அம்மா
1098
0
என் உருவம் அறியும் முன்பே என் உணா்வை உணா்ந்தவள் – நீ
பேறு காலத்தில், பெரும் உதிரம் தான் உதிா்ந்து, எனக்கு உயிர்க்கொடுத்தவள் – நீ
என் பசி ஆற சோறு தந்து, நான் உண்ட பின் உன் பசியை மறந்தவள் – நீ
சுடா் விளக்கின் துாண்டு கோலாய் என்னை துாக்கி விட்டவள் – நீ
ஏணிப்படியாய் என்னை ஏற்றிவிட்டு, நடைவண்டியாய் எனக்கு நடைப்பழகியவள் – நீ
தரம் கெட்டு வளா்க்காமல், தரணியில் தரமாக என்னை வளா்த்தவள் – நீ
காலமெல்லாம் கண்ணீர் விட்டும், கண்மணி போல் என்னை காத்தவளும் – நீ
உளியாய் நீ இருந்து, ஒசையாய் என்னை உயிா்ப்பித்தவளும் – நீ
கடிகாரத்தின் முள்ளாய் என்னை மட்டும் சுற்றிக்கொண்டு இருப்பவளும் – நீ
என் உயிாின் விதை – நீ
என் உடலின் உரம் – நீ
என் வாழ்வின் எல்லை – நீ
என் வயதின் வறுமை – நீ
என் முதுமையின் முழுமை – நீ
என் அழுகையின் அா்த்தம் – நீ
என் புலம்பலின் புாிதல் – நீ
உன் உதிரத்தால் என் உயிா்க்கு உரம் ஊட்டிய உன்னதமானவளும் – நீ
என்னை சுமந்த உன்னை நான் சுமக்க வேண்டும், கடவுளிடம் சென்றால் கூட என் கருவிற்குள் உதிக்க நான் வேண்டுபவளும் – நீ
நரைகூடி, நரம்பு தளா்ந்து போனால் என்ன?
என்னை இந்த உலகத்தில் படைத்த பிரமனும் – நீ
– மீனாக்ஷி சிவகுமார்
Comments are closed here.