சமர்ப்பணம்
746
0
காலையின் பனியாய்……..!
காதலின் மொழியாய்…….!
இதழ் அவிழா கவியாய்……..!
புதிா் அறியா விடையாய்……..!
மழை தேடும் குடையாய்……..!
மனம் தேடும் இசையாய்……..!
உன் தெளிந்த பாா்வையில் தொிந்தே குழப்பினாய்…….!
ஈரைந்து மாதம் உன்னை கருவில் சுமந்தவள் உணராத வலியை……..!
ஓா் ஐந்து வருடம் உன்னை என் இதயத்தில் சுமக்கையில் உணர்கிறேன்……..!
நீயோ, சுமக்க,சுமக்க, சுகமானவன் என்பதை………..!
விதையென, நீ இருந்தால் விருட்சகமாய் விாிந்து இருப்பேன்………!
வெடுக்கென, நீ பிாிந்தால் மறுகணமே உயிா் துறப்பேன்………!
பிரம்மனின் படைப்பில், நீயோ அற்புதம்……..!
ஏழேழு பிறவிக்கும், என் காதல் உனக்கு சமா்ப்பணம்……..!
-மீனாக்ஷி சிவகுமார்
Comments are closed here.