Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi14

ராஜன் & ஸ்ரீ
வீட்டில் ஸ்ரீ தனது துணி மணிகளை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்கவும் எழுந்தாள்.
கதவைத் திறந்தவளுக்கு காக்கிச் சட்டையைப் பார்த்ததும் ஒரு நொடிப்பொழுது பயம் அவள் நெஞ்சில் சுமை ஏற்றியது. அடுத்த நொடியில் வெறுப்பு அவளைச் சுழ்ந்துகொண்டிருந்தது.
“யார் வேணும்? ”
உள்ளே நுழைந்த ராஜன் ஒரு நொடி தன்னை ஸ்ரீயைப் பார்த்த விநாடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்குள்.. ஸ்ரீ கேள்வி கேட்டதால் பதில் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றவேயில்லை.
கதவைத் திறந்த ஸ்ரீ கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் ராஜன் இருக்கவும் ஏட்டையாதான் பதில் தந்தார்
“பவித்ரா கேஸ் விசாரிக்க வந்திருக்கோம். ”
“பவித்ரா டெத் கேஸா? ”
“அது இல்லை.. அது ஆக்சிடன்ட் கேஸ். கேஸை விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால் பவித்ரா மேல இருந்த தெஃப்ட் கேஸ் இன்னும் இழுவையில் இருக்கு. நாற்பது லட்சம் காணலைன்னு கௌன்சிலர் பவித்ராவின் பேரில் கொடுத்த கேஸைச் சொல்றேன். இப்ப அதிலே உங்க பேரையும் சந்தேக லிஸ்டில் சேர்க்கச் சொல்லிருக்கார் கௌன்சிலர். ”
“ஓ! ” “ஸ்டேஷனுக்கு நீ வரணும். சும்மா ஐந்தாறு கேள்வி கேட்பாங்க.. பதில் சொல்லிட்டு போயிடலாம்.. ”
ஸ்ரீ கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.. “சரி. உங்க செல்நம்பர் தாங்க.. ”
ஏட்டையா தனது செல் நம்பர் தந்தார்.. தனது செல்லில் இருந்து தெடர்பு கொண்டாள்.
ஃபோன் அவர் பாக்கெட்டில் அதிர்ந்தது.. உடனே கட் செய்தவள் வேறு ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். எதிர்முனையில் தனு எடுத்தாள்
“ஸ்ரீ.. எப்படியிருக்க? ”
“தனு. போலிஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்திடுறேன். ஒரு செல் நம்பர் தர்றேன் அதை மசூத்கிட்ட கொடு.. நான் வர லேட் ஆனால் அவனை 22 வார்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லு. வச்சிடுறேன். ”
ஸ்ரீ தனது கைப்பபையை எடுத்து வைத்துக்கொண்டு கதவை தாள் போட்டபோது தனது பைக்கில் ஏட்டையாவை ஏற்றிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான் ராஜன். அவர்கள் கிளம்புவதற்குள் மசூத் வந்துவிட்டான்..
“ஸ்ரீ நானும் வரவா? ”
“இல்லை மசூத்.. நான் போயிட்டு வந்திடுறேன்.. ”
மசூத் ஸ்ரீயின் கைகளை பற்ற முயல.. ஸ்ரீ நாசூக்காக விலகியது ராஜன் கண்களைத் தப்பவில்லை..
“ஸ்ரீ ஒருமணி நேரத்தில் நீ வரவில்லை என்றால் நான் அங்க வந்திடுவேன். ”
“ம்.. ”
மீண்டும் ஸ்ரீயின் கைகளை மசூத் தொட நினைத்து தன்னை கஷ்டப்பட்டு அடுக்குவதையும் ராஜன் தனது பைக்கின் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான்..
அமைதியாக தனது பைக்கின் ஹார்ன் அழுத்தினான். ஸ்ரீ உடனே தான் பேசி வைத்திந்த ஆட்டோவில் ஏறினாள். மசூத் நகர்ந்த ஆட்டோவை பார்த்துக்கொண்டே நின்றான்.
ஸ்ரீ போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் அவளுக்கு உடம்பெல்லாம் ஜில்லென்று ஆகிவிட்டது. உள்ளே இருந்த நாற்பது போலிஸ்காரர்களைப் பார்த்ததும் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒரு ஸ்டேஷனில் இவ்வளவு போலிசா? என்று பயத்தின் நடுவே தன்னிடம் கேள்வியும் கேட்டுக்கொண்டாள். அவள் உள்ளே நுழையும்போது டைப் அடித்துக்கொண்டிருந்த ஒரு போலிஸ் நிமிர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே டைப் அடித்துவிட்டு அடுத்த நிமிடம் தலையைக் குனிந்து தன் வேலைகளைச் செய்தார்.
அவளைப் பார்த்த கண்களைத் தவிர்த்தாள். ராஜன் அவளிடம் வந்து ஒரு அறையைக் காண்பித்து அங்கே காத்திருக்கச் சொன்னான். ஸ்ரீ உடனே அந்த அறைக்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் புதைந்து கொண்டாள்.
“சார் ஏழு நாளாக நானும் வர்றேன். என்னையே துருவித்துருவி கேள்வி கேட்குறீங்க.. நான் என்ன அக்கூயூஸ்டா? காலையில வர்றேன். மூன்று மணிநேரம் ஒரே சேரில் உட்கார வக்கிறீங்க.. என்ன சார் நினைக்கிறீங்க? இப்படி டார்ச்சர் செய்றீங்க.. பவித்ராவுக்காத்தான் ஹெல்ப் பண்றேன்னு நீங்க சொல்றதை என்னால் நம்ப முடியலை சார். ”
ராஜன் ஸ்ரீயின் கேள்விகளை மதிக்காமல் தனது கைபேசியில் ஒருவருடன் பேசிக்கொண்டே ஒரு ஃபைலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“சார் நான் போகட்டுமா? ”
“…”
“சார்.. ”
“…”
பதில் தராமல் ராஜன் இருக்கவும் கொஞ்சம் குரலை உயர்த்தி ஸ்ரீ “சார் ” என்றாள்.
இப்போது ராஜன் அவள் அருகில் வந்தான்.. அவள் கண்களை குறிவைத்தது அவன் கண்கள்..
“ஸ்ரீ பவித்ரா உனக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி என்கிட்ட கேட்டபிறகுதான் உயிரை விட்டா. அதனால்தான் உன்னை என் கண்காணிப்பில் வைத்து விசாரிச்சிட்டிருக்கேன். அந்த பொண்ணு அப்படி சித்திரவதைபட்டு இறந்திருக்கக் கூடாது. ரொம்ப பாவம். நான் கண்டிப்பா அவளை ரேப் பண்ணவங்களை விடமாட்டேன். பவித்ரா என்னிடம் அவுங்க அடையாளம் சொல்லியிருக்கா. இப்பவே அவனுங்களை தேட ஆரம்பிச்சிட்டேன். அதிலே ஒருத்தன் பாம்பு டேட்டூ போட்டவன்.
கௌன்சிலரின் வீட்டு மாடு தான். அவன் இன்னும் இரண்டு நாளில் பிடிபட்டிடுவான். மற்றவங்களை அடுத்தடுத்து பிடிச்சிடலாம். கேஸை மற்றவன்கிட்ட கொடுக்காமல் உனக்காக ஃபைட் பண்ணிட்டிருக்கேன். நீ உண்மையை சொன்னால் தான் என்னால் ஏதாவது பண்ண முடியும். கடைசியாக உன்கிட்ட கேட்கிறேன்.. கௌன்சிலர் பணம் எங்க? ”
“ஏழு நாளாக விசாரிக்கிறீங்க.. நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. என்கிட்ட பணம் இல்லை இல்லை இல்லை.. ”
பேசிக்கொண்டிருந்தவள் கன்னங்களில் ராஜனின் வலிய கரங்கள் அழுத்தமாக விழுந்தது.
“அம்மா ” என்று அலறியவள் நாற்காலியில் இருந்து கீழே விழப்போனாள். ராஜன் நாற்காலியை பிடித்துக்கொண்டு அவள் விழுந்து விடாமல் உட்கார வைத்தான். மீண்டும் கேட்டான்.
“ஸ்ரீ பணம் எங்கே? பவித்ரா சொன்னதால் உனக்கு இவ்வளவு சலுகை அளித்திருக்கேன். கௌன்சிலர் ஆளுங்ககிட்ட இருந்து நீ தப்பனும்னா பணம் எங்கேன்னு சொல்லு! ”
“என்கிட்ட இல்லை.. ”
மறுபடியும் ஒரு அறை.. “பணம் எங்கே? ”
“ஹேம்நாத்தைப் பிடிக்க துப்பில்லை.. அவனை கேளுங்க.. என்கிட்ட பணம் இல்லை.. ”
ஏட்டையா ஏட்டையா.. இங்க வாங்க.. ”
ஏட்டையா உள்ளே வரவும்..
“ஏட்டையா இவள் பத்து நிமிஷத்தில் பணத்தைப் பற்றி சொல்லவில்லைன்னா.. பத்து நாள் லாக் அப்பில் போடுவேன்.. இன்னும் F.I.R போடலை.. போட வைக்க வேண்டாம்.. உண்மை சொல்லச் சொல்லுங்க.. ”
“ஏம்மா அடி வாங்குற? சொன்னால் கேளு.. பார்த்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்க. ஆனால் வீம்பு பண்றியே? உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத. ராஜன் சார் ஆக இருக்கப்போய் இவ்வளவு பொறுமையாக இருக்கார். மற்றவங்க எல்லாம் கட் ஆன்ட் ரைட்டாக இருப்பாங்க தெரியுமா? சொல்லுமா பணம் எங்கே?”
“என்கிட்ட பணம் இல்லை.. ஹேம்நாத்தைப் பிடிக்க துப்பில்லை. ”
அவள் கூறிய உண்மை சுட.. ராஜன் அமைதியாக ஸ்ரீ அருகே வந்தான். அவள் கைகளைப் பிடித்து “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு? உன்னை நம்ப நான் மடையனா? ”
ஏட்டையா முன்பாக தலையைக் குனிந்த ஸ்ரீ அவர் முகத்தைப் பார்க்காமல் ராஜன் முகத்தை நேராகப் பார்த்துச் சொன்னாள்.. “கௌன்சிலர் உங்களுக்கு கொடுப்பதைவிட கம்மிதான்.. ”




Comments are closed here.

You cannot copy content of this page