நிழல்நிலவு – 4
11862
8
அத்தியாயம் – 4
மிருதுளாவின் குறுக்கீட்டால் தடைபட்ட அர்ஜுன் ஹோத்ராவின் வேலை அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. கீழே இறங்கி வந்து பேஸ்மெண்டிற்கு செல்லும் பகுதியை நோக்கி நடந்தான். வழியில் நின்றுக் கொண்டிருந்த அவனுடைய ஆட்கள் சிலர் அவனைப் பார்த்ததும் மரியாதையுடன் தலைவணங்கினார்கள். அவர்களைக் கடந்து கடைகூடத்தை அடைந்து பேஸ்மெண்ட் கதவைத் திறந்து படிக்கட்டில் இறங்கினான். அவனுடைய உடல் இறுகியது. அழுத்தமான காலடிகள் அங்கே சூழ்ந்திருந்த நிசப்தத்தை கிழித்தது. படிக்கட்டு முடியும் இடத்தில் மீண்டும் ஒரு கனமான கதவு காணப்பட்டது. உள்ளே கொலையே நடந்தாலும் சத்தம் வெளியே வராத, அந்த சவுண்ட் ப்ரூஃப் அறைக்குள் பசித்த மிருகத்தின் வெறியோடு நுழைந்தான் அர்ஜுன் ஹோத்ரா.
அவன் உள்ளே நுழைந்ததுமே முதலில் கண்ணில் பட்டது சுஜித் சிங் தான். மிருதுளாவை அவளுடைய அறையில் விட்டுவிட்டு உடனே அவனும் பேஸ்மென்ட்டிற்கு வந்துவிட்டான்.
தலைவனைப் பார்த்ததும் முன்னோக்கி வந்து, “வாயத் திறக்க மாட்டேங்கிறான்” என்றான் கடித்தப் பற்களுக்கிடையில். அவனுக்குள் சீறி கொண்டிருக்கும் எரிமலையை உள்வாங்கியபடி முன்னோக்கி நடந்தான் அர்ஜுன் ஹோத்ரா.
தொங்கிப்போன தலையோடு சேரில் கட்டப்பட்டுக் கிடந்தான் பட்டேல். நேற்றுவரை நண்பனாக இருந்தவன் ஒரே நாளில் துரோகியாகிவிட்டான். இல்லையில்லை…. சரியாக சொல்ல வேண்டும் என்றல், நேற்றுவரை நண்பனாக நடித்தவனின் சாயம் இன்று வெளுத்துவிட்டது.
எப்படி வந்தது இந்த தைரியம்! அர்ஜுன் ஹோத்ராவின் கண்களில் கோபத்தீ கனன்றது… பட்டேலை சுற்றி நான்கைந்து ஆட்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கைவரிசையால்தான் இவன் இப்படி கிழிந்த நாறாகக் கிடக்கிறான் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.
இது போதாது… இன்னும் காட்டவேண்டும்… அர்ஜுன் ஹோத்ராவிடம் சிக்கினால் என்ன நடக்கும் என்பதை இன்னும் திடமாகக் காட்ட வேண்டும்… – சுஜித்தை நிமிர்ந்து பார்த்தான். அந்த கணமே தலைவனின் கட்டளையை புரிந்துக் கொண்டு, பட்டேலின் உச்சிமுடியைப் பிடித்து கடுமையாக இழுத்து தொங்கி கிடந்த அவன் தலையை நிமிர்த்தினான். வலியில் அலறினான் பட்டேல்.
முகம் நன்றாகவே சிதைந்திருந்தது. அதை திருப்தியுடன் பார்த்த ஹோத்ரா, “லுக் அட் மீ பட்டேல்” என்றான் அமைதியான குரலில். மெல்ல இமைகளை பிரித்த பட்டேலின் விழிகளில் பயம் இருந்தது.
“என்கிட்ட ஏதாவது சொல்ல விரும்புரியா?” – அர்ஜுன் ஹோத்ராவின் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறிய பட்டேல் கண்களை மூடிக் கொண்டான். அவனிடமிருந்து பதில் வராததையடுத்து பொங்கியெழுந்த சுஜித் தன் பிடியில் இன்னும் அழுத்தம் கொடுத்து அவனை அலறவிட்டான்.
இவனிடமிருந்து விஷயத்தை கறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல… இவர்களெல்லாம் எடுத்திருக்கும் பயிற்சி அத்தகையது. இதே நிலையில் இன்னும் சில மாதங்கள் கூட இவனால் உயிரை பிடித்து வைத்திருக்க முடியும். அர்ஜுன் ஹோத்ராவின் மனம் தோல்வியை ஏற்க மறுத்தது.
“உனக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு… ஈஸி டெத்… பெயின்ஃபுல் டெத்… வெரி பெயின்ஃபுல்… உன்னோட சாய்ஸ்தான் பட்டேல்…” – இலகுவாகக் கூறினாலும் அவன் குரலில் எச்சரிக்கை இருந்தது.
“என்னோட சாய்ஸ் என்னன்னு உனக்கே தெரியும் அர்ஜுன்…” – மெல்லிய குரலில் குளறலாக உளறினான் பட்டேல்.
அர்ஜுன் ஹோத்ராவின் முகம் அக்கினிப் பிழம்பானது. சற்று நேரம் பட்டேலை வெறித்துப் பார்த்தவன், “குட் சாய்ஸ்… அட்லீஸ்ட் யு ஆர் லாயல் டு நாயக் ஃபேமிலி” என்றான்.
“யு காண்ட் அட்ரஸ் தெம் லைக் தட் அர்ஜுன்… தே ஆர் கோர்த்தாஸ்… ஒரிஜினல் கோர்த்தாஸ்…” – உடலில் எஞ்சியிருந்த ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி குரலை உயர்த்தினான். அடுத்த கணமே சுஜித்தின் இரும்புக்கரம் தாடையில் வந்து பலமாய் மோத வலியில் அலறினான்.
“அவனுங்க கோர்த்தாஸ்ன்னா அப்போ நாங்க யாரு? நா யாரு???” – உறுமினான் அர்ஜுன் ஹோத்ரா.
ஒரு கையால் பட்டேலின் உச்சி முடியை இழுத்துப் பிடித்துக் கொண்டு மறு கையால் அவனுடைய தாடை எலும்பை இறுக்கிப் பிடித்தான் சுஜித். நேற்றுவரை தன்னோடு ஒன்றாக பழகியவன் என்கிற தயவு தாட்சண்யமே இல்லை அவனிடம். முழு மிருகமாக மாறியிருந்தான்.
“ஆஆ….” – அவனுடைய அலறல் ஒலி அறையெங்கும் எதிரொலித்தது.
“வாவ்… திஸ் இஸ் த மியூஸிக்…. மை மோசட் ஃபேவரிட் மியூஸிக். லிரிக்ஸ் தான் மிஸ்ஸிங்… ஃபில் பண்ணிடு பட்டேல். வேர் ஆர் யுவர் டாஷிங் ரான் அவே லீடர்ஸ்?” – ‘ஆஹா!!! இதுதான் இசை… என்னை கவர்ந்த இசை… வரிகள் இல்லாததுதான் குறை… அதையும் பூர்த்தி செய்துவிடு பட்டேல்… ஓடிப்போன உன்னோட டாஷிங் தலைவர்கள் எங்கே?’ – அர்ஜுன்.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. சில பல நிமிடங்கள் அவனை துடிக்கவிட்ட பிறகு கையை உயர்த்தி சுஜித்தை தடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா.
“யு வான டெல் மீ சம்திங் பட்டேல்?” – அமைதியாகக் கேட்ட அர்ஜுன் ஹோத்ராவின் கண்களில் எட்டிப் பார்த்த அசுரன் பட்டேலை அச்சுறுத்தினான்.
“கில்… கில் மீ… ப்ளீஸ் கில் மீ…”
“நீ அவ்வளவு சீக்கிரம் சாகமாட்ட பட்டேல். ஐம் டையிங் டு ஷோ யு த ஹெல்… நீ கற்பனையில கூட நெனச்சுப் பார்க்காத நரகம்… மெதுவா… கொஞ்சம் கொஞ்சமா… என்ஜா…ய் மை மேன்…” – பட்டேலிடம் நரகத்தின் மேன்மையை ரசித்துக் கூறிவிட்டு, “சேர்…” என்று சொடக்குப் போட்டு உறக்கக் கத்தினான்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் நின்ற இடத்திற்கு ஒரு குஷன் நாற்காலி வந்தது. அதில் அமர்த்தலாக அமர்ந்துக் கொண்டான்.
பேஸ்மெண்ட் பஜனை ஆரம்பமானது. பட்டேலின் அலறலையும் துடிப்பையும் ஒருவித குரூரத்துடன் பார்த்து ரசித்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவனுடைய நகங்கள் பிடுங்கப்பட்டன… எலும்புகள் நொறுக்கப்பட்டன. ரெத்தம் தெறிக்க தெறிக்க உயிரோடு சிதைக்கப்பட்டான். இதற்கு மேல் தங்கமாட்டான் என்னும் நிலையில் அவன் உயிரோடு இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக பஜனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
“டாக்டரை வர சொல்லனுமா?” – சுஜித் சிங்.
“இது நம்ம பட்டேல் கேட்டு வாங்கின பெயின்… ரெண்டு நாள் என்ஜாய் பண்ணட்டும்… அப்புறம் பார்த்துக்கலாம்… லெட் ஹிம் ஸ்டே இன் திஸ் கண்டிஷன் அட்லீஸ்ட் ஃபார் பார்ட்டி எயிட் அவர்ஸ்…” என்று கூறி ரத்தவெள்ளத்தில் கிடந்தவனை அப்படியே விட்டுவிட்டு சகாக்களோடு அந்த அறையிலிருந்து வெளியேறினான் அர்ஜுன் ஹோத்ரா.
*********************
இரவு பதினோரு மணி… அர்ஜுன் ஹோத்ராவின் அலுவலக அறையில் நடந்தது அந்த நள்ளிரவு சந்திப்பு. தலைவனுக்காக இருக்கையில், இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ராவிற்கு எதிரில் சுஜித் சிங், டேவிட் மற்றும் மாலிக் சர்புதீன் மூவரும் அமர்ந்திருந்தார்கள். உணர்வுகளற்ற இயந்திரம் போல் காணப்படும் இந்த மூவரும்தான் அர்ஜுன் ஹோத்ராவை சுற்றியிருக்கும் முதல் வட்டம்… அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.
இந்த மூவரோடு ஒருவராகத்தான் பட்டேலும் இருந்தான். மிகவும் நம்பிக்கைக்கு உரியவனாக, அர்ஜுன் ஹோத்ராவின் வலதுகையாக இருந்தான். ஒருமுறை தன் உயிரை பணயம் வைத்து அர்ஜுன் ஹோத்ராவின் உயிரை காத்திருக்கிறான். ஆனால் இன்று அவனே துரோகியாக மாறி பேஸ்மெண்டில் அடைபட்டுக் கிடக்கிறான். இதுதான் இவர்களின் உலகம்… நிழலைக் கூட நம்ப முடியாத உலகம்.
“குரு வாஸ் ஷார்ட் அட் அனந்தபூர்… அண்ட் வி லாஸ்ட் ஹிம்” – ‘மிஸ்டர் குருவுக்கு அனந்தபூர்ல குண்டடி பட்டுடுச்சு. நாம அவனை இழந்துட்டோம்…’ – அர்ஜுன் ஹோத்ரா.
“வாட்!!!” – எஞ்சியிருந்த மூவரும் ஒருசேர அதிர்ந்தார்கள். ‘ஆம்’ என்பது போல் கண்களை முடித் திறந்து தலையசைத்தான் அர்ஜுன்.
“உயிரோட கேட்ச் பண்ணணும்கறது தானே ஆர்டர்…” – சுஜித்.
“முயற்சி பண்ணியிருக்காங்க. பட் ஹி ஃபாட் பேக்… எதிர்த்து சண்டை போட்டிருக்கான். ஷூட் பண்ண வேண்டிய கட்டாயம். பண்ணியாச்சு… செத்துட்டான்… இனி அதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணி பிரயோஜனம் இல்ல… வி நீட் டு மூவ் ஆன்…”
“முக்கியமான லூப்ஹோலை விட்டுட்டோம்… இனி எப்படி?” – மாலிக் சர்புதீன்.
“நமக்கு இன்னும் கூட வாய்ப்பு இருக்கு”
“ரியலி?” – சுஜித் சிங்.
“எஸ்… ஷூட் அவுட் நடந்த இடத்துல, சம்ஒன் வாஸ் ட்ரையிங் டு சேவ் ஹிம்”
“ஓ…ஹோ!!!!” – உற்சாகமாக கத்திய டேவிட், “நாம அவனை கேட்ச் பண்ணிட்டோமா?” என்றான்.
“நோ… ஹி எஸ்கேப்ட்…”
“ஷிட்… ஷிட்… ஷி…ட்…” – கட்டுப்பாடிழந்து கத்தினான் சுஜித்.
“அவனோட ஐடன்டிட்டி ஏதாவது கிடைச்சதா?” – மாலிக்.
“நோ… குருவோட காண்டாக்ட்ஸ் அண்ட் மீட்டிங்ஸை ட்ரேஸ் பேக் பண்ணினா ஏதாவது க்ளூ கிடைக்கும். வி வில் கேட்ச் ஹிம் சூன்” – கோணல் புன்னகையுடன் கூறினான். அந்த புன்னகையில் தெரிந்த சைத்தானை ரசனையோடு பார்த்து தலையசைத்தார்கள் மற்ற மூவரும்.
முதல் விவகாரம் முடிந்தது. அடுத்த விஷயத்திற்காக காத்திருந்தார்கள். அர்ஜுன் ஹோத்ரா எதுவும் பேசவில்லை. கண்களை மூடி ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான்.
“அர்ஜுன்…” – சுஜித்தின் குரல் அவன் சிந்தனையில் குறுக்கிட்டது. ஆம்… அர்ஜுன் ஹோத்ராவை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அவனுக்கு இருந்தது. அவனுக்கு மட்டும் அல்ல… அந்த அறையிலிருந்த மூவருக்குமே அந்த உரிமை இருந்தது. இவர்கள் எல்லோரும் கோர்த்தாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் தங்களுடைய பயணத்தை துவங்கினார்கள். இவனுடைய வளர்ச்சி அதிவேகமாக இருந்ததால் தளபதியாகிவிட்டான். ஆனால் அந்த பழைய நட்பும் உரிமையும் அவர்களுக்குள் அந்தரங்கமாக இருக்கத்தான் செய்தது.
மெல்ல கண்திறந்து சுஜித்தை பார்த்தான். அவனுடைய முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
“மிருதுளா… அட்டெண்டர் அட் காவேரி ஹாஸ்ப்பிட்டல்… தெரசா வுமன்ஸ் ஹாஸ்ட்டல்… அனந்தபூர்… ஐ நீட் எ கம்ப்ளீட் பேக்ரௌண்ட் செக்…” – மிருதுளாவின் பின்புல விபரங்கள் அனைத்தும் தனக்கு வேண்டும் என்று கூறினான்.
அனைவரும் இறுகிப் போய் அப்படியே அமர்ந்திருந்தார்கள். இந்த மறு புலனாய்வில் அவர்களுக்கு உடன்பாடில்லாதது தெரிந்தது.
“எனக்கு தெரியும்… அவளோட பேரை தவிர அவ சொன்ன அத்தனையும் பொய்… ஆனா அதை உறுதிப்படுத்திக்க வேண்டியது அவசியம்”
“பேஸ்மெண்ட்டுக்கு கொண்டு போனா பத்து நிமிஷம் தாக்குப் பிடிக்கமாட்டா… ஜஸ்ட் கிவ் மீ எ சான்ஸ் அர்ஜுன். நா கண்டிப்பா…” – “கண்டிப்பா? கண்டிப்பா என்ன பண்ணிடுவ?” – சுஜித் முடிப்பதற்குள் இடையிட்டு வெடுவெடுத்தான் அர்ஜுன் ஹோத்ரா.
“ரெண்டு நாளா பட்டேல் பேஸ்மெண்ட்ல இருக்கான். உன்னால என்ன இன்பர்மேஷன் வாங்க முடிஞ்சுது?” – எரிச்சலுடன் கேட்டான்.
“பட்டேலோட இவளை கம்பேர் பண்ண முடியாது…”
“எக்ஸாக்ட்லி…. பட்டேலோட இவளை ஒப்பிட முடியாது. பட்டேலோட வீக்கனஸ் என்ன… ஸ்ட்ரென்த் என்ன… எல்லாம் நமக்கு அத்துபடி… ஆனா இவளை பற்றி எதுவுமே தெரியாது. டூ யு ரிமெம்பர் தட்?” – கடுப்படித்தான்.
பதில் சொல்ல முடியாமல் வாயை இறுக மூடிக் கொண்டு கற்சிலை போல் அமர்ந்திருந்தான் சுஜித்.
“ஐ வாண்ட் டு நோ ஹர் இன்… அண்ட்… அவுட்… கம்ப்ளீட்ல்லி…” – ‘நான் அவளை முற்றும்… முழுமையாக… தெரிந்துகொள்ள வேண்டும்’ – அழுத்தம் திருத்தமாகக் கூறியபடி எழுந்தான். மறுத்துப் பேசமுடியாத குரல். விவாதம் முடிந்துவிட்டது என்று பொருள். அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை. மெளனமாக அந்த அறையிலிருந்து வெளியேறினார்கள்.
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
super epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ramanujam Iyer says:
Superb epi sis .
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Ada loosugala avala basement ku kondu poga venam. Vasementla enna nadakuthunuu sonnale ava mayakadichi viluthu sethupoiruva da. Aanalum avaluku neenga kudukra build up romba over. Enna dhadhavo nenga po
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma deepak says:
Innaiku thaan kannula pattuchu nithya ..
Sema moving ..
When is the next epi pa..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vats says:
Why he wants to know about her in and out? Why…..
Devils
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Very excited for the next episode…….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
yeppaaa
superrrrrrr
aada loosugala pawamdaa ava nee bashment kodu ponnaalum onnumtheriyaathu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Ugina… 🙂