Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 46
966
0
ராஜன் குவார்டஸ்
ராஜன் தங்கியிருந்த போலீஸ் குவார்டஸுக்கு வெங்கட் போனான். தூசி படிந்த அந்த அபார்ட்மன்டில் எண்ணி மூன்று போலீஸ் குடும்பங்கள் தான் இருந்தது.
இ.பி வயர் அங்கும் இங்குமாய் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் தலைக்கு சற்றுமேல் தொங்கிக் கொண்டிருந்த வயரை தனது பால்பாயின்ட் பென் கொண்டு விலக்கிவிட்டபடி குடோனின் அறைவாசலில் போய் நின்றான். வாசலில் பெரிய பூட்டு தொங்கியது. தான் கொண்டு வந்திருந்த டிபார்ட்மன்ட் சாவியால் திறக்கப் பார்த்தான். ஒரு பலனும் இல்லை. தனது கிட்பேக் எடுத்து கள்ளச்சாவிகொண்டு கதவைத் திறந்தான்.
உள்ளே சென்றவனால் மூச்சுகூட விட முடியவில்லை. தூசியும் ஒட்டடையும் பார்த்த இடத்தில் எல்லாம் இருந்தது. முகத்தில் தனது கர்சீப்பைக் கட்டிக்கொண்டு அறையில் ஸ்ரீயின் ஒரு ஃபோட்டோ கிடைக்குமா? என்று தேடினான். ஃபோட்டோகூட இல்லாமல் எப்படி கேஸ் நடத்தினான்? என்று மனதில் கேட்டுக்கொண்டான்.
சாமான்கள் இரைந்து கிடந்தது. ஒரு கட்டில் கிடந்தது. அதிலிருந்த தலையணையிலிருந்து எலிகள் ஓடியது. வெங்கட் வேகமாகச் சென்று சாத்தியிருந்த கதவுகளைத் திறந்துவிட்டான். எலிகள் வேகமாக வெளியே ஓடின.
‘ஷ்ப்பா’ என்று மூச்சுவிட்டவன் அடுக்களைக்குள் நுழைந்தான்.
பத்து எலிகள் கடித்தால் டிபார்ட்மென்டா காப்பாற்றும்? என்று தாமாக பேசிக்கொண்டே சென்றவன் காலில் ஏதோ பட்டது.
குனிந்து பார்த்தவன் கண்ணில் பட்டது ஒரு கூண்டு. அதில் இருந்த இறக்கைகள் அது ஒரு பறவைகள் கூண்டு என்றது. கூண்டை ஓரமாக வைத்தவன் கைபேசியில் இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு அழைப்பு விடுத்தான்.
அரை மணி நேரத்தில் இருவரும் வந்தனர். இருவரும்
சுத்தம் செய்யச் செய்ய வெங்கட் ஏதேனும் க்ளு கிடைக்குமா என்று பார்த்தான். டைனிங் டேபிலில் பழைய நியுஸ்பேப்பர்கள் ஒரு கோப்புபோல கட்டப்பட்டிருந்தது. நியுஸ்பேப்பர் கட்டைப் பிரித்து அதன் வருடத்தை குறித்துக்கொள்ள எண்ணினான் வெங்கட். ஆனால் கட்டின் கயிரை பிரித்து எடுத்தபோது அதிலிருந்து ஒரு நான்கு பேப்பர்கள் கீழே விழுந்தது. அந்த பேப்பர்கள் ஒன்றாகச் சேர்த்து பின் அடிக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த முதல் இரண்டு வரிகளைப் படித்தான் வெங்கட்.
லெட்டரின் முதல் வரி ஆரம்பிக்கும் முன் ஓம் என்று எழுதியிருந்தது.
பிறகு அதை அப்படியே பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
அதன்பிறகு தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இரு கான்ஸ்டபிளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
வீட்டில் அமைதியாக அந்த லெட்டரை பிரித்துப் படித்தான். படித்தவனால் அதிலிருந்த வார்த்தைகளை மனதிலிருந்து விரட்ட முடியவில்லை. ஸ்ரீ ‘ராஜன்’ என்று அழைத்து எழுதிய ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் நிரம்ப இருந்தது. ராஜனை விட்டுச் செல்லும்முன் ஸ்ரீ எழுதிய கடிதம்.. இல்லை ‘மரண வாக்கமூலம்’ இது என்று நினைத்துக் கொண்டான் வெங்கட்.
‘எவ்வளவு மச்சக்காரன் இந்த ராஜன்? ஐ லவ் யூ என்ற மூன்றே வார்த்தையை அந்த வார்த்தையையே உபயோகிக்காமல் நாலு பக்கத்தில் சொல்ல முடியுமா?’ ‘ பொண்ணுங்க இவ்வளவு நல்லவங்களா?’ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பத்து நொடியில் பத்து கேள்விகள் மனதில் அடுக்கிவிட்டான். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது. ஸ்ரீ ராஜனை நேசித்ததால்.. இல்லை ராஜனை அவள் மராப்புபோல இடதும் வலதும் கட்டிக்கொள்ள ஆசைபட்டதால்.. ராஜனுக்கு பிரச்சனை நேராமல் பிரிந்து சென்றாள் என்பதே அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதிலாக இருந்தது.
‘இவ்வளவு தூரம் தன்னை காதலித்த பெண்னை ராஜன் எப்படி விட்டான்? சரியான சுயநலக்காரன். கல்யாணம் குழந்தை என்று அவன் நிம்மதியாக செட்டில் ஆகிட்டான். பாவம் ஸ்ரீ என்ன ஆனாளோ? கோழைப்பயல்.
கௌன்சிலர் ஆளுங்களுக்காக ஸ்ரீயை விட்ட தொடை நடுங்கி’ என்று ராஜனை திட்டியவன் தனது டயிரியில் அவனது அட்ரஸை நோட்டம்விட்டான். ராஜனை சந்திக்கும் முன்பாக கௌன்சிலரை சந்திக்கும் வேலை என்று மனதில் ஒரு அட்டவணை தயார் செய்தான். தான் சந்திக்கப்போகும் இரண்டு நபர்களையும் வியர்க்க வியர்க்க எப்படி வறுத்தெடுக்கலாம்? என்று மனதில் ஒரு வரைபடம் வரையத் தொடங்கினான். வெங்கட் வரைந்துவிட்டால் அது பென்சிலால் வரைந்த புலியாக இருந்தாலும் கர்ஜிக்கும் என்பதை காக்கிச் சட்டை போட்ட யாவருமே அறிவர். நாளை அவனை சந்திக்கப்போகும் அவ்விருவரும் அறிவது எப்போது?
கிசு கிசு:
ஏட்டையா பழநிவேல் : கிரி கிரி இங்க பக்கத்தில் வாயேன். வெங்கட் சார் ஏதோ ஃபைலை இன்னைக்கு எடுத்தாராம். ஸ்ரீ கேஸை கிட்டத்தட்ட முடிச்சிட்டாராம்.
ஏட்டையா கிரி: மசூத்துக்கும் ஸ்ரீக்கும் வட பழநி கோயில்ல தான கல்யாணம் முடிஞ்சது? அப்படித்தானே நமக்கு நியுஸ் வந்தது? அந்த மசூத் ஸ்ரீயை கட்டிக்கிட்டு எங்க கூட்டிட்டு போயிருப்பான்?
ஏட்டையா பழநிவேல்: வெங்கட் சார்கிட்ட கேட்போமா?
ஏட்டையா கிரி: போப்பா அதுக்கு நீயே என்னை கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கலாம். அவனிடம் மனுஷன் பேச முடியுமா? ஆமாம் இந்த ராஜன்சார் ஏன் ஸ்ரீகிட்ட மாட்டினாரு? எப்படிப்பா அந்த மனுஷன் விழுந்தான்?
ஏட்டையா பழநிவேல் : ஸ்ரீயை நீ பாத்திருக்கியா?
ஏட்டையா கிரி: ம்! கொஞ்சம். முதல்நாள் விசாரணைக்கு அந்த பொண்ணை ராஜன் சார் கூட்டிட்டு வந்தப்ப!
ஏட்டையா பழநிவேல் : கண்ணாடி போட்டிருந்தியா?
ஏட்டையா கிரி: ம் போட்டிருந்தேன்!
ஏட்டையா பழநிவேல் : இனி கண்ணாடி போடாத!
ஏட்டையா கிரி: ஏன்?
ஏட்டையா பழநிவேல் : ஏன்னா அது உனக்கு எந்த விதத்திலும் உபயோகப்படலை. உன் கண்ணாடி ஒழுங்கா வேலைசெய்திருந்தா இந்த கேள்வியே கேட்க மாட்ட! வேலை செய்யாத கண்ணாடியை போட்டுக்கிட்டு ஏன் உன் கத்தி மூக்கை வழுக்கையாக்குற? அப்புறம் இந்த ராஜன் என்ன பிரம்மரிஷியா? ஸ்ரீயிடம் மயங்காமல் இருக்க? ஏதோ அவன் நல்ல நேரம் டீசன்டா ஒதுங்கிடுச்சு அந்தப்பொண்ணு. ராஜனும் டிரான்ஸ்பர் வாங்கிட்டு கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகிட்டான்.
ஏட்டையா கிரி: அப்ப நீ ஸ்ரீயைப் பார்த்திருக்கியா?
ஏட்டையா பழநிவேல் : ஓ! பார்த்திருக்கேனே!
ஏட்டையா கிரி: நாலு வருஷம் முன்னே கௌன்சிலர் ஆளுங்க கேட்டப்ப இல்லை என்று சொன்ன?
ஏட்டையா பழநிவேல் : எவன் அடி வாங்குறது? அந்தப் பொண்ணு ஒரு கோடி எடுத்திட்டு ஓடிடுச்சாம்! அவளை தெரியும் என்று சொல்லி யார் உதை படுறது? போப்பா!
Comments are closed here.