நிழல்நிலவு – 9
11666
12
அத்தியாயம் – 9
“மே ஐ கம் இன்… லேடீஸ்…” என்றபடி உள்ளே வந்த அர்ஜுன் ஹோத்ரா மிருதுளா அமர்ந்திருந்த நிலையைப் பார்த்துவிட்டு தயங்கி நின்றான். அவன் நெற்றி சுருங்கியது. “என்ன ஆச்சு?” என்றான் குழப்பத்துடன்.
சுமன் உதவிசெய்ய மிருதுளா கைகளை தரையில் ஊன்றி எழுந்தாள். அவள் நெற்றியில் இருந்த புடைப்பு அவன் கண்களை கூர்மையாக்கியது.
“நத்திங் பாய்… நாங்க ஜஸ்ட் பேசிட்டு இருந்தோம்…” – சுமன்.
“நீ என்ன பண்ணற இங்க?”
“பூஜா பிஸியா இருக்காங்க”
“சோ…?”
“என்னை மிருதுளா கூட இருக்க சொன்னாங்க” – அர்ஜுன் ஹோத்ரா பேசவில்லை. ஓரிரு நிமிடங்கள் அமைதியாக நின்றவன், “சுஜித் இங்க வந்தானா?” என்றான் உள்ளடங்கிய குரலில்.
சுமன் பதில் சொல்ல தயங்கினாள். ஆனால் சொல்லாமல் தவிர்க்க முடியாது. “எஸ்… ஹி கேம்… டு மீட் மீ…” என்று முணுமுணுத்தாள்.
“ஐ அண்டர்ஸ்டாண்ட்…” – தலையை மேலும் கீழும் ஆட்டினான். பார்வை மிருதுளாவிடம் இருந்தது. அவள் அவனுடைய பார்வையை தவிர்த்து வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹொவ் ஆர் யு ஃபீலிங் நௌ?” – அவனை நேரடியாக பார்க்கவில்லை என்றாலும் அவன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் இப்போது தன்னிடம் தான் கேட்கிறான் என்பதையும் மிருதுளா உணர்ந்தாள்.
“ஐம் குட்…” – மெல்லிய குரலில் கூறினாள். அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அங்கிருந்து வெளியேறிய அர்ஜுன், அலைபேசியை எடுத்து டயல் செய்தான்.
“எஸ் அர்ஜுன்…” – பூஜா.
“மீட் மீ இன் மை ஆபீஸ் ரைட் நௌ” – ‘இப்போவே என்னை ஆபீஸ்ல வந்து பாரு…”
“அர்ஜுன்… செஷன் போயிட்டு இருக்கு. வில் பி தேர் இன் டென் மினிட்ஸ்”
“ரை…ட்… நௌ… யு ஹியர்ட் மீ?” – ‘இப்..போ..வே… காதுல விழுந்ததா??’ – சீறினான். மறுத்துப் பேசமுடியாமல், “எஸ்…” என்று முடித்துவிட்டு உடனே அர்ஜுனை சந்திக்கச் சென்றாள் பூஜா.
“சோ… யு ஆர் டூ பிஸி… என்னோட இன்ஸ்ட்ரக்ஷன்ஸை கூட ஃபாலோ பண்ண முடியாத அளவுக்கு… ரைட்?” – குத்தலாகக் கேட்டான்.
“மாலிக் உங்ககிட்ட பேசிக்கறதா சொன்னாப்ல…”
“ஐ திங்க்… நான் தான் உன்னோட பாஸ்… நாட் ஹிம்…”
“ஐம் சாரி… நா…” – “எனக்கு உன்னோட சாரியெல்லாம் வேண்டாம்… சின்சியாரிட்டி மட்டும்தான் வேணும்… ஆம் ஐ க்ளியர்?” – அவள் சொல்ல வருவதை கேட்கக் கூட பொறுமையில்லாமல் கடுப்படித்தான்.
அவள் முகம் விழுந்துவிட்டது. “எஸ்…” – தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“இன்னொரு தரம் இந்த தப்பு நடக்கக் கூடாது. லீவ் நௌ…” – முகத்தில் அடிப்பது போல் பேசி அவளை வெளியேற்றிவிட்டு அலைபேசியை எடுத்து அடுத்த நம்பரை டயல் செய்தான்.
**********************
“மிருதுளா, நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… நா இப்போ வந்துடறேன்” – அர்ஜுன் ஹோத்ரா அங்கிருந்துச் சென்றதும் மிருதுளாவிடம் கூறினாள் சுமன்.
அவள், யாரை பார்க்கச் செல்ல துடிக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட மிருதுளா அவளை பைத்தியம் என்றே நினைத்தாள்.
அவள் நினைத்தது போலவே சுஜித் சிங்கை தேடிதான் வீடு முழுக்க சுற்றிக் கொண்டிருந்தாள் சுமன். இறுதியாக அவனை ஜிம்மில் கண்டுபிடித்தாள்.
வியர்வை சொட்டச் சொட்ட பஞ்சிங் பேகை மூர்க்கத்தனமாகக் குத்திக் கொண்டிருந்தான் சுஜித். தன்னிடம் வாங்கியதை பலமடங்காக பஞ்சிங் பேகிடம் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிய சுமன் அவனுடைய முதுகை பார்த்தபடி வாயிலிலேயே நின்றுவிட்டாள்.
அவ்வளவு இறுக்கமான மனநிலையில் இருந்த போதும் கூட அவளுடைய வருகையை அவன் உணர்ந்தான். ஆனால் வீம்புடன் திரும்பிப் பார்க்காமல், பஞ்சிங் பேகை இன்னும் வேகமாகக் தாக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கோபத்தின் அளவை அதில் புரிந்துக் கொண்ட சுமன் உள்ளே சென்றாள். அவனுக்கு வெகு அருகில் வந்து அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றாள்.
அப்போதும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டு கை வலிக்க வலிக்க அந்த பையோடு யுத்தம் செய்தவன், ஒரு கட்டத்தில் ஊசலாடிய பையை பிடித்து நிறுத்திவிட்டு மூச்சிரைக்க நின்றான்.
இறுகிய முகமும் விரைத்திருந்த உடலும் அவனுடைய டென்ஷனை பறைசாற்றியது. சற்று நேரம் அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுமன், “எதுக்கு என்னை தேடி வந்த?” என்றாள் வறண்ட குரலில்.
சட்டென்று திரும்பி அவளை முறைத்தான் சுஜித். “என்ன பார்க்கற? ரொம்ப நல்லவன் மாதிரி அடி வாங்கிட்டு அப்படியே அமைதியா வந்துட்ட… திருப்பி கொடுத்திருக்க வேண்டியது தானே?” – கடுப்புடன் கேட்டவள் அடுத்த நொடி அவனுடைய இரும்பு கரங்களுக்குள் சிறைப்பட்டு மூச்சுக்காற்றிற்கு திணறினாள். பிறகு அடங்கி அவனோடு ஒன்றினாள். உணர்ச்சிகரமான ஆழ்ந்த அந்த முத்தத்தில் அவளுடைய கோபமெல்லாம் தண்ணீரில் விழுந்த பஞ்சுமிட்டாய் போல் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது.
நொடிகள் நிமிடங்களாக மாறியபோது அவனிடமிருந்து விடுபட்டவள், சிவந்துவிட்ட இதழ்களை புறங்கையால் துடைத்தபடி, “ராஸ்க்கல்… இதுக்குத்தான் துரத்திக்கிட்டு இருந்தியா?” என்று கொஞ்சியபடி செல்லமாய் அவன் தோளில் தட்டினாள்.
அப்போதும் அவன் முகம் உர்ரென்றுதான் இருந்தது. ‘அடப்பாவி! இப்படி ஒரு பேஷனேட் மேட்டருக்கு அப்புறமும் எப்படிடா பட்ட மரம் மாதிரி விறைப்பாவே இருக்க!!! திருத்த முடியாதுடா… உன்னையெல்லாம் திருத்தவே முடியாது…’ – அவள் முகம் அஷ்டகோணலானது.
அவளுடைய எண்ணஓட்டம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அதை பொருட்படுத்தும் மனநிலைதான் அவனுக்கு இல்லை.
“ஏன் என்னை ரெண்டு நாளா அவாய்ட் பண்ணின?” – கையில் அணிந்திருந்த கிளவுஸை கழட்டி எறிந்துவிட்டு, துண்டை எடுத்து வியர்வையை துடைத்தபடி கேட்டான்.
“நீ பண்ணியிருக்க காரியத்துக்கு அவாய்ட் பண்ணாம கொஞ்சுவாங்களா?”
கழட்டிப் போட்டிருந்த டீ-ஷர்ட்டை அணிந்தபடி, “என்ன பண்ணினேன்?” என்றான் அலட்சியமாக.
“நடிக்காத மேன். ஐ நோ ஹூ யு ஆர்… ரித்விக் என்னோட ஃபிரண்ட். அவனை எதுக்கு அப்படி போட்டு அடிச்ச?”
“அவன் சொன்னானா? நா அடிச்சேன்னு சொன்னானா?” – கோபத்துடன் சீறின்.
“ஆஹா… சொல்லுவானே…!!! உன்ன மாதிரி ராட்சசன் என் பக்கத்துல இருந்தா யாரு தான் என் கூட பேசுவாங்க…”
“போயேன்… நான்தான் ராட்சசனாச்சே… எதுக்கு என்கூட இருக்க? போக வேண்டியதுதானே?” – நெருப்பு தணல் போல் சிவந்துவிட்டது அவன் முகம். அந்த கோபமெல்லாம் அவளை துளியும் அச்சுறுத்தாது.
“போனா விட்டுடுவியா? ரெண்டு நாளா சுத்தி சுத்தி வந்த?” – சுருக்கென்று குத்திவிட்டாள்.
கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன், அவள் கையை பிடித்து தரதரவென்று இழுத்துவந்து ஜிம்மிற்கு வெளியே தள்ளி, “போ… இனி என் பக்கம் வரவே வராத. வி ஆர் டன்…” என்றான்.
சட்டென்று நுனி காலில் எக்கி, அவன் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் சேர்த்தாள். பட்டுப்பூச்சியின் மென்மை அவன் இதயத்தைத் தொட்டது. உள்ளே சூழ்ந்திருந்த இருளெல்லாம் ஒளியாய் மாறி அவன் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து ஊற்றெடுத்த இன்பம் அவனை முழுவதுமாக ஆக்கிரமிக்க, அவளுடைய துவக்கத்தை அவன் கைப்பற்றி கோலோச்சினான்.
நிமிடங்கள் சில கழிந்த பிறகு அவள் விலகினாள். அவன் முகம் பார்க்காமல் திரும்பிச் செல்ல எத்தனித்தாள். சட்டென்று அவள் கையைப் பிடித்துத் தடுத்து, “டோன்ட்… டூ திஸ்… டு மீ…” என்றான். அவன் கண்கள் கெஞ்சின.
சுமனின் மனம் இளகியது. ஆனால் இறுக்கிக் பிடித்துக் கொண்டாள். அவனுடைய தவறை அவனுக்கு உணர்த்த வேண்டும்.
“நீ ஏன் அப்படி செஞ்ச?”
“அவன் ஏன் உன்ன வெளியே கூட்டிட்டு போனான்?”
“யு ஆர் ஜஸ்ட் எ ப்ளடி பொஸசிவ் பீஸ்ட்…” – கடுப்புடன் கூறினாள்
சற்று நேரம் அவளை வெறித்துப் பார்த்த சுஜித், “எஸ்… ஐ ஆம்..” என்றான் அழுத்தமாக. சுமன் பற்களை நறநறத்தாள்.
இவனுடைய அக்கப்போருக்கு அளவே இல்லையா என்றது அவள் உள்ளம். என்றைக்கு இவர்களுக்குள் காதல் மலர்ந்ததோ அன்றிலிருந்து சிறிது சிறிதாக பல கெடுபிடிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஆளானாள் சுமன்.
ஆரம்பத்தில் தினமும் வீட்டுக்கு சென்று வந்து கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு செல்கிறாள். அதுவும் சுஜித்தின் துணையோடு. வீட்டில் இருக்கும் நாட்களில் வெளியே செல்லக் கூடாது. அப்படியே சென்றாலும் அவனிடம் சொல்லிவிட்டு அவன் துணையோடுதான் செல்ல வேண்டும். மீறினால் இப்படித்தான்…. ரித்விக்கை அடித்தது போல் ஏதேனும் மூர்க்கத்தனமாக செய்துவிடுகிறான். இவனை எப்படி கையாள்வது! – திணறினாள் சுமன்.
அவளுடைய மனப்போராட்டத்தை அவனால் உணர முடிந்தது. கலக்கமுற்ற காதலியின் முகத்தை கைகளில் ஏந்தி, “நா பயப்படறேன்… உனக்கு புரியலையா?” என்றான்.
“அந்த அளவுக்கு நா ஒர்த் இல்ல சுஜித். என்னைய கடத்தியோ… இல்ல கொலை செய்தோ… யாருக்கு என்ன ஆகப் போகுது? கோர்த்தால வேலை செய்ற எத்தனையோ பேர்ல நானும் ஒருத்தி. அவ்வளவுதான்… நீ தேவையில்லாம பயப்படற”
அவன் இல்லை என்பது போல் தலையசைத்தான். “நீதான் என்னோட ஸ்ட்ரென்த்… அதே சமயம் நீதான் என்னோட வீக்கனஸும் கூட. நா ரிஸ்க் எடுக்க விரும்பல”
“ஹும்ம்ம்…” – பெருமூச்சுவிட்டாள் சுமன். அதே நேரம் சுஜித்தின் பேண்ட் பாக்கெட்டிலிருந்து அலைபேசி அழைத்தது.
“எஸ் அர்ஜுன்…” – “ஐம் கம்மிங்…” என்று அழைப்பிற்கு பதிலளித்துவிட்டு, “நா போகணும்…” என்றான் அவளிடம்.
அழைப்பது யார், எதற்காக என்பதை புரிந்து கொண்ட சுமன், “மிருதுளாவோட ரூம்ல நடந்ததை பற்றி கேட்டா பொறுமையா பதில் சொல்லு…” என்று அறிவுரை கூறி அவனை அனுப்பிவைத்தாள்.
*************************
“யு ஹாவ் டு ஒர்க் ஆன் யுவர் ஆங்கர் கண்ட்ரோல்… எமோஷன்ஸை கட்டுப்படுத்த தெரிஞ்சவன் தான் இங்க வேணும். உணர்ச்சிவசப்படறன் இல்ல…” – ‘உன்னோட கோவத்தை குறைக்கற வழியைப் பாரு…’ என்று உள்ளடங்கிய கோபத்துடன் வார்த்தைகளை துப்பினான் அர்ஜுன் ஹோத்ரா.
“என்ன ஆச்சு?” – முகம் இறுக அழுத்தமாகக் கேட்டான் சுஜித்.
“யு நோ வெரி வெல்” – ‘உனக்கு நல்லாவே தெரியும்’
தெரிந்தது… நன்றாகவேத் தெரிந்தது… “அந்த டாஷ் என்னை பற்றி கம்பளைண்ட் பண்ணினாளா?” என்றான் முகம் சிவக்க.
“மைண்ட் யுவர் லாங்க்வேஜ்…” – பல்லை கடித்தான் அர்ஜுன் ஹோத்ரா.
அவன் முகத்திலிருந்த கடுமையை கண்டுவிட்டு சட்டென்று அமைதியாகிவிட்டான் சுஜித். பிறகு தன்னிலை விளக்கமாக, “நா சுமனை பார்க்கத்தான் அங்க போனேன். ஷி இன்டெரெப்டட் இன் மை வே… அவதான் என்கையை பிடிச்சு இழுத்து, ஏதோ வில்லனை பார்த்து கத்தற மாதிரி அனாயிங்கா கத்தினா. நா அவளை ஸ்டாப் பண்ணத்தான் ட்ரை பண்ணினேன். கீழ விழுந்துட்டா… இட்ஸ் ஆன் ஆக்சிடென்ட்” என்றான்.
மிருதுளாவின் நெற்றியில் பட்டிருக்கும் காயத்திற்கு இந்த விளக்கம் போதாது என்று உறுமியது அவன் உள்ளம். குறையா கோபத்துடன் நண்பனை வெறித்துப் பார்த்தவன், “சுமனை பார்க்கணும்னா நீ சுமன் ரூமுக்குத்தான் போயிருக்கணும். மிருதுளாவோட ரூமுக்கு இல்ல” என்றான்.
சுஜித்தின் உடல் விறைத்தது. அசையாமல் சிலை போல் நின்றான்.
“இதுவே கடைசி முறையா இருக்கட்டும்” என்று கூறிவிட்டு அவனிடம் முகம் கொடுக்காமல் அலைபேசியை எடுத்து அடுத்த நம்பரை டயல் செய்தான். – வழக்கறிகர் அஞ்சானி லால்…
*********************
அர்ஜுன் ஹோத்ராவின் அறையிலிருந்து வெளியேறிய சுஜித்தை பாதிவழியில் எதிர்கொண்டாள் சுமன்.
“என்ன ஆச்சு?” – இறுகிப்போயிருந்த அவன் முகத்தை கண்டு சஞ்சலப்பட்டாள்.
“ஷி இஸ் எ விட்ச்… சூனியக்காரி…” – பொங்கினான்.
“யாரு?” – புரியாமல் கேட்டாள். எரிச்சலுடன் அவளை பார்த்தான் சுஜித். அவன் பார்த்த பார்வையிலேயே தெரிந்துவிட்டது, அவன் மிருதுளாவைத்தான் குறிப்பிடுகிறான் என்பது.
“ஹேய்… அவளை ஏன் திட்டற? அவ எனக்கு உதவி செய்றதா நினச்சு உன்கிட்ட சத்தம் போட்டுட்டா… விடுப்பா…”
“உனக்கு எதுவும் தெரியாது… அவளாலதான் இப்போ எனக்கு அர்ஜூன்கிட்ட கெட்டப் பேரு… அவ சரியில்ல…. அவ போட்டுக்கிட்டு இருக்க முகத்திரையை நா கிழிச்சு எரியுவேன்… சீக்கிரமே… ஒரு சான்ஸ்… ஒரே ஒரு சான்ஸ் மட்டும் கிடைக்கட்டும்… பார்த்துக்கறேன்…” – கங்கணம் கட்டினான்.
12 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
nice epi ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
Hi, Nithya update eppo poduvinga. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Update pannitten pa…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Emily Peter says:
Arjun unakku yenda intha akkara Mirudhula mela? Some thing wrong? Un mind voice yengalukku kedkuthu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Bselva Kannan says:
Ayyo Kai pullaya poi kattadurai range ku elarum ninachu ipidilam sabatham poduratha ninacha siripa varuthu.vadivelu style la avvvnu kathanum.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Illatha mugathiraya ivan epdi kalatta poran
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Ada loosu payale ( sujith) antha alavellam ava worth illa da…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
superrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Superb episode
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
ha ha ha… nice episode….
I’m enjoying….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
sujith unakenral suman devatai.ava suniyakaariya…………edakudma arjunidam vaangi kaatta poriyo…………