நிழல்நிலவு – 13
10828
8
அத்தியாயம் – 13
காற்றில் கலந்திருந்த ரெத்தவாடையை நுகர்ந்த அவள் நாசி, தொடர்ந்து மூளைக்கு சிக்னல் அனுப்பிக் கொண்டிருந்தது. செயலற்று மயங்கிக்கிடந்த மூளை நாசியின் வெகு நேர முயற்சிக்குப் பிறகு தனக்கு வந்த சிக்னலை ஏற்று ரெஸ்பாண்ட் செய்தது. அதன் பலனாக, ஒருமுறை உள்ளிழுத்த சுவாசம் வெளியேறுவதற்கு முன் அடிவயிற்றில் இருந்ததெல்லாம் புரட்டிக் கொண்டு “உவ்வே…” என்கிற குமட்டலுடன் மேலே எழுந்தது. விலக மறுத்து ஒட்டிக் கிடந்த இமைகளை வெகுவாய் முயன்று பிரித்தாள் மிருதுளா. பார்வையில் எதுவும் புலப்படவில்லை… எங்கும் ஒரே இருள்… கண்களை மூடி மூடி திறந்து இருளுக்குள் துழாவினாள். பலனேதும் இல்லை.
‘எங்கிருக்கிறோம்!’ – அவள் மனம் கலங்கியது.
எழ முயன்றாள். கால்கள் எதிலோ பிணைக்கப்பட்டிருந்தன. அப்போதுதான், தான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் தன்னுடைய கைகள் மடக்கி பின்னால் கட்டப்பட்டிருப்பதையும் உணர்ந்தாள்.
“ஓ.. நோ…” – கத்தினாள். அவளுடைய அலறல் ஒலி அகோரமாய் எதிரொலித்தது. அந்த இடத்திலிருந்து நகர முயன்றாள். கைகளையும் கால்களையும் பலம் கொண்ட மட்டும் அசைத்து விடுவித்துக்கொள்ளப் போராடினாள். ஆனால் இம்மி கூட அசைய முடியவில்லை. அவளுடைய கடுமையான போராட்டத்தின் பலனாக கயிறு அழுந்தி தோலில் சிராய்ப்பு ஏற்பட்டு எரிந்தது. அப்போதும் முயற்சியை கைவிட வேண்டும் என்றுஅவளுக்கு தோன்றவில்லை.
“ஹெல்ப்… சம்படி ப்ளீஸ் ஹெல்ப் மீ… ஹெல்ப்…” – அடிவயிற்றிலிருந்து கத்தினாள். பிடிபட்ட பறவையின் சிறகு போல் அவள் இதயம் படபடத்தது.
இருள் மறைத்த நிழல் போல் நினைவடுக்கில் மறைந்திருந்த காட்சிகளெல்லாம் அலையலையாய் மேலெழுந்தன.
மாளிகையிலிருந்து தப்பித்து காடு மேடெல்லாம் கடந்து ஓடி வந்தாள்… சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வாகனைத்தை உதவி கேட்க மறித்தாள். அப்போதுதான் அந்த அரங்கனிடம் மாட்டிக் கொண்டாள். – சுஜித் சிங்…
அந்த காரில் ட்ரைவர் சீட்டில் அவனைப் பார்த்ததுமே அவளுக்கு சர்வமும் ஒடுங்கிவிட்டது. கோரமான அவன் முகத்தை பார்த்த போது, அவன் தன்னை கொலை செய்ய போகிறான் என்றுதான் நினைத்தாள் மிருதுளா.
ஒரு கணம் கூட தாமதிக்காமல் மீண்டும் தப்பித்துக் காட்டுக்குள் ஓட பார்த்தாள். ஆனால் நொடியில் பாய்ந்து வந்து அவள் முடியை கொத்தாகப் பிடித்துவிட்டான் அந்த ராட்சசன். பிடியென்றால் உடும்புப் பிடி… அவளுடைய துள்ளல் திமிறல் கத்தல் கதறல் எதுவும் அவனை எட்டவில்லை. உணர்வுகளற்ற இயந்திரம் அவன்…
முரட்டுத் தனமாக அவள் முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து காருக்குள் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் கார் கதவில் மடாரென்று மோதி கீழே விழுந்த மிருதுளாவிற்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அதன் பிறகு நடந்தது எதுவும் அவளுக்கு நினைவில்லை.
அவன் தன்னை இன்னும் கொலை செய்யவில்லை என்பதை நம்புவதற்கே அவளுக்கு சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் ஏன் விட்டு வைத்திருக்கிறான்! நினைவு திரும்பிய பிறகு கொலை செய்வதற்காகவா! அல்லது திரில்லர் சினிமாவில் வருவது போல்… நம்மை ஏதாவது பெரிய பெட்டிக்குள் கட்டிவைத்து அப்படியே மண்ணுக்குள் புதைத்துவிட்டானா! இவ்வளவு இருட்டாக இருக்கிறதே! சத்தம் கூட எதுவும் கேட்கவில்லையே! கடவுளே! – கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.
‘ஆனால் இந்த துர்நாற்றம்! இது எங்கிருந்து வருகிறது?’ – “யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ்…” – மீண்டும் சத்தமாகக் கத்தினாள்.
குறுகிய இடத்திற்குள் இருந்து கொண்டு கத்துவது போல் அவள் குரல் எதிரொலிக்கவில்லை. ஏதோ ஒரு பெரிய அறையில்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டாள். தான் உயிரோடு புதைக்கப்படவில்லை என்பது சற்று ஆறுதலை கொடுத்தாலும், அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதியில் நெஞ்சம் உலர்ந்தது. சட்டென்று அந்த இடம் பிரகாசமாய் ஒளிர்ந்தது… மின்விளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச செய்ய இமைகளை சுருக்கியவள் மெல்ல கண்திறந்தாள்.
அவளுடைய பார்வை அந்த இடத்தை வட்டமிட்டது. ஜன்னல் வெண்டிலேட்டர் எதுவுமே இல்லாத ஒரு பெரிய அறை…. சுவரெல்லாம் தெறித்திருந்த ரெத்தக்கறையும், தரையில் படிந்திருந்த அழுக்கும் மனித கழிவும் அந்த இடத்தின் கொடூரத்தை அவளுக்கு உணர்த்தியது. மிருதுளாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது… பயந்து போய் ‘ஆ…’ என்று வீறிட்டு கொண்டு அங்கிருந்து எழுந்து ஓட முயன்றாள். கயிறு உரசி தோல் பிய்ந்து ரெத்தம் கசிந்ததே ஒழிய அவளுடைய முயற்சிக்கு வேறெந்த பலனும் கிடைக்கவில்லை.
அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அங்கே இருந்த கதவுக்கு பின்னால் ஏதோ அரவரத்தை உணர்ந்தாள். அடுத்த நொடியே அதி வேகமாக திறக்கப்பட்ட கதவு சுவற்றில் மோதி அதிர்ந்தது. அந்த சத்தத்தில் மிரண்டு உடல் தூக்கிப் போட, அவள் தலை தானாகச் சென்று நாற்காலியில் மோதியது. பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
அர்ஜுன் ஹோத்ரா உள்ளே வந்தான். அவனைத் தொடர்ந்து வந்த மூவரில் ஒருவன் கதவை மூடி பூட்டினான். மிருதுளாவின் வயிறு தடதடத்தது. அழுத்தமான காலடிகளுடன் அவளிடம் நெருங்கிய அர்ஜுன் ஹோத்ரா, வழக்கத்திற்கு மாறாக ஒரு லாங் கோட் அணிந்திருந்தான்… அவன் கைகள் கருப்பு நிற லெதர் கையுறைகளுக்குள் புதைந்திருந்தன. பயப்பந்து அவள் நெஞ்சை அடைத்தது.
பார்வையை மெல்ல உயர்த்தி அவன் முகத்தை ஏறிட்டாள். இதுவரை அவள் பார்த்த அர்ஜுன் அல்ல இவன். இவன் யாரோ… கொலைகாரன்… அசுரன்…. அரக்கன்… அவளுக்கு மூச்சடைத்தது… உடம்பிலுள்ள ரோமங்களெல்லாம் குத்திட்டு நிமிர்ந்தன…
********************
“வீ காட் ஹர்… பேஸ்மெண்ட்டுக்கு கொண்டுவந்துட்டோம்…” – சுஜித்தின் முரட்டுக்குரல் அலைபேசியில் எதிரொலித்தது.
அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகள் அலட்சியமாக வளைந்தன. “ஐம் கம்மிங்” – அவனை கத்தரித்துப் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். இரவு உடைக்கு மேல் ஒரு லாங் கோட்டை அணிந்துக் கொண்டான். டிராயரை திறந்து அவனுடைய கருப்பு லெதர் கிளவுஸை எடுத்தான்.
பேஸ்மெண்டில் ஏதாவது வேலை என்றால் கிளவுஸ் இல்லாமல் செல்லமாட்டான். ஒருவேளை அவனுடைய கைகள் அழுக்காகலாம்…
டிராயரை அடித்து மூடிவிட்டு அறையிலிருந்து வெளியேறி படிக்கட்டில் இறங்கினான். பேஸ்மெண்டை நோக்கி செல்லச் செல்ல அவனுக்குள் இருந்த கோபம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே சென்று அவனை முழுவதுமாக ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்பு அவன் ரத்தத்தை கொதிக்கச் செய்தது… அந்த கொதிப்பு உடம்பிலுள்ள ஒவ்வொரு நரம்பில் வெறியாக பாய்ந்தது…
‘தட்… தட்…’ என்று ஓசையெழுப்பும் அழுத்தமான காலடிகளுடன் பேஸ்மெண்ட் படிக்கட்டில் இறங்கினான். மரணத்தின் வாசம் அவனை சூழ்ந்திருந்தது. வெறும் கையால்… விரல்களை மட்டுமே ஆயுதமாகப் கொண்டு நெஞ்சைப் பிளக்க வேண்டும்… அவனை ஏமாற்ற துணிந்தவர்களின் உயிர் பிரிவதை கண்ணிமைக்காமல் பார்க்க வேண்டும்… உள்ளே ஒரு மிருகம் உறுமியது… கட்டவிழ்த்துக்கொள்ள துடித்தது.
பேஸ்மெண்ட் படிக்கட்டின் இறுதியில், அந்த கனமான கதவுக்கு அருகே அவனுடைய சகாக்கள் மூவரும் நின்றுக் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும், கதவை படாரென்று திறந்தான் சுஜித். அது சுவற்றில் சென்று மோதி பெரும் சத்தத்தை எழுப்பியது. அந்த சத்தத்தால் அதிர்ந்து பின்வாங்கி, அமர்ந்திருந்த சேரிலேயே பலமாக இடித்துக் கொண்டாள் மிருதுளா.
அவளுடைய கைகளும் கால்களும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தன. முகம் வீங்கியிருந்தது. இமைகள் தடித்திருந்தன… விழிகள் சிவந்திருந்தன… பயந்த முயல்குட்டிப் போல் நடுங்கியபடி அமர்ந்திருந்தாள்.
அவனுக்குள் இருந்த அசுரன் சத்தமாக சிரித்தான். அவனுக்கு இது போதாது… இன்னும் அதிகமாக வேண்டும்…
அவள் முகத்தை வெறித்துப் பார்த்தபடியே அவளிடம் நெருங்கினான். ஒரு இன்ச் இடைவெளிதான் இருக்கும்… அவ்வளவு நெருக்கத்தில் அவனுடைய சீற்றம் நிறைந்த கண்களைக் கண்டு மிருதுளா திணறினாள்… அழுதாள்… ‘பர்ஃபெக்ட்…’ – இதுதான் அவனுக்கு வேண்டும். அவள் இப்படித்தான் அவனைப் பார்த்து நடுங்க வேண்டும்…
அவள் நாற்காலியில் நன்றாக சாய்ந்து பின்னால் நகர முயன்றாள். அவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முயன்றாள். முடியவில்லை… மூச்சுக்காற்றுக்கு திணறி மீன் குஞ்சு போல வாய் திறந்து திறந்து மூடியது… கண்களில் கண்ணீர் மௌனமாய் வடிந்தது… அவளுடைய அந்த பரிதாபமான காட்சி அவன் இதயத்தை சுண்டியது… லேசாகத்தான்… ஆனால் அதுவே அவனை பலவீனமாக்க போதுமானதாக இருந்தது…
உடனே அவனுக்குள் இருந்த மிருகம் பயங்கரமாக உறுமினான். தன் கோரப்பற்களைக் கொண்டு அவனுடைய பலவீனத்தை குதறிவிட்டு அவனை மீண்டும் முழுவதுமாக ஆக்கிரமித்தான்.
அவனுடைய இதயம் பாறை போல் இறுகியது. உயிரற்று… உணர்வுகளற்று மரத்துப் போனது. அவனுடைய வலிய கரம் அவள் கன்னங்களில் மென்மையாய் படிந்தது… பிறகு அவன் பிடித்த பிடியில் மெல்ல மெல்ல அழுத்தம் கூடியது. மிருதுளாவின் முகம் சிவந்தது… வலியில் முனகினாள். கண்களில் கலவரம் கூடியது… தடை எலும்பு உடைந்துவிடும் போலிருந்தது… துடித்தாள்… அவன் பிடியிலிருந்து விலகிட முயன்று தலையை அசைத்தாள். அவன் பிடி மேலும் இறுகி அவளை அசையவிடாமல் செய்தது.
“ப்…ளீ…ஸ்…” – கண்ணீருடன் கெஞ்சினாள். கிணறுக்குள் இருந்து ஒலிப்பது போல் அவள் தொண்டையிலிருந்து சிரமத்துடன் வெளிப்பட்டது அந்த வார்த்தை.
“வொய் த ஹெல் ஆர் யு ஸ்பையிங் மீ ? யாருக்காக இங்க வந்த?” – அடி குரலில் கர்ஜித்தான்.
சட்டென்று மிருதுளாவின் எதிர்ப்பு அடங்கியது… அவள் முகத்தில் வியப்பு… ஒன்றும் புரியாத குழப்பம்… பிறகு ஓரிரு நிமிடம் கழித்து தலையை குறுக்காக ஆட்டினாள்.
“நோ… நோ… ப்ளீஸ்… நோ…. ஐம் நாட் ஸ்பையிங் யு… நோ…” – அவசரமாக மறுத்துவிட்டு தலையை இடமும் வலமுமாக வேக வேகமாக ஆட்டினாள்.
இதுதான்…. இந்த ரியாக்ஷன் தான் அவன் எதிர்பார்த்தது. மாட்டிக்கொண்ட பிறகு யார்தான் உண்மையை உடனே ஒப்புக்கொள்வார்கள். முடிந்த அளவுக்கு சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, இனி கடைசி மூச்சு மட்டும்தான் மிச்சம் என்னும் நிலையில் தானே அனைத்தையும் கக்குவார்கள். இவள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன! – சட்டென்று பொங்கிய ஆத்திரத்துடன் ஓங்கி ஓர் அரை கொடுத்தான். நாற்காலியோடு பின்னல் சென்று விழுந்தாள் மிருதுளா.
வலியிலும் பயத்திலும் அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளியேறியது. ‘ஆ…’ – சத்தமாய் அழுதாள்.
சேரோடு அவளையும் சேர்த்து தூக்கி நிறுத்தினான் சுஜித். அவள் பழைய நிலைக்கு வந்ததும், மீண்டும் அவளிடம் குனிந்தான் அர்ஜின்.
அவள் முகமெல்லாம் இரத்தப் பசையற்று வெளிறிப் போயிருந்தது… உதடுகள் காய்ந்து வறண்டுப் போயிருந்தன. “நோ… நோ… ப்ளீஸ்… ப்ளீஸ்…” – அஞ்சி நடுங்கினாள்.
“டெல் மீ நௌ… யார் கொடுத்த ஆர்டார்ல பட்டேலை கொலை செஞ்ச?” – இந்த குற்றச்சாட்டைக் கேட்டதும் மிருதுளா அலறிவிட்டாள்.
“க்…க்…கொலையா! நோ… நா… நா எதுவும் பண்ணல… பண்ணல… ஐ டோன்ட் நோ… ப்ளீஸ்… எனக்கு எ…து…வு…ம்…” – அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அர்ஜுன் ஹோத்ராவின் இரும்பு கரம் அவள் கழுத்தை அழுத்திப் பிடித்திருந்தது. தொண்டை அடைத்தது… மூச்சு திணறியது… உடல் துடித்தது… கண்கள் மிரண்டு மேல்நோக்கி செருகின… அவ்வளவுதான்…. மயங்கப் போகிறாள்… கடைசி நொடியில் பின்னுக்குத் பிடித்துத் தள்ளி விடுவித்தான்.
‘ஹாங்… ஹாங்…’ என்று ஏங்கியேங்கி வேகமாக மூச்செடுத்துக் கொண்டே இருமினாள். இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்தாள். கண்கள் எங்கோ சுழன்றுக் கொண்டிருந்தன. தலை தட்டாமாலை சுற்றியது. சீரற்ற சுவாசம் அவளை நிலைகுலைய செய்தது.
“ப்…ஹாங்…. ப்ளீ…ஹாங்… ளீ…ஸ்….” – அவள் உயிரும் உடலும் ஒட்டியிருக்க போராடியது… அவள் படும் துன்பத்தை விழியாகற்றாமல் பார்த்துக் கொண்டு சிலை போல் நின்றான் அர்ஜுன் ஹோத்ரா.
நிமிடங்கள் பல கழிந்தபிறகு அவள் நிலை மெல்ல மெல்ல சமன்பட்டது… மூச்சு சீரானது… ஆனால் உடலில் வலு இல்லை… மனதில் சக்தி இல்லை… தொய்ந்து கிடந்தாள்.
அப்போதும் அவன் விடவில்லை… அவள் தலையை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, “டெல் மீ நௌ… ஹூ ஐஸ் யுவர் பாஸ் அண்ட் வேர் இஸ் ஹி நௌ?” என்றான்.
சோர்ந்துக் கிடந்த மிருதுளா பதில் சொல்லவில்லை. பார்வையை உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. “பிலீ…வ் மீ…. ப்..ளீ…ஸ்… அர்…ஜு…ன்…” – சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உடல் தளர்ந்து… கண்கள் செருகி… தலை தொங்கிவிட்டது.
அர்ஜுன் ஹோத்ராவின் முகம் மாறியது. சட்டென்று அவள் கழுத்தில் கை வைத்து துடிப்பிருக்கிறதா என்று சோதித்தான். நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது அவனிடமிருந்து. உடல் இறுக்கம் தளர்ந்தது…
“வாட்டர்…” – உணர்ச்சிகளற்று வறண்டிருந்தது அவன் குரல்.
சற்று நேரத்தில் ஒரு பாட்டிலை கொண்டு வந்த டேவிட் அர்ஜுனை ஏறிட்டான்… அசைவற்று சிலை போல் நின்றான் அவன். அவனுடைய கட்டளைக்காக காத்துக் கொண்டிருந்தான் டேவிட்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மிருதுளாவை தலையை அசைத்தான். அந்த சமிங்கையின் பொருளை புரிந்துக் கொண்டு அவளுக்கு தண்ணீரை புகட்டினான் டேவிட். அவசரமாய் அதை அருந்தியவளுக்கு புரையேறியது…
“ரிலாக்ஸ்… ஸ்லோலி…” – எச்சரிக்கையுடன் அவளுக்கு மெல்ல புகட்டினான் டேவிட்.
‘நடிக்கிறாள்… ஏமாற்றுகிறாள்… கொன்றுவிடு… அவளை கொலை செய்துவிடு… ரெத்தம் வேண்டும்…. உயிர் வேண்டும்… மரணம் வேண்டும்…’ – அசுரன் ஆர்பரித்தான்.
அர்ஜுன் ஹோத்ரா தலையை அண்ணார்ந்து கண்களை இறுக்கமாக மூடினான். வெறுப்புடன் முடியை அழுந்த கோதினான்…
‘அவளுடைய கண்ணீர்… அழுகை… துன்பம்… தவிப்பு…’ அவனுக்குள் ஏதோ கூர்மையாய் பாய்ந்தது… உணர்வற்று மறைத்துப் போயிருந்த அவன் இதயம் வலியை உணர்ந்தது…
“ஏ…ஆ…ய்ய்ய்ய்…” – கையிலிருந்த கிளவுஸை கழட்டி எறிந்துவிட்டு அறையே அதிரும்படி ஆவேசமாக கத்தினான்.
அங்கிருந்த மற்ற மூவரும் அவனை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்களுடைய பார்வை அவனை கேள்வி கேட்டது. நாசி விடைக்க பற்களை நறநறவென்று கடித்தான். சட்டென்று அவர்களுடைய முகம் உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்றது.
எதிரில் நிற்பவர்களை ஒற்றை பார்வையில் கட்டுப்படுத்திவிட்டான். ஆனால் உள்ளே இருந்துகொண்டு ஆர்பரிப்பவனை அடக்குவது எப்படி? – சிவந்த விழிகளுடன் வெறி பிடித்தவன் போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பிறகு நின்று கண்களை மூடி ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கதவை நோக்கி நடந்தான். மற்ற மூவரும் அவனை பின்தொடர்ந்து வந்தார்கள். கதவு மூடி பூட்டப்பட்டது.
“தொடர்ந்து கேள்வி கேட்டுகிட்டே இருங்க… ஒரு கட்டத்துல பிரேக் ஆயித்தான் ஆகணும்” என்று சொல்லிக் கொண்டே நடந்தவன் சட்டென்று நின்று திரும்பினான். அவனுடைய பார்வை சுஜித்தின் முகத்தில் அழுத்தமாய் படிந்தது.
“யாரும் கை வைக்கக் கூடாது” – உறுதியான குரலில் கட்டளையிட்டான்.
மூவருமே ஒரு கணம் அதிர்ந்தார்கள். பிறகு, ‘சரி…’ என்று ஆமோதிப்பாக தலையசைத்தார்கள்.
அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது… பேஸ்மென்ட்டிற்கு கொண்டு வந்த பிறகு, கை வைக்கக் கூடாதென்றால் எப்படி என்கிற கேள்வி அவனுக்குள்ளும் எழத்தான் செய்தது. அதற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… அவள் மீது இன்னொருவரின் கை படுவதை அவனால் அனுமதிக்க முடியாது. இது பலவீனம் தான்… இந்த பலவீனம் அவனுடைய சாம்ராஜியத்தையே அழித்துவிடக் கூடும். – யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல் திரும்பி நடந்தான்.
எப்படி இந்த பலவீனம் நமக்குள் உருவாக அனுமதித்தோம் என்று எண்ணியவனுக்கு தன் மீதே ஆத்திரம் பொங்கியது. பிறகு அந்த கோபம், ‘அவள்தான் அனைத்திற்கும் காரணம்’ என்று மிருதுளாவின் பக்கம் திரும்பியது.
‘அவள் என்னை ஆக்கிரமிக்க முடியாது… விடமாட்டேன்… நிச்சயம் விடமாட்டேன்’ – அவன் உள்ளம் உருப்போட்டது.
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Already akramichache baby. Unaku than therila.
Akka 3 days engala manda kaaya vittutinga. Munna pola daily updates podungalen pls.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Umamanoj says:
Superb Nithya.. update seekiram podunga Pa..pls..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ragini Ravi says:
Adapongapa ud kuduka neraya days agudhu…….adum Roomba kuttu ya iruku nan ipdi oru story irukune marandu pogudu……plz pa konjama sekrama podunga…….yepo Dan midhu va pathi teriyum …….pavam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Terror epi pa…………. I m getting addicted to the story. Post the next part soon pa…….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Haiyoo eppadi thanguva arjun kovathai… Aduthu enna.. Tik tik tik
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Super ud sis….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
super ud ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
அட போங்கடா டுபாக்குர் பசங்களா….
ரொம்ப ஆடாதிங்கடா….ஊத்திக்க போகுது…
டேய்…..மிது மேல கை வச்சிட்டல… உனக்கு இருக்குடா மவனே….
ஹேய் சுஜித் த் த் த் து…. உனக்கு தான் டா முதல….