Share Us On
[Sassy_Social_Share]vedanthangal epi 24 and 25
1338
0
அவள் சொன்னதை முழுவதும் உள்வாங்கியவன் அவளிடம் கேட்டான் “ஆமாம் என்னை ராஜன் என்று பேர் சொல்லிக் கூப்பிடுறியே.. என் கையால் இரண்டு அப்பு அப்பணுமா? ”
“நீ குட்ஷெப்பர்ட் ஸ்கூல்தானே? ”
“ஆமா. ”
“நானும் குட்ஷெப்பர்ட் ஸ்கூல்தான். நீ நிர்மல் ரக்~க் செட்தானே? உன் ஸ்கூல் ஃபோட்டோவில் பார்த்தேன். அவுங்க எல்லோரும் என்னை விட இரண்டு வருஷம் ஜுனியர். நாங்க எல்லோரும் ஆனுவல் எக்ஸாமில் ஃபெயில் ஆகி திரும்ப பரீட்ச்சை எழுதினோம். அதனால் அவுங்களை நல்லாவே தெரியும் எனக்கு. ”
பிறந்தது ஜனவரி 23’ 1992 வருஷம் தானே? உன் சர்டிபிகேட்டை ஃபைல் போட்டு வச்சிருக்கியே அதில் பார்த்தேன். ”
“அதனால்? ”
“அதனால்தான்! கட்டிலைப்பற்றி மட்டும் இல்லை எனக்கு கொஞ்சம் கணக்கும் தெரியும். என்னோட பிறந்தநாள் தேதி நாளை சொல்றேன். இரண்டையும் கழித்துப் பார். நான் உன்னைவிட எத்தனை நாள் எத்தனை மாதங்கள் எத்தனை நிமிடங்கள் நான் உன்னைவிட மூத்தவ என்று உனக்கும் தெரியும். நான் குளிக்கப் போறேன். ” என்று சொன்னவள் விறு விறுவென்று குளியலறைக்குள் சென்று வேலையை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
நம்மைவிட மூத்தவளா? எப்படி? பார்த்தா அப்படித் தெரியலையே! முகத்தில் உடம்பில் எதுவுமே கண்டுபிடிக்க முடியலையே! பொய் சொல்றாளோ? ச்ச இருக்காது. நான் அவள் கேஸை பார்க்கும்போது பொய்யெல்லாம் சொல்ல மாட்டா. கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? நமக்கே இருபத்தொண்பது முடியப்போகுது. அப்படினா அவளுக்கு முப்பது இருக்குமா? இருக்கும்! என்ற முடிவுக்கு வந்தவனாய் இரவு சாப்பாட்டிற்கு இட்லி வாங்கிவர ஆள் அனுப்பினான்.
ஒரு பார்சலை ஸ்ரீக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பாட்டு வேலையை முடித்தவன். அவள் கைகழுவ வந்தபோது “என்னை விட எத்தனை நாள் நீ மூத்தவ? ”
“அது இப்ப ரொம்ப முக்கியமா? உனக்கு வேற வேலை இல்லையா? கவர்மென்ட்ல்ல வி.ஆர்.எஸ் கொடுத்துட்டாங்களா? இன்னைக்கு முழுதும் வீட்டிலிலேயே இருக்கியே அதான் கேட்டேன். நான் நாளைக்கு காலையில் சென்னைக்கு போகணும். அனுப்புவியா மாட்டியா? ”
ராஜன் பதிலே பேசவில்லை.
“நான் உன்கிட்டதான் பேசிக்கிட்டுயிருந்தேன். ”
ராஜன் தனது யூனிபார்மை அவிழ்த்து ஷார்ட்]_குள் புகுந்தான். தனது செல்ஃபோனை சார்ஜில் போட்டான். ஸ்ரீ என்னும் உயிர்தினைப்பொருள் அங்கிருப்பதை அவன் நினைவில் இருந்து அகற்றினான். உன்னிடம்தான் பேசிக்கிட்டுயிருக்கேன் என்று அவள் சொன்னபோது மும்முரமாய் குனிந்து தனது காலில் இருந்த ப்ரௌன் சாக்ஸை கழற்றினான். ஷ_வைக் கழற்ற எத்தனித்தபோது.. ஸ்ரீ அவனிடம்
“நான் பேசுறது உனக்கு கேலியாக இருக்கா? என்னால் இங்க இருக்க முடியாது. நான் போறேன். ”
ஷ_வை பொறுமையாக கழற்றியவன் தனது அறைக்குச் செல்லும் வரை எதுவும் பேசவில்லை அறை வாலில் நின்றுகொண்டு “எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒன்றின் வாலை நிமிர்த்தமுடியாதாமே. அது ஏன் என்று எனக்கு உன் மூலமாக புரியுது. இனி பவித்ராவுக்காகயெல்லாம் பார்த்திட்டுயிருக்க மாட்டேன். அடுத்து என்னை ராஜன் என்று பெயர் சொல்லிக்கூப்பிட்டால் பல்லைத் தட்டி கையில் கொடுத்திடுவேன். இரண்டு வார்த்தைக்கு மேல் பேசின.. கௌன்சிலர் ஆளுங்க என்ன.. எவன் வந்து வாடின்னு இழுத்திட்டு போனாலும் அமைதியாக நின்னு வேடிக்கை பார்ப்பேன். இங்கிருந்து அடுத்த தெருவுக்கு நீ போகும்முன் நாலு மஃப்டி போலிஸ் இருப்பாங்க. அதனால் திரும்ப ஓட நினைக்காதே. பத்து நாளில் உன்னை அனுப்பிடுறேன். இல்லை எவனிடமாவது மாட்டிக்கிட்டு பவித்ரா மாதிரி ஓடுற வண்டியிலிருந்து குதிக்கணும்ன்னா எனக்கு ஒன்றுமில்லை. உன் வசதி என்ன என்று நீயே யோசிச்சுக்கோ. ”
சரவெடியாய் அவன் வெடித்தான் ஆனால் பற்றிக் கொள்ளாத புஸ்வானமாய் அவள் நின்றுபோனாள். ஸ்ரீயின் கோபத்தை இது பல மடங்கு அதிகரித்தாலும் வாதத்தில் முடங்கியவனைப் போல் அவளும் தனது அறையில் முடங்கிப் போனாள்.
இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட நம் தேசியத்தந்தை யார் என்று அவளிடம் கேட்டால் “தப்பா நினைச்சுக்காதீங்க அவரிடம் இப்ப நான் விடுதலையடைய ஏதாவது ப்ளான் யு இருக்கான்னு கேளுங்க.. ப்ளான் யு இல்லைன்னா ப்ளான் டீ தரச்சொல்லுங்க. ப்ளான் டீ இல்லைன்னா ப்ளான் ஊ தரச்சொல்லுங்க. அதுவும் இல்லைன்னா ப்ளான் ணு ஆவது தரச்சொல்லுங்க.” என்று கெஞ்சிக்கேட்கும் நிலையில் ஸ்ரீ இருந்தாள்.
விடிய விடிய ஸ்ரீ தூங்கவில்லை. யாரும் தன்னைத் தேடிவந்து எந்த ப்ளானும் தரப்போவதில்லை என்று புரிந்துகொண்டு நாளை என்ன செய்ய வேண்டும் என்று அவளே ஒரு ப்ளான் உருவாக்கியபிறகுதான் நிம்மதியாக கண் மூடினாள். இரண்டு மணிக்கு மூடிய கண்கள் ஐந்து மணிக்கு தானாக திறந்தது. ராஜன் கதவைத் திறந்துகொண்டிருந்தபோது ஸ்ரீ அவனிடம் “ஏட்டையா வீட்டிற்குப் போகணும் ” என்றாள்.
“எதுக்கு? ”
“ஸ்நேகாகூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருப்பேன். ”
“அவளை இங்க வரச் சொல்றேன்.” என்று பதில் சொன்னவனும் தனது கைகளில் ரிஸ்ட்பேன்ட் அணிந்து கொண்டே வாசல் தாண்டிச் சென்றான்.
தன் திட்டப்படி எல்லாம் நடக்கவும் ஸ்ரீ வேறு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள். அவன் சொன்னபடி ஸ்நேகா காலை ஒன்பது மணிக்கே வந்துவிட்டாள். ஸ்நேகா வந்ததிலிருந்து அவள் மாமாவின் பிள்ளையைப் பற்றி ஒரு விக்கிபிடியா வாசித்தாள்.
அவனை ஸ்ரீக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவள் மாமா பையன் ஸ்ரீயிடம் வழிந்ததுமட்டுமின்றி தனது கம்பெனியின் பெறுமையடித்தான். “அவ்வளவு பெரிய கம்பெனியா? நான் பார்த்ததேயில்லை.” என்று சொன்னவளிடம் “என் கம்பெனி கேபிலேயே சுத்திக் காண்பிக்கிறேன்.” என்றான். ஸ்ரீ “தாங்க்ஸ் ” என்று அவன் கைகளைப் பற்றி சொன்னபோது அவன் விஷமமாய் விரல்களை வருடினான். ஸ்ரீ சட்டென்று கைகளை உறுவிக்கொண்டு கஷ்டப்பட்டு ஒரு சிரிப்பு சிரித்து வைத்தாள்.
ஒருநாள் ஸ்நேகாவின் பிதற்றலைக் கேட்டுக் கொண்டே மசூத் எண்ணிற்கு ‘ஸ்ரீ’ என்று மெசேஜ் செய்தாள்.
அவள் நினைத்தபடி பத்து நிமிடத்தில் பதில் மெசேஜ் வந்தது. மசூத்திடம் தனக்கு கொரியரில் ஐயாயிரம் பணம் அனுப்பச் சொன்னாள். மசூத் ‘ஏன்’ என்று கேட்ட மெசேஜுக்கு பதில் மெசேஜ் இல்லை. மசூத் ‘சரி ’ என்ற மெசேஜுக்கு ‘நன்றி’ என்ற மெசேஜ் அனுப்பினாள்.
மறுநாள் பகல் ஒரு மணிக்கு அவளுக்கு ஒரு கொரியரில் ஒரு புத்தகமும் அதில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐயாயிரமும் தூக்க மாத்திரைகள் அடங்கிய ஒரு பாட்டிலும் வந்தது. கொரியர்காரன் வந்து போனது யாருக்கும் சந்தேகம் தரவில்லை. அது ராஜன் பெயருக்கு வந்திருந்ததால் ஸ்நோகாகூட சந்தேகிக்கவில்லை.
ஏட்டையாவின் மனைவியே கொரியரை கையெழுத்திட்டு வாங்கி ஸ்ரீயிடம் கொடுத்தார். அவரிடம் ஸ்நோவை மறுநாள் விட்டுவரும் சாக்கில் ஏட்டையா மனைவியிடம் தாமாக பேச்சை ஆரம்பித்தாள்.
“அந்த கொரியரை ராஜன் சார் பிரித்ததும்தான் நான் உங்களுக்கு குழம்பு கொண்டுவந்தேன் ஆன்டி. மதியம் வாங்கிய சாப்பிட்டில் குழம்பு மிஞ்சிடுச்சு. அவர் பிரிக்கின்ற அவசரத்தில் இருந்தாரா அதனால் அவரிடம் சொல்லாமல் வந்துவிட்டேன். காபியெல்லாம் வேண்டாம். சாரி ஆன்டி. நான் சீக்கிரம் போகணும். பிறகு வந்து காபி சாப்பிடுறேன். ஸ்நேகா நாளை வந்திடு. சரியா? நாம சி.டியில் படம் பார்ப்போம். ராஜன் சார் நிறைய சி.டி வைத்திருந்தார்..” என்று ஒருவாறு சாமாளித்துவிட்டு வந்தவள் தனது திட்டத்தின் வரைபடத்தை தாமே வரைந்தாள்.
ராஜன் அசந்த நேரம் தூக்க மாத்திரைகளை அவன் பாலில் கலந்துவிட வேண்டும். அப்புறம் காலையில் ஸ்நேகாவின் மாமா பையன் போகும்போது அவனிடம் அசடுவழிந்துவிட்டு அவனுடன் கேபில் இந்த இடத்திலிருந்து சென்றுவிட வேண்டும். வீட்டு வாசலுக்கு வரும் கேப்தான் வசதி. மஃப்டி ஆளுங்க அப்பதான் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது. அவள் மாமா பையன் தான் தன்னை ஏட்டையாவுக்குத் தெரியாமல் போக வைக்கமுடியும். திட்டம் தெளிவாக இருந்தது. ஆனால் எப்போது?
‘எப்போது’ என்ற கேள்விக்கு ‘இரண்டு நாளில்’ என்று மனதில் மார்க்கர் பேனா கொண்டு குறித்து வைத்துக் கொண்டாள். ஆனால் அழியாத மார்க்கர்கூட அழிந்தது இரண்டு நாட்கள் கடந்திட்ட நேரத்தில்..
மறுநாள் சாயங்கால வேளையில் ஸ்ரீ ஸ்நேகாவை விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்து நின்றால் ராஜன் யூனிஃபார்ம் அணியாமல் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.
உள்ளே செல்லப்போனவள் ராஜன் இருக்குமிடம் பார்த்து திரும்பி நின்று அமைதியாக நின்றாள்.
“என்ன? ”
“….”
“என்ன? சீக்கிரம் சொல்லு. ”
“எனக்கு கொஞ்சம் சாமான் வாங்கணும். ”
“என்ன சொல்லு வாங்கிட்டு வரேன். ”
“இல்லை நான் வரேன். இரண்டு நிமிஷம் தான். உடனே வாங்கிடுவேன். எனக்கு ஒன்று அவசரமாக வேணும்.”
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். சொல்லு. நானே வாங்கிட்டு வர்றேன். ”
“ஐய்யோ.. ஏன் இப்படி என்னை டார்ச்சர் செய்றீங்க? ”
ராஜன் பதில் பேசாமல் வெளியே செல்லப்போனான். ஸ்ரீ அவன் வெளியேறப்போகிறான் என்பதை புரிந்துகொண்டு சத்தமாகச் சொன்னாள்
“இங்க வந்து பதினைந்து நாளுக்கு மேல் ஆச்சு.. ”
“சரி.. அதனால்.. ”
“புரியலையா? அதான்.. நானே வரேன்னு சொன்னேன். ”
சட்டென்று புரிந்தவனாய் ராஜன் தனது செருப்பின் வாரை மாட்டியவாரே அவள் முகம் பார்க்காமல் “சரி வா என்னுடன் ” என்றான். ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றான். பைக்கில் போகும்போது ஷால்கொண்டு முகத்தில் கட்டச்சொன்னான். அவள் கண்கள்மட்டும் தெரியும்படி கட்டியபிறகுதான் வண்டியை கிளப்பினான். வண்டியை ஸ்டார்ட் செய்தபிறகும் வண்டி நகராமல் இருக்கவும் ஸ்ரீ சந்தேகமாய் ராஜனைப் பார்த்தாள். ராஜன் எதிரே வேளிபோட்டு வைக்கப் பட்டிருந்த சிறு கொய்யா மரத்தைப் பார்ப்பது தெரிந்தது அவளுக்கு. அங்கே என்ன இருக்கு? என்று உன்னிப்பாகப் பார்த்தவள் மஃப்டி காவலர் துரை பைக்குடன் நிற்பது தெரிந்தது. ராஜன் தலையசைக்க அவரும் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
துரையின் வண்டி ஸ்டார்ட் ஆனபிறகு ராஜன் தனது வண்டியை கிளப்பினான். தீடீரென்று கிளம்பிய வண்டியால் அவன் முதுகோடு தனது முகத்தை இடித்துக்கொண்டவள் மீண்டும் நேராக உட்கார்ந்தாள். பிடிமானத்திற்கு பக்கவாட்டில் இருந்த சிறு கம்பியைப் பற்றினாள். துரை பின்னாடி வர ராஜன் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினான். அருகே சென்ற இளசுகள் ஸ்ரீயைப் பார்த்ததும் ஓவர்டேக் செய்து பிகு பண்ண நினைத்தால்கூட அதை மோப்பம் பிடித்த ராஜன் அவர்களை முந்திவிடுவான். பைக்கின் பின்னால் போலிஸ் என்று ஆங்கிலத்தில் எழுதிய பலகையைப் பார்த்ததும் அமைதியாக ஒவர்டேக் செய்யாமல் சைடு வாங்கினர்.
தங்களது வண்டியின் கண்ணாடியில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டனர்.
அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு கூட்டிட்டு போகாமல் திருப்பரங்குன்றத்தின் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றான். ராஜனும் ஸ்ரீயும் அந்த பெரிய சூப்பர் மார்க்கெட்டில் கால்வைத்து நடக்க ஆரம்பித்தபோது துறை வெளியே வண்டியைப் போட்டுக் கொண்டு நின்றுவிட்டார். ராஜனும் ஸ்ரீயும் சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். ஸ்ரீ அவள் வந்த வேலையை ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டாள். ராஜன் வீட்டு சாமான்கள் வாங்கதான் நேரம் ஆனது.
“ஸ்ரீ ஒரு ரெண்டு நாளுக்கு வீட்டில் சமைச்சிடு. அடுத்த வாரத்தில் அந்த ஹோட்டல் இரண்டு நாளுக்கு லீவு அதான். மற்ற இடத்தில் சாப்பிட்டா எனக்கு ஒத்துக்காது. புதன் வியாழன் இரண்டு நாள்தான். ”
“சரி. ”
“அதுக்குதான் சாமான் வாங்குறேன். பில் போட்டப் பிறகு கூப்பிடுறேன் அந்த சேரில் உட்கார். ”
ஸ்ரீ அமைதியாக சேரில் உட்கார்ந்தாள். ராஜன் சாமன்களை எடுத்து நகரும் வண்டியில் போட்டுக்கொண்டே போனான். துவரம் பருப்பு மூன்று ஒரு கிலோ பாக்கெட் எடுத்து அவன் போட்டபோதும் வத்தல் ஒரு கிலோ பாக்கெட்டை அசால்ட்டாக வண்டியில் போட்டபோதும் இரண்டு நாள் தானே சொன்னான்? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. என்னமோ செய்யட்டும் என்று தனக்குத் தாமே சொல்லிக்கொண்டாள்.
நல்லெண்னெய் மூன்று பாக்கெட் எடுத்துபோட்டபோது பரவாயில்லை ரீஃவைன்ட் ஆயில் நல்லதேயில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறான் என்று மவுனமொழியில் அவள் தன்னிடம் பேசிக்கொண்டாள்.
பாதாம் பருப்பு அரைகிலோ வாங்கினான். பிஸ்தாவும் அரைகிலோ! நல்ல வேளை முந்திரியை விட்டுவைத்தான் என்று நினைக்கையில் பச்சை வேர்கடலை அரைகிலோ வாங்கினான்.
தினம் இவற்றில் ஒன்றை உள்ளங்கை அளவு ராஜன் இரவே ஊற வைத்து காலை உணவுக்கு சாப்பிடுவான். அதை மட்டுமே காலை உணவாக சாப்பிடுவான்.
“50 கிராம் நெய் விலை 34 ரூபாய். நெய் ஊற்றி பொங்கல் தாளிக்க நாம் படும் பாடு நமக்குத்தான் தெரியும். இவன் தினம் தினம் கிராம் கணக்கில் சத்தான பருப்பு சாப்பிடுறான்.. ” என்று ராஜனை வசவாக வைதவளிடம் அவளது இடது மூளை சொன்னது ‘ஏய் அப்பதானப்பா அந்த வலதுகை புஜம் இப்படி திரண்டு இருக்கும் .’
மனம் அந்த சமாதானத்தில் சமாதானம் ஆகாமல் மீண்டும் புலம்பியது. ‘வெண்பொங்களில் பாயாசத்தில் முந்திரி போடாமல் எத்தனை நாள் சமைத்திருப்பேன்? இவன் பருப்பு மட்டுமே தின்பானாம்! அதான் நாக்கில்கூட கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு. ’
இப்போது வலது மூளை ஸ்ரீயிடம் தர்கத்தில் இறங்கியது ‘ஏய் என்னப்பா சொல்ற? இப்படி சாப்பிட்டால் தானே இடுப்பும்
மார்பும் சமமாக ஒரே அளவாக அவன் யுனிஃபார்ம் அணியும்போது இருக்கும்? உன்னால் அவன் இடுப்பையும் மார்பையும் வித்தியாசப்படுத்த முடியுமா? சொல்! ’ என்றது.
மூளையின் இரண்டு பாகமும் அதனதன் ஆராய்ச்சியை பட்டியலிட ஸ்ரீ அமைதியாக வாய்க்குள் கூழாங்கற்களை விழுங்கியவளாக உட்கார்ந்திருந்தாள்.
“ஹலோ ராஜன் ” என்ற குரலில் திரும்பிப் பார்த்தவள் முழு காவலர் உடுப்பில் விறைப்பாய் கம்பீரமாய் நின்ற ஒருவரைப் பார்த்தாள்.
அவர் அருகே ஒரு அழகான கம்பீரமான பெண்மணி நின்றிருந்தார். ஆண்மகன் மிடுக்காக இருந்தால் அது அவன் இணைக்கும் வந்துவிடுமோ? சரியான தொற்று! என்று நினைத்தவள் அந்த பெண்மணியின் நெற்றித் திலகத்தை இமைக்காமல் பார்த்தாள். கொஞ்சம் என்ன.. நிரையவே பொறாமை வந்தது அவளுக்கு.
யாருக்கு வேண்டும் இந்த குங்குமம்? என்று ‘சீச்சீ இந்த பழம் புளிக்கும் ’ என்று சொன்ன நரியைப்போல் வேறு பக்கம் திரும்பி பார்வையை மேய விட்டாள். ஆனால் அங்கும் ஒரு புது மணத்தம்பதி ஹங்கீஸ் பாக்கெட்டில் இருந்த குழந்தையைப் பார்த்து ஏதோ பேசிச் சிரிப்பதைப் பார்த்ததும் கல்லாப்பெட்டியை காவல் காத்த வழுக்கைத் தலை வயதானவரைப் பார்த்து பொழுதைப் போக்கினாள். அங்கேதான் எந்தப் பிரச்சனையும் அவளுக்கு எழவில்லை.
ராஜன் கூப்பிட்டவரின் குரலை திரும்பிப் பார்க்காமலே கண்டுபிடித்துவிட்டான் என்று அவன் முகச்சுளிப்பில் கண்டு கொண்டாள் ஸ்ரீ. திரும்பி அவரைப் பார்க்கும் முன் ஸ்ரீயைப் பார்த்து ஷ்! என்று வாயில் விரல் வைத்து எச்சரிக்கை செய்துவிட்டு சோம்பலாகத் திரும்பினான். திரும்புவதற்கு முன்பே அவன் முதுகில் டொம்மென்று தட்டினார் அந்த காக்கிச்சட்டைக்காரர்.
“ஹேய் ராஜன் என்னப்பா சூப்பர் மார்க்கெட் வந்திருக்க? ” என்று அக்கம் பக்கம் பார்த்தார்.. இல்லை தேடினார்.
ராஜன் விழிக்கவும் “இல்லை கையில டிராலி இருக்கு. டன்கணக்கா அதிலே சாமான் நிரைச்சிருக்க. ஆனா ஒண்ணு மிஸ் ஆகுதே? ”
“என்ன சார்? ”
“உன் மிஸஸ் மிஸ் ஆகுதேப்பா! ”
“ராம் சார்? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சார். ”
“என்னப்பா நீ இன்னும் ஒரு வருஷத்தில் இன்ஸ்பக்டர் ஆகப்போற. என்னைப் பார் ஏ.எஸ்.ஐ டிரைனிங் பீரியடிலேயே கல்யாணம் முடிச்சிட்டேன். இப்ப என் புள்ள டிரைனிங்கில் இருக்கான். நீ என்னடான்னா.. துப்பாக்கியைதான் இன்னும் கட்டிப்புடிக்கிற என்று சொல்ற? ”
ஸ்ரீ கமுக்கமாக சிரித்தது ராஜனுக்கு கேட்காமல் இருக்குமா? ஆனாலும் சிரித்துக்கொண்டே பேசவேண்டிய நிலையில் இருந்தான்.
“இல்லை சார். இந்த வருஷத்தில் நடந்திடும். வீட்டில் பார்த்திட்டு இருக்காங்க. குட் ஈவினிங் மேடம்.” ஏன்று சம்பிரதாயமாய் அவர் மனைவியிடம் கேட்டு வைத்தான்.
அவரும் பதிலுக்கு ‘குட் ஈவினிங் ’ சொன்னார். ஆனால் இருவர் உச்சரிப்பில் நிறைய வேறுபாடு இருந்தது. அதிகாரியின் மனைவி பேசும்போது இரண்டு உதடுகளும் பிரிந்ததா? இல்லையா? என்று அவளால் கண்டேபிடிக்க முடியவில்லை.
இஸ்திரிகாரன் இந்த அம்மா புடவையை நாலு தடைவை அயர்ன் செய்தானோ? என்று ஸ்ரீ சந்தேகித்தபோது.. அவர்களின் பார்வை தன் மேல் படாமல் இருக்க வேறு பக்கமாய் திரும்பிக்கொண்டாள். ஆனால் ராஜன் அவளைப் படுத்தும் பாட்டிற்கு ‘மாமா நான் இங்கிருக்கேன். காபிக்கு எந்த தூள் வாங்க? நரசூஸா? இல்லை சன்ரைஸா? சொல்லுங்க ராஸன் மாமா!’ என்று பக்கத்தில்போய் வம்பிழுக்க ஆசை ஆசையாகத்தான் இருந்தது. பிறகு வேப்பிலையை ஏன் நாமே பிடுங்கி அவன் கையில் கொடுக்கவேண்டும்? என்று அமைதியாக இருந்துவிட்டாள்.
“ராஜன் ஒரு நிமிஷம் என்னுடன் வா. அதை பில் போடுவதற்கு அரை மணி நேரம் ஆகும். பில் போடும் இடத்தில் எவ்வளவு கூட்டம் இருக்கு பார். கவுன்டரில் கொடுத்திட்டு வா உன்னிடம் கொஞ்சம் பேசணும். ” என்றார் உயர் அதிகாரி.
ஸ்ரீயை நினைத்து மிகவும் தயங்கியவனைப் பார்த்து ‘கமான் மேன் ’ என்றார் அவர்.
ஆகா.. கையில் காசு எடுத்திட்டு வரலையே.. காசு இருந்தால் இது தப்பிக்க அருமையான சான்ஸ் என்று ஸ்ரீ மனதில் சோகமாக சோர்ந்துபோக.. ராஜன் அவளையே பார்த்தவாறு கிளம்பினான். ராஜனும் உயர் அதிகாரியும் அவர் மனைவியும் கிளம்பியதைப் பார்த்தவாரே ஸ்ரீ பில் கவுன்டருக்குப் போனாள்.
“கவுன்டரில் எவ்வளவு பில் ஆனது சார் ” என்று கேட்டாள். “அவர் ஐயாயிரத்தி மூன்னூறு ஆகுதம்மா. ” என்றார்.
“சார் அவர் இப்ப வந்திடுவார். நீங்க பில் போடுங்க. நான் அவர் வரும் வரை இங்கதான் இருப்பேன். ” என்றாள். ராஜன் எதிலே போனான் என்று பார்க்க வெளியே வந்தாள். ராஜன் ஒரு போலிஸ் ஜீப்பில் போவது அவள் கண்ணில் பட்டது. நம்மை அந்த மேல் அதிகாரி பார்த்தாரே என்று நினைத்துக்கொண்டே ஸ்ரீ அந்தக் கண்ணாடிக் கதவை மீண்டும் பூட்டப்போக வாசலில் துரை அவளது ஒவ்வொறு அசைவையும் இமை தட்டாமல் பார்ப்பது தெரிந்தது. கடமை தவறாத ஒற்றன்! தகவல் தந்ததும் மன்னர் பொற்காசுகளை வாரி இறைக்கப் போகிறார் பார்! வாலட்டில் ஐநூறு ரூபாய்க்கு மேல் வைத்திருக்காத அந்த மாமன்னர்! என்று மனதில் சொல்லிக்கொண்டபோதே பாவம் அவர் சாப்பிட்டாரோ இல்லையோ என்று நினைத்து ஒருமில்க் பிக்கீஸ் பாக்கெட்டைப் பிரித்துக் கொடுத்தாள். துரை அதைத் தொட்டுகூட பார்க்கவில்லை. நாகரிகமாக மறுத்துவிட்டான்.
Comments are closed here.