நிழல்நிலவு – 7
11270
11
அத்தியாயம் – 7
அந்த அறையில் பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லை. ஒரு பெரிய கண்ணாடி மேஜையும் சில நாற்காலிகளும், ஒரு தொலைபேசி இணைப்பும் மட்டுமே அந்த அறையில் அவள் கண்ட பொருட்கள். முதன்மை நாற்காலியில் அமர்ந்திருந்த அர்ஜுன் ஹோத்ரா கோட் சூட் அணிந்து பக்கா ப்ரொபஷனல் லுக்கில் இருந்தான். அவன் மட்டும் அல்ல… அவனை சுற்றியிருக்கும் அனைவருமே அப்படித்தான் இருக்கிறார்கள். கூடவே துப்பாக்கியையும் வைத்திருக்கிறார்கள்… ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ – அவள் முகம் கோணியது.
அர்ஜுன் ஹோத்ரா தன்னை அலுவலகத்திற்கு வந்து சந்திக்கும்படி கூறியதும், எஸ்டேட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும். முடிந்தால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாம் என்றெல்லாம் எண்ணியிருந்தாள் மிருதுளா. ஆனால் அதே மாளிகையில் இருக்கும் ஒரு அறைதான் அவனுடைய அலுவலகம் என்று தெரிந்த போது அவளுடைய மனக்கோட்டை நொறுங்கி தரைமட்டமாகிவிட்டது. விதியை நொந்துகொண்டு அமைதியாக நின்றாள்.
“ஹௌ ஆர் யு ஃபீலிங் நௌ?” – ஆழ்ந்த அவன் குரல் அவள் சிந்தனையில் குறுக்கிட்டது.
“ஐம்…. ஐம் ஓகே…” – தடுமாற்றத்துடன் பதில் கூறினாள்.
“நேத்து நைட் என்ன நடந்ததுன்னு நியாபகம் இருக்கா?” – மிருதுளாவை துளைத்தது அவன் பார்வை. அவள் சங்கடத்துடன் தலை குனிந்தாள்.
“சோ… உனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு…” – அவளால் அவன் கண்களை சந்திக்க முடியவில்லை.
“லுக் அட் மீ மிருதுளா” – அமைதியாகத்தான் கூறினான். ஆனால் அவளால் அந்த குரலை உதாசீனம் செய்ய முடியவில்லை. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
“எக்ஸ்பிளைன்…” – உத்தரவிட்டான்.
அவள் என்ன அவனுடைய அடிமையா… உத்தரவிடுவதற்கு! எரிச்சல் வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். கொலைக்கே அஞ்சாதவன்… இவனிடம் பண்பை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். “இட் வாஸ் ஜஸ்ட் எ நைட்மேர்” – ‘அது ஒரு கெட்ட கனவு அவ்வளவுதான்’ என்றாள். அர்ஜுன் ஹோத்ராவின் தாடை இறுகியது.
“பொய் எனக்கு பிடிக்காது… ஐ ஹேட் தட்…” – அவன் குரல் அவளை எச்சரித்தது.
மிருதுளாவின் முகம் சட்டென்று சூடாகி சிவந்தது. கண்டுபிடித்துவிட்டானா! அந்த கொலையை பார்த்தது நாம்தான் என்று தெரிந்துவிட்டதா! நேற்று இரவு எதையோ உளறிவிட்டோமோ! – இதயத்துடிப்பு அதிகரித்தது. உலர்ந்துபோன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, “இல்ல… ஐம்… ஐம் நாட்…” என்று ஏதோ சமாளிக்க முயன்றவளை இடைமறித்துப் பேசினான் அர்ஜுன் ஹோத்ரா.
“நேத்து நைட் உனக்கு பேனிக் அட்டாக் ஆச்சு… உன் மேல பிளட் இருக்கறதா ஹாலுசினேஷன்ல கண்ட்ரோல் இல்லாம கத்தின… அழுத… யு ஜஸ்ட் லாஸ்ட் ஸம்வேர் விச் இஸ் நாட் ஜஸ்ட் எ நைட்மேர்” – அழுத்தமாகக் கூறினான்.
மிருதுளாவின் முகத்தில் அதீத பயம் தோன்றியது. அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது. அவள் முகத்தையே சற்றுநேரம் ஆழ்ந்து பார்த்த அர்ஜுன் ஹோத்ரா, “மிருதுளா… நீ ஏதாவது கொலையை நேர்ல பார்த்தியா?” என்றான் அமைதியாக.
சட்டென்று பதட்டத்தின் உச்சத்திற்குச் சென்றாள் மிருதுளா. மாரடைப்பே வந்துவிடும் அளவிற்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது. ‘ஆமாம்… என் கண்ணுமுன்னாடி ஒருத்தன் சாகரத்தை பார்த்தேன். நீதான்… உன்னோட ஆளுங்கதான் அவனை கொன்னாங்க… யு ஆர் எ கில்லர்… யு ஆர் எ கல்ப்ரிட்…’ – அலறியது அவள் உள்ளம். ஆனால் வெளிப்படுத்தும் தைரியம் இல்லை…
“ஆன்சர் மீ மிருதுளா…” – கண்டிப்புடன் கூறினான்.
மிருதுளா தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள். “நோ… நா எந்த கொலையையும் பார்க்கல…” என்று மெல்ல முணுமுணுத்தாள். அர்ஜுன் ஹோத்ராவின் முகம் கடுமையாக மாறியது. சீற்றத்துடன் சேரை பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்து,
“அப்போ… யாரையாவது கொலை பண்ணிட்டியா? கொலை பண்ணிட்டுதான் என்னோட கார்ல ஏறி தப்பிச்சு வந்தியா? ஆர் யு எ ப்ளடி கில்லர்…?” என்று கத்தினான்.
“நோ…” – அவனுடைய சீற்றத்தை மீறி ஓங்கி ஒலித்தது மிருதுளாவின் குரல். அவனுடைய பார்வை அவள் முகத்தை அலசியது. “நோ… நோ…” – மேலும் மேலும் மறுத்தாள். உதடுகள் துடித்தன… கண்ணீர் கொட்டியது.
“மிருதுளா… யு வேர் ஹாலுசினேட்டிங் அபௌட் பிளட் ஆன் யு. சோ… ஒன்னு நீ யாரையாவது கொலை பண்ணியிருக்கணும்… இல்ல… கொலையை நேர்ல பார்த்திருக்கணும்… எது உண்மை?” – அழுத்திக் கேட்டான். அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்… இவள் எதையோ மறைக்கிறாள்.
“ப்ளீஸ்…. நா எந்த கொலையையும் பார்க்கல… யாரையும் கொலை பண்ணல… அது ஜஸ்ட் ஒரு கனவு… கெட்ட கனவு… அவ்வளவுதான்… ப்ளீஸ் சார்… ப்ளீஸ்… பிலீவ் மீ” – பரிதாபமாகக் கெஞ்சினாள்.
அதற்குமேல் அவனால் அவளை கட்டாயப்படுத்த முடியவில்லை. அந்த கண்ணீரும் அழுகையும் அவனை கட்டுப்படுத்தியது. கோவமும் விரக்தியுமாக தலையை அழுந்த கோதி கண்களை இறுக்கமாக மூடி ஆழ மூச்செடுத்தான். பிறகு, “நீ பார்க்க ரொம்ப சாஃப்ட்டா… இன்னோசென்ட்டா இருக்க… பட் யு ஆர் சோ ஸ்டப்பன் டாமிட்… ஜஸ்ட் ஸ்டப்பன்…” என்று பல்லை கடித்தான்.
மிருதுளா எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்ணீரும் நிற்கவில்லை… ஓரிரு நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் மெல்ல இலகுவானது. கண்களில் இருந்த கோபம் மறைந்தது… “மிருதுளா… என்னை நம்பு… ஐ கேன் ப்ரொடெக்ட் யு… ஐ கேன் சேவ் யு… நீ என்ன பண்ணியிருந்தாலும்… ஜஸ்ட் பிலீவ் மீ பேபி…” என்றான் உருக்கமாக… நெருக்கமாக… மிருதுளாவின் கண்கள் வியப்பில் விரிந்தன… அவன் குரல்…!! அவன் கண்கள்..!!. காட்!! – இப்போது வேறு விதமான பயம் அவளுக்குள் உண்டானது. ஏதோ திக்குத் தெரியாத காட்டில் தொலைந்து போவது போன்றதொரு உணர்வு… கடவுளே! – கண்களை மூடிக் கொண்டாள்.
அப்போதுதான் அவனுக்கே அது புரிந்தது. அவள் பிடிவாதமாக இருக்கிறாள்… அவன் அவளுக்கு தகுந்தாற் போல் வளைந்துக் கொண்டிருக்கிறான்… ‘இவள் நம்மை பலவீனமாக்குகிறாள்!’ – உண்மை உச்சந்தலையில் அறைந்தது. தன் மீதே கோபம் எழுந்தது. இறுகிப்போய் நின்றான்.
மிருதுளா மெல்ல கண்களைத் திறந்தாள். “ஐ வாண்ட் டு லீவ் திஸ் ஹவுஸ்” – ‘நா இந்த மாளிகையைவிட்டு போகணும்” – மெல்ல முணுமுணுத்தாள்.
“ஓ! வாட் யு திங்க் அபௌட் திஸ் பில்டிங்?”
‘காடு… நரகம்…’ – மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. “எதுவும் இல்ல… இந்த இடத்தை பற்றி நா என்ன நினைக்கறது? எனக்கு என்ன தெரியும்?” என்றாள். அவன் பார்வை அவள் முகத்திலிருந்து மீளவில்லை.
“ஓகே… கம் வித் மீ” – அவளை அந்த மாளிகையின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே வேலைக்காரர்களின் நடமாட்டம் இல்லாததை கவனித்துவிட்டு தயங்கியவள், “எங்க போறோம்?” என்றாள் பயத்துடன்.
“பார்க்கத்தானே போற?” – அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று மிருதுளாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இருவரும் ஒரு அறைக்கு எதிரில் வந்து நின்றார்கள். அவள் முகத்தைப் பார்த்தபடியே அந்த கனமான கதவை திறந்தான் அர்ஜுன் ஹோத்ரா. மிருதுளாவின் உடல் விறைத்து நிமிர்ந்தது.
“விம்ப்…. ஆ… விம்ப்… ஆ… விம்ப்… ஆஆஆ…” – ‘என்ன சத்தம் இது! யார் யாரை அடிக்கிறார்கள்!’ – அடிவயிறு தடதடக்க மிரட்சியுடன் அர்ஜுன் ஹோத்ராவைப் பார்த்தாள்.
அவளுடைய பயத்தை நிதானமாக உள்வாங்கியபடி அதே அறையில் இருந்த இன்னொரு கதவை லேசாக தட்டினான். முக உயரத்தில் இருந்த ஜன்னல் ஒன்றை உள்ளேயிருந்து ஒருவன் திறந்தான். அப்போதுதான் அந்த கோர காட்சி அவள் கண்ணில் பட்டது.
ஆடைகள் முற்றிலும் களையப்பட்ட மனிதன் ஒருவனை மேஜையில் குப்புறக் கட்டிவைத்து சவுக்கடிக் கொடுத்து தோலை உரித்துக் கொண்டிருந்தான் ஒருவன். ரெத்தம் தெரிக்கத்தெரிக்க வலி தாங்காமல் அலறிக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.
மிருதுளாவிற்கு உயிர்வரை வலித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கியது. மூச்சுக் குழலுக்குள் ஏதோ அடைத்தது. இதையெல்லாம் பார்க்கும் சக்தி அவளுக்கில்லை. சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“கீப் வாட்சிங்…” – ‘தொடர்ந்து பாரு…’ – சாதாரணமாக சொன்னான் அர்ஜுன் ஹோத்ரா. தோனி கட்டளையிட்டது.
“வாட்!!!” – அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா. இறுக்கமான அந்த முகம் அவளை அச்சுறுத்தியது.
இந்த பயத்தைத் தான் அவன் எதிர்பார்த்தான். திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்திருக்கிறாள். கொலையோடு சம்மந்தப்பட்டிருக்கிறாள். என்னவென்று கேட்டால் கெட்ட கனவாம்… டாமிட்!!! – பற்களை நறநறத்தபடி,
“பாரு…” என்று மீண்டும் வலியுறுத்திவிட்டு அவளை வெறித்துப் பார்த்தபடியே நின்றான்.
அந்த பார்வை…! அந்த குரல்!!! அடிநாதம் வரை வறண்டு போனது அவளுக்கு. வேறு வழியில்லை… – வெளிறிப்போன முகத்துடன் மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையை செலுத்தினாள்.
‘இப்படி கட்டி வைத்து அடிக்கிறார்களே! வலி தாங்காமல் அந்த ஜீவன் துடிக்கிறதே! கடவுளே!!!’ – மிருதுளாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தன்னிச்சையாய் வாய், “டார்…ச்…ச…ர்…” என்று முணுமுணுத்தது.
‘ஹா…’ – அவன் முக்கத்தில் ஒரு கோணல் புன்னகை தோன்றியது.
“இது டார்ச்சர் இல்ல… பனிஷ்மென்ட்… சம்திங் டிஃப்ரெண்ட். யு மே அண்டர்ஸ்டாண்ட் சூன்…” – ‘இது சித்ரவதை இல்ல… தண்டனை… இது வேற… நீயும் சீக்கிரம் புரிஞ்சுக்குவ” – நிதானமாகக் கூறினான்.
மிருதுளாவின் கண்கள் விரிந்தன. முகம் ரெத்தப்பசையின்றி வெளிறிப் போய்விட்டது. கலவரத்துடன் அவனை ஏறிட்டாள். உள்ளே தடதடத்தது. அதை கட்டுப்படுத்த கைகளை நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
‘சீக்கிரம் புரிஞ்சுக்குவ என்றால்!!! உனக்கும் இது போல் நடக்கலாம் என்று சொல்கிறானா! அப்படித்தான் சொன்னானா!’ – அவன் சொன்னதை அவளால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உள்ளே குளிர்பிறந்தது.
அதோடு, அந்த சத்தம்…! ரெத்தம்…! அலறல்…! – நிற்க முடியாமல் கால்கள் துவண்டன. உள்ளே அவனுக்கு விழும் ஒவ்வொரு அடியும் தனக்கு விழுவது போலவே உணர்ந்தாள். ஒவ்வொரு ‘விம்ப்’ சத்தத்திற்கும் அவள் உடல் தூக்கிப் போட்டது.
அவளை இதே நிலையில் இன்னும் சற்றுநேரம் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அர்ஜுன் ஹோத்ராவின் விருப்பம். ஆனால் ஒவ்வொருமுறை அவள் உடல் அதிரும் பொழுதும் இவனுக்குள் தோன்றிய ஏதோ ஒரு பெயர் தெரியாத உணர்வு, அவனை தன் விருப்பத்திற்கு எதிராக செயல்படச் செய்தது.
“கம்…” – சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்தும் அந்த சத்தம் அவள் செவிகளில் எதிரொளித்துக் கொண்டேதான் இருந்தது. நடக்க முடியாமல் கால்கள் பின்னின.
“ஆர் யு ஆல்ரைட்?” – இறங்கிய குரலில் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. சொல்லும் நிலையில் அவள் இல்லை. சீரற்ற மூச்சும் தாறுமாறாக துடித்த இதயமும் அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.
அர்ஜுன் ஹோத்ராவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ‘ஏன் இவ்வளவு வீக்கா இருக்கா!’ – வருந்தினான்.
அதன்பிறகு எதுவுமே பேசாமல் அவளை மாளிகையின் முன் பக்கத்திற்கு அழைத்து வந்து, “உட்கார்” என்று சோபாவில் அமரச் சொன்னான்.
சமையலறைக்கு அழைத்து காபி கொண்டுவர சொல்லிவிட்டு அவளுக்கு அருகில் அமர்ந்தான். அவன்தான் அவளை அச்சுறுத்தினான். விரும்பித்தான் அதை செய்தான். ஆனால் இப்போது அவளை தேற்ற வேண்டும் என்கிற உந்துதலை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.
“ம்கூம்… ரிலாக்ஸ்… ஜஸ்ட் ரிலாக்ஸ்… யு ஆர் ஆல்ரைட் ஓகே… நோ ஒன் கேன் டச் யு ஹியர்… யு ஆர் ஸேஃப்” – ‘உனக்கு ஒன்னும் இல்ல… இங்க யாராலயும் உன்ன தொட முடியாது. நீ பாதுகாப்பா இருக்க…’ – தைரியம் கொடுக்க முயன்றான். அவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகள் அழுந்த மூடின. ‘ஷி இஸ் நாட் எ இண்ட்ரூடர்… கண்டிப்பா இவ பயிற்சி எடுத்த பொண்ணு இல்ல… இன்னொசென்ட்தான்…’ – அவள் இந்த இடத்திற்கு வந்த விதம் சந்தேகத்திற்கு உரியது. அவள் கூறும் காரணங்களில் பொய்கள் கலந்திருக்கிறது. பூஜாவின் ரிப்போர்ட் அவளுக்கு எதிராக இருக்கிறது. இத்தனை இருந்தும் அவன் மனம் அவளுக்கு சாதகமாகவே சிந்தித்தது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தன் முட்டாள்தனமான சிந்தனையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.
‘வாட்எவர்…’ – தலையை உலுக்கிவிட்டு கண்திறந்தான். வேலைக்காரர் காபி ட்ரேயோடு நின்றுக் கொண்டிருந்தார். காபி கப்பை எடுத்து, “ம்ம்ம்… குடி… யு வில் ஃபீல் பெட்டர்” என்று அவளிடம் நீட்டினான்.
அவள் கப்பை வாங்க எத்தனித்தபோது, சட்டென்று ஏதோ தோன்ற கைகளை பின்னால் இழுத்துக் கொண்டான். மிருதுளா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
நடுங்கி கொண்டிருக்கும் அவள் கைகளை பார்த்து, “இட்ஸ் ஹாட்… கேர்ஃபுல் ஓகே…” என்றான். அவனுடைய எச்சரிப்பில் இருந்த அக்கறை அவள் கவனத்தில் பதிந்தது. ‘சரி…’ என்பது போல் தலையசைத்துவிட்டு கப்பை வாங்கி கொண்டாள்.
அவள் குடித்து முடிக்கும்வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதன் பிறகு பூஜாவை அழைத்து, “மிருதுளாவை ரூம்க்கு கூட்டிட்டு போ…” என்றான்.
மிருதுளாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் பூஜா. பத்தடி எடுத்து வைத்திருக்க மாட்டார்கள்.
“பூஜா” – அவன் குரல் குரல் இடையிட்டது.
“எஸ் அர்ஜுன்” – நின்று திரும்பிப் பார்த்தாள் பூஜா.
“ஷி இஸ் லிட்டில் வீக்… ஸ்டே வித் ஹர்….” – உணர்வுகளற்ற குரலில்தான் கூறினான். ஆனால் பூஜாவின் புருவம் மேலேறியது.
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
super epi ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Sema story
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
wow superrrrr interesting ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Kallukkul eeram….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Very excited for the next episode
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
miru ivanidam ore kundil uyirai vitturukalaam ……..un idayam urudiyaa thidikuthu………
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Wow
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Emily Peter says:
Bhayamuruthiye Arjun unmaiya vara vazhaithu viduvano? Eagerly awaiting next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
very very super ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
கதை சுவாரசியமாக செல்கிறது…..
எழுத்துநடை அற்புதம்….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Superrr