Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 26
1192
0
உள்ளே போன ஸ்ரீ அங்கே அந்த சூப்பர் மார்க்கெட்டின் டைல்ஸை வெறித்து பார்த்திருக்க.. அங்கே ராஜனிடம் மேல் அதிகாரி “ஏன் ராஜன் சூப்பர் மார்க்கெட்டில் துரையை ஸ்ரீக்கு காவல் வச்சிருக்கியே.. கௌன்சிலர் ஆளுங்களையெல்லாம் எவ்வளவு கம்மியாக எடைபோட்டிருக்க? ” என்று கேட்டபோது ராஜனுக்கு தண்ணீர் குடிக்காமலேயே புரையேறியது. சங்கடமாக உணர்ந்தாலும் கடமைகளைப் பற்றி பேச நினைத்தபோது தயக்கமெல்லாம் ஓடிவிட்டது.
“சார் ஒரு வாக்கு தந்திருக்கேன். முன்னே பின்னே தெரியாத பொண்ணுக்காக வாக்கு தந்திருக்கேன். பவித்ரா பொண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆனபோது நான் தான் ஆம்புலன்ஸில் கூட்டிட்டு போனேன். என் கையை பிடிச்சிட்டு விடவேயில்லை. ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனப்பதான் அந்த பொண்ணு ஸ்ரீக்கு கௌன்சிலர் ஆளுங்கிட்டயிருந்து பாதுகாப்பு கொடுங்க என்று என்னிடம் ப்ராமிஸ் வாங்குச்சு. ஒரு மணிநேரத்தில் இறந்தே போயிடுச்சு. கேங் ரேப் சார். ஆனால் அது ரேப் மட்டும் இல்லை. ஏதோ பண விவகாரம் என்று விசாரிச்சப்ப தெரிந்தது. பவித்ரா பாடியைப் பார்க்க வந்த எல்லோரும் ஸ்ரீ யிடம் பாடியை ஒப்படைக்கச் சொன்னாங்க. அப்போது போஸ்ட்மார்டம் அது இதுன்னு பிசியாகிட்டதால் ஸ்ரீயைப் பார்க்க முடியல. பாடியை கொடுத்தபிறகும் பார்க்க முடியல. அன்றைக்கு நைட்டே ஸ்ரீ அம்மாவும் இறந்த நியுஸ் வந்திச்சு. மறுநாள் நான் போய் ஏதாவது செய்யலாம் என்று போவதற்குள் அந்தப் பொண்ணு கௌன்சிலர் மீது கல் எறிந்து கேஸை சிக்கலாக்கிடுச்சு. கேஸை விசாரிக்க ஆரம்பிச்சப்பதான் ஸ்ரீயைப் பார்க்க முடிந்தது. சாகிற நேரத்தில் என்கிட்ட வாங்கிய வாக்கிற்காகத்தான் ஸ்ரீக்கு அடைக்கலம் கொடுத்திருக்கேன். எனக்கும் கௌன்சிலர் ஆளுங்களை சமாளிக்கத்தான் முடியல. தினம் பத்து ஃபோன் வந்திடுது அவனிடம் இருந்து. ஸ்ரீயை கௌன்சிலர் ஆளுங்க யாரும் பார்த்ததில்லை என்பதால் நான் தைரியமா சூப்பர் மார்க்கெடுக்கு கூட்டிட்டு வந்தேன். இங்கே எந்த ரிஸ்கும் இல்லை சார். யாரும் பார்க்கமாட்டாங்க! நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க? ”
“ராஜன் என் ஷோல்டர் பாட்ஜில் எத்தனை ஸ்டார் இருக்குன்னு பார்த்தியா? பார்க்கலையா? அது சரி. அவளை அக்கூஸ்ட் என்று நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். கேஸை முடிக்கும் வரை அவளை கவனமாக விசாரிங்க. குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது மிகப் பெரிய குற்றம் ராஜன். ”
“சார் முதலில் அவள் மேல் F.I.R போடலை. அப்புறம் எப்படி அவள் அக்கூயூஸ்ட் ஆக முடியும்? ”
“டோன்ட் பி ஸ்டுபிட் ராஜன். F.I.R போடு. கேஸை ஸ்டராங் பண்ணு. மீடியாகாரன் நீ அவளை கூட்டிட்டு சுத்துறதை பார்த்தால் உன் வேலைதான் முதலில் பறிபோகும். தெரியுமா? கௌன்சிலர் பார்த்தால்? என்னை டார்ச்சர் பண்ணுவான். டோன்ட் பி எ சென்டிமென்டல் ஃபூல்! இன்ஸ்பக்டர் ஆகப்போகும் நேரத்தில் கவனமாக இரு. காட்டுக்கு ராஜா ஆகப்போற கொஞ்சம் வேட்டியாடி பழகிக்கோ. ”
“அதான் சார் பணத்தை எடுத்தவனை பவித்ராவை கொன்னவனை எல்லாம் வேட்டையாடிட்டு இருக்கேன். ரேப் பண்ணவன்னில் நாலு பேரை என்கௌன்டரில் போடப்போறோம். திருமங்கலம் இன்ஸ்பக்டர் வேணு அப்புறம் அந்த திலிப் அதான் கௌன்சிலர் மச்சினனும் எனக்கு ஃபுல் சப்போர்ட். கௌன்சிலரிடம் பணத்தை விசிறி எரிந்துவிட்டு உங்களிடம் இன்ஃபார்ம் பண்றேன். ”
அமைதியாக யோசித்துவிட்டு அவர் சொன்னார் “ராஜன் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ! ”
“அதான் வீட்டில் பார்த்திட்டுயிருக்காங்களே. வேகமாக முடிச்சிடுவேன் சார். ”
“அதான் உனக்கும் நல்லது. உன் வேலைக்கும் நல்லது. ”
“சார் நீங்க ஏதோ பொடி வச்சி பேசுறீங்க. ”
“இல்லையே. நேராகவேதான் பேசுறேன். நீதான் அதை பொடின்னு நினைக்கிற. ம்… வா என்கூட. சாப்பிட்டபிறகு போகலாம். ”
‘வரலைன்னு சொன்னா ஸ்ரீயுடன் சாப்பிடணுமா என்று கேட்பார்.’ என்று நினைத்தவன் சட்டென்று சரி என்று சொன்னதும்
“ஸ்ரீ கோபிச்சுக்க மாட்டாளா? உன்னை எதிர்பார்த்திட்டுயிருப்பால்ல? கடையில் தனியே விட்டுட்டு வந்திட்டியே. எப்படி இன்னைக்கு நைட் சமாளிக்கப்போறியோ” என்று அவர் சொன்னபோது
‘நைட்டாம் நைட்டு. பகலையே சமாளிக்க முடியல. எப்ப பாரு ஓடிப்பிடிச்சி விளையாடிட்டுயிருக்கோம்!’ என்று நினைத்தவன் மேலும் பேசாமல் முதலில் மனதில் நினைத்ததையே சொல்லியிருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டான் ராஜன்.
ஆனால் அப்போதுதான் அவனது உடல் அவனிடம் ‘இரவிலும் அவளிடம் ஓடிப்பிடித்து விளையாடிப் பார் ராஜன் ’ என்று கெஞ்சவும் உயர் அதிகாரி முன்னே அவனுக்கு மிகவும் பிடித்த சிக்கன் சாப்பிடும்போதுகூட முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான்.
ஆனால் ஒரு நாள் அவளுக்காக பகலும் இரவும் ஓடி ஓடி களைத்து அவள் கிடைக்காமல் அழுவான் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அது நிஜமாகவே நடந்தபோது ராஜன் மனிதர்கள் மனிதர்கள் அல்லாத தெய்வங்கள் என அத்துணை பேரையும் வெறுத்தான்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.. மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..
Comments are closed here.