Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 47
1234
0
வெங்கட் காலிங் பெல் அழுத்த கதவு திறந்தது.
வேலைக்காரனிடம் தான் வந்திருப்பதை அவனது எஜமானரிடம் கூறச் சொன்னான் வெங்கட். மூன்று நிமிடங்கள் வாசலில் இருந்த பூந்தொட்டிகளைக் கவனித்துக்கொண்டிருந்த போது கதவு மறுமடியும் திறக்கப்பட்டது.
கௌன்சிலர் வெங்கட்டிடம் ஏன் என்ன விஷயம் என்று எதுமே கேட்காமல் அவனை அமர வைக்கச் சொல்லி வேலைக்காரனிடம் ஏவினார் போல. அவன் எதுவும் பேசாமல் வெங்கட்டை அமர வைத்துவிட்டு அன்றைய செய்தித்தாளை வெங்கட்டின் கைகளில் திணித்துவிட்டு நகர்ந்தான்.
அவன் சென்ற பிறகு பதினைந்து நிமிடத்தில் இன்னொருவன் வந்தான். அவன் வெங்கட்டை எங்கும் எதிலும் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிந்த அறைகளைத் தாண்டி மாடி அறைக்கு அழைத்துச் சென்றான்.
கௌன்சிலரின் மனைவி அவனிடத்தில் ஒரு டம்பளர் ஜுஸை வைத்தார். வைத்துவிட்டு அவன் எதிரே அமர்ந்துவிட்டார். தனது செல்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
மறுமுனையில் “சார் நாங்க ரெடி. நீங்க ஆல் செட்டா? ” என்றது ஒரு குரல்.
வெங்கட் கௌன்சிலர் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே “ம் ” என்றான்.
கௌன்சிலர் வந்து உட்காரும்முன் ராஜனின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
தனது வியப்பை கண்களில் காண்பித்துக்கொண்டே அவர் வெங்கட்டிடம் “பரவாயில்லை நாலு மாசத்தில் கேஸை முடிச்சிட்டீங்க. நான் இவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ் முடியும்ன்னு நினைக்கலை. என்ன ஸ்பீட்? கலக்கிட்டீங்க சார்! ” என்றபோது அவர் கைபேசி ஏர்டெல்லின் பாடலைப் பாடி ஒலித்தது.
சிரித்துக்கொண்டே செல்பேசியை எடுத்தவர் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடத்தில் சிரிப்பை முகம் இழந்திருந்தது. செல்பேசியை அணைத்துவிட்டு வந்திருப்பவனிடம் முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு சொன்னார் “சார் கொஞ்சம் அவசர வேலை. மேல் இடத்திலிருந்து ஃபோன். நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் வந்திடுறேன். அரை மணி நேரம் தான். வந்திடுவேன். கட்சி ஆஃபீஸ் போயிட்டு வந்திடுவேன். ” என்றார்.
ஆனால் போகும்முன் மறக்காமல் மனைவியிடம் திரும்பி “காஞ்சனா நீ சாரிடம் பேசிக்கிட்டிரு நான் வந்திடுறேன்.” என்றார்.
கௌன்சிலர் சென்றபிறகு வெங்கட் அசடாகக் காட்டிக்கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தான்.
காஞ்சனாவுக்கு ஏதோ தப்பாயிருக்கே என்ற உணர்வு அந்த சிரிப்பினால் வந்தேவிட்டது.
“நீங்க சாரிடம் பேசணும்ன்னு அவசரமா உங்க வேலையை எல்லாம்விட்டு விட்டு வந்திருப்பீங்க. ஆனால்… ”
“உங்ககூட தான் பேச வந்தேன் மேடம். நீங்க ஃபீரியா?” என்றபோது காஞ்சனாவுக்கு காலையில் குடித்த கீரின் டீ தொண்டையில் வந்துவிட்டு மீண்டும் குடலுக்குள் போனது.
“என்கிட்ட என்ன சார் பேசணும்? ”
“உங்க மொபைலுக்கு ஒரு ஃபோட்டோ வந்திருக்கு பாருங்க. அனுப்பினவங்க நம்பர் 07 என்று முடியும். ”
காஞ்சனா கையிலிருந்த ஃபோனை எடுத்து தனக்கு வந்திருந்த புகைப்படத்தைப் பார்த்தாள். பார்த்து முடித்த நொடி கைகள் நடுங்க ஃபோனை கீழே போடாமல் இருக்க அவள் பெருமுயற்சி செய்தாள்.
வெங்கட் பேச ஆரம்பித்தான், இல்லை சிங்கம் கர்ஜிக்க ஆரம்பித்தது “மேடம் அந்த ஃபோட்டோவில் இருப்பதை நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு டைமன்ட் நெக்லெஸ். ஐஸ்வர்யா ராய் தனது கல்யாணத்துக்கு அணிந்த நெக்லெஸின் எக்ஸாட் ரெப்ளிக்கா அது. நீங்க போன வருஷம் ஒரு சௌத் இந்தியன் ஸ்டார் கல்யாணத்திற்கு போட்டிருந்தீங்க. அதை ஃபோட்டோவில் பார்த்தப்ப நான்கூட முதலில் அடையாளம் கண்டுபிடிக்கலை பிறகு கௌன்சிலர் சார் எப்படி கண்டுபிடிச்சிருப்பார்? ம்? எனக்கே பத்து நிமிஷம் ஆனது. சாருக்கு பத்து வருஷம்கூட ஆகலாம். அவர் உயிரோட இருந்தால்.. ”
“ஆனால் அவன் நிறுத்தியபோது நீங்க என்ன
பேசுறீங்க? அவர் இப்ப வந்தால் என்ன பண்ணப்போறீங்க? எல்லாத்தையும் சொல்லப்போறீங்களா அவர்கிட்ட? அவர் நம்ப மாட்டார். நிச்சயம் நம்ப மாட்டார். ”
“வெயிட்! வெயிட் ப்ளீஸ். என் கையில் இருப்பது என்ன தெரியுமா? ” என்று தனது கையில் இருந்த நீலமான காகிதத்தாளை காண்பித்தான். அதிலிருந்த அச்செழுத்துகள் லேசாகத் தெரிந்தபோதே காஞ்சனா கைகளை சோபாவில் ஊன்றி பலவீனமான உடலை தாங்கிக்கொண்டாள்.
“இது நீங்க வாங்கின நகையோட பில் காபி. எப்படி என் கையில் சிக்குச்சுன்னு பார்க்கிறீங்களா? ஒண்ணும் இல்ல எந்த பேன்க்கில் கடன் வாங்கியிருக்க? அந்த பேன்க்கில் எத்தனை தவனை நீ கட்டலை? என்றுதான் அந்த வைரவியாபாரியிடம் கேட்டேன். சத்தியமா வேற எதுவும் கேட்கலை. உடனே காலில் விழாத குறையாக கெஞ்ச ஆரம்பிச்சிட்டான். இப்ப எல்லாம் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் பெயரை சொல்லாமலே கொழுப்பெடுத்த பிஸ்னஸ்மேன்களை நடுங்க வைக்கலாம் தெரியுமா மேடம்? ”
“அப்புறம் உங்க ஹஸ்பன்ட் இப்போதைக்கு வரமாட்டார். நான் என் ஃபோனில் ஒரு நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுக்கும் வரை வரமாட்டார். ” என்றதும் வேகமாக அவனுக்கு வைத்திருந்த ஜுஸை காஞ்சனா குடித்து முடித்தாள்.
“இப்ப நான் என்ன செய்யணும்? ”
“அந்தப் பணம் எங்கே? ”
“செலவாகிடுச்சு! ”
“ஓ! அப்படின்னா இந்த பில்லை உங்க கணவர் நம்பருக்கு வாட்ஸ் ஆப் பண்ணவா? இல்லை கடியில் போடவா? ஐஸ்வர்யா ராய்ஸ் ரெப்ளிக்கா இன் காஞ்சனாஸ் நெக் என்ற தலைப்போடு போட்டேன் என்று வச்சிக்கோங்க இன்கம் டாக்ஸ்காரங்க உங்க பெட்ரூமின் பெட்டில் சோபாவின் பெட்டில் ஏன் உங்க டெடி பியரின் உடம்பில் இருக்கும் பஞ்சைக்கூட கிழிச்சி மேய்ஞ்சிடுவாங்க! எப்படி வசதி? ”
“நான் என்ன செய்யணும்? ”
“சிம்பிள். 40யெல் நான் தரும் அக்கௌன்டிற்கு போட்டு விடணும். நாளை நான் சொல்லும் இடத்தில் பணத்தைக் கொடுத்தாலும் சரி. இல்லை இருபது டம்மி அக்கவுன்டில் இருந்து அந்த அக்கவுன்டிற்கு டிரான்ஸ்வர் பண்ணாலும் சரி. எனக்கு எதுனாலும் ஓகே. உங்க வசதி பார்த்துக்கோங்க. ஆனால் நாளை காலை பத்துமணி வரைதான் டைம். ”
“அவ்வளவு சீக்கிரத்தில் பணத்துக்கு நான் என்ன செய்வேன்? 40 யெல் நான் எங்க போவேன்? ”
“பேன்க்குக்கு போங்க! உங்க மாதிரி ஆளுங்களுக்கு சலாம் போட்டு பணத்தைக் கொடுப்பான். எங்களைதான் உள்ளே விடுறதுக்குகூட செக் பண்றேன்குற பேர்ல்ல கிச்சுகிச்சு காட்டிட்டு உள்ளே விடுவான். இந்த ஃபார்ம் அந்த ஃபார்ம்ன்னு படிச்சவனே அலறும் விதமான டிசைன் டிசைனா ஃபார்ம் காட்டி பயமுறுத்துவான். உங்களுக்கு அந்த கஷ்டமெல்லாம் கிடையாதுல்ல? ”
“என்ன டீலா நோ டீலா? ”
“ம்” என்ற ஒரு வார்த்தை மட்டுமே அவள் வாயில் இருந்து வந்தபோது யாரோ வேகமாக உள்ளே வந்தது தெரிந்து திரும்பினான் வெங்கட். யார் என்று பார்த்தபோது வந்தது திலிப் என்று இருவருக்கும் தெரிந்தது.
“திலிப் ” என்று காஞ்சனா பயம் கலந்த பதற்றத்துடன் கூறியபோது யாரும் எதிர்பாராத நேரத்தில் காஞ்சனாவின் முகத்தில் அவன் கைகள் பலமாக இறங்கியது.
கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அவள் சோபாவில் இருந்து எழுந்து சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள்.
வெங்கட் பிடித்தபோது திமிறிய திலிப்பை பற்றி “கூல் டௌன் திலிப். ” என்றான்.
“வெங்கட் உங்களுக்கு எதுவும் தெரியாது. ப்ளீஸ் ஸ்டே அவுட் ஆஃப் திஸ். ” என்றான்.
“பவித்ராவைப் பற்றி தெரியும் திலிப். சிங்கப்பூர் பற்றியும் தெரியும். உங்க ஃப்ரண்ட்ஸ்கிட்ட பேசினேன். சொன்னாங்க. ”
“ஓ! ” என்றவன் பவித்ராவின் பெயரைக்கேட்டதும் கட்டிலில் உட்கார்ந்து தனது செல்பேசியில் அவளது புகைப்படத்தைப் பார்த்தான்.
வெங்கட் அவன் கைகளைப் பற்றிக்கொண்டே அவன் அருகில் உட்கார்ந்தான்.
பைத்தியம் பிடித்தவள்போல காஞ்சனா கத்தினாள் “யாரோ ஒரு தெர்ட் ரேட் கால் கேர்ள். அவகிட்ட பத்துநாளில் எட்டு லட்சம் கொடுப்ப. நான் அதை தெரிஞ்சிட்டு சும்மா இருக்கணுமா? ” என்றாள்.
இதனைக் கேட்டதும் திலிப்பின் மீது பற்றியிருந்த கைகளை எடுத்து மார்போடு கட்டிக்கொண்டான் வெங்கட்.
திலிப் எழுந்து மெல்ல அவளிடம் சென்று அவள் காதினில் ஏதோ சொன்னான். காஞ்சனா மூச்சு விட பல நொடிகள் ஆனது. கால்கள் நடுங்க குளியலறைக்குச் சென்றாள்.
குளியலறைக்குள் இருந்து சத்தமாக அழுகுரல் கேட்டது. அரை மணிநேரம் அழுகை நிற்கவில்லை. பிறகு அழுத அடையாளம் தெரியாமல் ஒப்பனை செய்து கொண்டு வெங்கட் முன்பாக வந்து நின்றாள். அவனைப் புழுவைப் போல் பார்த்தாள்.
தம்பியிடம் பார்வையால் தன்னைப் பார்க்கச் சொல்லி கெஞ்சினாள். ஆனால் திலிப் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினான்.
Comments are closed here.