Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 34

விடியல் வரை நேரம் இருந்தது. ஆனால் எதற்குமே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஏதேனும் பேசுவதற்கு காரணம் கற்பிக்க என்று எதற்குமே என்றால் எதற்குமே நேரம் போதவில்லை..

விடிந்து சில மணி நேரத்தில் ஸ்ரீ எழப்போனபோது ராஜன் அவளிடம் கேட்டான் “ஸ்ரீ என்னை பாரு. ” அவள் பார்க்கவேயில்லை. ஆனால் பதில் மட்டும் தந்தாள் .

“ம். ”

“எங்க போற? ”

“எங்கேயும் இல்லை. பல் மட்டும் தேய்ச்சிட்டு வர்றேன். ”

“ஸ்ரீ.. ஒண்ணு கேட்கணும் உன்கிட்ட.. ”

“எனக்கு நீ என்ன கேட்கப்போறன்னு தெரியும். ”

“நிஜமா? ”

“ம்.. நிஜமா.. ”

“கேளு பார்ப்போம். ”

“எப்ப நான் இந்த கருமத்தை செய்தேன்னுதானே? ”

“ஆமாம்.” என்று சொன்ன ராஜன் ஆச்சரியமாக அவளை பார்த்தபோது ஸ்ரீ எதையுமே யோசிக்காமல் தங்கு தடையில்லாமல் தொடர்ந்து பேசினாள் இ “பதினாலு வயசிருக்கும். வெறும் ஐநூறு ரூபாய்க்கு போனேன். கரன்ட் பில் கட்ட பணம் தேவைப்பட்டது. அதனால் போனேன். ”

“ஓ! ”

“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும். கோபிச்சுக்க மாட்டியே? ”

“ஹும் ஹும். கேளு.” என்று அவள் கழுத்தில் விரல் கொண்டு கோலம் போட்டுக்கொண்டே சொன்னான்,
“அன்னைக்கு பர்ஸையும் பேன்ட் பாக்கெட்டையும் வெயிட்டா வச்சிக்கிட்டு போனியே ஆனால் ஒரு மணி நேரத்தில் வந்துட்டியே ஏன்? ”

“நாங்க பேசினதை ஒட்டுக்கேட்டியா? ” என்று கேட்டவன் அவள் இதழைக் கடித்தான்.

தண்டனை தருகிறானாம்..

நீதிபதிகள் இவனிடம்தான் ஆலோசனை கேட்க வேண்டும்.

“கேட்டதற்கு பதில். ”

“சொல்றேன்டி. இரு.” என்று அவள் கன்னத்தில் விரல் கொண்டு விளையாடியவன் ரசனையுடன் விளையாடிவிட்டு சொன்னான்“அந்த பொண்ணுக்கு பதினேழு வயசுதான் இருக்கும் ஸ்ரீ. மனசே வரலை. ஏன்னு தெரியலை. உடனே கிளம்பிட்டேன். அந்த மாமா பசங்க தொந்தரவு தாங்க முடியல்ல. செல்போனையும் ஆஃப் செய்திட்டேன். என்னைத் தேடித் தேடி மறுநாள் காலையில்தான் ராகேஷ் வந்து சேர்ந்தான். என்னைத் தேடுவதிலேயே அவன் நேரம் போயிடுச்சாம். அதுக்குதான் ரொம்ப ஃபீல் பண்ணான்.”என்று சொல்லும்போதே ராஜனுக்கும் சிரிப்பு வந்திட.. ஸ்ரீயும் சிரித்தாள்.

“ஸ்ரீ.. டியூட்டிக்கு கிளம்ப இன்னும் மூன்று மணி நேரம் இருக்கு. ”

“தெரியும். ”

“தெரிந்துமா நீ பல் விலக்கணும் என்று சொன்ன? ”

‘ஸ்’ என்று உதட்டைக் கடித்தாள் ஸ்ரீ.

அதன்பிறகு வினா விடை ஏதும் இன்றி மூன்று மணி நேரம் கடந்தது.

வினா விடை ஏதும் இன்றி
ஸ்ரீ மறுநாள் காலை பால் பாக்கெட்டைப் பிரித்து பிறகு பாலைக் காய்ச்சி ஒரு காபி போட்டுக்கொண்டு வந்தாள்.

தினமும் ராஜன் செய்யச்சொல்லும் வேலைதான் ஆனால் இன்று அதனை கடனே என்று செய்யாமல் ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது. காபித் தூளை சர்க்கரையை அள்ளிப்போடும்போது திட்டிக்கொண்டே போடாமல் சின்ன சிரிப்புடன் போட்டாள்.

காபியை எடுத்து அவன் அறைக்குள் நுழைய நினைத்தபோது அவளிடம் அனைத்து தயக்கங்களும் விலகியிருந்தது அவளுக்கே ஆச்சரியம் தான்.

அவள் வந்ததிலிருந்து என்றுமே நுழையாத அறைக்குள் நுழைந்தபோது தயக்கமிலல்லாமல் நுழைந்தாள்.

ஒரே ஒரு முறை திருட்டுத்தனமாக சாவியை எடுக்க அவன் அறைக்குள் நுழைந்து அவன் ஷார்ட்ஸ்க்குள் கையை விட்டபோது கைவிரல்கள் எல்லாம் ஜில்லென்று உரைந்து போனது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. காபியை அவன் மேஜையில் வைத்துவிட்டு அவன் இருக்கும் இடம் தேடினாள். ராஜன் அவன் அறையின் மூளையில் சன்னல் அருகே நின்று தனது செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் மிகுந்த தாழ்ந்த குரலில் பேசியதால் என்ன பேசினான்? யாரிடம் பேசினான்? என்று தெரியாமல் “ராஜன் மணியைப் பார். கிளம்பினால் சரியாக இருக்கும் என்று சத்தம்போட்டுக் கூறிக்கொண்டே தனது அறைக்குள் நுழைய நினைத்தபோது ராஜன் அவளை பின்னால் இருந்து அவள் கைகளைப் லேசாகப் பற்றி தனது செல்பேசி உரையைத் தொடர்ந்தான். ஸ்ரீ தானும் பதிலுக்கு அவன் கைகளை அழுத்தி அந்த தொடுதல் தனக்குப் பிடித்ததை அவனிடம் செய்கையால் காட்டியவள் மெல்ல அவன் பிடியைத் தளர்த்தி அறையைவிட்டு வெளியேறினாள்.

ராஜன் தனது சீருடை அணிந்து வெளியே வந்தபோது ஸ்ரீயிடம் கிளம்பட்டுமா என்று கேட்டபோது ஸ்ரீ அவனிடம் “வேண்டாம் ராஜன் இங்கேயே இருந்திடு. உன் அணைப்பில் என் பயம் யாவும் பறந்து போயிடுது. பவித்ராவுடன் இருப்பதுபோல இருக்கு. இன்னைக்கு என்கூட இரு. நான் நாளைக்கு ஊருக்கு போயிடுவேன். உன்னை அதன்பிறகு பார்க்கவே மாட்டேன் ராஜன். இன்னைக்கு என்கூட இருக்கமாட்டியா?” என்று சொல்லணும்போல கெஞ்சிக் கேட்கணும் போல இருந்தது.

அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனால் அதனை வார்த்தைகளால் வெளியே சொல்லவில்லை. ஆனால் அவள் மனதில் நினைத்ததை அவன் கண்களில் கண்டானோ என்னவோ, அவள் அருகே வந்து நன்றாக அவன் கைகளில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தை முன்னும் பின்னும் அசைத்தவன் குனிந்த தலை நிமிராமல் அவள் கண்களைப் பார்க்காமல் அவளிடம் “சாயங்காலம் சீக்கிரம் வந்திடுவேன் ஸ்ரீ. நீ ஸ்நேகா வீட்டில் இரு. நான் வரட்டுமா?” என்றான்.

இருட்டில் உறவாட முடிந்தது. பேச முடிந்தது. ஆனால் வெளிச்சத்தில் எல்லாமே சாத்தியம் இல்லாமல் போனதுதான் நிஜம். நிஜத்தை இருவரும் மீறவில்லை.




Comments are closed here.

You cannot copy content of this page