Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 30
1238
0
“சும்மா சொன்னேன் ஸ்ரீ. மசூத் நாளை வந்திடுவான்.” என்று கூறும் போதே அவன் பேச்சை அவனது கைபேசி நிறுத்தியது. “மசூத்தான் கூப்பிடுறான்” என்றவாரே ராஜன் அலைபேசியை இயக்கினான். “ம்! ” சொல்லு மசூத்.
“ராஜன் சார். நான் ஸ்ரீயிடம் கொஞ்சம் பேசணும். குடுக்கிறீங்களா?”
“ம்.. பேசு. ” என்றவன் ஸ்ரீயிடம் கைபேசியை நீட்டினான். ஸ்ரீ கைபேசியை வாங்கி “ஹலோ” என்றாள்.
எதிர்முனையில் மசூத் பேசினான் “ஸ்ரீ எனக்கு இங்க லீவ் போட முடியாது. போட்டால் வேலை போயிடும். இன்ஸ்பெக்ஷன் நடக்குது. நீ தனுவுக்கு கால் செய்து அவளை உன்னை கூட்டிட்டு வரச் சொல்றியா? அவள் நம்பர் கொடு. நான் அவளிடம் பேசி வரவைக்கிறேன். ”
“தனுவா? பிரச்சனை வராது? கௌன்சிலர் ஆளுங்க தனுவைப் பார்த்திருக்கானுங்க. உனக்கும் இது தெரியும்ல்ல?
“அவ ரொம்ப பயப்படுவா மசூத். நிச்சயம் ஒத்துக்க மாட்டா. ”
“தெரியும் ஸ்ரீ. ஆனால் வேற வழியில்லை. ராஜன் சார் மனசு மாறிடப்போறார். நீ அந்த ஊரைவிட்டு வெளியே வந்திட்டால் பிரச்சனை இல்லை. அவருக்கு தனு வந்தால்தான் நம்பிக்கை வரும். நீ எங்க போறன்னு தெரியாமல் ராஜன் உன்னை அனுப்ப மாட்டான். ”
ஸ்ரீ எவ்வளவோ வாதிட்டபோதும் மசூத் கேட்கவில்லை. தனுவை அனுப்புவதில் பிடிவாதமாக இருந்தான். அதனால் ஸ்ரீயும் தனுவின் கைபேசி எண்ணைத் தந்தாள் அவனிடம். தனு முதலில் சம்மதிக்கவேயில்லை. மசூத்தான் அவளிடம் ஒரு மணி நேரம் பேசி சம்மதிக்க வைத்தான். ராஜன் இருக்கும்போது எதற்கும் பயப்படத்தேவையில்லை என்றான் தனுவிடம்.
அவளிடம் ராஜன் கைபேசி எண்ணைக் கொடுத்தான். இறுதியாக தனுவே வந்து ஸ்ரீயைக் கூட்டிட்டு போக ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜனுக்கு சந்தேகம் வராமல் இருக்க தனு திருச்சியில் இருந்து சென்னைக்குச் சென்று. பிறகு சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தாள். எல்லாம் ஸ்ரீ சொல்லிக் கொடுத்த பயணத் திட்டம்.
தனு
தனு மதுரை வந்திறங்கியதும் ராஜன் எண்ணிற்கு தொடர்புகொண்டாள். அவளது கைப்பேசி வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை என்றது. அமைதியாக சென்று வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்தாள். யாரோ அவள் பின்னால் பேசுவது கேட்டது.
“ஏய் நல்லா பாரு இது அந்தப் பொண்ணுதான? ”
“ஆமாடா அதுதான். ”
தனுவுக்கு உடலெல்லாம் வியர்த்தது. சூழ்நிலை சரியில்லை என்று உணர்ந்த நேரம் ராஜன் வந்துவிட்டான். தனுவை பார்த்திருக்கிறான் ராஜன். பவித்ராவின் பாடியை கொடுத்தபோது. அதனால் அவள் உட்கார்ந்த இடத்திற்கு நேரே வந்துவிட்டான். இருவரும் பார்க்கிங் ஏரியாவிற்கு போனார்கள். செல்லும் வழியில் யாரோ இருவர் தன்னைப் பற்றி பேசியதை ராஜனிடம் சொன்னாள். ராஜன் அவள் கூறியதைக் கேட்டு “எல்லோரும் உன்னையே பார்க்கிற மாதிரி உன்னைப் பற்றியே பேசுற மாதிரி நினைக்காதே தனு.” என்றான்.
ராஜன் பார்க்கிங் கவுன்டரில் டிக்கெட் கொடுத்துவிட்டு திரும்பி பைக் நிற்கும் இடத்திற்கு வந்தால், தனுவைக் காணவில்லை. கல்லாகிப்போய் நின்றவனிடம் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு அசைவும் இல்லை. தனது கைபேசி ஒளித்தது. அழைப்பை எடுத்தான்.
“ராஜன் சார். நீங்கதான ஸ்ரீ கேஸை நடத்துறது? தனுவை கண்டுபிடிச்சுக் கொடுத்ததுக்கு ரொம்ப தாங்ஸ் சார். இனிமேல் நாங்க பார்த்துக்குறோம். நீங்க ரெஸ்ட் எடுங்க. வச்சிடவா? ”
“ஏய்! பத்து நிமிஷத்தில் தனு என் ஸ்டேஷனில் இருக்கணும். இல்லைன்னா.. என்ன செய்வேன் என்றே தெரியாது. உன்னைக் கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி. கையில் சிக்கின.. சின்னாபின்னம் ஆகிடுவ.” என்றவன் அவனிடம் பேசிக்கொண்டே கையில் மற்றொரு கைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பு வந்த எண்ணை டைப் செய்தான். அழைத்தவனின் விபரம் அவனுக்கு உடனே வந்தது.
“டேய் உன் பெயர் திருப்பதிதான? உன் வீட்டில் இருப்பவங்க பெயரும் சொல்லவா? இல்லை உன் பொம்பளை பெயர் மட்டும் சொல்லவா? பத்து நிமிஷத்தில் அவள் என் ஸ்டேஷனில் இருக்கணும். நீ..”
ராஜன் பேசிக்கொண்ருந்தபோதே அவன் இடையில் மறித்து “சபாஷ்” என்றதும் அழைப்பு கட் ஆனது.
ராஜன் “ஹலோ ஹலோ” என்று கத்தியவாரே பைக்கில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தான். நேரே ஸ்டேஷனுக்குச் சென்றதும் கன்ட்ரோல் ரூமிற்குச் சென்று அந்த நம்பரை டிரேஸ் செய்தான். தனு கடத்தப்பட்ட விபரம் ஏட்டையா மூலம் ஸ்ரீக்கு தெரிந்தது. பைத்தியம் பிடிக்காத குறையாக பிதற்றினாள். ராஜன் எண்ணிற்கு அழைத்தாள்.
“தனு இன்னும் ஒரு மணி நேரத்தில் நம் வீட்டில் இருப்பா.” என்றதோடு அழைப்பைத் துண்டித்தான்.
தனு கடத்தப்பட்ட விபரம் ஏட்டையா மூலம் ஸ்ரீக்கு தெரிந்தது. பைத்தியம் பிடிக்காத குறையாக பிதற்றினாள். ராஜன் எண்ணிற்கு அழைத்தாள்.
“தனு இன்னும் ஒரு மணி நேரத்தில் நம் வீட்டில் இருப்பா.” என்றதோடு அழைப்பைத் துண்டித்தான்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கையில் கொரியரில் வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளை ஸ்ரீ எடுத்துக்கொண்டாள். ஐந்து மாத்திரையில் உயிர் போகாதே என்று எண்ணியவள் கையில் ஒரு கண்ணாடி கிளாஸையும் எடுத்தாள். கிளாஸை மிக்சியில் அறைத்தாள். ஒரு டப்பாவில் போட்டு அதனை மூடிவைத்தாள். பிறகு இரண்டையும் எடுத்து தனது துணிக்கடியில் ஒளித்து வைத்தாள். ஏற்பாடுகளை பலமாகச் செய்துவிட்டு கையில் கைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
மசூத்இ “தனு வந்திட்டாளா?” என்று ஏட்டையாவிடம் விசாரித்தபோது அவனும் விபரீதத்தை அறிந்து கொண்டான். ஸ்ரீயை கைபேசியில் அழைக்க மனதில் தைரியம் இல்லாமல் ஏட்டையாவிடம்இ “நான் கிளம்பி வர்றேன். நீங்க ஸ்ரீயை கவனிங்க. தனுவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. அவள் கண்டிப்பா தப்பான முடிவு எடுப்பா. ஆனால் தனுவுக்கும் ஒண்ணும் ஆகாது!ஸ்ரீயைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க சார். ” என்றான்.
ராஜன் டிபார்ட்மென்ட் தொடர்பு கொண்டு திருப்பதியைக் கண்டுபிடிக்க அவனால் ஆனதை வேகமாகச் செய்தான். டி.எஸ்.பி யிடம் விஷயத்தைச் சொன்னான். சக காவலர்கள் ராஜனின் நிலை உணர்ந்து உதவி செய்தனர். மூன்றே மணி நேரத்தில் தனு இருக்கும் இடத்திற்குச் சென்றது காவல்துறையைச் சேர்ந்த ஒரு தனிப்பிரிவு. திமு திமுவென்று காவலர்கள் நுழைந்ததும் அந்த அனுப்பானடி ஏரியாவே களேபரம் ஆனது. ஒரு பாலத்தின் கீழே இருந்த மாருதி ஆம்னிவேனில் இருந்து பாதி சுயநினைவில் தனுவை மீட்டபோது ராஜன் கைகள் நடுங்கியது.
அவளை தானே தூக்கி ஆம்புளன்சில் ஏற்றிவிட்டு மனதில் இருந்த கோபத்தை திரட்டிக் கொண்டு திருப்பதியையும் அவன் சகாக்களையும் ஜட்டியோடு போலிஸ் வேனில் ஏற்றினான். அந்த போலிஸ் வேன் சென்ற இடம் ராஜனுக்கு மட்டுமே தெரியும். இருபது நிமிடத்தில் அந்த வேன் காலியாக அவன் ஸ்டேஷனுக்கு வந்த பிறகே ராஜன் வீட்டிற்குச் சென்றான்.
தனு காப்பாற்றப்பட்டது பிறகு ஹாஸ்பிட்டல் சேர்க்கப்பட்டது போன்ற விபரங்கள் ஸ்ரீக்கு தெரிந்த பிறகுதான் அவள் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த ஏற்பாடுகளை அப்புறப்படுத்தினாள். கண்ணாடித்தூள்களை குப்பையில் போட்டாள். தூக்க மாத்திரைகளை பத்திரமாக தனது கட்டிலுக்கடியில் வைத்தாள்.
ராஜன் வீடு வந்தபோது இரவானது. ஸ்ரீ தூங்கி விட்டாள். தனுவை பார்க்க வேண்டும் என்று அவள் சொல்லவேயில்லை. மறுநாள் காலை அவள் எழ ராஜன் காத்திருந்தான். ஸ்ரீ எழுந்து குளித்துவிட்டு வந்தபிறகு அவளிடம் “ஸ்ரீ தனுவைப் போய் பார்ப்போமா? ” என்றான்.
“வேண்டாம் ராஜன். நான் போகலை. ”
“சரி வேண்டாம். மசூத் வந்ததும் இரண்டு பேரையும் அவனுடன் அனுப்பி வைக்கிறேன். என்ன சரியா? ”
“நான் இப்ப போகலை. நாலு நாள் போகட்டும். மசூத்தை திரும்ப வரச் சொல்றேன். அப்ப அவன்கூட போறேன். ”
“ஏன் ஸ்ரீ? எதற்கு வெட்டி அலைச்சல்? ”
“இல்லை. நான் இப்ப போகலை. ”
“அதான் ஏன்னு கேட்கிறேன்!”
“என்னால இப்ப தனுவை.. இந்த நிலையில் பார்க்க முடியாது! மூன்று மணி நேரத்தில் எத்தனை பேர்? ச்ச.. மசூத்துடன் அனுப்பு. மோகனா அக்காவும் வந்திடுவாங்க. அவன் தனுவை கண்ணுக்கு கண்ணா வச்சு பார்த்துப்பான். அவனைப் பத்தி எனக்குத் தெரியும்.”
ராஜன் ஏதோ பேச வந்தபோது ஸ்ரீ திடமாகச் சொன்னாள் “மசூத்தைப் பத்தி எனக்குதான் தெரியும்.” ஆனால் ராஜன் தனது கேள்வியை கேட்காமல் விடவில்லை.
“யார் சொன்னா உன்கிட்ட?”
“மசூத்தான் சொன்னான். நான் அவனுடன் முதலில் பேசலை. அப்புறம் மனசு கேட்கலை. பேசிட்டேன். நான் பேச ஆரம்பித்ததும் தேம்பித் தேம்பி அழுதுச்சு. அவன் அழுது நான் பார்த்தில்லை தெரியுமா? ரொம்ப நல்லவன். இப்ப தனுவுக்கு நடந்ததுக்கு அவன்தான் காரணம்ன்னு நினைக்கிறான். அதையே திரும்பத் திரும்ப நேத்து என்கிட்ட சொல்லி அழுதுச்சு! ராஜன் தனுகிட்ட காலையில் பேசுனியா?
“ம்!”
“எப்படியிருக்கா? ” இந்தக் கேள்வியை ராஜனும் எதிர்ப்பார்த்தான் போல. என்ன பதில் தரணும் என்பதை தெளிவாக மனதில் பதித்து வைத்திருந்ததால் அவள் கேட்டதுதான் தாமதம் பதில் அவனிடத்திலிருந்து வேகமாக வந்தது.
“ரொம்ப பயந்துபோய் இருக்கா.. என்கிட்ட யாரோ அவளைப்பற்றி பேசுறதா சொன்னா.. நான்தான் அங்கயிருந்து சீக்கிரமா கிளம்பும் அவசரத்தில் அதை சீரியஸா எடுத்துக்கல்ல. ” என்றபோது அவனால் ஸ்ரீயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.
“ஓ! எப்ப வீட்டிற்கு அனுப்புவாங்க?”
“ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பிடுவாங்க. ஆர்டர்லி லேடிபோலிஸ் துணையிருக்காங்க. மசூத்தும் வந்திடுவான். நான் அவனிடம் விபரம் சொல்லிட்டு வர்றேன். ” என்றவன் கைபேசியில் மசூத்திடம் பேசினான். பத்து நிமிடத்தில்
ஸ்ரீயிடம் வந்துஇ “சொல்லிட்டேன் ஸ்ரீ” என்றான்.
அரை மணிநேரமாக சுண்டியிழுத்த வயிறின் வலியை மறைத்து இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்தவள் அதற்கு மேலும் தாங்க முடியாமல் ஸ்ரீ அவனிடம் தனது வயிற்றை தொடடுக்காட்டி ராஜன் “ரொம்ப பசிக்குது” என்றாள்.
அப்போதுதான் ஸ்ரீ முன்தினம் முழுவதும் சாப்பிடாதது ராஜனுக்குத் தெரிந்தது. அவன் தான் முன்தினம் வீட்டிற்கே வரவில்லையேஇ அதனால் அவனுக்கு அவள் பட்டினியிருந்தது தெரியவில்லை. சட்டையைப் போட்டுக்கொண்டு இருவருக்கும் சாப்பாடு வாங்கி வந்தான்.
தனு மசூத்துடன் சென்னைக்குச் சென்ற பிறகு ஸ்ரீ தனுவுடன் பேசினாள்.
ஸ்ரீ கைபேசியை கையில் வைத்துக் கொண்டு எங்கோ வெறுமையாக எதையோ கண்களில் உயிரில்லாமல் பார்த்தபடி தனுவிடம் கேட்டாள், “தனு என்னால்தானே இதெல்லாம்? பவித்ராவை நான்தான மகாபலிபுரம் அனுப்பி வச்சேன்! அவளிடம் நான் பிடிவாதம் பிடிச்சிருக்கணும். அனுப்பமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன் தனு. மசூத்கிட்டயும் உன்னை அனுப்பக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கணும். அதையும் செய்யல்ல நான்.
என்னால ஏன் இவுங்களை எதிர்க்கமுடியல? என் பலவீனம் இது தனு! மத்தவங்களுக்கு விட்டுக்கொடுப்பது பலம் கிடையாது பலவீனம் தனு. ரொம்ப கோழையாகிட்டேன். அழுகைதான் எப்போ பார் வருது. ஆ ஊன்னா அழுகைதான் வருது. என்னால்தான் இந்த பிரச்சனை எல்லாம்.” என்று ஸ்ரீ தன் மீது பழி போட்டுக்கொண்டே போக தனு அவளை இடைமறித்து
“அக்கா நான் எப்ப திருச்சி போக? நீ குடுத்த மூனு சிம்ல்ல இரண்டு காலியாகிடுச்சு. திருச்சி போனால் இரண்டாவது சிம்மை யூஸ் பண்ண முடியாது. கௌன்சிலர் ஆளுங்க ராஜன் மூலமாக டிரேஸ் பண்ணிடுவாங்க. என்ன செய்யட்டும்?” என்று விபரம் கேட்டாள்.
“மூனாவது சிம் நான் திருச்சி வந்தபிறகுதான் எடுக்கணும். நான் திருச்சி வந்திட்டா அப்புறம் மதுரை கான்டாக்டே நமக்கு இருக்கக்கூடாது. மசூத்தும் பழனியில் ஒரு வேலை தேடுறதா சொன்னான். அவனிடம் எதுவும் உளராதே. எல்லாம் முடிவான பிறகு அவனிடம் சொல்லலாம். ராஜன் நம்மை கண்டுபிடிக்காத இடத்திற்கு நாம் ஷிஃப்ட் ஆகணும். சரி வச்சிடவா? ஏட்டையா வீட்டின் கெஸ்ட் ஃபோனில் இருந்து பேசுறேன்.
நான் திருச்சி வந்தபிறகு நீயும் மசூத்தும் திருச்சி வந்திடுங்க. கவனம். அப்புறம் பேசுறேன் ” என்று முடிக்கப் போனபோது “அக்கா நீ சீக்கிரம் வாக்கா” என்று தனு கூப்பிட “ம்” என்ற பதிலுடன் ஸ்ரீ அழைப்பை துண்டித்தாள். ஸ்நேகாவின் மாமா பையனின் செல்பேசியை அவன் கைகளில் ஒரு தாங்ஸுடன் கொடுத்துச் சென்றாள்.
தனு இயல்பாகப் பேசியதே மூன்று நாட்களாக நெஞ்சத்தில் ஏற்றி வைத்த பாரம் சற்று குறைந்ததுபோல் இருந்தது ஸ்ரீக்கு. அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களின் தேவையும் அவசரமும் புரிந்தது. இன்னும் இரண்டு நாட்களில் தன்னை ராஜனே கொண்டுபோய் சென்னையில் விடுமாறு கேட்டுக் கொண்டாள் ஸ்ரீ. ராஜனும் எந்த யோசனையும் இல்லாமல் சரி என்றபோது ஸ்ரீக்கு மனதில் மிச்சம் மீதி இருந்த பாரம் விலகியே போய்விட்டது.
தன்னையே நம்பியிருப்பவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாள் ஸ்ரீ. ஆனால் இன்னும் சொற்ப நாட்களில் “ராஜன் இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம். ” என்று அவள் மண்டையை பிய்த்துக்கொள்ளப் போகும் நாள் வரப்போவதை அறிவாளோ?
நாளை என்ன? என்பது தெரியாத வரையில் மனிதன் இன்று நன்கு தூங்கி விடுகிறான்.
தனு மசூத்துடன் சென்னையில் இருந்தாள். ஸ்ரீ ராஜனுடன் மதுரையில் இருந்தாள். தனுவுக்கு உதவியாக சென்ற மோகனா தனுவுடன் அங்கேயே தங்கிவிட்டாள். மசூத் இருவருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொடுத்தான். ராஜன் தலையிட்டதால் அவன் வேலை தப்பித்தது. தனுவைப்பார்க்க கிளம்பி வந்தவனுக்கு கைவிட்டுபோன வேலையை மறுபடியும் வாங்கிக் கொடுத்தான். ஆனாலும் மசூத் வீட்டு செலவுக்கு திண்டாடினான்.
நாட்கள் இப்படி நகர ஏட்டையா ஒரு ஜெராக்ஸ் மிஷினும் டிஜிடல் கலர் பிரின்ட் அவுட் எடுக்கும் உயர்ரக மிஷினும் வாங்கி குவார்டர்சில் நுழைவாயிலில் ஒரு சிறு கடை ஏற்பாடு செய்து அதில் வைத்தார். ஸ்ரீயின் அறை ஜன்னலின் வழியாகப் பார்த்தால்.. அந்த கடை முழுதுமே நன்றாகத் தெரியும். வாசலில் போர்ட் மாட்டி அதை தொழிலாகவே செய்தார். ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்தினார்.
படிப்பை பாதியில் விட்டவனாம் அந்தச் சிறுவன். முதல் இரண்டு நாட்களில் ஒன்று இரண்டு பேர் வந்து போனார்கள். ஆனால் பத்தே நாளில் அந்த சிறுவன் உட்கார்ந்து ஸ்ரீ பார்க்கவேயில்லை. ஒரு மாதத்தில் அந்த சிறுவன் தனது சொந்தங்களுடன் வந்து ஏட்டையாவின் கையில் காலில் விழுந்து அந்த கடையை லீஸ்ஸ{க்கு கேட்டான்.
ஒரு வருட லீஸ்ஸ{க்கு கேட்டான். அந்தச் சிறுவனின் பாட்டி அழுது கெஞ்சிக் கூத்தாடி அவர் காலில் விழவும் சரி என்று ஒத்துக்கொண்டார். அவருக்கும் லாபம் தான். ஆனால் லீஸ{க்குவிட்டால்இ குறைந்த லாபம். பரவாயில்லை சின்னப் பையன் பிழைத்துப்போகட்டும் என்று விட்டுவிட்டார். ஸ்ரீக்கு பகலில் அங்கே வேடிக்கை பார்ப்பதே நல்ல பொழுதுபோக்கானது.
ஒரு நாள் அவன் மதியம் சாப்பிடக்கூட இல்லாமல் நின்றுகொண்டே வேலை பார்த்தபோது ஸ்ரீ மனதில் ஒன்று தோன்றியது.
ஏட்டையாவிடம் எப்படிக் கேட்பது? தயங்கியவள் உடனே எங்கே சென்றால் தன் காரியம் நிறைவேறும் என்று தோன்றியதோ அங்கே சென்றாள். அவளுக்கு அப்போது சட்டென்று ஓக்ழே பிரான்ட் கண்ணாடிதான் ஞாபகத்தில் வந்தது.
ஏட்டையாவீட்டிற்குச் செல்வதில் அவளுக்கு எந்த தடையும் ராஜன் விதிக்கவில்லை.
வாசலில் ஒரு குதிரை காத்திருப்பதால் படியிறங்கி வாசல் போவதுதான் அவளுக்கு முடியாத காரியம். ஆனால் ஏட்டையா மனைவியிடம் மகளிடம் அவள் தயக்கமின்றி உறவாடலாம். அவளுக்கு அந்த சுதந்திரத்தை ராஜன் தந்திருந்தான்.
ஐ.டி அறிவாளியிடம் அந்த ஜெராக்ஸ் மிஷின்பற்றிய விபரங்களை சேகரித்துவிட்டு ராஜன் வீட்டிற்கு வந்தாள் ஸ்ரீ. வீட்டைப் பூட்டிவிட்டு போகும் பழக்கம் இல்லாததால் போகும் அவசரத்தில் கதவுகளை திறந்தே வைத்துவிட்டு போய்விட்டாள்.
ராஜன் அவள் திரும்பியபோது வீட்டில் இருந்தான். ராஜனைப் பார்த்ததும் ஸ்ரீ அவனிடம்
“தனுவிடம் காலையில்தான் பேசினேன். நல்லாதான் இருக்கா. நீ பேசுனியா? ”
“இல்லை ஸ்ரீ. வேலையில் மூழ்கிட்டேன். அதனால் பேச முடியல. ”
நமக்காக எவ்வளவோ செய்திருக்கான் அவனிடம் கூட இரண்டு வார்த்தை பேசினால் தப்பில்லை என்று தோன்றவே ஸ்ரீ அவனிடம் பேச்சுக்கொடுத்தாள். தனு விஷயத்தில் ராஜனுக்கு அவன் மீதே கோபம் என்பது அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால் தனு வந்து தன்னை அழைத்துச் செல்லப்போகும் யோசனைக்கு ராஜன் முழுமனதாக உடனே சரி என்று சொல்லவில்லை.
ஆனால் வேண்டாம் என்றும் மறுக்காததால் மசூத் தனுவை நச்சரித்து வரவும் வைத்தான். ஆனால் தனு ரயிலில் ஏறியவிஷயம் தெரிந்ததும் தனுவிடம் தொடர்புகொண்டு தானே அவளை அழைக்க ரயில் நிலையம் வருவதாக ஒரு அறிவிப்பும் தனியே தன் வீட்டிற்கு வரவேண்டாம் என்ற கட்டளையும் அவளிடம் தந்தான். அவன் கட்டளையிடாமல் இருந்தால்தான் ஆச்சரியம் இருந்திருக்கும் ஸ்ரீக்கு.
ராஜன் மிகவும் சோர்வாக தனது சாக்ஸை கழற்றியதைப் பார்த்தவள் அவனிடம் தான் தற்போது முடிவு செய்தபடி சின்னதாய் பேச்சுக் கொடுத்தாள் “இன்னைக்கு வேலை அதிகமா? ”
ராஜன் தனது சோர்வில் அவளின் இந்த விசாரிப்பை காதினில் வாங்கிக் கொள்ளவே நான்கு நொடிகள் ஆனது. கண்கள் எரிவதை உணர்ந்தவன் தலையும் வலிப்பதுபோலத் தோன்றவே தனது கைகள்கொண்டே தலையை மசாஜ் செய்துகொண்டே எழுந்தவன் ஸ்ரீயிடம் “இரு இரண்டு நிமிஷத்தில் வந்திடுறேன்.” என்றவாரே குளியலறை புகுந்தான்.
சொன்னதுபோல் காவல்காரன் இரண்டே நிமிடத்தில் வந்துவிட்டான் ஆனால் தனது அறையில் தண்ணீர் ஜக்கை வைக்கப்போனவள் திரும்பி வர நேரம் ஆனதும் ராஜனே அவளைத்தேடி அவள் அறைக்குள் நுழைந்தான். ராஜன் அந்த அறையை உபயோகித்ததே இல்லை.
ஆனால் ஒரு பெண் உபயோகப்படுத்துகிறாள் என்பதை குப்பை கூடையைச் சுற்றி குப்பைகள் இறைந்து கிடக்காதபோதே அனைவரும் கண்டுபிடித்துவிடுவார்கள். தனது சன்னல்களை கொசுவுக்கு பயந்து மூடிய ஸ்ரீ ராஜன் உள்ளே நுழைந்ததும் அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.
Comments are closed here.