Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-49

முகங்கள் 49

 

கதவினை திறந்து கொண்டு உள்ளே வந்த ருத்ரனை பார்த்து எழுந்து் நின்றார் சியாமளா,

 

அவளை நெருங்கியவன் பெட் காலியாக இருப்பதை பார்த்து செய்கையால் ‘எங்கே? ‘ என்று கேட்டான்

 

பாத்ரூமை சுட்டி காட்டி “இப்போதான் எழுந்தாங்க, ஏதாவது சாப்பிட கொடுக்கனும், பட் சாப்பிடுவாங்களான்னு தெரியல ” என்றார் கிசு கிசுப்பாக,

 

“நீங்க போங்க நான் பாத்துக்கிறேன் ” என்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

 

சியாமளா வெளியே செல்லவும் சந்தனா இம்போர்டட் சோப்பின் வாசனை கமகமக்க குளியலறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது

 

சோபாவில் அமர்ந்திருந்த ருத்ரபிரதாப்பை பார்த்ததும் அவளது முகம் கலவரமானது,

 

எதை பற்றியும் யோசிக்காமல் சட்டென மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள்.

 

இதனை ஓரளவு எதிர்பார்த்திருந்த ருத்ரபிரதாப் பாத்ரூம் கதவினை நெருங்கி இரண்டு முறை மென்மையா தட்டி

 

“சந்தனா, கதவை திற ” அவனது சந்தனாவில் ஓர் அழுத்தமும் அதனை தொடர்ந்து கட்டளை தொனியும் இருந்தது

 

“……….” சந்தனாவிடமிருந்து எந்த சத்தமும் இல்லை

 

“சந்தனா கதவை திற நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் ”

 

“உங்களுக்கு என் கிட்ட சொல்ல என்ன இருக்கு? ப்ளீஸ் கோ ” என்று கத்தினாள்

 

“போகத்தான் போறேன், ரொம்ப சீக்கிரமா, நான் செஞ்ச தப்புக்கு நான் கம்பி என்னித்தான் ஆகனும்,  அது நாளைக்கே கூட நடக்கலாம்,  கிருபாகரன் என்னை நெருங்கி வந்திட்டான்”

 

சந்தனா ஏதாவது பேசக்கூடுமோ என்று சில நொடி நிறுத்தினான்

 

ஆனால் அவளிடமிருந்து சத்தமேயில்லை.

 

“அதுக்கு முன்னாடி உன்கிட்ட சில விஷயம் மனசுவிட்டு பேசனும்னு நினைக்கிறேன்,  வெளிய வா ப்ளீஸ் நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்னு உனக்கே தெரியும்,  பி…….கா…..ஸ்……ஐ லவ் ….யூயூயூ…… டேமிட் ” இறுதியாக அவன் கத்திய கத்து அந்த கதவை திறக்கவைத்தன.

 

இறுகிய முகத்தோடும் வெறித்த பார்வையோடும் மெல்ல வெளியே வந்தாள் சந்தனா

 

அவளுக்கு செய்கையால் சோபாவை காட்டிவிட்டு அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

 

சந்தனாவின் பார்வை தரையில் நிலைத்திருந்தன.அமைதியான சிலநொடிகள் கழிந்த பின் ருத்ரபிரதாப் பேசலானான்,

 

“இத்தனை நாளா என் மனசுக்குள்ள அழுத்திகிட்டிருந்த விஷயத்தை இன்னைக்கு இறக்கி வைக்க போறேன், என்னை பார்” என்றவன் அவளது விழி உயர்ந்ததும்  கண்களை நேருக்கு நேர்பார்த்து

 

“உன்னை முதல் முதல்ல பார்த்தப்பவே நான் விழுந்துட்டேன், அந்த கேமிராவில் பதிஞ்ச உன்னையும், பேசும் உன் கண்களையும் என்னால் மறக்கவே முடியல, அருவியோட சத்தத்தையும் அதோட அழகையும் படம்பிடிக்கத்தான் கேமிரா ஃபிக்ஸ் பண்ணேன்,  பகல்ல என்னோட செக்யூரிட்டி அந்தப்பக்கம் யாரும் குளிக்காம பாத்துகிட்டான், பட் நீ நைட்ல வருவேன்னு நான் நினைக்கல,  நீ அந்த அருவியில பயமில்லாம குளிச்சதே எனக்கு வியப்பாதான் இருந்திச்சி, உன்னோட தைரியம் பிடிச்சது. நான் அதுக்கு மேல எதையும் பாக்கல பிராமிஸ்,  உன்கிட்ட காட்டின வீடியோ கூட நீ மட்டும் பாத்ததுதான், கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவெடுத்த எவனும் இந்த மாதிரி திருட்டுதனமா டிரஸ் மாத்துறதை பார்க்க மாட்டான். என்னோட சுயநலத்துக்காக அது உபயோகப்பட்டாலும், நான் ஏற்கனவே சொல்லியது போல பொதுநலமும் கலந்திருக்கு. அப்படியே நீ நந்தினியா நடிக்க ஒத்துக்கவேயில்லைனாலும்,  நான் அந்த வீடியோவை லீக் பண்ணியிருக்கமாட்டேன்,  சத்தியமா “”

 

” அதுக்கப்புறம் உன்னைபத்தியும் நீ நீச்சலில் கெட்டிக்காரின்னும் விசாரிச்சு தெரிஞ்சிகிட்டேன். நான் எழுதுற கதைக்கு சரியா பொருந்தி வந்த, உன்னை பாத்ததும் நந்தினிதான் ஹீரோயின்னு முடிவுசெஞ்சிட்டேன், ஆனா அவங்களுக்கு தண்ணீர்னாலே அலர்ஜி, ஒருவிதமான பயம், ஆனா அவங்க ரொம்ப நல்ல நடிகை,  அதைவிட அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு, எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும், ” என்றவனின் முகத்தை ஓர் தவிப்போடு ஏறிட்டாள் சந்தனா. அதனை கண்டும் காணாமலும் தொடர்ந்தான் ருத்ரபிரதாப்

 

“ஒரு தேசிய விருதாவது வாங்கனுங்கிறது அவங்களோட ஆசை, இந்த படத்தின் மூலம் அவங்களோட கனவு நிச்சயம் நிறைவேறும்னு நம்பினாங்க, நானும் தான், ஏன்னா அவங்களோட நடிப்பை பெஸ்ட்டா வெளிப்படுத்த என்னால் முடியும்னு நான் நம்பினேன், பட் எல்லாம் தலைகீழாகிடுச்சு, நான் கொ……லை……கொலைகாரன் ஆகிட்டேன் ….. ” பேசும்போதே அவனது குரல் உடைந்தது சட்டென அவளது கண்களை ஊடுருவி நோக்கியவன்

 

” உன் சித்தி கிட்டேயிருந்து உன்….னை…காப்பாத்துறேன்னு …..நா…..நா….னே உன்னை மொத்தமா தொ….லைச்சிட்டேனே ” அவளை வேகமாக இழுத்து இறுக அணைத்துக்கொண்டான், அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவளது தோள்களை நனைத்தது.

 

ஏனோ அவளது கண்களும் கலங்கியது.

 

தன்னை தானே தேற்றிக்கொண்டு அவளை விடுவித்தவன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு “கிருபாகரன் நாளைக்கே கூட என்னை அரஸ்ட் பண்ண வாய்ப்பிருக்கு, உனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும், ஆனால் இந்த படம்? எல்லாரோட கனவும் பாழாய் போகும் ” நிறுத்தியவன் சிறு இடைவேளை விட்டு

 

“என்னோட கடைசி ஆசையா கூட நினைச்சுக்கோ, ப்ளீஸ் இந்த படத்தை முடிச்சு கொடுத்துடு,  இவ்வளவு நாள் சகிச்சதை இன்னும் ஒரே ஒருநாள் சகிச்சிக்கோ, உன்னை மனமார நேசிக்கும் எனக்காக ” என்று முடித்தான்.

 

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். கண்ணீர் மட்டும் நிற்கவில்லை . அவளது மௌனத்தையே சம்மதமாக ஏற்று எழுந்து நின்றவன் “வா போகலாம் ” என்றான் உரிமையாய்,

 

“எங்கே? ” என்று கேள்வியோடு ஏறிட்டவளின் கைப்பற்றி உரிமையாய் வெளியேறினான்

 

*****

 

கார் சிறிது தூரம் சென்றதும் உனக்கு எந்த ஹோட்டலில் சாப்பிட பிடிக்கும் என்று கேள்வியை அவன் முன் வைக்கவும் சந்தனாவினுள் எச்சரிக்கை மணியடிக்க ஆரம்பித்தது

 

“இ….ல்…..லை வேண்டாம் ” அவள் பதட்டத்துடன் மறுக்கவும்

 

“மார்பிள் ரெசாட்டில் நீ எதுவும் சாப்பிடப் போறதில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ எந்த ஹோட்டல் பேரை சொன்னாலும் பரவாயில்லை அங்க போகலாம், உனக்கு என்ன வேணுமோ சாப்பிடு, அப்போ நான் அதில் எதுவும் கலக்க வாய்பில்லை தானே ”

 

“……” எல்லாம் தெரிந்து விட்டதா இவனுக்கு? அப்படியானால் கிருபாகரனிடம் அவள்தான் வாக்குமூலம் கொடுத்தாள் என்றும் தெரிந்திருக்குமே, ஆனால் ஏன் எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்கிறான், ஒருவேளை கா…..த…லித்ததால் இருக்குமோ???  ச்சே…ச்சே….இருக்கவே இருக்காது இந்த படம் முடியவேண்டும் என்பதால் தான் இருக்கும்,  இவன் தான் பக்கா சுயநலவாதியாயிற்றே,

 

“உன்னை நம்ப வைக்க நான் என்ன தான் செய்யனும் “என்று சிந்திப்பதுபோல் பார்த்தவன்

 

“ஓ கே,  இதோ இந்த ஃபோன்,  அதை நீயே வச்சிக்கோ” தனது ஃபோனை அவள் கையில் கொடுக்கப்போனவன் நிறுத்தி

 

அந்த வீடியோவை எடுத்து அவளுக்கு காண்பித்தான்.

 

“இதை இந்த நிமிஷமே டெலீட் செய்துடுறேன், ஏன் அந்த வீடியோ அடங்கிய மெமரி கார்ட்டை உன் கிட்டயே கொடுத்துடறேன்,  இதுக்கு வேற காப்பி கிடையாது, சத்தியமா ” அவள் கண் எதிரேயே டெலீட் செய்து  மெமரி கார்டை அவளிடன் கொடுத்தான்

 

அவனது ஒவ்வொரு செயலையும் விசித்திரமாக பார்த்தாள் சந்தனா. என்ன இது திடீர் மாற்றம்,ஆணிவேறாய் இருந்த வீடியோவை அழித்து விட்டானே, இவனை நம்பலாமா?  பசி வேறு வயிற்றை கிள்ளியது.

 

“ம்….ஏதாவது ஒரு ஹோட்டல் பேர் சொல்லு, அதை நான் யார்கிட்டயும் சொல்ல முடியாது, ஃபோன் தான் உன் கிட்ட இருக்கே, அதனால் உன் சாப்பாட்டில் எதுவும் கலக்க முடியாது ”

 

ஏதோ ஒரு ஹோட்டலின் பெயரை தன்னிச்சையாய் உதிர்த்தாள்

 

உடனே அவனது முகம் பிரகாசமானது

 

அவளை உண்ண வைத்து, மீண்டும் மார்பிள் ரெசாட்டிற்கு வந்து அன்றைய ஷூட்டை மிக விமரிசையாக முடித்தும் விட்டான். சந்தனா அதிக டேக் எடுக்காமல் சிறப்பாகவே நடித்து கொடுத்துவிட்டாள், ஆனால் யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை.அதை ருத்ரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

 

கடைசிநாள் ஷூட் என்பதால் அது முடிந்ததும் மிகப்பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்பிள் ரெசார்ட்டின் பார்ட்டி ஹாலை மங்கலான ஒளி நிரப்பியிருந்தது.  படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த அத்தனை பேரும் அங்கே நிரம்பியிருந்தனர், ருத்ரன் முதல் டீ பையன் வரை,  சஞ்சய்யும் வந்திருந்தான், ஆனால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருந்தவன், உடனே சென்றும் விட்டான்.

 

சோஷியல் டிரிங்கிங்கை தடுக்கமுடியாமல் லேசாக குடித்திருந்தான் ருத்ரபிரதாப், அங்கே உணவுக்கு முன் மியூசிக் போடப்பட்டு ஆட்டம் ஆரம்பமானது மித்ரன் சந்தனாவை நெருங்கி ஆடுவதற்கு நாசூக்காய் வற்புறுத்திக்கொண்டிருக்க, அது ருத்ரனின் கழுகுப்பார்வைக்கு தப்பவில்லை, எப்போதும் போல் இடையே புகுந்து அவளை காப்பாற்றினான்.

 

அவளோடு இணைந்து அவன் ஆடியதை அந்த அரங்கமே ஆவலாக பார்த்தது. எதிர்கால கணவன் மனைவியாயிற்றே,

 

ஒருவித விலகல் இருந்த பொழுதும் எண்ணை கொப்பரைக்கு பதில் வாணலியே பரவாயில்லை என்று அமைதிகாத்தாள், அவளை தன்னோடு அணைத்துக்கொண்டு அந்த இசைக்கேற்ப ஆட ஆட அவளது விலகல் காணாமல் போனது, அவனோடு நன்றாக ஒண்டிக்கொண்டாள், அவன் நெஞ்சில் தலையை அழுந்த சாய்த்துக்கொண்டாள்,  அவனுக்கும் அது இதமாகவே இருந்தது மேலும் அவளை அவன் இறுக்க முற்படுகையில் அவள் விழித்துக்கொண்டாள்,

 

சட்டென அவனிடமிருந்து விலக எத்தனித்தவளை தன் பிடியினுள் நிறுத்தி,

 

“எனி பிராப்ளம்?   என்று முகம் பார்த்தான் ருத்ரபிரதாப்.

 

அவனது கண்களை தடுமாற்றத்துடன் பார்த்தவள்

 

“வ…..ந்…..து…..உங்களுக்கு நந்தினியை உண்மையாவே பிடிக்குமா? ” என்று மனதில் அரித்துக்கொண்டிருந்ததை கேட்டே விட்டாள்

 

இருந்த கொஞ்ச நஞ்ச போதையும் மொத்தமாக இறங்கிவிட அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் ருத்ரபிரதாப்

 

அவளது கண்களை ஊடுருவியவன் அதில் எதை படித்தானோ

 

“அவங்களை பிடிக்காமலிருக்க எந்த காரணமும் இல்லையே,  இப்போ இந்த திடீர் கேள்வி ஏன்? ” அவள் வாய்வழி சில விஷயங்கள் அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது

 

ஆனால் அதன் பிறகு அவள் வாய்திறக்கவில்லை,

 

அவளை பேசவைக்க ருத்ரன் முயல்கையில், அவனை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தான் பிரகாஷ்

 

பிரகாஷ் அருகில் வந்ததும் சந்தனா ருத்ரனிடமிருந்து விலகி சென்றாள், அப்போது மியூசிக்கும் நின்றுவிட்டது. எல்லோரும் சாப்பாட்டு தளத்தை நோக்கி நடந்தனர்

 

விரைந்து வந்த பிரகாஷ் ருத்ரனின் காதுகளிள் கூறியது  “தேவ் நாயர் காலைல வந்துடுவான் “என்பதுதான்

 

ருத்ரபிரதாப்பின் முகம் பிரகாசமானது, பிரகாஷின் முகத்திலும் அதன் எதிரொலி காணப்பட்டது.

 

முகங்களின் தேடல் தொடரும்…..




16 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Akila R says:

    U nu ji ji k um junk I am u Jim is Jiujutsu k junk huh so him I hunky juju jjuju Jiujutsu Jiujutsu um so he juju I huh uh hi I IIT u in error k huh uh uumuhi I huh Jio Hui 8uuumuumjumuúmuiiuimuumiuumuujjuuuuum


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ் நாயரை எதற்காக அனுப்பினார்கள் அப்படி அவர் எதை கொண்டுவரப்போகின்றார்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    MUTHU SELVI says:

    Inaiku ud iruka madam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Daisy Mary says:

    waiting for next ud…….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    poovizi vizi says:

    mikavum interestinga irunthathu paraparaputan ennvaa irukum enraa aavlai thundum vithathil arumai


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lura Kkk says:

    Next ud eppo mam pls update quickly eagerly waiting for it…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sindu R says:

    Just one more episode…..
    end varai thriller element azhaga maintain panni irrukeenga
    arumai


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Punitha. Muthuraman. says:

    எப்பா!!!!!இந்த ரைட்டரை பாராட்டியே ஆகணும்.கடைசி வரை சஸ்பென்ஸ் மெயிண்ட்டெய்ன் செய்யறாங்க.💐💐💐💐💐


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Wow super. Episode late ah vanthalum soooopera irunthuchi. Next epi seekirama podunga please. Nice story.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lalitha Vasudevan says:

    thanks for ud. it is shock that it is going to be end by next ud. rudhranai mannithu serthu vaithuvidunga.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    WOW SUPERRRRRRRR UD SIS


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Indra Selvam says:

    என் அன்பு நட்புகளே, இதுவரை Comment செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. கடந்த சில UD Commentsku நான் பதிலளிக்கவில்லை தான், அதற்கு முக்கியமானகாரணம் தொடர்ந்து UD கொடுக்க முடியவில்லையே என்கின்ற கவலை தான், முடிச்சுக்களை போடுவது மிக எளிதாக இருந்தது, ஆனால் அதனை அவிழ்ப்பதற்குள் நான் படும் பாடு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்களது அத்தனை கேள்விகளுக்கும் அடுத்த அத்தியாயத்தில் விடை கிடைத்துவிடும். ஆம் அடுத்த அத்யாயத்தில் முகங்கள் முற்றுபெரும்.

    நன்றி
    அன்புடன்,
    இந்திரா செல்வம்


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      chitra ravi says:

      waiting


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Shan Kesavan says:

      Eppozudhu varugiradhu pa. Semma interesting ha ponadhu. Mudivu theriya aaval at the same time mudiyapodenu kashtama iruku


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        admin says:

        vandhuduvaanga Shan… Monday climax post panniduvaanga nu ninaikkaren…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Alamu Sri says:

    Wow at last rudran accepted all. After a long time a very nice suspense story. Thanks for your excellent narration Indra Selvam . I just completed all the epi s within a day. I should really thank my friend Rani who suggested me to read. In each episode you maintained the suspense which attracted me a lot and it made me not to move without reading next. Thanks again I also came to know about the words ” camera roll , rolling etc ………and it made the feel as we were in a shooting spot

You cannot copy content of this page