Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 41

ராஜன் இதமாகப் பேசியபோதும் அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள்.

 

அவளிடம் சற்று முன் தோன்றிய கேலிப்பேச்சு கூட மறந்தே போனது. முகம் கடுமையானது. சிரிப்பும் காணாமல் போனது.

பறவைகளைவிட்டு தள்ளி நின்று தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பிரச்சனை பெரிசு என்பதை உணர்ந்த ராஜன் அவளிடம் சற்று கடுமையைக் காட்டி “ஸ்ரீ இப்ப என்ன பிரச்சனை? உனக்கு இங்கயிருப்பதில் என்ன பிடிக்கலை? சொல்லு! ஆனா போகணும்ன்னு பிடிவாதம் பிடிக்காதே. ” என்றான்.

அவன் சொல்லி முடித்ததும் நிதானமாக அவன் வெற்று பேன்ட் பாக்கெட்டில் கையைவிட்டாள்.

பிறகு கையை வெளியே எடுத்தவள் வெறும் கையை அவனிடம் காட்டிச் சொன்னாள் “இது காலியாக இருக்குதுல்ல? அதனால கூட இருக்கலாம். ”

பணத்துக்காகதான் பழகுவேன் அது இல்லையென்றால் நம்மிடம் எந்த உறவும் இல்லை என்பதுபோல ஜாடைமாடையாக ஸ்ரீ சொன்னதைக்கேட்டதும் ராஜன் கோபம் அவன் கைகளில் பிரதிபலிக்க அவன் கைகள் வேகமெடுத்தது. வேகமாக அவளை உலுக்கினான். சத்தமாக “ஏய்” என்று கத்தியவன் இரண்டே நிமிடத்தில் கோபத்தை மறந்தான். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடித்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவன் அவளிடம் நெருங்காமல் கேட்டான்.

“ஸ்ரீ இங்கிருந்து நான் உன்னை விரட்டணும் என்று ப்ளான் பண்றியா? ”

“நீ எதுக்கு என்னை விரட்டணும்? எனக்குப் போகத் தெரியாதா? நான் லாக் அப்பிலா இருக்கேன்? இந்த தெருவில் எத்தனை மஃப்டி போலிஸ் இருக்காங்க என்று எனக்குத் தெரியும் ராஜன். அடுத்த தெருவில் இருக்கும் மஃப்டி ஆளுங்ககூட அத்துபடி. பத்து நாள் ஏட்டையா பொண்ணுகூட பேசினா யார்னாலும் கண்டுபிடிச்சிடலாம். உன்னை இரண்டு நாளுக்கு தேட வைக்க முடியும். நல்லா பழகிட்டோமேன்னுதான் ஒழுங்கா சொல்லிட்டு போகலாம்ன்னு வெயிட் பண்றேன்.”

“சரிதான். நீ லாக் அப்பில் இல்லைதான். ஆனா நான் விரட்டினால் என்னை வேகமா மறந்திடலாம்ல்ல அதனால்தான் இப்படி என்னை கோபப்படுத்துற. நீயாக போனா என்னை மறப்பது கஷ்டம் தான? ரொம்ப கஷ்டம் தான? அதனால்தான் நான் உன்னை விரட்டணும் என்று நினைக்கிற. மத்த விஷயத்தை அப்புறம் பார்ப்போம். இப்ப வா படுப்போம் தூக்கம் வருது.”

“அட! எந்த பக்கம் போனாலும் ‘இந்தா என் தலையில் வந்து முட்டு’ என்று முட்டுவதற்கு தலையைக் காட்டுறானே? என்று நினைத்தவள் “ஒரே தலைவலி” என்று பதில் சொல்லிவிட்டு சோபாவில் உறங்கப் போனாள்.

லைட்டை அணைத்துவிட்டு வாசல் கதவைப் பூட்டியவன் சத்தம் குறைவாகத்தான் அவள் கைகளைப் பற்றிச் சொன்னான் “இன்றைக்கு தலைவலிக்குது சரி. அதனால் தூங்கப் பிடிக்கல! சரி. நாளைக்கு தலைமுடி வலிக்குமா?”

‘கண்டுபிடிச்சிட்டானே’ என்று மனதில் சொன்னவள் “எம்டன் ” என்று சத்தமாகவே சொன்னாள் ஸ்ரீ.

“இல்லை எம்டனுக்கு எம்டன்.” என்றான் ராஜன்.

பிறகு அவளை தூங்க இழுத்துச் சென்றான் அந்த எம்டனுக்கு எம்டன். (நிஜமாக கண்களை மூடித் தூங்கத்தான் போனாங்கப்பா!)




Comments are closed here.

You cannot copy content of this page