Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 45

ஸ்ரீயின் கடிதத்தைப் பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்தப் பகல் முழுதும் அவனும் துரையும் தேடி அலையாத இடம் என்று எதுவுமே இல்லை.

தண்ணீர் பாட்டிலும் கையுமாகத் திரிந்தான்.

மாலை ஏழு மணிக்கு ராஜன் கோபியிடம் உடனே தன் வீட்டிற்கு வரச்சொல்லி கைபேசியில் அழைத்தான். ராஜனின் பதட்டத்தை அறிந்தவன் உடனே வருவதாகச் சொன்னான்.

சொன்னதுபோல் பத்து நிமிடத்தில் வந்தவன் ராஜன் முகத்தைப் பார்த்து திடுக்கிட்டான். “என்னடா ஆச்சு?”

ராஜன் ஒன்றும் பேசாமல் கடிதத்தை வந்தவன் கைகளில் கொடுத்தான். கடிதத்தை வாசித்த கோபி என்ன சொல்லி ராஜனைத் தேற்றலாம் என்று நினைத்தபோது ராஜன் அவனிடம் , “மசூத் ஃபோன் ஸ்விச்ட் ஆஃப். அவன் வேலைக்கு இன்று வரவேயில்லையாம். தனு மோகனா ஃபோனும் ஸ்விச்ட் ஆஃப். விஷயத்தைச் சொன்னதும் டி.எஸ்.பி யிடம் நல்லா திட்டு வாங்கினேன். அவர் என்னை கரூர் பிரான்சுக்கு மாத்தப்போறாராம்.அவர் சொல்லும் பொண்ணு கழுத்தில் நான் மூன்று மாதத்தில் தாலி கட்டணுமாம். எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்.. ”

“என்னால் ஸ்ரீயை கண்டுபிடிக்க முடியாது ராஜன். உன்னாலும் முடியாது. டி.எஸ்.பி யை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது. உனக்கும் அது தெரியும்! ”

“கரெக்ட்!” என்று தன் முன்னே வைத்திருந்த பாட்டிலைத்திறந்த ராஜன் சொன்னான் “டேய் கோபி. அவள் என்கிட்ட சரின்னு சொன்னாடா! ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசலை. அவ ரொம்ப நல்லவடா கோபி!” என்று அவன் முடித்த போது அவன் மனஉறுதி உடைந்தது. திடமான ராஜன் உடைந்தான்.

ராஜன் தன்னை மறக்கும் வரை அவனுக்கு அளவாக ஊற்றிக் கொடுத்தவன் இரண்டு நாட்களுக்கு அவனுடன் இருந்து ஆக வேண்டியதை கவனித்தான். ராஜன் இரண்டு நாட்களில் சகஜமானான். ஸ்ரீயைப் பற்றி தெளிவான முடிவு எடுத்துவிட்டான். அவளை நினைப்பதில் இனி எந்தப் பயனும் இல்லை என்பதை சந்தேகமற புரிந்துகொண்டான்.

ராஜன் கரூர் செல்லும் முன் திலிப்பை வரவழைத்து பேசினான்.

“பவித்ராவை ரேப் பண்ணி கொன்ற அந்த நாலு பேர் ஃபோட்டோ இதிலிருக்கு திலிப். என்னால் ஒருத்தனை தான் பிடிக்க முடிஞ்சது. மற்றவனுங்க எங்க என்றே தெரியலை. அது உன் மாமாவுக்குத்தான் தெரியும். அவனுங்களோட கலர் ஃபோட்டோ பிளாக் அனட் வைட் ஃபோட்டோன்னு எல்லாம் இருக்கு இதில். ஆனால் ஆளுங்கதான் எங்கன்னு தெரியலை. நான் டிரான்ஸ்ஃபர் ஆகிப் போறேன். எதுவும் ஹெல்ப் வேணும்ன்னா என்கிட்ட கேளுங்க. நான் என் வேலையைப் பார்க்கப்போறேன். நீங்க உங்க வேலையை பாருங்க. நீங்க பவித்ராவை மறந்திடுங்க. நானும்..” என்றபோது நிறுத்தினான்.

திலிப் சிங்கப்பூர் சென்ற பிறகு ராஜன் சொன்னதை மட்டும் நடைமுறைப் படுத்தவேயில்லை. பவித்ரா என்பவள் அவன் அழுதபோது சிரிக்க வைத்த அழகிய பொம்மை அல்லவா? அதனால் நினைக்கத் தெரிந்த மனதிடம் மறந்திடாதே என்று சொல்லிக்கொண்டேயிருந்தான்.

 

நான்கு வருடங்கள் கடந்த பிறகு…

வெங்கட் இந்த ஸ்ரீயின் வழக்கைதான் தலைவலிக்க தலைவலிக்க முடித்துவிட பாடுபட்டான். “கான்ஸ்டபிள் முத்தையா நீங்க ராஜன் கேஸ் ஃபைல் தரமுடியுமா? ”

“சார் அது அவர் கன்டிரோல்லதான் இருந்துச்சு. திடீரென்று அவரை டிரான்ஸ்பர் செய்ததால் ஃபைலை அவர்கிட்டயிருந்து வாங்கமுடியல்ல. ”

“முத்தையா சார் கேஸ் ஃபைல் இல்லை என்றால் நான் எப்படி டீல் பண்ண?”

“அவர்கிட்ட ஃபோன் போட்டு கேட்கிறேன். ”

சில மணி நேரத்தில் முத்தையா ஃபோன் பேசிவிட்டு வந்தார். தலையைச் சொரிந்து நின்றவரிடம் வெங்கட் கேட்டான்  “போன காரியம் என்ன சார் ஆனது?”

“சார் ராஜன் சார் தன்னிடம் அப்படி பைல் எதுவுமே இல்லை என்று சொல்றாப்ல.. நான் வேணும்ன்னா திரும்ப தேடிப்பார்க்கவா? ”

“வேண்டாம் முத்தையா. கம்பியுட்டரில் இருக்கும். நான் போய் பார்த்துக்கிறேன். ”

“சார் ” என்று தலையைச் சொரிந்துகொண்டே நின்றார் முத்தையா.

“அதான் நானே பார்த்துக்கிறேன் என்று சொன்னேன்ல்ல முத்தையா? ”

“அது வந்து.. ”

“என்ன முத்தையா சொல்லணும்? ”

“வெங்கட் சார்.. நீங்க தப்பா எடுக்கவில்லை என்றால் நான் ஒண்ணு சொல்லவா? ”
“ம்.. ”
“பவித்ரா மேலதான் தெஃப்ட் கேஸ் போட்டோம். ஸ்ரீ மேல கேஸ் கிடையாது. பவித்ரா இறந்ததும் கேஸை மூடியாச்சு. அதனாலதான் ஸ்ரீ ஃபோட்டோ நம்மகிட்ட இல்லை. ஸ்ரீ பொண்ணை ஏன் தெரியுமா கௌன்சிலர் ஆளுங்க தேடுறாங்க? அந்த பொண்ணு கௌன்சிலர் மீது கல் வீசிடுச்சு. பவித்ரா இறந்த போது அவன் வீட்டு தெரு முனையில் வச்சு வந்து கல் வீசிடுச்சு. முதலில் கல் வீசியது யாருன்னு தெரியல. வீசின கல்லில் பவித்ரா என்று கொட்டை எழுத்தில் இருந்தது. தனுவை வைத்து ஸ்ரீயை பிடிக்க பார்த்தானுங்க. ஆனால் அதுவும் முடியலை. ”

மேலும் தொடந்தார்
“ஸ்ரீ இங்கதான் இருப்பான்னு ஒரு நம்பிக்கை அவனுங்களுக்கு இருக்கு. பொட்டபுள்ள எங்க போயிடப்போறா? அதுக்காகத்தான் கௌன்சிலர் ஆளுங்க ஸ்ரீ யைத் தேடுவதே. ராஜன் சாருக்கு அந்த பொண்ணுகூட பழக்கம் இருந்தது. கொஞ்ச நாள் தான் பழக்கம் இருந்தது. ராஜன் சார் இங்க டியுட்டியில் இருந்தப்ப நான்தான் நம்ம போலீஸ் ஜீப் ஓட்டினேன். சார் எப்போதும் வீட்டில் முக்கியமான ஃபைலோட காப்பிகளை வச்சிருப்பார். ”

“அவர் திடீரென்று மாற்றுதல் ஆகிப்போனதும் அவர் வீட்டு சாமான்களை குவார்டஸின் குட்டோனில் போடச் சொன்னார். அங்க தான் போட்டு வச்சிருக்கேன். அதிலே நிரைய ஃபைல் பார்த்தேன். அங்க போய் பார்க்குறீங்களா? ”

“ம்.. தாங்க அட்ரஸை ” என்று போலீஸ் குவார்டர்ஸின்
குட்டோன் முகவரியை குறித்துக்கொண்டான்.




Comments are closed here.

You cannot copy content of this page