்புதான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பவித்ரா உள்ளே நுழைந்ததும் அவளது அறை அவளுக்கு காட்டப்பட்டது. குளித்துவிட்டு வெற்றுடலில் ரோப்பை சுற்றிக்கொண்டு வந்தவள் அறையின் ஒவ்வொரு பொருளையும் ஆசை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு ஆண் குரல் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள். பீச் மண் அப்பிக்கிடந்த அழுக்கு ஷார்ட்ஸ{டன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். குரலுக்குச் சொந்தக்காரன் கேட்டான் “என்ன? வீட்டின் எஜமானியா இருந்தா அதிஷ்டக்கட்டையாக இருந்திருக்கலாமே என்று தோன்றுதா? ”
‘கொழுப்பைப் பார்’ என்று எண்ணியவள் சூடாக அவனுக்கு பதில் தர எண்ணிச் சொன்னாள் “எஜமானி அதிஷ்டக்கட்டையா? நான் தான் அதிஷ்டக்கட்டை. ஒரு நைட்டிற்கு தினம் பத்தாயிரம் கிடைச்சால் நான் தான் லக்கி. எஜமானிக்கு என்ன கிடைக்கும்? ஒரு கொத்து சாவியும் பத்து பேன்சி சேலையும் தானே. அதை நானே பத்து நாளில் வாங்கிக்குவேன்.”
அவளை கேலி பேசியவன் அவள் அருகே சென்று ‘நீ என் ஜாதி’ என்று கூறி அவள் ரோப்பில் கை வைக்க அவள் பட்டென்று விலகி ஹேம்நாத்தை அழைக்க நினைத்து கைபேசியை இயக்கிக்கொண்டே கேட்டாள் “ஏய் எத்தனை பேர்? ஹேம்நாத் பார்ட்டி ஒருவன் என்றானே? ஏய் கேக்கறேன்ல? பதில் சொல். கிட்ட வராதே. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன். ”
“யாரோ தன்னை லக்கின்னு சொன்னாங்களே? ”
தன் நிலையால் வெட்கியவளாய் ஸ்ரீயின் வார்த்தையை மீறியதை நினைத்து நொந்தாள். கண்ணிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அவள் அருகே வந்தவன் அவனது கைபேசியை எடுத்து பேசினான் “ஏய் ஹேம்நாத் என்னப்பா பொண்ணு வந்ததிலிருந்து அழுதுகிட்டேயிருக்குது? என்ன புதுசா? சரி நான் பார்த்துக்குறேன. ” என்று கேட்டுவிட்டு கட் செய்தான்.
“நீ தொழிலுக்கு புதுசா? ”
‘இல்லை’ என்று பவித்ரா தலையாட்டவும் கூச்சமில்லாமல் அவள் அணிந்திருந்த ரோப்பின் விசாலமான ‘வி’ நெக்கை பார்த்துக்கொண்டெ சொன்னான்
“தெரியிது. அந்த புழுகு மூட்டை என்னம்மா பொய் சொல்லுது? அவனிடம் நான் பேசின அமௌன்ட் தெரியுமா? ”
‘இல்லை’ என்று தலையாட்டவும் சொன்னான் “இருபதினாயிரம்.”
‘உருப்படுவானா? ஐயாயிரம் கமிஷன் அவனுக்கு போதாதா? சரியான புழுகன்’ என்று ஹேம்நாத்தை மனதில் திட்டியவளுக்கு அப்போதுதான் உறைத்தது அழுக்கு ஷார்ட்ஸ்காரன்தான் பார்ட்டி என்பது.
இப்போது அவன் ரோப்பில் கை வைக்கும்போது பவித்ரா தடுக்கவில்லை. கௌன்சிலர் மச்சினன் கை வைக்கலாம். அவனா தொடுகிறான்? பத்தாயிரம் அல்லவா தொடுகிறது! பவித்ராவின் மூளையில் காமம்கூட உதிக்கவில்லை.
பத்தாயிரம் தான் மூளைக்குள் எங்கும் தழும்பத் தழும்ப நிரம்பி இருந்தது. காலையில் பத்து மணிக்கு ஹேம்நாத் கால் செய்தான். தலையணை பக்கத்தில் இருந்த ஃபோனை எடுத்த பவித்ரா தனது உடலில் படர்ந்து கிடந்த கைகளை மெல்ல விலக்கி எழுந்து நின்றாள். வேகமாக உடையைச் சரி செய்தவள் பாத்ரூமிற்கு அருகே நின்றுகொண்டு பேசினாள்.
“ஏய் ஹேம்நாத் உன் கமிஷன் எவ்வளவு?”
அந்த பக்கமிருந்து பதில் வரவில்லை என்றதும் பவித்ரா மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள் “ஏய் கேட்கிறேன்ல்ல? சொல்லு.”
“உனக்கு தெரிந்திடிச்சா? அதுக்குள்ள ஒப்பிச்சிட்டானா? ஒரு நைட்ல்ல கவுத்திட்டியா? பெரிய இடமெல்லாம் பிடிச்சிக் கொடுத்தா என் இஷ்டத்துக்கு கமிஷன் வச்சிக்குவேன். நீ என்னவேனாலும் செய்துக்கோ. ”
“இரு. உன்னை ஸ்ரீயிடம் மாட்டிவிடுறேன். உன் பொழப்பே க்ளோஸ். ”
இதை எதிர்பார்க்காத ஹேம்நாத் சரண்டர் ஆனான்.
“ஏய் பவி சாரி பவி. இனி இப்படி செய்யமாட்டேன். உன்னிடம் அமௌன்ட்டை கொடுத்திடுறேன். நீயே என் ஷேர் கொடு. நான் எவ்வளவு செய்திருப்பேன் உனக்கு? இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்காதே. ”
“சரி. பிறகு பேசுறேன்.” என்று கூறி கைபேசியை அணைத்தாள். அவள் எதிரே மனித நிழல் அசைந்தது. ‘பணக்கார பிஸ்கோத்து’ என்று நினைத்தவள் திரும்பி அவனிடம் சொன்னாள் “நான் பன்னிரண்டு மணிக்கு கிளம்பணும். டிரைன் டிக்கெட் போட்டாச்சு. கிளம்பவா? ”
அவன் தனது சட்டையை போட்டுக்கொண்டே அவள் இடையை கைகளால் அளந்தவன் சொன்னான் “என்ன அவசரம் நாளைக்கு போகலாமே?”
“இல்லை. வீட்டில் ஒத்துக்கமாட்டாங்க. நான் போகணும். ”
“இன்னொரு பத்தாயிரம் கிடைத்தால்? ”
சிறிதும் தாமதிக்காமல் அவசரம் அவசரமாக அவள் சொன்ன ‘சரி’ அவன் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவனுக்குச் சிரிப்பு மூட்டியது.
அவன் பெயரை அப்போதுதான் பவித்ராவிற்கு கேட்கத்தோன்றியது. சிரிப்பு முகம் அறியா மனிதர்களுக்கு அறிமுகத்தின் முதல் விண்ணப்பம் அல்லவா? அதனால் அவன் பெயரை அப்போதுதான் பவித்ராவிற்கு கேட்கத் தோன்றியது.
அவனும் ‘திலிப்’ என்று பதில் தந்து அவளையும் இழுத்துக்கொண்டே குளியலறை புகுந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page