Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

காஜலிட்ட விழிகளே 1

காஜலிட்ட விழிகளே

பாலா சுந்தர்
இன்று
ஜுன் மாதம்
இரண்டாயிரத்தி பதினோராம் ஆண்டு…

இடம்:
கபாலீஷ்வரர் கோயில் சென்னை

“இது காதல் கோட்டைக் காதல் தான்” என்று ஸ்ருதி சொன்ன போது கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை.

“கார்த்திக் இது காதல் கோட்டைக் காதல் தான். நான் சொல்றது புரியுதா?”

கொஞ்சம் புரியுது ஸ்ருதி. … ஆனா நான் சரியாகத் தான் புரிஞ்சிருக்கேனா இல்லையான்னு நீ சொல்லும் விளக்கத்தை வைத்துதான் சொல்ல முடியும். அதனால் கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?”

 

“கார்த்திக் நாம இரண்டு பேரும் சந்திக்கலாம். ஆனால் தனியாக சந்திக்கக் கூடாது. நீ தனியாக என்கூட பேசக்கூடாது. வெளியே எங்கேயும் என்னை கூப்பிடக் கூடாது. அப்பா இரண்டு வருஷம் கழித்துதான் என் கல்யாணம் பற்றியே பேச்செடுப்பார். அதனால் அதுவரை எப்ப கல்யாணம் என்று என்னை நச்சரிக்கக் கூடாது. என் வீட்டில் குறிப்பா என் கிரிஜா அக்காவுக்கு சந்தேகம் வரும்படியாக நீ நாம ஸ்டேஜில் பாடும்போது நடந்துக்கக் கூடாது. கிரிஜா அக்கா கல்யாணம் இன்னும் ஒரு வருஷத்தில் முடிஞ்சிடும் அதுவரை அக்கா நம்மகூட டூரூப்பில் பாடுவாங்க. அதனால் ரொம்ப ரொம்ப கவனம்! முக்கியமானது ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் பாரு.. நீ என்னை தொடவே கூடாது! ”

 

“கார்த்திக் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. நீ தொட்டா நான் உருகுவேன் அப்புறம் கல்யாணத்தை சீக்கிரம் வச்சிட சரின்னு சொல்வேன் என்று மட்டும் நினைக்காத. அப்படி ஒரு விஷயம் நடந்ததுன்னா உன்னை நான் திரும்பிகூட பார்க்க மாட்டேன். தெரிஞ்சுக்கோ. நம்ம காதல் காதல்கோட்டை படத்தில் வருவது மாதிரி தான் கண்ணியமாக இருக்கணும்.
என் அப்பாவுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது தெரியுமா? எனக்கு எல்லாமே என் அப்பாதான். என் அப்பா மனக் கஷ்டப்படும்படி நான் எதுவுமே செய்யமாட்டேன். அவருக்கு ஜோடியாக பைக்கில் சுத்துவது.. பீச் பார்க் தியேட்டர் இப்படி பல இடங்களில் அலைவது.. கைகோர்த்து நடப்பது இது எதுவுமே துளிகூடப் பிடிக்காது.
நானும் கிரிஜாவும் அப்பா இஷ்டம் போல் தான் எப்போதும் நடந்துக்குவோம். இப்ப புரியுதா?” என்று ஸ்ருதி முடித்தபோது கார்த்திக் தெளிவாக குழம்பியிருந்தான்.

 




Comments are closed here.

You cannot copy content of this page