Vedanthangal epi 19
1584
0
மசூத் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்துவிடுவான். சந்தர்ப்பம் கிடைத்தபோது ஸ்ரீ அவனிடம் தனியே பேசினாள் “மசூத் என்னால இப்ப எதுவுமே சொல்ல முடியல. நான் இரண்டு வருஷத்திற்கு கல்யாணத்தைப் பற்றியே பேச முடியாது. ”
“அப்படி கல்யாணம் பற்றி பேச நினைக்கும்போது என்னைத் தவிற யாரும் உனக்கு தோன்றக் கூடாது. ” என்று சொல்லும்போது மசூத் குரலில் உறுதி இருந்தது.
பல நாள் புறக்கணிப்பு தந்த கடுமை.
“மசூத் ஏன் என்னை புரிஞ்சக்க மாட்டிங்கிற? பவித்ரா இறந்து ஒரு மாதம் கூட ஆகல. இப்பபோய் கல்யாணம் பற்றி பேசினா எப்படி? ”
“சாவு நடந்த வீட்டில் தான் உடனே கல்யாணத்தையும் நடத்துவாங்க. அது இழப்பை மறக்க நம் ஜனங்க கண்டுபிடித்தது. நம் கல்யாணம் நிச்சயம் பவித்ராவை மறக்க உனக்கு உதவும் ஸ்ரீ.”
“மசூத் நான் ஒன்றும் பதினைந்து வயது குமரி இல்லை. கல்யாண ஆசையில் மிதிக்க. அப்புறம்.. ”
“வேண்டாம் ஸ்ரீ சொல்லாத.. என்னால் சகிக்க முடியாது. உன்னை இழிவு படுத்தி ஒரு வார்த்தைகூட சொல்லாத. முன்பு எப்படியோ.. ஆனால் பவித்ரா இறந்த பிறகு உன் ஒவ்வொரு செயல்களிலும் நான் நேர்மையை பார்த்தேன். தனு மோகனா அக்காவுக்கு நீ உதவினது இறந்துபோன ஆட்டோகாரன் பொண்டாட்டிக்கு செலவு செய்தது.. இது எல்லாம் பணத்தால் நடந்ததா? இல்லை ஸ்ரீ. பணம் மட்டும் காரணமில்லை…” என்றவன் ஆள்காட்டி விரலை அவள்முகத்தின் முன்பு நீட்டி “நீயும் தான் காரணம். ” என்று பேச்சாலும் சைகையாலும் சொன்னான்.
வேறு புறம் திரும்பி மேலும் சொன்னான்..
“பணம் எப்படி வந்துச்சோ எனக்கு தெரியாது. ஆனா அதை நீ கொண்டுபோய் சேர்த்த இடமும் நேரமும் நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். இடுகாட்டில் போலிஸ் வந்தால்தான் பவித்ரா சவத்தை எரிப்பேன் என்கிறான் வெட்டியான். நீ இரண்டு மணி நேரம் அவனிடம் சவுடாலாக பேசினது.. அடுத்த மூன்று மணி நேரத்தில் உன் அம்மா இறந்தது.. அப்போதும் அழுது கொண்டே இறந்த ஆட்டோகாரனின் பொண்டாட்டியை உட்கார வைத்து தண்ணீர் குடிக்க வைத்தது எல்லாம் அந்த இடத்தில் நின்னவங்க வாழ்நாளில் மறக்கக்கூடியதா?
அவன் உடலையும் அம்மா உடலையும் போஸ்ட்மார்டம் பண்ணும் இடத்தில் ‘நைட்குள்ள வாங்கும்மா இல்லை இங்க பெருச்சாளி நிறைய உண்டு. பொணத்தை கடிச்சி குதறிடும் ’ என்று அந்த குடிகாரன் சொன்னபோது நீ கதறிக்கிட்டே காதில் இருந்த நாலுகிராம் கம்மலை கழற்றியது எதுவும் நான் மறக்கப்போவதில்லை.. ”
முகத்தை தரையில் பதித்து மேலும் சொன்னான் “நான் ரொம்ப கம்ப்பல் செய்றதால் ‘அதுக்காகத்’ தான். ‘அது வேணும் என்றுதான் ’ கல்யாணம் பற்றி பேசுறேன் என்று என்னை தப்பா நினைக்காத. ”
ஸ்ரீ இப்போது குறுக்கிட்டாள் “ச்ச ச்ச இல்லை மசூத். நான் என்னைப் பற்றி தான் சொல்ல வந்தேன்.. ”
“அதுவும் வேண்டாம் ஸ்ரீ. எனக்கு பிடிக்கலை ஸ்ரீ. விட்டிடு. தனுகூடச் சொன்னா இப்ப பேச வேண்டாம் என்று. என்னால முடியல. நான் சென்னைக்கு போறேன். அங்க ஒரு பெரிய கார்மென்ட் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. ஒரு வருஷம் கழித்துதான் மதுரை வருவேன். என் கூட ஃபோனில் பேசு ஸ்ரீ.”
“ம். கேஸ் முடிய இரண்டு மாதம் ஆகும் அப்புறம் பேசுறேன். குடிக்காத மசூத். இப்பகூட உன்கிட்ட வாடை வருது. ”
“ம். கொஞ்சம் கொஞ்சமா விட்டிடுறேன்.. ”
“அப்புறம் இன்னொன்று. என் மனசு மாறலைன்னா.. நீ யாரையாவது கட்டிக்கணும். ”
“மாறிட்டா என்னைக் கட்டிப்பியா ஸ்ரீ? ”
“நான் மாறலைன்னா என்ன செய்யணும் என்பதைப் பற்றி பேசுறேன். ”
“நான் மாறிட்டா என்ன செய்யணும் என்பதைப் பற்றி பேசுறேன். ”
ஸ்ரீ பதில் கூறும் முன் ராஜன் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கே வந்துவிடவும் ஸ்ரீ எழுந்து “நல்லபடியா சென்னைக்கு போயிட்டு வா மசூத். ரேமன்ட்ஸ் கார்மன்ட்ஸ் பெரிய கம்பெனி. நல்ல வாய்ப்பு. நீ நல்லா வந்திடுவ மசூத். ” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
மசூத் ராஜனிடம் “தாங்க்ஸ் சார். ஸ்ரீ விஷயத்தில் நீங்க இவ்வளவு உதவி செய்வீங்க என்று நான் நினைக்கவேயில்லை. ஹாஸ்பிட்டலில் வைத்து நான் கோபமாகப் பேசியிருந்தால் சாரி சார். ”
“ஐ கேன் அன்டர்ஸான்ட் மசூத். ஸ்ரீ கேஸை டி.எஸ்.பி என்னை கவனமாக ஹான்டில் பண்ணச் சொன்னார். யாரோ திலிப்பாம் அவர் சிபாரிசு டி.எஸ்.பி வரை போயிருக்கு. அதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்டர். சென்னைக்கா போறீங்க? அட்ரஸ் தந்திடுங்க. கேஸ் முடிந்ததும் ஸ்ரீ யை அங்க அனுப்பிடுறேன். ”
முகவரி கேட்டவனுக்கும் தெரியாது முகவரி கொடுத்தவனுக்கும் தெரியாது ராஜன் ஸ்ரீயை வாழ்நாள் முழுதும் தன்னிடமே வைத்துக்கொள்ள அவனுள் கொள்ளை ஆசைகளை வளர்த்துக்கொள்வான் என்று..
‘நாளை நம் தலையா? இல்லை அடுத்தவன் தலையா?’ என்று தெரிந்து கொள்ள சித்ரகுப்தன் கூட சுவடியின் பக்கத்தை நாளை திருப்பினால்தான் அவருக்கே தெரியுமாம்.
இன்று என்பது நிச்சயமான நிகழ்காலமாம். நாளை என்பது எதிர்பார்க்காத எதிர்காலமாம்.
மசூதும் ஸ்ரீயும் பேசிக்கொண்டிருந்தததை வேவு பார்க்கிறேன் என்ற சாக்கில் மொத்தமாக ஒட்டுக்கேட்டுக் கொண்டான் ராஜன். பொறாமையெல்லாம் தோன்றவில்லை அவனுக்கு. ஆனால் மசூத் என்னும் கொசுத்தொல்லை விட்டதடா என்று மட்டும் தோன்றியது அவனுக்கு. ஒரு நாளுக்கு அந்த கொசு ஸ்ரீயைப் பற்றி நாலு முறை விசாரிக்குமே? கொசு மருந்து அடித்த ரேமன்ட்ஸ்காரனுக்கு ஒரு பூங்கொத்தோடு லைக் கொடுத்தான் கற்பனையாக.
ஸ்ரீயிடம் சமாதானமாக போகலாமா? வேண்டாமா? என்று அவளைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றுவதால் அவனும் அதைப்பற்றி யோசித்தான். ‘போலீஸ்காரன் சாரி கேட்கலாமா? கேட்கக்கூடாதா? என்று குரூப் ஒன்னில் கேட்டால் அவனவன் என்ன எழுதுவான்? ’ என்று தன்னிடமே கேட்டுக்கொள்வான்.
ராஜன் அவளை பார்க்க வந்தாலும் பேசுவதில்லை. ஸ்ரீ அவன் இருக்கும் திசை என்று தெரிந்தால் அத்திசையில் அவள் நிழலைக்கூட அனுப்புவதில்லை.
ஸ்டேஷனுக்கு இரண்டு முறை காலை ஆறுமணிக்கு அழைத்துச் சென்று அவள் கையெழுத்தை பத்து தாளில் வாங்கிக்கொண்டான் ராஜன். ஏட்டையா உடன் வந்ததால் முகம் பார்த்துபேசவேண்டிய சங்கடங்கள் தவிர்க்கப்பட்டது.
ஒரு முறை ஸ்டேஷனுக்குப் அனைவரும் போய்விட்டு வீட்டிற்கு வந்ததும் ஏட்டையாவிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தான். ஸ்ரீ அவர்கள் பேசுவதை கவனித்தாள்.
“சார் கேஸ் ஃபைல் பண்ணல. அட்ரஸ் மாறுவதாக அவள்கிட்டயிருந்து சைன் வாங்கியிருக்கேன். அப்புறம் கௌன்சிலர் ஆளுங்க ஃபோர்ஸ் பண்ணால் அந்த டம்மி அட்ரஸ் கொடுத்து அனுப்பிடுவோம். யாரோ திலிப்பாம் டி.ஐ.ஜி கிட்ட ரொம்ப ரிகம்பன்ட் செய்து ஸ்ரீக்கு ஹெல்ப் செய்யச் சொல்லியிருக்கார். திலிப் என்பவன் பவித்ரா ஆளு என்பது என் கெஸ். ஒரு இரண்டு மாசத்தில் கேஸை பென்டிங்கில் போட்டுடலாம். டி.ஐ.ஜி சப்போர்ட் இருக்குல்ல? பார்ப்போம்..ஐ.ஜி சொல்வதை வைத்துப்பார்த்தால் ஸ்ரீ மீதோ பவித்ரா மீதோ தப்பு இல்லை என்று நினைக்கிறேன். சப் இன்ஸ்பக்டர் கோபிநாத் தகவல் சொல்லணும். அதுவரை என்னால் புரூவ் பண்ண முடியாது. அதுவரை ஸ்ரீ உங்க வீட்டில் இருக்கட்டும். ”
“இருக்கட்டும் சார். என் மூத்த பொண்ணு பத்மாகூட காலையில ஃபோன் போட்டு இந்த கேஸை பற்றி கேட்டுச்சு. ”
“பத்மா நல்லாயிருக்காங்களா? ”
“ம். நல்லாயிருக்கா. இந்த பொண்ணு இன்னும் எத்தனை நாள் நம்ம கஸ்டடியில்? கௌன்சிலர் ஆளுங்க இந்நேரம் ஸ்ரீயை மறந்திருப்பாங்க. ”
“மறப்பதா? கௌன்சிலர் முகத்தில் கல்லை விட்டெறிஞ்சா அவருக்கு மறக்குமா? கல் எறிந்தபோது கூட்டத்தில் நின்ற ஹேம்நாத் ‘ஸ்ரீ எறியாதே ’ என்று கத்தாமல் இருந்திருக்கலாம். பக்கத்தில் இருந்த கௌன்சிலர் ஆள் தனுவைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இது எல்லாம் நடந்திருந்தா கௌன்சிலர் மறந்திருப்பார்.
Comments are closed here.