Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal epi 16
1323
0
கட்டிலில் படுத்துக்கிடந்த ஸ்ரீக்கு அவர்கள் பேசியது ஒரு கணம் காதுக்குள்ளே வண்டுகள் சப்தமிடுவதுபோலக் கேட்டது. மறுகணம் மண்டைக்குள் ஆணி அறைவது போலக் கேட்டது. ஆனால் எப்படியோ அவள் காதுகளில் கேட்டது. மினரல் வாட்டர்காரன் என்று சொன்னதும் இதயத்தில் ஓடும் இரத்தம் யாவும் உரைந்துபோனது போலத்தான் இருந்தது.
ஏட்டையா பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு தட்டப்பட்டது. நர்ஸ் உள்ளே வந்து பி.பி பார்த்தாள். பி.பி பார்க்க பார்க்க நர்ஸ் முகம் தெளிவானது. நர்ஸ்சுக்கு முன்பாக ராஜன் பி.பி ரீடிங்கை எட்டிப் பார்த்து நிம்மதி அடைந்தான். நர்ஸ் மேலும் ஒரு முறை பி.பி பார்க்க ஸ்ரீ கைகளைப் பிடித்தபோது கண்களைத் திறந்து எதிரே பார்த்தவளுக்கு ராஜன் முகம்தான் தெரிந்தது. ராஜனும் அவளைப் பார்க்க அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
ஸ்ரீயின் தற்கொலை முயற்சியை விசாரிக்க மனித உரிமை ஆணையம் நியமித்த மாஜிஸ்ரேட் வந்தார்.
ராஜன் அறையின் கண்ணாடிக்கதவில் கண் பதித்து அறைக்குள்ளே வரப்போகும் மாஜிஸ்ரேட்டைப் பார்த்துக் கொண்டே ஏட்டையாவிடம் சொன்னான் “மாஜிஸ்ரேட் வர்றார். இவர்கிட்டயிருந்தும் தப்பிச்சா இரண்டு தேங்காயாக வாங்கி பிள்ளையாருக்கு உடைத்திடுங்க ஏட்டையா.”
மாஜிஸ்ரேட் உள்ளே நுழைந்ததும் ராஜனைப் பார்த்து கைகளைக் குலுக்கியவாரே சொன்னார்
“ஹலோ ராஜன். அக்கூயூஸ்ட் ரொம்ப சீரியஸா இருப்பதா சொன்னாங்க.. ஏன் தேவையில்லாம பிரச்சனையில மாட்டிக்கிறீங்க? யாரோ மசூதாம் ஒவ்வொரு பிரஸ்சாக போய் ஆளுங்களை பிடிச்சி
இழுத்திட்டு வர்றான். எனக்கு ஆர்டர் வந்ததே அதனால்தான். நான் அக்கூயூஸ்ட்கிட்ட நாலு கேள்வி கேட்கிறேன். அக்கூஸ்ட் ஃபிட் டு ஆன்சர் என்று டாக்டர்ஸ் சொன்னாங்க. நல்ல வேளை இது மரண வாக்குமூலம் இல்லை என்று சந்தோஷப்படுங்க. ” என்று கூறியவர் ஸ்ரீ யை திரும்பிப் பார்த்தார். நர்ஸ் ஸ்ரீயின் கன்னங்களைத் தட்டி எழுப்பினார். ஸ்ரீ கண்களைத் திறந்ததும்.. மாஜிஸ்ரேட் கேட்டார்
“ஸ்ரீ.. ஆர் யு ஸ்ரீ மேடம்? ”
மெல்லிய இமைகள் திறந்து ஸ்ரீ ஆம் என்று தலையசைத்தாள்.
“அம்மா நான் உன்கிட்ட நாலே நாலு கேள்விதான் கேட்கப்போறேன். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதும். கேள்வி கேட்கவா? ”
“ம். ” என்று கம்மிய குரலில் வந்தது ஸ்ரீ யின் பதில். “உன்னை யாராவது பலவந்தமாக கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணாங்களா? ”
ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள்.
“திரும்ப கேள்வியக் கேட்கிறேன்.. உன்னை யாராவது பலவந்தமாக கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணாங்களா? ”
ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள்.
“உன்னை யாராவது தற்கொலைக்கு தூண்டினாங்களா? ”
ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அதே பதிலை ஸ்ரீ தந்தாள்.
“போலிஸ் உன்னை ஏதாவது வகையில் பிளாக்மெயில் பண்ணாங்களா?” ஸ்ரீ இல்லை என்று தலையசைத்தாள்.
மாஜிஸ்ரேட் திரும்பி ராஜனைப் பார்த்து சொன்னார்
“என்ன பேரம் பேசினீங்க? ம்? சும்மா சொல்லக்கூடாது நல்லா வொர்க்கவுட் அகிடுச்சு. நான் என் சைடை கமிஷ்னர்கிட்ட கிளியர் பண்ணிக்கிறேன். அப்புறம் பார்க்கலாம் ராஜன். ” என்றவர் நான்காவது கேள்விக்கு அவசியம் இல்லை என்று தோன்றவே கிளம்பிச் சென்றார்.
ஏட்டையாவின் மினரல் வாட்டர்காரன் புலம்பல் செய்த வேலை. மயக்கத்தில் ஸ்ரீ அவரது புலம்பலை கேட்டபிறகு அவரது வேலைக்கு உலை வைக்க விரும்பவில்லை. ஏனோ ராஜனை கஷ்டப்படுத்தவும் தோன்றவில்லை. அவன் அவனது வேலையைத் தானே செய்தான் என்றதால் அவனையும் காட்டிக்கொடுக்க மனமில்லை.
மாஜிஸ்ரேட் கிளம்பிச் சென்ற பிறகும் ராஜனால் ஸ்ரீயின் பதிலை நம்ப முடியவில்லை. ஏட்டையா துள்ளிக்குதித்துவிட்டார். ராஜனிடம் சொன்னார்
“சார் இந்தப் பொண்ணுதான் பணத்தை எடுத்திருந்தாலும் நான் இந்த பொண்ணு மேல கேஸை நிக்க விடமாட்டேன். என் தலையைக் காப்பாத்திடுச்சு சார். ”
ராஜன் முறைத்ததும் ஏட்டையா ஸ்ரீயின் கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
அப்போதுதான் ராஜனுக்கும் ஒன்று புரிந்து திடுக்கிட்டான். வெகுநேரமாய் மனதில் சஸ்பன்ஷன் குறித்து அழுத்திய தவிப்பிற்கு பிறகு அவனுக்கும் ஸ்ரீயின் கைகளைப் பிடித்து முத்தம் தர ஆசைதான் என்பதே அவனுக்கே அதிர்ச்சிதரும் உண்மையாக இருந்தது.
Comments are closed here.