Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 11

அத்தியாயம் – 11

மாஃபியா என்னும் நிழல் உலகில் வேலை செய்யும் அனைவருமே பயில்வான்களாகவும் கொலைகாரர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பினால் அது முற்றிலும் அறியாமையே. தலைவர், துணைதலைவர், ஆலோசகர், தளபதிகள், வீரர்கள், அசோசியேட்ஸ் என்று பல அடுக்குகள் மாஃபியாவில் உள்ளது. இங்கே வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்திருப்பார்கள். அவற்றில், செய்தி சேகரிப்பு குழு, தொழில்நுட்ப குழு, இரசாயன குழு, சட்ட வல்லுநர்கள் குழு, பாதுகாப்பு குழு, கில்லிங் ஸ்குவார்ட் எனப்படும் கொலைகார குழு ஆகியவை முக்கியமான குழுக்கள். இதில் டிஃபன்ஸ் மற்றும் கில்லிங் ஸ்குவார்ட் தவிர மற்ற குழுக்களை சார்ந்தவர்களெல்லாம் அந்தந்த துறையில் மட்டுமே வல்லுனர்களாக இருப்பார்கள்.

 

மாஃபியாவில் பல குழுக்கள் இருந்தாலும், செய்தி சேகரிப்புக் குழுதான் அடிப்படையானது. மாஃபியாவின் குற்றங்களெல்லாம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் அதாவது ஆர்கனைஸ்ட் கிரைமாக இருப்பதற்குக் காரணம் இவர்கள் கொண்டுவரும் தரமான இன்பர்மேஷன்தான்.

சம்மந்தப்பட்டவர்களுக்கு அருகில் இருந்துக் கொண்டே, அவர்களுக்கு நூல்நூணியளவும் சந்தேகம் வராமல் அவர்களிடமிருந்து தகவல்களை உருவியெடுத்துக் கொண்டு வருவதுதான் இவர்களுடைய சாமர்த்தியம். இவர்களை உளவாளிகள் என்றும் சொல்லலாம்.

 

அடிப்படை பயிற்சியை மட்டும் எடுத்துக் கொண்டு மக்களோடு மக்களாக கலந்துவிடும் இந்த உளவாளிகளை, தனக்குத் தேவைப்படும் இடத்தில் சொருகிவிடுவது மாஃபியா தலைமையின் பொறுப்பு. அங்கிருந்து செய்திகளை களவாடிக் கொடுப்பது உளவாளிகள் பொறுப்பு. இந்த உளவாளிகள் தங்களுடைய தேவைக்கேற்ப அசோசியேட்ஸை அவர்கள் இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக்கொள்வார்கள்.

 

அதாவது அவர்கள் எந்த இடத்திற்கு அனுப்பப்படுகிறார்களோ அங்கே நட்புறவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் தகவல்களை களவாடுவார்கள். சில சமயங்களில் குற்றப்பின்னணி உள்ள அசோசியேட்ஸ் தெரிந்தே தகவல் கொடுத்து உதவிவிட்டு அதற்கான பிரதிபலனை மாபியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதும் நடக்கும்.

 

இப்படி திரட்டப்படும் தகவல்கள் அந்தந்த தளபதிகளுக்கு வந்து சேரும். அவர்கள் அதை தலைமையிடம் கொண்டு செல்வார்கள். தலைமை பொறுப்பிலிருப்பவர் ஆலோசகரை அழைத்து விவாதிப்பார். தலைவர், ஆலோசகர், தளபதி மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டுவார்கள். அதை செயல்படுத்தும் பொறுப்பு தளபதியிடம் வந்து சேரும். வீரகளைக் கொண்டு அதை பிசிறுதட்டாமல் செய்து முடிப்பது தளபதியின் கடமை.

 

அப்படி ஒரு கடமை தான் இப்போது அர்ஜுன் ஹோத்ராவின் மேஜையில் அமர்ந்திருந்தது. டெல்லிக்கு செல்லும் ராகேஷ் சுக்லா பாதுகாப்பாக ஒரிசா வந்து சேர வேண்டும். அதை எப்படி நிறைவேற்றுவது என்பதற்கான திட்டம்தான் அது – அந்த கோப்பு. நேற்று இரவு மிருதுளாவின் அறையிலிருந்து வந்த பிறகு இரவெல்லாம் உறங்காமல் கண்விழித்து தயார் செய்த கோப்பு.

 

கத்திமேல் நடப்பதுப் போன்றதொரு திட்டம்தான் என்றாலும் பிளான்- எ, பிளான் – பி, பிளான் – சி என்று மூன்று மாற்று முறைகளுடன் முறையாக தீட்டப்பட்டிருக்கும் திட்டம். இதில் பிசகு நடக்க வழியே இல்லை என்று திட்டவட்டமாக முடிவான பிறகு, அலைபேசியை எடுத்து அஞ்சானி லாலுக்கு அழைத்தான். அவரிடம் பேசியபடியே தன்னுடைய அலுவலக அறையிலிருந்து வெளியேறி சமையலறை பக்கம் வந்தவன், “இங்க நா கெஸ்டும் இல்ல சர்வெண்டும் இல்ல…” என்று கூறிவிட்டு கூந்தல் காற்றில் பறக்க, வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்ட மிருதுளாவை கண்டான்.

 

அவளுடைய முதல் கோபம்… ஐஸ் கிரீம் கேட்டு அடம் செய்யும் குழந்தை போல் கியூட்டாக இருந்தது. பசை போட்டது போல் பார்வை அவளிடமே ஒட்டிக் கொண்டது. அதை பிரித்தெடுக்க முடியாமல் தடுமாறியவன், அவள் தன்னிடம் நெருங்கும் போது பார்வையை இயல்பாக வேறுபக்கம் திருப்பிவிட்டான். உள்ளே ஏதோ தடக் தடக் என்றது… இதயமா!!! – அவன் நம்பவில்லை. அவளுடைய பார்வை அவன் முகத்தில் படிந்தது… அவன் அவளை திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் உணர்ந்தான்… அவள் தன்னைத்தான் பார்க்கிறாள்… பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறாள் என்பதை நன்றாக உணர்ந்தான். உள்ளே இனித்தது… ஆனால் அந்த இனிமையை முழுமையாக அனுபவிக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறதா? – விடை தெரியாத இந்த கேள்வியை நேற்று இரவிலிருந்து எத்தனை முறை தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் என்பதை அவன் மனம் மட்டுமே அறியும்.

 

********************

 

அர்ஜுன் ஹோத்ராவின் புறக்கணிப்பை அலட்சியப்படுத்த எண்ணிய மிருதுளா அதை செயல்படுத்த முடியாத இயலாமையுடன் கையில் இருந்த காபி கப்பை டீபாயில் வைத்துவிட்டு பட்-பட் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

 

‘அவன் உண்மையிலேயே நம்மை பார்க்காமல்தான் போனானா? அல்லது பார்த்துவிட்டு பார்க்காதது போல் போனானா?’ என்கிற கேள்வி அவளை குடைந்தது.

 

ஏதேதோ யோசனையுடன் அவள் அமர்ந்திருந்த போது, பட்டென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சுஜித் சிங்.

 

அவன் உள்ளே நுழைந்த வேகத்திலேயே திடுக்கிட்டு எழுந்து நின்ற மிருதுளா அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

 

டீப்பாயில் இருந்த ஆறிப்போன காபியையும் காய்ந்து போன பிரட் துண்டுகளையும் பார்த்துவிட்டு, அவள் முகத்தை பார்த்தவன், இகழ்ச்சிப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

 

அவனுடைய பார்வையும் சிரிப்பும் மிருதுளாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

 

“உன்கிட்ட ஒரு விஷயத்தை கிளியர் பண்ணனும்…. அதுக்காகத்தான் வந்தேன்..” என்று விழியை உருட்டியவன், மறுநொடியே சற்று குனிந்து கைகளை பௌயமாக கட்டிக்கொண்டு, “மேடம் இப்போ ஃபிரீ தானே?” என்றான் போலி மரியாதையுடன். அவனுடைய பார்வை பேச்சு செயல் ஒவ்வொன்றும் அவளை அவமதித்தது.

 

எந்த உணர்வுகளையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இறுகிப்போய் நின்றாள் மிருதுளா.

 

“மிரு…து…ளா!!! – உன் பேருதானே? இல்ல அதுவும் பொய்யா?” – அவனுடைய பார்வை அவளை துளைத்தது.

 

“உன்ன பத்தி மு…ழு…சா… தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி அவ்வளவு ஈஸியா உன்ன இங்கிருந்து அனுப்பிடுவோம்னு நெனச்சியா? எப்படி எப்படி??? நீ இங்க கெஸ்ட்டும் இல்ல… ஸர்வண்டும் இல்லையா??? ரைட்… நீ இங்க கெஸ்ட்டும் இல்ல ஸர்வண்டும் இல்லாதான்… யு ஆர் எ பிரிஸனர்… கைதி…” – இதை சொல்லும் பொழுது அவன் முகத்தில் ஒரு வெறி தெரிந்தது. வேட்டையாடும் வெறி…

 

மிருதுளாவின் கண்கள் பெரிதாக விரிந்தன. இதயத்துடிப்பு அதிகரித்தது. – ‘இவன் இருந்ததை கவனிக்காமல் பேசிவிட்டோம்!!!’ – எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

 

“இப்போ… இப்போ… உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்… நீயா… உன் வாயாலையே எல்லா உண்மையையும் சொல்லிடு… உயிரோட இருக்கலாம்… இல்ல…” என்று சற்று இடைவெளி விட்டவன், “வருத்தப்படுவ…” என்றான் ஒற்றை வார்த்தையில். அந்த வார்த்தையில் நிறைந்திருந்த ஆபத்து மிருதுளாவை எச்சரித்தது.

 

அன்று முழுவதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்காமல் உடனடியாக செய்ய வேண்டியதை செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

 

************************

“வெள்ளை திமிங்கலம் டெல்லிக்கு வருதாம்” – ஐம்பது வயது மதிக்கத்தக்க பகவான் தீவிர முகபாவத்துடன் கூறினார்.

 

“தகவல் உண்மையானதுதானா?” – ஜெனார்த் நாயக்கின் குரலில் சந்தேகமிருந்தது.

 

“உண்மைதான்…”

 

“இந்தத்தரம் சிந்தாம சிதறாம செய்யணும்”

 

“நம்ம ஆளுங்க வேண்டாம். எஸ்பர்ட்ஸை ஹையர் பண்ணிக்கலாம்”

 

“எங்கிருந்து?”

 

“மும்பையிருந்து”

 

“அங்கேயெல்லாம் நம்மளவிட அவனுங்களுக்கு தொடர்பு அதிகம்… ஒரு சின்ன குளூ கூட நா கொடுக்க விரும்பல. அதோட பிரபஷனல்ஸை இறக்கினோம்னா ஆளுங்களை பார்த்ததுமே கண்டுப்பிடிச்சிடுவானுங்க. நமக்கு ரிஸ்க்காயிடும்”

 

“வேற என்ன பண்ணறது? ஜம்பர்ஸ் அண்ட் கிடான்ஸ்கு அரேஞ் பண்ணுவோமா? பார்க்க ஃபேமிலி மாதிரி இருக்கும். யாருக்கும் சந்தேகம் வராது…” – ஜம்பர்ஸ் என்பவர்கள் வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர் மக்கள் போலவே பெருந்தக் கூடிய கொலையாளிகள். கிடான்ஸ் என்பவர்கள் பெண் கொலையாளிகள்.

 

சிந்தனையுடன் அமர்ந்திருந்த ஜெனார்த் ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினான். பிறகு, “இதை நாமதான் செய்யணும்” என்றான் உறுதியாக.

 

அவனுடைய முடிவில் பகவானுக்கு உடன்பாடில்லை. இவ்வளவு பெரிய ஆபரேஷனை தானாக செய்வது பாதுகாப்பில்லை என்று நினைத்தார். ஆனால் விஷயம் அணுஅளவுக் கூட வெளியேறுவதை ஜெனார்த் விரும்பவில்லை. இருவரும் வெகுநேரம் விவாதித்தார்கள். பிறகு தங்களுடைய ஆட்களை வைத்தே முடிப்பது என்கிற முடிவிற்கு வந்தார்கள். திட்டமும் தயாரானது.

 

**********************

அர்ஜுன் ஹோத்ராவின் உறக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் அலைபேசி வைப்ரேட் ஆனது. இரவு வெகுநேரம் விழித்திருந்து வேலை செய்தவன் சற்று முன்தான் படுத்தான்… மிஞ்சிப் போனால் ஒருமணிநேரம் ஆயிருக்கலாம்… அதற்குள் அழைப்பு… யாரென்று எடுத்து பார்த்தான். சுஜித்… அழைப்பை ஏற்று, “டெல் மீ” என்றவன் விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.

 

“வாட்! வாட் த ஹெல் ஆர் யு சேயிங் மேன்?” – பரபரப்புடன் அறையிலிருந்து வெளியேறியவன், “ஐம் கம்மிங்” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு தடதடவென்று படிக்கட்டில் இறங்கினான். கீழே டேவிட் நின்றுக் கொண்டிருந்தான்.

 

“யார் முதல்ல பார்த்தது?” – உள்ளடங்கிய குரலில் கேட்டான்.

 

“கார்ட்ஸ்… டென் மினிட்ஸ் முன்னாடி…” – இறுகிய குரலில் பதிலளித்தான் டேவிட்.

 

“வேர் இஸ் சலீம்?”

 

“கீழ” – பேஸ்மெண்ட் படிக்கட்டில் இறங்கிய இருவரும், அடுத்த சில நிமிடங்களில் சுஜித் சிங்கையும், மாலிக் சர்புதீனையும் சந்தித்தார்கள்.

 

“எப்படி நடந்திருக்கு?” – அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை அவர்களுக்குப் பின்னால் சென்றது.

 

கண்கள் விழித்திருக்க, வாய் திறந்தபடியே இருக்க உயிர் பிரிந்த நிலையில் கட்டையாய் கிடந்தான் பட்டேல்.

 

“பிரபஷனல் டச்… ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படல” – மாலிக்கின் குரல் இறுகியிருந்தது.

 

அவர்களைக் கடந்துச் சென்று பிணத்தை ஆராய்ச்சிப் பார்வை பார்த்த அர்ஜுன் ஹோத்ரா நண்பனின் கூற்றில் இருந்த உண்மையை உறுதி செய்துக்கொண்டான். ஆனாலும், “கொலைதானா?” என்றான் சிறு சந்தேகத்துடன்.

 

“இன்னைக்கு காலையிலேயே சமீரை வர சொல்லிட்டோம். ஹி வாஸ் அண்டர் ட்ரீட்மெண்ட். தானா செத்திருக்க வாய்ப்பில்லை” – சமீர், அதே மாளிகையில் வசிக்கும் கோர்த்தாவின் தனி மருத்துவர். காலையில் அவன் கொடுத்த ரிப்போட்டின் படி பட்டேலின் உயிர் ஒன்றும் ஊசலாடிக் கொண்டிருக்கவில்லை. அப்படியென்றால் இது கொலைதான்…

 

அர்ஜுன் ஹோத்ராவின் ரெத்தம் கொதித்தது. “ஹூ இஸ் தட் ப்ளடி ……….” – கொடூரமாக கத்தினான். அது மிகவும் ஆபத்தான குரல். வேட்டையாடும் மிருகத்தின் உறுமல்.

 

“வி சஸ்பெக்ட் மிருதுளா…” – ‘மிருதுளாவை சந்தேகப்படறோம்’ – தயக்கமில்லாமல் கூறினான் மாலிக் சர்புதீன்.

 

“வாட்!!!” – அதிர்ச்சியுடன் அவன் பக்கம் திரும்பினான் அர்ஜுன்.

 

“எஸ்… வி ஸ்ட்ராங்லி சஸ்பெக்ட் ஹர்… அவதான் பண்ணியிருக்கணும். அவளோட ஐடென்டிட்டி எதுவும் உண்மை இல்ல… ஆனந்த்பூரிலிருந்து ரிப்போர்ட் வந்துடுச்சு” என்ற டேவிட் அவளை பற்றி கிடைத்த விபரங்களை சுருக்கமாகக் கூறினான்.

 

அர்ஜுன் ஹோத்ரா எதுவும் பேசவில்லை. அவனால் பேச முடியவில்லை. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு சிலை போல் நின்றான்.

 

அப்போது பரபரப்புடன் உள்ளே வந்த பாதுகாவலன் ஒருவன், “ஷி எஸ்கேப்ட்” என்றான் கலவரத்துடன்.

 

“வாட்! ஹூ இஸ் ஹி டாக்கிங் அபௌட்?” – ‘என்ன சொல்றான் இவன்? யார் எஸ்கேப் ஆனது…’ – மிருதுளாவாக இருக்கக் கூடாது என்று உள்ளூர எழுந்த ஆவலை மறைத்துக் கொண்டு அழுத்தமாகக் கேட்டான்.

 

“மிருதுளா… டவுட் வந்ததும் அவ ரூம்ல இருக்காளான்னு செக் பண்ண சொன்னேன். என்னோட சந்தேகம் உண்மையாயிடிச்சு. ஷி இஸ் த ஒன்… த ப்ளடி இண்ட்ரூடர்…” – வெகுண்டான் சுஜித் சிங்.

 

மிருதுளாவின் மீது அவனுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போய்விட, ஆழிப்பேரலைக்கு முன் உள்வாங்கும் கடல் போல உள்ளடங்கிய உணர்வுகளுடன், “அவ எனக்கு உயிரோட வேணும்… சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடி…” என்றான் அர்ஜுன் ஹோத்ரா அமைதியாக.

 




16 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    PAPPU PAPPU PAPPU PAPPU says:

    super ud ma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Ayya yen sis ipdi bp yethringa….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reen says:

    Please next or upload pannunga…
    Munnalam one day vitu episode potinga.. ipo yen sis late aakringa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    SEMA INTERESTING UD SIS
    ADUTHU YENNAAAA THIK THIKKKKKK


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nesika Raveendhar says:

    Adutha is padikkira varia thadak thadak than.. enakkum miruthu mele light ah doubt irukku


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Anjali Suresh says:

      Antha alavukulam mithu ku scene illa sis. Athu paavam pacha mannu..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Kola Veri la irukane… Pavam mridu… Romba kashtapaduthadinga please…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Daisy Mary says:

    சரியா தேடி பாருங்க தடி பசங்களா…..
    மிது வாது தப்பிச்சி போறதாவது….
    ஹா ஹா…
    எங்கயாது மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு நிக்க போற……

    ஹ்ம்மம்ம்… அர்ஜுன்…. போச்சா.. உன் வடை போச்சா….

    சுஜித் சிங் ஓவரா கற்பனை பண்ணாத உடம்புக்கு ஆகாது….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    hai nithya. very very interesting ud, eagerly waiting for your next ud. daily ud kodunga nithya please


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Daisy Mary says:

      sss….v need daily ud….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Ayyayo unmailaye va. Mrituva patha apdi therilaye….

    Sis next epiya delay pannama podrunga. Illana manda vedichirum..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvi selvi says:

    nice

    next ud eppo sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anita says:

    Is there a one culprit in their own gang?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Anjali Suresh says:

      Ssssss enaku sujith mela doubt….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    Miruthu unmaiya thappichutiya illaya sujith ethavathu pannitana


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Superb episode but getting fear for mithu……

You cannot copy content of this page