Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal 28

டேவிட் அவனிடம் இன்னும் பல விபரங்கள் தந்தான். “சரிடா நான் கிளம்புறேன். சிறுவர்கள் மறுவாழ்வு மையம் பேகணும். அப்புறம் மைனர் ஜெயில் போகணும். இந்தா புடி என் கல்யாணப் பத்திரிக்கை. சுர்ச்சில் வைத்து கல்யாணம். நீ அவசியம் வரணும். ” என்றான்.
“சிறுவர் மறுவாழ்வா? டாக்டருக்கு அங்க என்ன வேலை? ”
“மைனர் ஜெயிளில் ஒரு பையன் சூசைட் அட்டெம்ட் பண்ணியிருக்கான். அதை நான் தான் நேரில் போய் டிரீட் பண்ணேன். பாவம் ரொம்ப சின்ன பையன். ஏதோ தகராறில் அவனது அப்பாவையே கொன்னுட்டான். பதிமூன்று வயசுதான் ஆகுது. பையனை பிழைக்க வைக்க முடியல. ஆனால் அவனைப் போல பலர் இருப்பதை பார்த்தேன். ஏதோ என்னால் முடிந்தது செய்கிறேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை போய் கௌன்சிலிங் கொடுப்பேன். ”
“நானும் அங்க போவேன் டேவிட். அந்த வார்டன் நல்ல டைப். விடுதலையாகப்போறவங்களுக்கு ஏதாவது பெட்ரோல் பல்க் இல்லை மல்லிகை கடையில் என் சிபாரிசில் வேலைக்கு சேர்ப்பேன். ஆனாலும் ஏதாவது தப்பாகிட்டேயிருக்கு. பசங்க மூன்று மாசத்திற்கு மேல் தங்க மாட்டிக்கிறான். ஓடி வந்திடுறாங்க. என்னதான் செய்யணும் என்றே தெரியல.”
“ராஜன் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன். கரக்டா பதில் சொல்லணும். நேர்மையா பதில் சொல்லணும். ”
“ம் கேளுடா. ” என்று ஊக்குவித்தான்.
“ராஜன் உனக்கு எஸ்.ஐ போஸ்ட் கிடைக்கலைன்னு வச்சிக்கோ. நீ என்ன செய்வ? ”
“விடமாட்டேன் ஃபைட் பண்ணுவேன். அந்த போஸ்ட் யாருக்கு கிடைக்கப் போகுதோ அவரை விட நான் ஒரு பங்கு மேல வேலை பார்ப்பேன். ”
“கரெக்ட். எல்லோரும் அப்படித்தான். நம்முடன் போட்டி போடுபவரைவிட ஒரு பங்கு மேல வேலை பார்ப்போம். ஓட்டப் பந்தயத்தில் கடைசி நான்கு நிமிடம் உற்றுப் பார்த்தால் உனக்கு புரியும். இந்த போட்டியெல்லாம் சொசைட்டியோடு ஒத்து வாழும் நமக்குதான் ராஜன். அந்த பசங்க அதை எப்போவோ இழந்தட்டாங்க. போட்டிக்கு ஒருவன் இருந்தால்தானே போட்டி போடமுடியும். இந்த பசங்களுக்கு போட்டியும் கிடையாது. சக
போட்டியாளனும் கிடையாது. அதனால் ஓட்டப் பந்தயத்தில் கடைசி நான்கு நிமிடம் ஓடுபவனுக்கு கிடைக்குமே அந்த ‘புஷ்’ இவனுக்கு வாழ்க்கையில் கிடைக்க பல வருஷம் ஆகும். நீ வேலை வாங்கித்தந்தீல?” சிரித்து விட்டு டேவிட் தொடர்ந்தான்
“பெட்ரோல் பல்க்கில்? மல்லிகை கடையில்.. இந்த இடத்தில் அவன் தன்னை பொருத்திக் கொள்ள பல நாள் ஆகும். அதிக மன உறுதி தேவைப்படும். பொறுமை தேவைப்படும். இதில் எதுவுமே இல்லாதவனை நீ எப்படி வளைக்க முடியும்? தாகத்திற்கு ஒரு மடக்கு தண்ணீரும் குடிக்கலாம் ஒரு செம்பு தண்ணீரும் குடிக்கலாம். அது அவனவன் மன கட்டுப்பாடு பொறுத்தது கிடையாது. அவனவன் தேவையைப் பொறுத்தது. அந்த பசங்க செம்பு தண்ணீர் கேட்கிறவங்க. சீக்கிரம் பிரச்சனையை விட்டு வெளியே வரணும் என்று நினைக்கிறவங்க. கீழே விழுந்ததை யாரும் பார்க்கும் முன் எழுந்திரிக்கணும் என்று நினைக்கிறவங்க. அவுங்களுக்கு நீ ஒரு மடக்கு தண்ணீர் கொடுத்தா சரி வருமா? சொல்லு? ஒரு ஷேர் ஆட்டோ வாங்கிக் கொடு. லோன் போட்டு உன்னால் வாங்க முடியாதா? வாங்கி அவன் கையில் சாவியைக் கொடு. அந்த வேலையை விட்டு ஓடமாட்டான். அந்தப் பையன் நல்ல உழைப்பாளியா? ஒரு ஹோட்டல் வச்சிக்கொடு. முதல் ஐந்து மாதத்திற்கு சப்போர்ட் பண்ணு. ஆறாவது மாசம் உன் பர்சில் அவன் ஐயாயிரம் திணிப்பான். நடக்குதா இல்லையா என்று பார். நான் என்ன சொல்ல வர்றேன்னா.. அவனுக்குத் தேவை ஒரு பாதை. திரும்பிப் பார்க்கக் கூட தோன்றக்கூடாத ஒரு பாதை. பாதையில் கல் மேடு பள்ளம் இல்லைன்னா அவன் ஏன் திரும்பி பார்க்கப்போறான்? உன்கிட்ட ஏன் திரும்ப ஓடி வரப்போறான்? நான் சொன்னது புரியுதா? ”
டேவிட் பேசுவதை அமைதியாக கேட்டவன் ஒன்றும் பேசாமல் அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினான். டேவிட்டும் ராஜனின் கைக்குலுக்களில் ராஜன் மிகுந்த திருப்தியடைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து அவன் கைவிரல்களை அழுத்தமாக பிடித்துக்கொண்டான்.
ஸ்ரீ சுவரில் தலைசாய்த்து நின்றுகொண்டே தன்னிடம் ஒரு கேள்வி கேட்டாள் “ஸ்ரீ உனக்கு ஒரு மடக்கு தண்ணீர் வேண்டுமா? இல்லை ஒரு செம்பு தண்ணீர் வேண்டுமா? ”
‘ஒரு செம்பு தண்ணீர் தான் வேண்டும்.’ என்று அடம்பிடித்தது அவள் மனது.

டேவிட் கிளம்பிச் சென்ற பிறகு
டேவிட் கிளம்பிச் சென்ற பிறகு “ஸ்ரீயிடம் தண்ணீர் பானையில் இல்லை ஸ்ரீ. நீ கீழே ஏட்டையாவிடம் மினரல் வாட்டர்காரன் ஏன் வரவில்லை என்று கேட்டுவிட்டு வா. ” என்று சொன்னான்.
ஸ்ரீ உடனே ஏட்டையாவின் வீட்டிற்குச் சென்று கேட்டுவிட்டு வந்தாள்.
“ராஜன் இன்னைக்கு அவன் வரமாட்டானாம். ஏட்டையா ஒரு குடம் தண்ணீர் தர்றேன் என்று சொன்னார். நான் போய் எடுத்திட்டுவரவா?”
“ம். ஒரு குடம் போதும். நாளைக்கு நான் வேற ஆள் பார்த்து மினரல் வாட்டர் வாங்கிடுவேன். ”
ஸ்ரீ ஏட்டையாவின் வீட்டிற்கு ஒரு குடம் எடுத்துச் சென்றாள். ஏட்டையாவின் மனைவி ஸ்ரீயைப் பார்த்ததும், “வா மா ஸ்ரீ. குடத்தை எடுத்திட்டு வந்திட்டியா? சரி சரி. என் கையில் மாவு இருக்கும்மா. சார் நைட்டுக்கு சப்பாத்தி கேட்டிருந்தார். அந்த டிரம்மில் தண்ணி இருக்கு. மொண்டுக்குவியா? இல்லை நான் வரணுமா? ”
“நானே.. ” என்று ஸ்ரீ சொல்லி முடிக்கும் முன் ஸ்ரீயின் முன்னே ஐ.டி பர்சனாலிட்டி வந்து நின்றான்.
“அத்தை நான் நிரப்பி தர்றேன்.” என்றவன் ஸ்ரீயின் கையில் இருந்த குடத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்தான். பின்னாளில் இவனால் நமக்கு காரியம் ஆகணுமே என்ற ஒரே ஒரு காரணத்தால் சிரித்துக்கொண்டே குடத்தை அவனிடமிருந்து வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்.
ஒரு எட்டு எடுத்து வைத்திருக்க மாட்டாள் ஏட்டையாவின் மனைவி வாயில் கையை வைத்துப் வாயைப்
பொத்திக்கொண்டே சொன்னார் “அடி ஆத்தி. என்ன அழகா இடுப்பில் குடத்தை வைத்திருக்க? ஸ்நேகா ஸ்நேகா இங்க வா.”
ஸ்நேகா, அம்மா கூப்பிட்ட குரல் கேட்டு ஓடி வரவும் “ஸ்நேகா இங்க பாரு. ஸ்ரீ அக்கா எப்படி குடத்தை தூக்கி இடுப்பில் வச்சிருக்கு. ” என்றார்.
“இதிலே என்ன கஷ்டம்? நான் கூட தூக்குவேன்.” என்று ஸ்நேகா சொன்னபோது..
“அதுக்கு இடுப்புன்னு ஒண்ணு இருக்கணும். டிரம்போல இருந்தால் குடம் எப்படி இடுப்பில் நிற்கும் ஸ்நேகா? பாவம் அதுவும் நிற்க முடியாமல் நீயும் அதைத் தூக்கிக்கிட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படணுமா? உனக்காவது வாய் இருக்கு. முடியலப்பா சாமி என்று சொல்லிடுவ. பாவம் அதுக்கு வாயும் இல்லை. அது என்ன செய்யும் நீயே சொல்லு!” என்று கேட்டான் அவள் மாமா பையன்.
“அம்மா அப்புறம் நானும் கிண்டல் பண்ணுவேன்.. ” என்றவள் அவன் அதிகமாகச் சிரிக்கவும்இ “ஓக்ழே பிரான்ட் ஸ்பெக்ஸ் போட்டாலும் சோடாபுட்டி சோடாபுட்டி தான். எங்க நான் டிவி சேனல் மாத்துறேன் நீங்க என்ன சேனல் என்று உங்க கண்ணாடியை கழற்றிட்டு சொல்லுங்க பார்ப்போம்.” என்று உண்மை விளம்பியபோதே ஸ்ரீ அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள். அமைதியாக மெதுவாக அவள் ராஜனின் வீட்டிற்கு படியேறிச் சென்றாள். கதவு முழுதாக திறந்திருக்க வில்லை.
“ராஜன்” என்று அவள் கூப்பிட்டதும் ராஜன் வந்து கதவை அகலமாகத்திறந்து வைத்தான். வாசலில் சிறு படிக்கட்டு இருக்கும். அவளது சேலை தடுக்கியது. அதனால் ஸ்ரீ தனது சேலையை தூக்கிச் சொருகி தண்ணீர் குடத்தை உள்ளே தூக்கிக்கொண்டு வந்தாள். குடத்தை வைத்துவிட்டு திரும்பிய போதுதான் அவள் ஒரு விஷயத்தை கவனித்தாள். சேலையை சரி செய்தவள் தரையில் அன்றைய நியுஸ்பேப்பர் இருந்ததை அதன் பிறகு பார்த்தாள். “இது தேவையா? ” என்று குனிந்த தலை நிமிராமலே அதனை கையில் எடுத்துக்கொண்டு கேட்டாள் ஸ்ரீ. ஆனால் வெள்ளாவிகொண்டு வெளுத்தது போல் இருந்த கால்களைப் பார்த்தக்கொண்டிருந்த ராஜன் தனது பார்வையை வேறு பக்கமாய் திருப்பி “இல்லை” என்று பதில் தந்தான்.
அவன் மூளைக்குள் ஒளிந்திருந்த ஆதாமும் ஏவாளும் அவரவர் வேலையைச் செய்தார்கள். கொலுசிலிருந்து ஐந்து இன்ச் கால் பிரதேசம் அப்படி என்ன சொல்லிக்காட்டிட முடியும்? ஆனால் முடியும் என்றது ராஜன் உடலில் படர்ந்த சிலிர்ப்பு.
தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு வந்தவள் அப்படியே தனது அறைக்குள் நுழையாமல் டேபிளில் இருந்த நியூஸ்பேப்பரை பழைய நியூஸ்பேப்பர் கட்டுடன் சேர்த்து அடுக்கி வைத்தாள். வைத்துவிட்டு உள்ளே செல்லப்போனவளை ராஜன் அழைத்து தனது செல்ஃபோனுக்கு சார்ஜ் போடச் சொன்னான். ஸ்ரீயும் உடனே சார்ஜ் போட்டாள். ஆனால் அவள் நியுஸ்பேப்பரை அடுக்கும்போதும் சார்ஜ் போடும்போதும் அவள் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது ராஜனுக்கு.
‘தன் பார்வையை கண்டிருப்பாளோ? ச்ச ச்ச.. அதெல்லாம் இருக்காது. நாம்தான் உடனே கண்களைத் திருப்பிக்கொண்டோமே.’ என்று மனம் சமாதான முயற்சி செய்தாலும் மூளை ரன் அவுட் கண்டுபிடிக்கும் மூன்றாவது அம்பயர் போல மெல்ல மெல்ல அந்த நிமிடங்களை மனதில் ஓடவிட்டது.
ராஜன் அவள் சேலையை தூக்கிச் சொருகும்போது தற்செயலாக அவள் கால்களைப் பார்க்கிறான். சலங்கைக் கொலுசு அழகாகயிருக்கே என்றுதான் முதலில் அவன் மூளையில் பதிந்தது. அதன் பிறகுதான் அவள் கால்களும் அழகே என்று சான்றிதழ் தந்தது.
இவை அனைத்தையும் மூளை மிகவும் மெதுவாக தொலைக்காட்சித்திரையில் ஓடுவதுபோல ஓட்டிக்காண்பித்தபோது அவன் அமைதியாக அதை கவனித்தான்..
இதோ அவன் அவள் கால்களைப் பார்க்கிறான்.. அவள் திரும்புகிறாள்.. அவன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்.. அவள் திரும்பி ராஜன் முகத்தைப் பார்க்கப் போகிறாள்.. இதோ இரண்டு நொடியில் பார்த்துவிடுவாள். இதோ இன்னும் ஒரு நொடியில்.. என்று மணித்துளிகள் சுருங்கியபோத ராஜன் பதட்டமடைந்தான். இறுதியில் இருவரும் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அவன் முன்னே வந்தது. ராஜன் அவள் கொலுசையும் ஐந்து இன்ச் சமாச்சாரத்தையும் அவன் பார்த்தபோது அவள் ராஜனின் கண்களை முறைத்து விழித்தாள். அடுத்த நொடி அவள் சட்டென்று திரும்பி தூக்கிச் சொருகிய சேலையை சரி செய்தாள்.
மூளை தனது மறு ஒளிபரப்பை நிறுத்தியது. ராஜன் ‘அப்படின்னா?’ என்று அதனிடம் கேட்டபோது ‘நீ ரன் அவுட்டா மடையா! ’ என்றது அது.
ராஜனுக்கு அவளிடம் பிடிபட்ட நோவைவிட அவள் எப்படி முறைக்கலாம்? என்ற கோபம்தான் தலைக்கேறியது. பெரிய பத்தினிதெய்வம் என்னை முறைக்கிறா! சேலையை தூக்கிச் சொருகாமல் இருந்திருக்கணும். வாடி வா. நீ என்னிடம் மாட்டாமலா போவ? என்று சில்லரைத்தனமாய் மனதை சமாதானப் படுத்திக்கொண்டான். ஆனால் சில்லரைத்தனமா? அவள் அவனிடம் மாட்டும்போது கோடி கோடியாய் அவனுக்கு சந்தோஷப் பொற்காசுகளைத் தரப்போகும் அவனது செய்கைகளுக்கு சில்லரைத்தனம் என்பதா?
அவள் அதன்பிறகு சகஜமாகத்தான் பேசினாள். ஆனால் குரலில் கண்டிப்பு இருந்ததோ? எப்போதும் ஏழு அடியில் நின்று பேசியவள் எட்டடியில் நின்று பேசுகிறாளோ? என்று ஆராய்ச்சியில் இறங்கியதால் அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தான். அவள் பார்க்காமல் இருந்திருந்தால் இந்த சங்கடமெல்லாம் இருந்திருக்காதுல்ல? ச்ச முன்னே பின்னே பொண்ணுங்க கால் பார்த்திருந்தா இவ்வளவு அல்பமாக நடந்திருக்க மாட்டோமோ? என்று தன்னிடம் கேட்டுக் கொண்டான். அதுதான் காரணம் என்று முடிவும் செய்து தன் நண்பனிடம் கைபேசியில் பேசினான், “ஏய் ராகேஷ் இன்னைக்கு நீ ஃப்ரியா? ”
“ஆமாம் ஏன் கேட்குற? ”
“இல்லை ஒருவழியாக உன்கூட அங்க போகலாம் என்று முடிவு செய்திருக்கேன். ”
“என்னடா சொல்ற? நிஜமாகவா? ”
“ஆமா! எத்தனை மணிக்கு வரணும்? ”
“மணி இப்ப ஐஞ்சு. ஒரு ஆறு மணிக்கு வா. ”
“சரி” என்று செல்போனை கட் செய்யப்போனவன் ராகேஷின் ராஜன் நில்லு வைச்சிடாதே என்ற கத்தலில் மீண்டும் காதினில் வைத்தான். “என்ன? என்றான் ”
“டேய் பர்ஸை வெயிட்டா வச்சிக்கோ! ”
“ம்! ஒரு நைட்டுக்கு அவளுக்கு எவ்வளவு? பர்ஸ் ரொம்ப வெயிட்டா இருக்கணுமா? ”
“நீ ரொம்ப சந்தோஷமா வீடு திரும்பணுமா? ” பதிலுக்கு சிரித்தான் ராஜன்.
“அப்படினா உன் பர்ஸ் ரொம்ப வெயிட்டா இருக்கணும்! ”
“போடா போ. ஆறு மணிக்கு பார்ப்போம். ”
ராஜன் பேசியதைக் கேட்டவள் அவன் எங்கே போகப் போகிறான் என்பதை யூகித்துவிட்டு தான் கூப்பிட்ட காரணத்தை அவனிடம் சொல்லாமல் தன் அறைக்குச் செல்லப்போனாள். ராஜன் அவளைத் குரல் கொடுத்து தடுத்தான்.
“ஸ்ரீ..”
“என்ன? ”
“நான் நைட் வர நேரமாகும். அதனால வெளிப்பக்கமா பூட்டிட்டே போறேன். நீ படுத்துக்கோ. சரியா?” அவன் போகின்ற வேலை தெரிந்ததால் ‘ம்’ என்று கடமைக்கு சொல்லி வைத்தாள்.
ஆனால் போனவன் ஒரு மணிநேரத்தில் திரும்பி வந்ததை கவனித்தவள் அவன் ரொம்ப ‘சூப்பர்’ மூடில் இருப்பதை அவன் விசிறி எறிந்த செருப்பைக்கொண்டு கண்டுபிடித்தவள் அமைதியாக கட்டிலில் படுத்தே கிடந்தாள். அடுக்களைக்குள் பாத்திரங்கள் அலறின. ஸ்ரீ எழவில்லை. அரை மணி நேரத்தில் அமைதியானது. தூங்கிவிட்டான் என்றது அந்த அமைதி.

 




Comments are closed here.

You cannot copy content of this page