நிழல்நிலவு – 12
10979
12
அத்தியாயம் – 12
சுஜித் சிங்கின் மிரட்டலில் பயந்து போன மிருதுளா கண்மூடித்தனமாக ஒரு முடிவை எடுத்தாள். ‘இனி இங்கு தாமதிக்கக் கூடாது. தினமும் நமக்கு வரும் கனவே நம்மை காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் செய்த கொலைக்கு நாம் சாட்சி என்று தெரிந்தால், நம்முடைய பிணம் கூட அம்மாவுக்கு கிடைக்காது. நம்மை காணாமல் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ!’ – தாயின் நினைவும் தன்னுடைய சூழ்நிலையும் மிருதுளாவை கலங்கச் செய்தது.
கதவை மூடி தாழிட்டுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அழுது ஓய்ந்தவள், குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள். ஆறிப்போன காபியும் காய்ந்துப் போன ப்ரடும் வைத்த இடத்திலேயே இருந்தது. பட்டினிக் கிடப்பது அவளுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. எனவே அதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு வெளியே வந்தவள், ஆட்களின் நடமாட்டத்தை கவனித்தபடி தோட்டத்திற்கு வந்தாள்.
“ஹேய்… மிருதூ… இங்க என்ன பண்ணற?” – குரல் வந்த திசையில் பார்வையை செலுத்தினாள். விரிந்த புன்னகையுடன் கையை உயர்த்தி ‘ஹாய்’ சொல்லிக் கொண்டே அவளிடம் ஓடிவந்தாள் சுமன். அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சுஜித்தின் கண்கள் மிருதுளாவை தான் வெறித்துக் கொண்டிருந்தன.
அவனைப் பார்த்ததுமே மிருதுளாவின் உடலில் நடுக்கம் பரவியது. இறுகிப் போய் அசையாமல் நின்றாள். அதற்குள் அவளை நெருங்கிவிட்ட சுமன், “என்ன?? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று தோழியின் தோள்களை பிடித்து உலுக்கினாள்.
“ம்ஹும்… நத்திங்…” – சுதாரித்துக் கொண்டு கவனத்தை தோழியின் பக்கம் திருப்பினாள் மிருதுளா.
ஆனால் அவளைவிட ஸ்மார்ட்டான சுமன், மிருதுளா சுதாரிப்பதற்கு முன்பே அவளுடைய பார்வையை கவனித்துவிட்டு, “ஏன் சுஜித்தை அப்படி பார்க்குற? அவன் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் இல்ல…” என்று சிரித்தாள்.
ஒரு கணம் அதிர்ந்த மிருதுளா, “நான் எதுவுமே சொல்லல” என்றாள்.
“நீ சொல்லல… ஆனா உன்னோட பார்வை சொல்லுது” – புருவம் உயர்த்தினாள்.
“யு ஆர் மேட்…” – திரும்பி நடந்தாள் மிருதுளா. அவளோடு சேர்ந்து நடந்த சுமன், “ரெண்டு பேரும் சமாதானம் ஆயிடுங்கப்பா… ஒருத்தரை ஒருத்தர் இப்படி முறச்சுகிட்டே இருக்காதீங்க…” என்றாள். மிருதுளா பதில் சொல்லவில்லை. அவளுடைய பார்வை மாளிகைக்குள் சென்றுக் கொண்டிருந்த சுஜித்தின் முதுகில் படிந்தது.
சற்று நேரம் அமைதியாக இருந்த சுமன் பிறகு மெல்லிய குரலில் பேசினாள்.
“சுஜித் முரடன்தான்… ஆனா ஒரு அப்பாவி பொண்ணுக்கிட்ட பலத்தை காட்டற அளவுக்கு மோசமானவன் இல்ல… அன்னைக்கு உன்னை தள்ளிவிட்டது கூட தெரியாம நடந்த தப்புதான் மிருதூ… என்கிட்ட எத்தனை தரம் சாரி சொன்னான் தெரியுமா? அது மட்டும் இல்ல… அர்ஜுன் பாய் கூட உனக்காக அவனை நல்லா திட்டிட்டாரு….” என்றாள்.
சட்டென்று மிருதுளா சுமனை பார்த்தாள். அவள் கண்களில் இருந்த ஆர்வத்தை கவனித்துவிட்டு புன்சிரிப்பை உதிர்த்த சுமன், “எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு” என்றாள்.
“என்ன சந்தேகம்?” – மிருதுளா.
“அவருக்கு உன்மேல ஏதோ ஒரு பீலிங்…”
“வாட்!!!” – முருதுளாவின் குரல் வழக்கத்திற்கு மாறாக உயந்தது.
“ஐ நோ டியர்… நோபடி கேன் ஹைட் எனிதிங் ஃபிரம் மீ” – குறும்புடன் சிரித்தாள். மிருதுளா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“லூசாயிட்டியா நீ?” – தோழியை கண்டிக்க முயன்றாள். ஆனால் அவளுடைய முயற்சியை அலட்சியமாக தட்டிவிட்ட சுமன், “நீ எங்க போனாலும் அர்ஜுன் பாய் பார்வை உன்…னையே… ஃபாலோ பண்ணுதே! அதுக்கு என்ன அர்த்தம்?” என்றாள் சீண்டலாக.
“என்மேல சந்தேகம் இருக்குன்னு அர்த்தம்” – பட்டென்று தோழிக்கு பதில் சொல்லி அவளுடைய வாயை அடைக்க முயன்றாலும் மிருதுளாவிற்குள்ளும் அந்த கேள்வி இருக்கத்தான் செய்தது. அவனுடைய பார்வை சந்தேகப் பார்வை அல்ல… அதை அவளுடைய உள்மனம் அறிந்திருந்தது. ஆனால் அதைப் பற்றிய ஆராய்ச்சியிலெல்லாம் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அவள் தயாராக இல்லை. இங்கிருந்து தப்பிக்கும் வழியைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.
தோழியின் மனதிற்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத சுமன், “நோ மை டியர்… சந்தேகப் பார்வைக்கும் ரொமான்டிக் பார்வைக்கும் எனக்கு நல்லா வித்தியாசம் தெரியும். அதைக் கூட தெரிஞ்சுக்க முடியாத மக்கா நான்?” என்று அவளை மடக்கினாள்.
“காட்!!! என்னை காப்பாத்துங்க…” – வாய்விட்டு கடவுளை அழைத்தாள் மிருதுளா.
“சரி அதைவிடு… நேத்து நைட்… அர்ஜுன் பாய் உன்னோட ரூமுக்கு வந்ததை நா பார்த்தேன். உள்ள என்ன நடந்தது… ம்ம்ம்???” – கண்ணடித்து சிரித்தாள்.
மிருதுளாவின் முகம் மாறியது. உள்ளே பொங்கும் அதீத கோபம் அவள் முகத்தில் பிரதிபலித்தது. அவள் சொல்வது உண்மையா பொய்யா என்பது அடுத்தது… முதலில் அவள் எப்படி இது போல் பேசலாம்…? இவளை பற்றி இப்படி அசிங்கமாக நினைப்பதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? – முகம் கடுகடுக்க பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டு விறுவிறுவென்று வேகமாக தோட்டத்திற்குள் நடந்தாள்.
“ஹேய்… மிருதூ… நில்லு… நில்லுன்னு சொல்றேன்ல்ல… ஐயோ… நி…ல்…லு… நா சொல்றதை கேளு”- அவளை பின்தொடர்ந்து ஓடினாள் சுமன்.
மிருதுளா நிற்கவில்லை. வேகமாக நடந்தாள்… இன்னும் இன்னும் வேகமாக நடந்தாள்… மரங்களின் அடர்த்தி அதிகமானது… தோட்டம் காடாக மாறியது… நிற்காமல் நடந்து கொண்டே இருந்தாள்.
மேல்மூச்சு வாங்க தோழியை பின்தொடர்ந்துக் கொண்டிருந்த சுமன் வெகுவாய் பின்தங்கிவிட்டாள்.
“ஐம் சாரி… நா அப்படி சொல்லியிருக்கக் கூடாது… நீ நல்லவதான்… ரொம்ப நல்லவ… மன்னிச்சுக்கோ தாயே… தயவு செஞ்சு நில்லு…” – சுமனின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது. எதைப் பற்றியும் அவளுக்கு கவலை இல்லை… ‘அவள் எப்படி இப்படி பேசலாம்…? எப்படி பேசலாம்?’ – ஆத்திரம் அடங்கவில்லை. ஆவேசத்துடன் வேகவேகமாக நடந்துக்கொண்டிருந்தவள் சட்டென்று நின்றாள். தூரத்தில் கார் ஒன்று சொல்வது தெரிந்தது. ‘சாலையா!’ – விழி விரிய ஆவலுடன் பார்த்தாள்.
‘ஆம்… சாலையேதான்… அதோ… ஒரு பேருந்து கூட செல்கிறது… இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்!’ – அவசர அவசரமாக மனக்கணக்குப் போட்டாள். ‘ஐந்து… இல்லை பத்து நிமிடம் நடந்தால் போதும்… ஓடினால்? நமது வேகத்திற்கு இரண்டு நிமிடம் போதாது…? இல்லை… மரங்களை கடந்து ஓட வேண்டும்… மூன்று அல்லது நான்கு நிமிடம்?’ – “உ…ஃப்… ஓ… மை… காட்! யு ஆர் இம்பாஸிபிள்…” – மூச்சுவாங்க மிருதுளாவின் மீது வந்து விழுந்தாள் சுமன்.
சட்டென்று திரும்பி தோழியை தாங்கினாள் மிருதுளா. அவள் மீது தொங்கியபடியே, “திருப்தியா இப்போ?” என்றாள். அவளுடைய களைப்பை பார்த்து புருவம் உயர்த்தினாள் மிருதுளா.
“என்ன அப்படி பார்க்கற? இவ்வளவுதானா நான்… இதுவே அதிகம்… உனக்காகத்தான் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்தேன். ஹையோ… இப்போ திரும்பி வேற போகணுமே… கடவுளே!” – புலம்பியவள், அங்கே சுற்றிக் கொண்டிருந்த காவலாளி ஒருவனை அழைத்து, “பாய்… தண்ணி இருந்தா கொஞ்சம் கொடுங்க” என்றாள்.
அவன் இடுப்பு பெல்ட்டில் செருகியிருந்த சிறு பாட்டில் ஒன்றை அவளிடம் எடுத்து நீட்டினான். அதை வாங்கி மடமடவென்று குடித்து முடித்துவிட்டு, “இங்கதான் இன்னைக்கு டியூட்டியா? எவ்வளவு நேரம்? எல்லா தண்ணியையும் குடிச்சு முடிச்சுட்டேன்… மேன்சனுக்கு போன பிறகு யார்கிட்டேயாவது கொடுத்தனுப்பறேன்” என்றாள்.
“தேவையில்லை பாபி… நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? சுஜித் பாய்க்கு தெரிஞ்சா திட்டுவாரு… கிளம்புங்க… கிளம்புங்க…” – விரட்டினான்.
“கரெக்ட்… சுஜித்துக்கு தெரிஞ்சா திட்டுவாரு… தெரியாம பார்த்துக்கோங்க… நாங்க சும்மா ஓடிப்பிடிச்சு விளையாண்டோம்… இதோ கிளம்பிட்டோம்… லெட்ஸ் கோ…” என்று தோழியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“ஹௌ டேர் யு ஆஸ்க் மீ ஸச் நான்சென்ஸ்?” – வெடுவெடுத்தாள் மிருதுளா.
“ஐ காண்ட் பிலீவ் யு…”
“ஏன்?”
“நா சொன்னா நீ மறுபடியும் ஓட ஆரம்பிச்சுடுவ… உன்ன துரத்த என்கிட்ட தெம்பு இல்லம்மா. பேசாம வா…”
“ஒழுங்கா… சொல்ல வந்ததை சொல்லு”
“நேத்து நைட் அர்ஜுன் பாய் உன்னோட ரூம்க்கு வரலைன்னு சொல்றியா?” – தோழியின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல் சற்றுநேரம் அமைதியாக நடந்த மிருதுளா பிறகு, “நான் பார்க்கல” என்றாள்.
“எஸ்… தட்ஸ் பாஸிபிள்… அது லேட் நைட் தான்… நீ தூங்கியிருப்ப… பட் ஹி என்டர்ட் யுவர் ரூம்…” என்றாள் உறுதியாக. மிருதுளாவின் புருவம் சிந்தனையில் சுருங்கியது.
*******************
‘சுமன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். அவன் வந்திருப்பான்… இன்றும் கூட வருவான்… நாம் அவசரப்படக் கூடாது. பொறுமையாக காத்திருந்து அவன் வந்துவிட்டு சென்ற பிறகுதான் இங்கிருந்து கிளம்ப வேண்டும். அதிகாலை நேரம் தான் சரியாக இருக்கும். காவல் காப்பவர்கள் கூட கண் அசர கூடிய நேரம் அதுதான்…’ – மனதிற்குள் பக்காவாக திட்டம் போட்டுவிட்டு வெளியே இயல்பாக இருந்தாள் மிருதுளா.
இரவு உணவிற்குப் பிறகு அனைவரும் அவரவர் அறைக்குச் சென்ற போது மிருதுளாவும் தன்னுடைய அறைக்குச் சென்றாள். மனம் பரபரவென்றிருந்தது. நிலைகொள்ள முடியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள். இன்று இரவு முடிவு தெரிந்துவிடும். – ‘கடவுளே! ஹெல்ப் மீ…’ – நேரம் செல்லச் செல்ல டென்சன் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் எந்த நேரத்திலும் அர்ஜுன் அவளை பார்வையிட வரலாம் என்று நினைத்தவள், அமைதியாக கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டால் உறங்குவது போல் கண்களை மூடிக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.
வெகுநேரம் காத்திருந்தும் அவள் எதிர்பார்த்தது போல் அன்று அர்ஜுன் அவளுடைய அறைக்கு வரவில்லை. இன்னும் சற்று நேரம் காத்திருக்கலாம் என்று யோசித்தாள். ஆனால் விடிவதற்குள் தப்பித்தாக வேண்டும். விடிந்துவிட்டால் மாட்டிக்கொள்ள நேரிடும். அவன் உறங்கச் சென்றுவிட்டானா… அல்லது இனிமேல் தான் வருவானா? ஒன்றும் புரியவில்லை. மெல்ல எழுந்தாள்… நேரம் என்ன என்று தெரியவில்லை. மணிப்பார்க்க வேண்டும் என்றால் சமையலறையை எட்டிப்பார்க்க வேண்டும். அங்கே சென்றால் யார் கண்ணிலும் பட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. பயமாக இருந்தது… என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் நகத்தைக் கடித்தாள்.
பிறகு ஜன்னல் பக்கம் போடப்பட்டிருந்த திரையை விலக்கிவிட்டு வெளியே நோட்டமிட்டாள். காவலாளிகள் யாரும் கண்ணில்படவில்லை.
அந்த மாளிகை முழுக்க, கம்பியோ மரச்சட்டமோ இல்லாத உயர உயரமான கண்ணாடி ஜன்னல்கள் தான்… அது அவளுக்கு வசதியாகிவிட்டது.
‘இது என்ன ஆர்கிடெக்சரோ…! கொஞ்சம் கூட சேப்டி இல்லாத ஆர்கிடெக்சர்… எப்படியோ… நமக்கு ஹெல்ப்பா ஆயிடிச்சு…’ – மனதிற்குள் பேசிக்கொண்டே கண்ணாடியை திறந்து கொண்டு வெளியே நழுவி விழுந்தாள்.
‘பொத்’ – என்று சத்தம் கேட்டது. அவசரமாக எழுந்து இருளில் மறைந்துக் கொண்டு யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தாள்.
‘இல்லை… ஒருவரும் அந்த பக்கம் இல்லவே இல்லை… உஃப்…’ – இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிம்மதியாக வெளியேற்றினாள். எச்சரிக்கையுடன் இருளில் தன்னை கரைத்துக் கொண்டு மெல்ல தோட்டத்திற்குள் புகுந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போல் காவலாளிகள் உறக்கக் கலக்கத்தில் அசரவில்லை. நல்ல விழிப்புடன்தான் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் சாமர்த்தியமாக செயல்பட்டாள். இது எப்படி சாதித்தியமாது என்று அவளுக்கு தெரியாது. இயல்பாக அவளுடைய புலன்கள் கூர்மையாகி அவளுக்கு கைகொடுத்தது. ஒளிந்து மறைந்தபடியே கல்லையும் முள்ளையும் கடந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்தாள்.
நிலவின் ஒளி முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருந்த அந்த காட்டுக்குள் இருளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது பிளாஷ் லைட்டின் வெளிச்சம் ஆங்காங்கே பாய்ந்தது. காவலாளிகள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை புரிந்த்துக்கொண்ட மிருதுளாவிற்கு, எதிரில் இருப்பது மரமா மனிதனா என்று அனுமானிக்க முடியாமல் திணறினாள். எங்கு பார்த்தாலும் யாரோ நிற்பது போன்ற மாயை அவளை மிரட்டியது. அவளுடைய தைரியமும் வேகமும் குறைந்தது… மெல்ல நிதானித்து நடந்தாள்.
‘இந்த காட்டிற்குள் புகுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தோமே!’ – தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள். ஆனால் இதை விட்டாலும் வேறு வழி என்ன இருக்கிறது! – தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு முன்னேறி நடந்தாள்.
‘சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா!’ – சந்தேகம் எழுந்தது. பயத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது. மூச்சில் சீரற்ற நிலை உண்டானது… கடவுளின் நாமத்தை முணுமுணுத்தாள். தாயின் நம்பிக்கை நிறைந்த முகம் அவள் மனக்கண்ணில் தோன்றி அவளை உற்ச்சாகப் படுத்தியது. புது உத்வேகத்துடன் பயத்தை உதறிவிட்டு எச்சரிக்கையுடன் வேகத்தை கூட்டி நடந்தாள். தூரத்தில் ஏதோ ஒரு வண்டி செல்லும் வெளிச்சம் கண்ணில் பட்டது. சாலையின் திசையை உறுதிப்படுத்திக் கொண்டாள். மனதில் நம்பிக்கை மலை போல் உயர்ந்து எழுந்தது. இன்னும் வேகமாக நடந்தாள்.
பத்துப் பதினைந்து நிமிட வேக நடைக்குப் பிறகு ஒருவழியாக சாலையை அடைந்தாள். சாலையோர இருளில் மறைந்தபடியே, மாளிகை இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வேகமாக நடந்தாள். அவளது அதிஷ்டம்…. சற்று நேரத்திலேயே தூரத்தில் ஹெட் லைட் வெளிச்சம் தெரிந்தது… ஓரமாக நின்று என்ன வாகனம் என்று பார்த்தாள். பயணிகள் பஸ்ஸாக இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டாள். ஆனால் வந்தது ஒரு கார்… கோர்த்தாவின் வாகனமாக இருக்குமோ என்கிற எச்சரிக்கையுடன் அந்த கார் கடந்து செல்லும் வரை மறைந்திருந்துவிட்டு ஓட துவங்கினாள். இது போல் இரண்டு மூன்று கார்களை தவறவிட்டவள்… இதற்கு மேல் ஓடவோ நடக்கவோ முடியாது என்கிற சூழ்நிலையில் கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு, அடுத்து வந்த காருக்கு எதிரில் வந்து கை நீட்டி லிப்ட் கேட்டாள்.
12 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Next epi eppo mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
:O seekkirame pa… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நிவி says:
திக் திக் நிமிடங்கள்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
சரியான அருந்த வாலு இந்த சுமன்.. .
மிது ஏன் மா இப்படி வம்பை காசு குடுக்கமா வாங்குற. .
நீ அர்ஜுன் மாமா விட்டு இவ்ளோ ஈஸியா ஓடி போயிட முடியுமா என்ன.
சின்ன பிள்ளை தனமா ல இருக்கு…
ஒருவேளை அந்த கார் எதிர் அணி வில்லன் பார்ட்டி க்குள்ளதா?
வர வர கதை ரொம்ப சூடாகுதே….
மிது கூட சேர்ந்து நானும் ட்ராவல் பண்ண ஆர்வமா இருக்கேன்….நீ எதுக்கும் கவலை படதா மிது குட்டி… நான் உன் கூட இருக்கேன்….
let’s enjoy the journey….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
super ud ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Pochu da. Ipo adutha dhik dhik ah????
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Dik dik episode pa. Heart beats r increasing for next dik dik epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
Hai Nithya, very very nice update. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Kandipa adu korthavoda vehicle ah??!! Ava side la irundu Ava panradu correct.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ragini Ravi says:
Hai…..nice dik dik episode eagerly waiting for next episode but u r taking very longggg time to post next episode…….:-|:-!😣😣😣😣😣so plz I can’t wait
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
I’ll try to post tom… 🙂