நிழல்நிலவு – 5
11586
10
அத்தியாயம் – 5
நண்பர்களை அனுப்பிவிட்டு தனிமையில் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ராவின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாள் மிருதுளா. ‘சுஜித்தின் கோபம் நியாயமானது தான். அவளிடம் பொய் இருக்கிறது. அப்பாவி போல் நடிக்கிறாள். அவ்வளவு எளிதாக நீ தப்பிவிட முடியாது பெண்ணே. உன்னிடம் ஒளிந்திருக்கும் ரகசியம் ஒவ்வொன்றையும் வெளிக் கொண்டுவருவேன்’ – கங்கணம் கட்டியபடி எழுந்து அவளுடைய அறையை நோக்கி நடந்தான்.
இரவு நேரங்களில் அர்ஜுன் ஹோத்ரா அவ்வப்போது இப்படி வீட்டை சுற்றிவருவது வழக்கம் என்றாலும் இன்று குறிப்பாக மிருதுளாவை நோட்டமிடத்தான் விழைந்தான். மாளிகை முழுவதும் அமைதியாக இருந்தது. பாதுகாவலர்கள் மட்டும் ஆங்காங்கே நடந்துக் கொண்டிருந்தார்கள். உணவு கூடத்தைத் தாண்டி வேலைக்காரர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த போது மிருதுளாவின் அறையில் மட்டும் விடிவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. சந்தேகத்துடன்தான் அவளுடைய அறைக்கு அருகே சென்றான். அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் உள்ளே பேச்சு குரல் கேட்டது. அர்ஜுன் ஹோத்ராவின் உடல் விறைத்து நிமிர்ந்தது.
‘டா…மி…ட்…’ – கோபத்தில் சிவந்தது அவன் முகம். இவ்வளவு விரைவாக மாட்டுவாள் என்று அவன் நினைக்கவில்லை. ‘என்ன பேசுகிறாள்! யாரிடம் பேசுகிறாள்!’ – கதவிற்கு அருகே சென்று ஒட்டுக் கேட்க முயன்றான். எதுவுமே புரியவில்லை. ‘முணுமுணுவென்று இவ்வளவு மெல்லிய குரலில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள்!’ – பற்களை நறநறத்தான்.
கதவில் கைவைத்துத் தள்ளிப் பார்த்தான். உள்ளே தாழிட்டிருந்தாள். அந்தப்பக்கமாக கடந்துச் சென்ற பாதுகாவலன் ஒருவனை கையசைத்து அழைத்தான். அவனிடம் அந்த அறைக்கான மாற்று சாவியை கொண்டுவரும்படிக் கூறினான். அடுத்த சில நிமிடங்களிலேயே அவன் கேட்ட சாவி கையில் கிடைத்துவிட்டது. அதுவரை அந்த குரல் முணுமுணுத்து கொண்டேதான் இருந்தது. மெல்ல சாவியைப் போட்டு பூனை போல் உள்ளே நுழைந்தான். கையில் தயாராக துப்பாக்கியை பிடித்திருந்தான்.
அவனுடைய கண்கள் ஒரே நொடியில் அறையை ஸ்கேன் செய்தன. எரியும் விடிவிளக்கு, மூடியிருக்கும் ஜன்னல், மெத்தையில் மிருதுளா, அவளுடைய காலணிகள் கட்டிலுக்கு அருகே… இதைத்தவிர அறை சுத்தமாக இருந்தது. அங்கே அவளைத் தவிர வேறு யாரும் இல்லை… சந்தேகத்துடன் கட்டிலுக்கு கீழே பார்த்தான்… கப்போர்டை திறந்து பார்த்தான்… குளியலறையை திறந்து பார்த்தான். பாதுகாவலனும் திரைச் சீலைக்கு பின்பக்கம், பால்கனி ஆகிய இடங்களில் சோதித்தான். யாரும் இல்லை…
‘வாட் த ஹெல்!’ – வெறுப்பானான்.
“ம்ம்ம்…. ப்ளீ…ஸ்… நோ…” – மிருதுளா முணுமுணுத்தாள். சட்டென்று அவள் பக்கம் திரும்பினான் அர்ஜுன் ஹோத்ரா. உடலைக் குறுக்கிக் கால்களைக் கட்டிக் கொண்டு நடுங்கி கொண்டிருந்தாள். அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன… என்னவாயிற்று இவளுக்கு! நடிக்கிறாளா! – சந்தேகத்துடன் அவளிடம் நெருங்கினான்.
இவ்வளவு நேரமும் தனியாகத்தான் புலம்பிக் கொண்டிருந்தாளா! இல்லை… இவள் நடிக்கிறாள்… – எங்கேயாவது அலைபேசியை ஒளித்து வைத்திருக்கிறாளா என்று சோதித்தான்.
“நோ…நோ..நோ… ப்ளீஸ்… நோ… வே…ண்டாம்… நோ… ஆ… ஆ…” – தூக்கத்திலேயே அழுதாள். உடல் தூக்கித் தூக்கிப் போட்டது. வேகமாக அவளிடம் நெருங்கிவந்தான். மிருதுளாவின் முகமெல்லாம் பதட்டம்… பயம்… தலையை இடமும் வலமுமாக வேகவேகமாக ஆட்டினாள். உடனடியாக அவனுடைய எண்ணத்தில் மாற்றம் வந்தது. ‘இவள் நடிக்கவில்லை’ – “மிருதுளா…” – குரல்கொடுத்து அவளை தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்றான்.
அவளுடைய நடுக்கம் அதிகமானது… பயம் அதிகமானது… புலம்பல் அதிகமானது… சத்தம் அதிகமானது… அழுகை அதிகமானது… இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“மிருதுளா… ஹேய்… என்ன ஆச்சு?” – குரலை உயர்த்தினான்.
“ரெத்தம்… ஐயோ… ரெத்தம்… ஆ… ம்மா… ஆ…” – புலம்பலும் அழுகையுமாக கட்டிலிலிருந்து நழுவினாள். சட்டென்று அவளைத் தாங்கி மீண்டும் மெத்தையில் படுக்க வைத்தான். ஆனால் அவள் படுக்க மறுத்தாள். எங்கோ ஓட முயற்சி செய்வது போல் அவனுடைய பிடியிலிருந்து தன்னை உதறி விடுவித்துக் கொண்டவள் தரையில் தடுமாறி விழுந்தாள்.
“ஏ… ஏய்…” – பதற்றத்துடன் அவளை தாங்கமுயன்று தோற்றான். அதுவரை அங்கே நின்றுக் கொண்டிருந்த பாதுகாவலன் மின்விளக்கை போட்டுவிட்டு அவளுக்கு உதவ எத்தனித்தான். அதற்குள் அர்ஜுன் ஹோத்ராவே அவளை தூக்கி, தோள்களை பிடித்து உலுக்கினான்.
“மிருதுளா… என்ன ஆச்சு உனக்கு…? வேக் அப்… வேக் அப் டாமிட்…” – கத்தினான். அவளுடைய கண்கள் விழித்திருந்தன. அவனைத்தான் நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால் பார்வை இங்கு இல்லை. அது எங்கோ தொலைதூரத்தில் இருந்தது… “ரெத்தம்… என் கையெல்லாம்… ட்ரெஸ்ஸெல்லாம்.. உடம்பெல்லாம்… ரெத்தம்…” – உளறினாள்.
“ரெத்தமா! எங்க இருக்கு ரெத்தம்! தேர் இஸ் நோ பிளட்… ஸீ… கண்ணை திறந்து பாரு… மிருதுளா…” – உலுக்கினான்.
“இல்ல… இதோ… ப்ளீஸ்… போகமாட்டேங்குது… இது போகமாட்டேங்குது… ஐயோ… இந்த வாடை… ரெத்த வாடை… இது போகமாட்டேங்குது… என்கிட்டேருந்து போகமாட்டேங்குது…” – பதறி துடித்தாள்.
“ஓ மை காட்… மிருதுளா… உனக்கு ஒண்ணும் இல்ல… யு ஆர் ஆல்ரைட்… பிலீவ் மீ” – அவளை தேற்ற முயன்றான். அவனுடைய முயற்சிகளெல்லாம் எதுவும் பலனளிக்கவில்லை. உடல் நடுக்கம் அதிகமானது… மூச்சுவிட சிரமப்பட்டாள். கண்கள் மேல்நோக்கி சொருகியது…
“ஓ மை காட்… ஜி.. ஷி காட் பேனிக் அட்டாக்… பிரீத் பண்ண முடியல… வி நீட் டு கம்போஸ் ஹர்” – அவசரமாகக் கூறினான் பாதுகாவலன்.
அவனுக்கும் தெரிந்தது… அவனுடைய ஆட்கள் சிலருக்கு இது போல் ஆகியிருக்கிறது. முதல் முறை கொலை செய்துவிட்டு இப்படித்தான் விசித்திரமாக நடந்துக்கொள்வார்கள்.
“நோ.நோ.நோ… மிருதுளா… டோண்ட் கோ பேனிக்… யு ஆர் ஆல்ரைட்… லுக் அட் மீ… லுக் அட் மீ… மிருதுளா… என்னை பாரு… காட்! யு லுக் அட் மீ டாமிட்…” கத்தினான். ஏன் தனக்கு இத்தனைப் பதட்டம் என்று அவனுக்கே புரியவில்லை.
மிருதுளா முயன்றாள்… நினைவிழக்காமல் இருக்க வெகுவாய் முயற்சி செய்தாள். ஆனாலும் பார்வை மங்கி கொண்டிருந்தது… காது அடைத்துக் கொண்டது… நினைவுகள் நழுவிக் கொண்டிருந்தன.
ஆனால் அவன் விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து அவளை நினைவிழக்கவிடாமல் தடுத்தான். அவளுடைய பார்வை தன்னை நோக்கி மெல்ல திரும்புவதை அறிந்து அதற்குத் தகுந்தாற் போல் அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“என்னை தெரியுதா? தெரியுதா? பாரு… தெரியுதா? யு ஆர் ஆல்ரைட் ஓகே… காம் டௌன்… பிரீத் பண்ணு… நல்லா… ஆங்… அப்படிதான்… குட் குட்… எஸ்… ஸ்லோலி.. எஸ்…” – அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
“ரெ…ஹாங்… ஹாரெ..ங்…. ரெத்…ஹாங்…” – வாயாலும் மூக்காலும் காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற மிகவும் சிரமப்பட்டாள். இடையிடையே, ‘ரெத்தம்’ என்னும் வார்த்தையையும் சொல்ல முயன்றாள்.
“ஒன்னும் இல்ல… மிருதுளா… யு பிலீவ் மீ ரைட்? ஐம் கோயிங் டு கிளீன் இட் அப்… நீ கிளீன் ஆகப்போற… ரெத்தத்தையெல்லாம் துடைச்சிடலாம் ஓகே…” – குழந்தைக்கு கூறுவது போல் கூறினான்.
“ரெ…த்… ஹாங்…தம்… ரெத்…தம்… ஹாங்… ரெ…த்…த…ஹாங்…” – அவனுடைய வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
“கெட் மீ எ வெட் டவல்…” – கத்தினான். உடனே கபோர்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து நனைத்து அவனிடம் கொடுத்தான் பாதுகாவலன். அதை வைத்து அவள் கை, முகம், காலெல்லாம் துடைத்துவிட்டு, “யு ஆர் ஓகே நௌ… ஸீ… நோ மோர்… பிளட்… ரைட்…” – அவளை நம்பவைக்க முயன்றான்.
மூச்சுவாங்கியபடியே கைகளை திருப்பித் திருப்பிப் பார்த்த மிருதுளா வெடித்து அழுதாள். அழுதபடியே அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள். படபடவென்று துடிக்கும் அவள் இதயத்தின் ஓசையை இவனால் உணர முடித்தது. அவனுக்குள் ஏதோ நழுவியது… பலவீனமானது போல் உணர்ந்தான்.
“தே.. தே…ங்…க்ஸ்…” – விம்மல்களுக்கிடையே வந்து விழுந்தது அந்த வார்த்தை. சட்டென்று தன் வலிய கரங்களால் அவளை வளைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அவளுடைய நடுக்கம் மெல்ல மெல்ல குறைந்தது… மூச்சு சீரானது… கண்கள் மெல்ல மூடியது…
“உஃப்…” – ரிலாக்ஸாக மூச்சுவிடும் போதுதான் அவனுக்குத் தெரிந்தது, தான் இவ்வளவு நேரமாக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறோம் என்று… அதுவரை பதட்டத்தின் உச்சத்தில் இருந்தவன் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினான்.
“டாக்டரை கூப்பிடட்டுமா ஜி” – பாதுகாவலன்.
“நோ நீட்… லீவ்…” – ‘தேவையில்லை… வெளியேறு…’ – கட்டளையை ஏற்று தலைவணங்கி விடைபெற்றான்.
மிருதுளாவை மெல்ல அணைத்தபடியே அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு விலக முயன்றான். உடனே பதறி எழுந்தவள், “ப்ளீஸ்… ப்ளீஸ்… டோண்ட் லீவ்… ப்ளீஸ் டோண்ட் லீவ் மீ…” என்று மிரண்ட விழிகளுடன் கத்தினாள்.
“ஷ்ஷ்ஷ்… காம் டௌன்… காம் டௌன் பேபி… ஐம் நாட் லீவிங்… காம் டௌன்…” – சமாதானம் செய்து படுக்க வைத்தான். அவள் அவனுடைய கோட்டை இருக்கமாகப் பிடித்திருந்தாள். விலகிச் செல்ல முடியாமல் கட்டிலில் அவள் அருகிலேயே அமர்ந்தான். அவள் புருவம் சுருங்கியிருந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அலைபாய்ந்தன. உதடுகள் இறுகியிருந்தன. உள்ளுக்குள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. அந்த போராட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்கிற பேராவல் தனக்குள் எழுவதை ஆச்சரியத்துடன் உணர்ந்தான்.
அவள் தலையை கோதி… புருவத்தை நீவி… “இட்ஸ் ஓகே… ஐம் ஹியர்… ரிலாக்ஸ்… ஸ்லீப் வெல் பேபி…” என்று அவளை அமைதிப்படுத்தினான். மெல்லமெல்ல மிருதுளா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். அப்போதும் அவளுடைய கரங்கள் அவன் கோட்டை இறுக்கிப் பிடித்தபடியே இருந்தன.
அவனுடைய பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது. ‘சிலமணிநேரங்களுக்கு முன் தன்னுடைய அறையில், கட்டிலுக்கு கீழே ஒளிந்திருந்த அதே பெண்தானா இவள்!’ என்று எண்ணும் அளவிற்கு முற்றிலும் வேறு முகமாய் தெரிந்தது. ‘எத்தனை அழகு!’ – வியந்தான். பால்நிலவு போல் பளிச்சென்றிருந்த அந்த முகம் ஏதோ ஒரு விதத்தில் அவனை வெகுவாய் ஈர்த்தது. நேரம் போவது தெரியாமல் தூக்கத்தை துறந்துவிட்டு அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். எங்கோ திக்குத் தெரியாத திசைக்கு அவனை இழுத்துச் சென்றது அந்த முகம்.
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ… ஒரே நிலையில் அமர்ந்திருந்ததில் கால்கள் மரத்துப் போய்விட்டன. மாணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தான். விடிவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் இருந்தன. இவன் எழுந்தால் அவளுடைய தூக்கம் கெடும்… அதை செய்ய மனமில்லை… ஓசையெழுப்பாமல் மெல்ல கோட்டை கழட்டி அவள் கையோடு விட்டுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
10 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
super ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Emily Peter says:
Irumbu manathirkullum oru ilagiya manasu irukkum pola
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Emily…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma maheswari says:
Hey super .. ada ippadi patharathulaiye nee therinjikka vendaama da.. ava thaan unnai suththal la vida pora nu ..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Oh wow Nice ud sis. …👍👍👍👍👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Superb…….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
wowwwwww……
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
ஆஹா அஜு அதுக்குல்ல க்ளீன் போல்டா….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
umamanoj says:
5வது எபிலேயே மச்சான் ஃபிளாட்டா😍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vats says:
He started to fall for her.. welllllll…. But how will be her reaction?!