Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 38
1081
0
மூன்றாவது நாள் காலையில் ராஜன் வீட்டு காலிங் பெல் விடாது அழுத்தப்பட்டது.
ராஜன் குளியலறையிலிருந்து “பதில் சொல்லு நான் இப்ப வந்திடுவேன். ” என்று கத்தினான்.
கோபத்தில் கூட ஸ்ரீ என்று அவன் கூப்பிடவில்லை. அவளும் அப்போது தான் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.
என்னிடமா சொல்கிறான்? குளியலறை கதவிடம்தானே கத்தினான் என்று அவள் அசையாது இருந்தாள்.
அவனே வந்து கதவைத்திறந்தபோது கோபிநாத் வாசலில் நின்று கொண்டிருந்தான்.
சூப்பர் சிக்ஸ் என்று வர்ணிப்பதுபோல கோபிநாத் உள்ளே வந்ததும் சூப்பர் சிக்ஸ் அடித்தான்.
கோபிநாத் அவன் அருகிலேயே ஸ்ரீ இருப்பது தெரியாமல் குறும்பாகப் பார்த்துவிட்டு ராஜனிடம் நக்கலாகச் சிரித்துவிட்டு சொன்னான் “என்ன ராஜன் ஒரே ஜமாய்தானா? கதவைத் திறக்க இவ்வளவு நேரம்? ”
ஒழுங்காக அவன் தட்டும்போதே கதவைத் திறந்திருந்தால் இந்த பேச்சு அவனிடமிருந்து வந்திருக்குமா? உனக்கு இது தேவையா? என்று ஸ்ரீ யை ராஜன் ஏளனப் பார்வை பார்த்ததும் அவள் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
ராஜன் தனது கவனத்தை கோபிநாத்திடம் செலுத்தி “அதெல்லாம் இல்லை கோபி. டி.ஐ.ஜியைப் பார்த்து ப்ரடக்ஷன் கேட்கும் வரை தான்.” என்று இழுத்ததும் “அதான் இன்னும் டி.ஐ.ஜி வர பத்து நாள் ஆகுமே அதுவரை ஜமாய் தானே? ” என்றான்.
இப்போது சொத்தென காபி டம்ளர் சாமான்கள் கழுவும் தொட்டிக்குள் விழுந்தது. கோபிநாத் இதை பெரிதாக எண்ணாவிட்டாலும் ராஜன் பற்களைக் கடித்தான். வந்தவனிடம் “என்ன விஷயம் கோபி? ” என்று கேட்டான்.
“ஒரு தெஃப்ட் கேஸ். வீட்டு ஆளுங்களை தான் சந்தேகப்படுறோம். காலையிலேயே இன்ஸ்பக்டர் கூப்பிட்டனுப்பினார். ஸ்பாட்டிற்கு போனேன். எஃப். ஐ ஆர் போட்டாச்சு. நீயும் வந்திட்டா சார் உன் கிட்ட மற்ற விபரம் சொல்வார். மணி ஏழு ஆகுது. பத்து நிமிஷத்தில் ரெடி ஆகிடுவீயா? ” என்று கேட்டவன் அதனுடன் நிற்காமல் ஸ்ரீயின் அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டான்.
“கூட ஒரு பத்து நிமிஷம் எடுத்துக்கோங்க ஏ.எஸ்.ஐ சார்.” என்றார்.
கூறியவன் நல்லவேளை அங்கே இல்லை. படிக்கட்டில் இறங்க ஆரம்பித்துவிட்டான். இருந்திருந்தால் அடுத்த காபி டம்ளர் சின்க்கிற்குள் விழும் சத்தத்தையும் கேட்க வேண்டியதிருந்திருக்கும். ராஜன் பொறுமையிழந்து கோபமாக அடுக்களையின் நுழைவாயிலில் நின்று அவளை முறைத்தான்.
அவன் பார்வையில் அரண்டவள் தொட்டியின் பக்கமாக முதுகைச்சாய்த்து கைகளை பின்னே கட்டிக்கொண்டு தலை குனிந்து நின்று கொண்டாள்.
அவன் அசையாது முறைத்துப் பார்க்கவும்.. அவள் தொட்டிக்குள் வீசிய டம்ளரை எடுத்துக் கழுவினாள்.
அவன் அதே இடத்தில் இன்னும் அசையாமல் அவள் முதலில் வீசிய டம்ளரையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கவும், முதல் முதலாக வீசிய டம்ளரையும் கழுவி வைத்தாள்.
அதன் பிறகே அவன் இடத்தைக் காலி செய்தான்.
அவன் வீட்டை விட்டுச் சென்ற பிறகு கழுவி வைத்த இரண்டு டம்பளரையும் மீண்டும் தொட்டிக்குள் விசிறி அடித்த பிறகுதான் அவள் மனம் கொஞ்சமேனும் நிம்மதி அடைந்தது.
அவன் வீட்டில் இருக்கும் கூண்டுப் பறவைகளான FINCHES களுக்கு கடல் நுரைகளை சாப்பிடக் கொடுத்தாள். பின்பு பறவைகளைப் பார்த்து அமைதியான மனதுடன் உறங்கி விட்டாள்.
ராஜன் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வருவதற்குள் இரவு பதினோரு மணிக்குமேல் ஆனது. வீட்டிற்குள் வந்தவன் டேபிலில் சாப்பாட்டுப் பார்சல் பிரித்துக் கிடந்ததைப் பார்த்தான்.
அவள் சாப்பிட்டதன் அறிகுறி என்று மனதில் நினைத்தவன் முகத்தைக் கழுவ குளியலறைக்குள் போகக்கூட சோம்பல் பட்டுக்கொண்டு அடுக்களை சின்கிற்கே நேராகப் போனான்.
தொட்டியில் இரண்டு டம்ளரைப் பார்த்ததும் பற்களைக் கடித்தான்.
முகத்தைக் கழுவியவன் சத்தம் கேட்டு திரும்பினான். பாதி உறக்கத்தில் தண்ணீர் தாகத்தில் எழுந்த ஸ்ரீ தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழைந்தாள். ராஜனைக் கண்டதும் திடுக்கிட்டாள். பிறகு சுதாரித்துக் கொண்டு தண்ணீர் என்று தூக்க கலக்கமாகச் சொன்னவள் தண்ணீர் குடிக்கும் போது ராஜன் அவள் முகத்தைப் பார்ப்பது நன்றாகத் தெரிந்து அவளும் அவனைப் பார்த்தாள்.
ராஜன் தொட்டிக்குள் கிடந்த டம்பளரையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபோது அவளையும் அறியாமல் அவள் கைகள் டம்பளரிடம் சென்றது.
அவளது பயந்த பார்வை .. தண்ணீரில் நணைந்த உதடுகள்.. இரவு குளிர் காற்று
இவையெல்லாம் ராஜனின் இறுக்கத்கை தளர்த்தி சிறு புன்னகை செய்ய வைத்தது.
அவன் டம்பளரைப் பிடித்திருந்த அவள் கரங்களைப்பற்றவும் அவள் அவன் முகத்தில் தெரிந்த அப்பட்டமான சிரிப்பைக் கண்டாள்.
அந்த விஷமப்புன்னகையில் ஈர்க்கப்பட்டவள் நகர நினைத்தபோது.. அவன் வலுவாகவே அவள் கைகளைப் பற்றினான்.
Comments are closed here.