உயிர்த்தோழி
1512
0
அன்புள்ள தோழிக்கு உன் அன்பை தேடும் அம்மு எழுதுவது………!
கல்லூரியை கடந்து, பல்கலைக்கழகத்தில் இருவரும் பார்த்துக்கொண்டதால் பழக ஆரம்பித்தோம்……….!
பழகிய சில நாட்களில், உன் முகம் சிவக்க நான் சிந்திய சிரிப்பு மட்டுமே உனக்கு தொியும்……..!
நீ இல்லாமல் என் இதயத்தில் ஏற்பட்ட இரணம் உனக்கு இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது ரதியே…….!
புலம்புகிறேன் என்று, என் அன்பை புறம் தள்ளி என்னை புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து செல்கிறாய் என் பிரியமானவளே…….!
உன்னை என் உயிர்த்தோழி என்று உரிமையாய் சொல்வது என் உதடுல்ல, என் உள்ளம்…….!
காயத்ரி மந்திரம் சொன்னால் கடவுளை அடையலாம் என்பாா்கள், காயத்ரி என்ற உன் பெயர் சொல்லி உன் நட்பை அடைந்தேன் நான்…….!
குறு சண்டையால், சில நாட்களாய் உடைந்தக்கண்ணாடியாய், என் உள்ளத்தின் வலியைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாய்…….!
குறுஞ்செய்தியில் குரல் எழுப்பியும், தொலைபேசியில் பலமுறை உன் அன்பை தொடர நினைத்தும், என் அன்பை தொடர மறுத்து தொலைந்துச்சென்றாய் தோழியே……!
பாிசு கொண்டு பாசமாய் உன் பக்கம் வந்தேன், நீயோ என்னை பாவம் என்றும் பாராமல், பலர் செல்லும் பாதையில் என்னை பரிதவிக்க விட்டு பறந்துச்சென்றாய் என் பாசக்காரியே…….!
உனக்கு என்னை விட உயிர் தோழியாய் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், எனக்கு உன்னை இன்றி யாரும் இல்லை……….!
நீயும் நானும் பிறந்தது இந்த மாதமா?இல்லை, முழுவதுமாய் நாம் இருவரும் பிரிந்தது இந்த மாதமா?
நம்மிடையே உண்டான இடைவெளியை கோடு இட்டு நிரப்ப உன் விடை வேண்டும் என்று விரும்புகிறேன்……..!
உன் விடைக்கொண்டு இடைவெளியை நிரப்பினால், நம் நட்பின் நடை தொடரும்………..!
– மீனாக்ஷி சிவகுமார்
Comments are closed here.