Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 10

அத்தியாயம் – 10

அஞ்சானி லால் – கோர்த்தாவின் முக்கியமான வழக்கறிஞர். அதோடு அவர் ஒரு கொரியர் மேனும் கூட. கொரியர் மேன் என்றால் வீடு வீடாக பார்சலை கொண்டு கொடுப்பவர் அல்ல. கோர்த்தாவின் தற்போதைய தலைவரான ராகேஷ் சுக்லாவின் செய்திகளை உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தனிநபர். இன்று அர்ஜுன் ஹோத்ராவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்படியென்றால் ராகேஷ் சுக்லாவிடமிருந்து செய்தி வந்திருக்கிறது என்று பொருள்.

சுஜித் சிங்கை கண்டித்து அனுப்பிவிட்டு அலைபேசியை எடுத்து அஞ்சானிக்கு அழைத்த அர்ஜுன் ஹோத்ரா, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலை கேட்டு தெரிந்துக் கொண்டு புறப்பட்டான். அவனுடைய கார் ஹோட்டல் இருக்கும் சாலையில் நுழைந்த போது, அங்கே ஒரு கடையில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அஞ்சானி ஓசைப்படாமல் எழுந்து வந்து சாலையோரம் நின்றார். அவருக்கு அருகே சென்று நின்ற அர்ஜுன் ஹோத்ராவின் கார் அவரை ஏற்றிக் கொண்டு மஹல்பாட்னாவின் டிராபிக்கில் கலந்தது.

“என்ன விஷயம்?”- சாலையில் பார்வையை பதித்தபடி கேட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

“டெல்லில ‘சர்க்கரை கட்டி’ சப்ளை ஆயிருக்கு நம்ம பேர்ல…” – சர்க்கரை கட்டி என்பது ஒருவித ட்ரக்ஸை குறிக்கும் அவர்களுடைய ரகசிய குறியீடு.

அவனுக்குத் தெரிந்தவரை கோர்த்தா ட்ரக்ஸ் பிசினஸ் செய்வதில்லை. கனிமங்கள் மட்டும்தான் அவர்களுடைய குறி… அப்படியென்றால் இதை யார் செய்திருப்பார்கள்…!!! – அவனுக்குள் ஒரு அனுமானம் இருந்தது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்து, “யார்?” என்றான்.

“கோர்த்தா பேர்ல பிசினஸ் நடந்திருக்கு. அப்படின்னா ஜெனார்த் நாயக் உள்ள வந்துட்டான்னு சுக்லா ஜி நினைக்கிறாரு” – இதுதான் அவனுடைய அனுமானமும் கூட.

வெளியிலிருந்து பார்க்கும் பொழுது ஒரே குழுவாகத் தெரியும் கோர்த்தா கேங்கில், கோர்த்தா பிளாக் மற்றும் கோர்த்தா ஒயிட் என்று இரண்டு குழுக்கள் இருந்தன. நிலக்கரி சுரங்கங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கோர்த்தா பிளாக்’ குழுவின் தலைவன் ஜெகன் நாயக். நிலக்கரியை தவிர மற்ற கனிம சுரங்கங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கோர்த்தா ஒயிட்’ குழுவின் தலைவன் ராகேஷ் சுக்லா. இருவருமே இரு பெரும் மலைகள். சம பலம் கொண்டவர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அவர்களுக்குள் கேங் வார் ஏற்பட காரணமானது. அதில் ஜெகன் நாயக் இறந்துவிட்டார். அவருடைய மகன் ஜெனார்த் நாயக் தப்பியோடிவிட்டான். ‘கோர்த்தா பிளாக்’ கேங் முற்றிலும் சிதறிப்போனது. கோர்த்தாவின் மொத்தக் கடிவாளமும் ராகேஷ் சுக்லாவிடம் வந்துவிட்டது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போது அந்த ஜெனார்த் நாயக் தலை தூக்கியிருக்கிறான். நல்லதுதான்… அவனைத்தான் இத்தனை ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறோம்! – அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகளில் ஆபத்தை உள்ளடக்கிய ஒரு மர்மப் புன்னகை தவழ்ந்தது.

“இந்த விஷயம் சம்மந்தமா டீலர்ஸ்கிட்ட பேசறதுக்கு சுக்லா ஜி மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கார். மீட்டிங் நடக்க இருப்பது டெல்லியில்… ப்ரொடெக்ஷன் பொறுப்பு உங்களோடது…” என்றார்.

அர்ஜுன் ஹோத்ராவின் புருவங்கள் முடிச்சிட்டன. இந்த திட்டம் அவ்வளவு சரியானதாக அவனுக்குத் தோன்றவில்லை. காரணம் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதைப் பற்றி யோசித்துவிட்டு தொடர்புகொள்வதாக கூறி அஞ்சானியை ஹோட்டல் வளாகத்தில் இறக்கிவிட்டான் அர்ஜுன்.

****************************

அன்று இரவு கண்களை மூடவே அச்சமாக இருந்தது மிருதுளாவிற்கு. சுமன் உடன் இருக்கும் பொழுது தெளிந்திருந்த அவள் மனம் தனிமையில் கலங்கியது. சவுக்கடி சத்தமும் அலறல் ஒலியும் அவள் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றியது. நேற்று நடந்தது போல் இன்றும் அந்த கனவு அவளை நிலைகுலைய செய்யப் போகிறது என்று உள்ளுணர்வு எச்சரித்தது. இமையோடு இமைசேர்க்க பயந்து கொட்டக்கொட்ட விழித்தபடி கட்டிலில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க முடியும். உடல் சோர்ந்து துவளும் பொழுது கண்கள் தானாக மூடத்தானே செய்யும். தன்னையறியாமல் சரிந்து போர்வைக்குள் புதைந்தாள்.

தூரத்தில் ஓர் ஒற்றை மலை… அந்த மலையில் ஒரு மொட்டை மரம் தனிமையில் நிற்கிறது. திடீரென்று அந்த மரத்தில் தீ பிடித்துக் கொண்டது. மரத்தில் பிடித்த தீ மெல்ல மெல்ல மலை முழுவதும் பரவிவிட்டது. சுடர்விடும் செங்கொழுந்து உருக்கிய தங்கம் போல் தகதகக்கிறது. வெகுதூரம் வரை அந்த மலைத்தீயின் தீயின் ஜுவாலை தன் கொடுங்கரங்களை நீட்டி அகப்பட்டவற்றையெல்லாம் தனக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது.

யாரும் அருகில் நெருங்கமுடியாத அளவிற்கு கோரத்தீ ருத்ரதாண்டவம் ஆடி கொண்டிருந்த போது ஓர் அவலக்குரல் ஓங்கி ஒலித்தது. அது ஒரு பெண் குரல்… யார் அந்த பெண்…!!!சுற்றி வளைத்துவிட்ட தீக்கற்றைகளுக்கு மத்தியில் நின்று கதறிக் கொண்டிருந்தாள் அவள். முகம் தெரியவில்லை… தலைவிரி கோலம்… மெலிந்த தேகம்… கணீர் குரல்… இவைகள்தான் அடையாளம்… தீ அவளை தொட்டுவிட்டது… அவள் ஆடையை தீண்டிவிட்டது… கத்துகிறாள்… கதறுகிறாள்… துடிக்கிறாள்…

‘ஐயோ!!! எரிகிறது…! எரிகிறது…! உடம்பெல்லாம் எரிகிறது…!’ – அவளுடைய கை, கால், மேனி, முகம், முடி… எங்கும் நெருப்பு… தீயின் தகிப்பை தாங்கமுடியாமல் கீழே விழுந்து புரள்கிறாள்… தப்பிக்க முடியவில்லை… ‘எரிகிறது… எரிகிறது… அம்மா…. எரிகிறது…’ – வாய்விட்டு புலம்பியபடியே கட்டிலிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தாள் மிருதுளா… திடுக்கிட்டு கண்விழித்தாள். மலை இல்லை… மரம் இல்லை… தீயில்லை… ஆனால் எரிகிறது. அவளுடைய மேனி தீ பிடித்தது போல் திகுதிகுவென்று எரிகிறது. விருட்டென்று எழுந்து கட்டிலில் கிடந்த துணியை எடுத்து உடம்பெல்லாம் தட்டிக் கொண்டாள். எரிச்சல் நிற்கவில்லை…

‘என்ன! என்ன ஆச்சு எனக்கு…!’ – புரியாமல் அழுதாள். எரிச்சல் தாங்க முடியவில்லை. நேற்று இரவு இதே போல் தான் நடந்தது… அவன்… அவன் ஏதோ செய்தான்… என்ன செய்தான்…! நினைவிற்கு வரவில்லை… அழுதாள்… ‘எ…ரி…யுது…’ – குளியலறைக்குள் ஓடினாள். ஷவரை முழுவதுமாக திறந்துவிட்டு குளிர்ந்த நீருக்கு அடியில் நின்றாள். உச்சந்தலையில் விழுந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் கழுத்து மேனி எங்கும் பரவி அவளை குளிர்வித்தது. வெளியே வர வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் வெகுநேரம் தூவாலை பொழிவுக்கு கீழே நின்றுக் கொண்டிருந்தாள். குளிரில் உடல் நடுங்க துவங்கியது. மனம் மாய மருட்சியிலிருந்து மெல்ல வெளிவந்தது. ஷவரை மூடிவிட்டு வெளியே வந்தாள்.

‘ஏன் இந்த இந்த கனவு… எதற்கு இந்த பாதிப்பு!’ – எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை. ஆடையெல்லாம் தொப்பலாக நனைந்திருந்தது. குளிரினாலோ அல்லது பதட்டத்தினாலோ உடல் வெடவெடவென்று நடுங்கியது. டவலை எடுக்க அலமாரியை திறந்தாள். மடித்து வைக்கப்பட்டிருந்த துவாலைக்கு மேல் அந்த கறுப்புக் கோட் இருந்தது. மிருதுளாவின் புருவம் சுருங்கியது. ஓரிரு நிமிடங்கள் மெளனமாக அதைப் பார்த்தவள் பிறகு மெல்ல கையில் எடுத்தாள்.

***********************

அன்று இரவு, ராகேஷ் சுக்லாவின் டெல்லி பயணம் தொடர்பான திட்டங்களை யோசித்து ஆராய்ந்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஹோத்ராவின் சிந்தனையில் அடிக்கடி மிருதுளா குறுக்கிட்டாள். அவளுடைய நெற்றிக்காயம் அவன் கவனத்தை சிதறச் செய்தது. இத்தகைய பலவீனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணி அவளுடைய நினைவுகளை ஒதுக்கித் தள்ள வெகுவாய் முயன்றான். ஆனால் தீட்டும் திட்டத்தில் விழும் பெரிய ஓட்டைகள் அவனுடைய தோல்வியை பறைசாற்றின. எரிச்சலுடன் கணினித்திரையை அடித்து மூடியவன், எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

‘விழித்துக்கொள்’ என்று மூளை எச்சரித்தது. மனமோ அவள் முகத்தை ஒருமுறை பார்த்தால்தான் அடங்குவேன் என்று ஆட்டம்காட்டியது. மனம் போகிற போக்கிற்கெல்லாம் போகிறவன் அவன் அல்ல. துளிர்விடும் இந்த அந்நிய உணர்வை முளையிலேயே கிள்ளிவிட எண்ணி முரட்டுத்தனமாக மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஜிம்மிற்கு விரைந்தான். அவனைப் பொறுத்தவரை ஜிம் தான் சிறந்த ஸ்ட்ரெஸ் பார்ஸ்டர்.

சிலமணிநேரங்கள் ஜிம்மில் பயிற்சி செய்தவன் நள்ளிரவில் அறைக்கு திரும்பிய போது, இருளில் சமையலறை பக்கம் ஏதோ நடமாட்டம் தெரிவது போல் உணர்ந்தான்.

சட்டென்று அலர்ட் ஆனான். இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சுவற்றோரம் சாய்ந்து மறைத்தபடி எச்சரிக்கையோடு சமையலரைப் பக்கம் சென்று உள்ளே பார்வையை செலுத்தியவன், “ஷ்ஷ்ஷ்…ஷி…ட்…” என்றான் ஏமாற்றத்துடன்.

சட்டென்று சுஜித்தின் கை வலையிலிருந்து துள்ளி விலகினாள் சுமன். “ஐ… ஐ… ஜஸ்ட் கேம்… ஃபார் வாட்டர்…” – உளறினாள்.

“அர்ஜுன்… ஐம்.. ஜஸ்ட்…” – வார்த்தைகளைத் தேடிய சுஜித் முடிப்பதற்குள், “யு கைஸ் ஹேவ் யுவர் வோன் ரூம்ஸ் மேன்…” என்று கடுப்படித்துவிட்டு, உள்ளே சென்று ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் குடித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“சாரி” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் சுமன்.

“ஸீ யு இன் மார்னிங்” என்று கூறிவிட்டு சுஜித் சிங்கும் அங்கிருந்து கிளம்பினான். அவர்கள் சென்ற பிறகு ஓரிரு நிமிடங்கள் சமையலறையில் தாமதித்த அர்ஜுன், தனது கட்டுப்பாட்டையும் மீறி சமையலறைக்கு அடுத்த பகுதியை திரும்பிப் பார்த்தான். அதில் முதல் அறைதான் மிருதுளாவுடையது. நேற்றைப் போலவே இன்றும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

‘உறங்கியிருப்பாளா! அல்லது நேற்று போலவே இன்றும் பேனிக்காகி சிரமப்பட்டுக் கொண்டிருப்பாளா…’ – உள்ளே தோன்றிய ஒரு விசித்திர உணர்வு அந்த இடத்திலிருந்து அவனை விலகிக் செல்லவிடாமல் கட்டி இழுத்தது. கால்கள் அவன் அனுமதிக்கு காத்திராமல் அவள் அறையை நோக்கி அடியெடுத்து வைத்தன.

நனைந்த ஆடையுடன் தன்னுடைய கோட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டு குறுகி படுத்திருக்கும் மிருதுளாவை கண்ட கணமே அவன் மனதிற்குள் கூர்மையாய் ஏதோ பாய்வதை உணர்ந்தான். அவளுடைய பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் அவனை வருத்தியது. அதே நேரம், பற்றுக்கோலை இறுக்கிப் பிடித்திருப்பது போல் அவனுடைய கோட்டை அவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு படுத்திருந்த விதம் அவன் இதழ்க்கடையோராம் சின்ன புன்னகையை கொண்டுவந்தது.

அவள் முகத்தையே பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றுக் கொண்டிருந்தவன் பிறகு, தைலத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினான். அருகே செல்லச் செல்ல இதயத் துடிப்பு அதிகமானது. மிகுந்த தயக்கத்துடன் அவள் அருகில் அமர்ந்தான். காயம்பட்ட அவள் நெற்றியில் தைலத்தை மெல்ல பூசியவன், மறு நொடியே அவள் கன்னத்தில் இதழ்பதித்துவிட்டான். பட்டுப்போன்ற மென்மையான சருமமும் நாசியை தீண்டிய அவளுடைய பிரத்யேக நறுமணமும் அவனை மெய்மறக்கச் செய்துவிட அவளிடமிருந்து விலக மனமில்லாமல் நெற்றியோடு நெற்றி வைத்து கண்களை மூடி அசையாமல் அமர்ந்திருந்தான். கழியும் ஒவ்வொரு நொடியும் பொக்கிஷமாய் அவன் மனதை நிறைத்துக் கொண்டிருந்தன.

விடிந்து வெகுநேரம் கழித்து கண்விழித்த மிருதுளா முதல்நாள் இரவு அர்ஜுன் ஹோத்ரா தன்னுடைய அறைக்கு வந்ததையோ, தனக்கு தைலம் பூசிவிட்டதையோ, தன் கன்னத்தில் இதழ்பதித்ததையோ, தன் நெற்றியோடு நெற்றி வைத்தபடி வெகுநேரம் கட்டிலில் அமர்ந்திருந்ததையோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. கல்லை கட்டிவிட்டது போல் தலை பாரமாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து குளித்துவிட்டு சமையலறைக்கு வந்தாள்.

“நீ இந்த வீட்ல கெஸ்ட் இல்ல… சர்வெண்ட்… நியாபகம் இருக்கா?” – வெடுவெடுத்தாள் பானு. மிருதுளாவின் முகம் இறுகியது.

“இங்க நா கெஸ்டும் இல்ல சர்வெண்டும் இல்ல…” என்று முணுமுணுத்துக் கெண்டே, சமையலறையிலிருந்த காபிமேக்கரில் இருந்து ஒரு கப் காபியையும், ரெண்டு பிரட் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினாள்.

வழியில் எதிர்பட்ட அர்ஜுன் ஹோத்ரா, இவளை கவனிக்காமல் அலைபேசியில் பேசிக் கொண்டே கடந்துச் சென்றான்.

சின்னதாய் ஒரு ஏமாற்றம் அவளுக்குள் தோன்றியது. அந்த நொடியே தலையை உலுக்கி, முட்டாள்தனமான அந்த உணர்வை உதறிவிட்டு நடையைக்கட்டினாள் மிருதுளா.

19 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    PAPPU PAPPU PAPPU PAPPU says:

    super ud ma

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ragini Ravi says:

    Hai next epi yepo ma varum I m waiting very eagerly

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      seekkiram pottuduren pa… next week lerundhu uds correct ah varum… Sorry for the inconvenience…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha Latha says:

    Super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis👌👌👌👌👌

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Enna kaadhalo ullukulla sattama ukanthunkinde aatam katrathuku…..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    She too likes … Mmmm

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Malathi says:

    It’s so lovely

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Malathi says:

    Its so lovely

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Superb episode n waiting for the next episode eagerly

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Vidya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    very very super update nithya. eagerly waiting for your next ud.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Vijaya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Enakku oru santhegam … Unmaiyave mitula innocent thana illa????

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      yen indha sandhegam Lakshmi?

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Lakshmi Narayanan says:

        Solla theriyala nithya…. But intha 2 epi padikum bothu appadi thonuchu… Arjun gavanathai thisai thiruppuralo nu thonuthu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    Super

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ambika… 🙂

You cannot copy content of this page