Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi 13

காக்கிச் சட்டைக்கு உரிய பயத்துடன் மெடிக்கல் கடைக்காரன் ராஜன் கேள்விக்கு பதில் தந்தான். ராஜன் கேள்வி கேட்டதும் அவன் வார்த்தைகளை பத்து முறை யோசித்துப்பார்த்து பதில் சொன்னான். ராஜன் உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்றவனிடம் ராஜன் கேள்விகளை அடுக்கினான்.
“இரண்டு நாள் முன்பு உங்ககடைக்கு எதிரே இருக்கும் இந்த ரோட்டில் விபத்து நடந்திச்சா? ”
“ஆமாம் சார். கார் வேகமாக வந்துச்சு சார். அந்த அம்மா மேல தப்பே இல்ல சார். கார்காரனுக்கு ஒரு அடி கூட இல்ல சார். காஸ்டிலி கார். அதான் சேஃப்டி பலூன் அவனை காப்பாத்திடுச்சு சார். அந்த அம்மாவை கார் தூக்கிடுச்சு சார். அந்த பெட்டி கடை தெரியுதுல்ல? போஸ்ட் கம்பத்தில் அடிச்சு அங்க போய் விழுந்தாங்க. கார் அந்த அம்மாவை தூக்கியடிச்ச பிறகும் வரிசையாக நின்னுட்டு இருந்த ஆட்டோக்களை மோதித்தான் நின்னுச்சு. பாவம் சார் ஒரு ஆட்டோக்காரனும் மாட்டிக்கிட்டான். ஸ்பாட் அவுட். அவன் குடும்பமே இன்று தெருவுல சார். கார்காரன் உங்க கஸ்டடியில்தானே இருக்கான்? வுட்றாதீங்க சார். பத்து வருஷம் உள்ளே போடுங்க சார்… ” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு சொன்னார்
“சார் ஒன்றும் பேசாதீங்க. அந்த ஆட்டோக்காரன் சம்சாரம் வருது. ”
அழுது அழுது கண்கள் வீங்கிப்போய் கையில் குழந்தையோடு வந்தாள் ஒரு பெண்.
“அண்ணே சளி மருந்து தாங்கண்ணே புள்ளைக்கு ஒரே இருமலா இருக்கு. ” என்று மருந்து கடைக்காரரிடம் கேட்டாள்.
“டாக்டர்கிட்ட போகலயா? நாமாக மாத்திரை வாங்கிச் சாப்பிடக்கூடாது. அதான் சொல்றேன். இப்ப தர்றேன். பிறகு டாக்டர்கிட்ட போகணும் சரியா? ”
“சரிண்ணே. பையன் ரொம்ப அணத்துறான். அதான்.. ஏன்ணே அந்த பையன் ஜட்ச் புள்ளையாமே?அவனை தண்டிக்காமல் விட்டிடுவாங்களா? என் புள்ள முகத்தைப் பாருண்ணே. என் புள்ளைக்கு மூனு வயசுதான் ஆகுது. குடிச்சிட்டு வண்டிய ஓட்டிருக்கான்.. அதுக்கு தண்டனை ஒண்ணு வேண்டாமா? ”
அதற்குமேல் பேச முடியாமல் மருந்தை வாங்கிக்கொண்டு கிளம்பினாள் அந்த பெண்.
மெடிக்கல்காரர் ராஜனைப் பார்த்தார். ராஜன் தனது தாடையை தடவியபடியே அவரைப்பார்த்தான். ஒரு முடிவோடு தனது கைபேசியை எடுத்தான். சில எண்களை அழுத்தினான். எதிர்முனையில் யாரோ எடுத்தார்கள்.
ராஜன் பேச ஆரம்பித்தான் “ஏட்டய்யா அந்த டரன்க் அன்ட் டிரைவ் கேஸ் விமல் எங்க? ”
எதிர்முனையில் ஏதோ பேச்சுக்குரல்..
“ஓ! அட்வகேட்டுடன் பேசுறாப்லயா? சரி. அவன் பான்ட் பாக்கெட்டில் ஒரு சிகரட் பாக்கெட் இருந்ததுயில்ல? ” என்றான் ராஜன்.
எதிர்முனையில் ஏதோ பேச்சுக்குரல்..
“இல்லையா? இருந்திச்சு ஏட்டையா. நீங்க பாக்கலயா? நான் பார்த்தேனே. எப்ப பார்த்தேனா? (இப்ப தான் யோசிச்சேன் சிகரட் ஐடியாவை) எப்பவோ பார்த்தேன். இப்ப இல்லையா? அப்படினா ஒரு பாக்கெட் ரெடி பண்ணுங்க.. மறந்திடாதிங்க. சிகரட்டில் வாசனை ஜம்மென்று இருக்கணும். செய்யிங்க ஏட்டையா. ஒரு பிரச்சனையும் வராது. நான் பார்த்துக்கிறேன். வச்சிடவா? அப்புறம் அவன் கைரேகையும் சிகரட் பாக்கெட்டில் இருக்கட்டும். மறந்திடாதீங்க. அப்புறம் அவன் பளட் டெஸ்ட் ரிப்போர்ட் என் கைக்கு வரணும். வச்சிடுறேன். ”
ராஜன் நிமிர்ந்து கடைக்காரனைப் பார்த்தான். அவர் கண்களில் கேள்வியும் நிம்மதியும் ஒன்றாகத் திரண்டு நிரம்பி இருந்தன. ராஜன் சிரித்துக்கொண்டு பதில் தந்தான் “கஞ்சா கேஸில் சேர்த்திட்டா ஈசியா பெயில்ல வர முடியாது. பளட்டில் லிக்கர் இருந்ததுன்னா.. கண்டிப்பாக பத்து வருஷம். ” என்றான்.
“சரி இப்ப வந்த வேலையை பார்க்கிறேன். அந்த பவித்ராவின் ஃப்ரண்ட் ஸ்ரீ பொண்ணு பற்றி தெரியுமா? இறந்தது ஸ்ரீ யுடைய அம்மாவா? ”
“ஆமாம் சார். ஸ்ரீ யுடைய அம்மாதான் சார். ஸ்ரீக்கு காய்ச்சல் என்று மருந்து வாங்க வந்தாங்க. பேராசிடமால் பத்து கொடுத்தேன். ரொம்ப சோர்வாக இருந்தாங்க. மாத்திரை வாங்கிட்டு படியிறங்கி போன போதுதான் ஆக்சிடன்ட் ஆச்சு. ”
“அந்த அம்மாவோட பொண்ணு ஸ்ரீ இப்ப எங்க இருக்கு? ”
“எதுக்கு சார் கேட்குறீங்க?” என்று அவன் கேட்டபோது உதவி இன்ஸ்பக்டர் பதில் கூறாமல் அவனை நோட்ட மிட்டதும் அவன் பதில் வராது என்று புரிந்து கொண்டு சொன்னான் “பாவம் சார் அந்தப் பொண்ணு. தப்பான ரூட்டுல்ல இருக்குன்னு தெரியும் ஆனா மத்தபடி ரொம்ப அமைதி சார். ”
“ஸ்ரீ இப்ப எங்க? ”
“அந்த பொண்ணோட அம்மா இறந்த பிறகு நான் ஸ்ரீயைப் பார்க்கவில்லை சார். ”
“எல்லா பசங்களுக்கும் ஸ்ரீ பவித்ரா பற்றிக் கேட்டா நல்லா தெரியுது. உங்களுக்கு தெரியலைன்னு சொல்றீங்களே? இங்க எல்லாம் ரைட்டே வராது போல. என்ன ஏட்டய்யா நான் சொல்றது சரியா? ” என்று அவனிடம் பேசியபடியே அப்போது உள்ளே நுழைந்த ஏட்டய்யாவிடம் ராஜன் கேட்கவும் மெடிக்கல் கடைக்காரன் அதன்பிறகு ஊமையாகிப் போனான்.
“ஸ்ரீ இப்ப எங்க? ”
“அந்த பொண்ணோட அம்மா இறந்த பிறகு நான் ஸ்ரீயைப் பார்க்கவில்லை சார். ”
“எல்லா பசங்களுக்கும் ஸ்ரீ பவித்ரா பற்றிக் கேட்டா நல்லா தெரியுது. உங்களுக்கு தெரியலைன்னு சொல்றீங்களே? இங்க எல்லாம் ரைட்டே வராது போல. என்ன ஏட்டய்யா நான் சொல்றது சரியா? ” என்று அவனிடம் பேசியபடியே அப்போது உள்ளே நுழைந்த ஏட்டய்யாவிடம் ராஜன் கேட்கவும் மெடிக்கல் கடைக்காரன் அதன்பிறகு ஊமையாகிப் போனான்.
ஆனால் அவனது கல்லாபெட்டியின் மூலையில் ஸ்ரீயும் பவித்ராவும் அவனுக்குக் கட்டிய இரண்டு ராக்கிகளும் நூறு ரூபாய் கட்டுகளுக்குள் இருந்தது. மண்பானைக்குள் உறங்கும் பவித்ராவின் அஸ்திபோல அதுவும் உறங்கிக் கொண்டிருந்தது.
“ஏட்டையா வாங்க.. அந்த மதர் மேரி சர்ச் வாசலில் ஒரு ஆட்டோகாரன் இருப்பான். ஹேம்நாத்தோட ஃப்ரண்டாம். அவனை இழுத்திட்டு வாங்க. ”
பதினைந்து நிமிடத்தில் ஆட்டோக்காரனை இழுத்துக் கொண்டு ஏட்டையா காமராஜர் வந்து சேர்ந்தார். ஏட்டையாவின் நடையும் அவர் ராஜனிடம் பேசிய தோரணையும் அவர் ராஜனுக்கு ஆமாம் சாமி போடுவதுபோல் இருந்தாலும் அவர் தனது காவலர் உடையின் மேல்சட்டையில் சிங்கம் இருந்த பேஜ்ட்ஜை (மூன்று கோடுகளுக்கு மேல் இருக்கும்) பெற்றிருந்த பெருமை அவர் முகத்தில் எப்போதுமே இருக்கும்.
ராஜன் அவனிடம் “ஹேம்நாத் வீட்டுக்குப் போகணும் நீங்க ஆட்டோவில் போங்க.. நான் என் வண்டியில பின்னாடியே வர்றேன். ” என்றான்.
“சார்.. அவன் ஆளே எஸ் ஆகிட்டான் சார். பவித்ரா பொண்ணு இறந்ததும் ஆளே எஸ் ஆகிட்டான். ஸ்ரீ அவனை ஒரு வம்புல மாட்டிவிட்டுச்சு. அதான் சார் அந்தப் பொண்ணு கௌன்சிலர் மீது கல் வீசிடுச்சு. ஹேம்நாத் இப்ப அசாம்க்கு போயிட்டான். பியூட்டி பார்லர் வேலைக்கு பொண்ணுங்க வேணும்னா அவனை கூப்பிடலாம். அவன் வரமாட்டான். பொண்ணுங்கதான் வரும். ”
“சரி ஸ்ரீ யைப் பார்க்கணும்.. ”
“ஸ்ரீ யா? பாவம் சார்.. எழுவு இப்பதான் விழுந்திருக்கு.. விட்டுருங்க சார்.. ”
“ஸ்ரீ யைப் பார்க்கணும்.. ”
என்ன சொன்னாலும் ஒன்றும் எடுபடாது என்று புரிந்ததும் “சரி சார். வாங்க கூட்டிட்டு போறேன்.. ” என்றான்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super

You cannot copy content of this page