காஜலிட்ட விழிகளே 2
3077
2
இன்றிலிருந்து இரண்டு வருடத்திற்கு பிறகு ஒரு வீட்டில் மாடி அறையில்…
காெ ஞ்சம் முன்னாடி ரிவைன்ட் பண்ணால்..
In the Future..
After two years ..
In the year 2018..
கார்த்திக்கும் ஸ்ருதியும் தனியே ஒரு மாடி அறையில் சிக்கிக் கொண்டனர்.
அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல்..
“ கார்த்திக் ஒரே வியர்வை.. உடம்பெல்லாம் கச கசன்னு இருக்கு! கதவைத் திறக்க மாட்டியா? ”
“மாட்டேன்! ”
“கார்த்திக் அதான் ஒரு மணி நேரம் உன்கூட இங்க அடைந்து கிடந்தாச்சுல்ல? பத்தாதா? ”
“கதவை திறக்க முடியலைடி. நான் என்ன பண்ணுவது? ”
“நீ தானே இந்த ரூமிற்குள் என்னை மாட்டிக்க வச்சிட்ட? ”
“இப்ப என்ன குறைஞ்சி போயிடுச்சு? என்னுடன் இன்னும் ஒரு மணிநேரம் இப்படியே இரு! ”
“யாராவது பார்த்திட்டா என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு.. உனக்கு இது குஜாலா இருக்கா? ”
“இவ்வளவு நேரம் குஜாலாக இருந்தது பத்தலை! மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி.. இலவசமா ஒரு சினிமா…”
“உனக்கு புத்தி பேதலிச்சிடுச்சு! ”
“ஸ்ருதி இப்படி ஒரு தனிமை கம்பெனி இனி எனக்கு நம்ம கல்யாணத்திற்கு பிறகுதான் கிடைக்கும். அதை இப்ப நான் ரசனையாக அனுபவிப்பதில் என்ன தப்பிருக்கு? ”
“கார்த்திக் ரொம்ப டயர்டாக இருக்குப்பா.. “
“இருக்கும் இருக்கும்! அப்படித்தான் இருக்கும் டியர்!”
“
“கார்த்திக் எனக்கு மயக்கமா வருதுப்பா? “
“மயக்கமா? அது எப்படி இப்ப வரும்? இன்னும் குறைஞ்சது மூனு மாதமாவது ஆகுமே ஸ்ருதி? “
“கார்த்திக்.. கதவைத் திற! ”
“அட ராமா தமிழ் தெரியாத பொண்ணுகூட நான் நாற்பது வருஷம் எப்படிக் குடித்தனம் நடத்தப் போறேனோ? ”
…
“ஸ்ருதி உனக்கு வேற மொழி ஏதாவது தெரியுமா? அதில் வேணும்னாலும் நான் சொல்றேன். கதவை திறக்க முடியலை. கதவு தானாக செல்ஃப் லாக் ஆகிடுச்சு. ”
“என்னை இங்கு தனியே கணக்கு பண்ண மட்டும் உன் மூளை யோசிச்சதுல்ல? கதவை பூட்டும்போது மட்டும் ஒழுங்காக யோசிக்கலையா? கதவை மூடும்போது என்ஜாய் பண்ணுனில்ல? இப்ப கதவைத் திறக்க மூளையை யூஸ் பண்ணு! ”
“நான் மட்டுமா என்ஜாய் பண்னேன்? நீயும் தானே என்ஜாய் பண்ண?”
ஒரு மணி நேரம் கழித்து கார்த்திக்கும் ஸ்ருதியும் வெளியே வந்தனர். ஸ்ருதியின் அக்கா கிரிஜாதான் கதவைத் திறந்து விட்டாள்.
ஸ்ருதி வியர்த்து வடிந்த முகமாய் நிற்க அவளது அன்னை அவள் கன்னத்தில் இரண்டு அறை விட்டார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் ஸ்ருதி அம்மா பின்னாலே சென்றாள். ஆனால் அவர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
கிரிஜாவிடம் தனது விளக்கங்களை ஸ்ருதி தந்தாள். அழுது கொண்டே தந்தாள்.
“நாங்க லவ் பண்ணும்போது கார்த்திக்கை தொட்டது கூட கிடையாது கிரிஜா அக்கா! நீ என்னை நம்பணும். கார்த்திக் பற்றி உனக்குத் தெரியாதா? ”
“உன்னைப் பற்றி நான் தெரிந்திருப்பதே சரியா தப்பா என்று என்னால் கண்டுபிடிக்க முடியலையே ஸ்ருதி. ”
“கிரிஜா அப்படின்னா நாங்க இன்னைக்கு அந்த ரூமில் அடைந்து கிடந்ததை போல்.. எப்போதும் தனியே திரியிறோம் என்று நினைக்கிறியா? ”
கிரிஜா ஒன்றும் பேசாமல் தனது பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளது பெட்டியை தன் பக்கமாக இழுத்து கிரிஜாவின் கைகளைப் பற்றினாள் ஸ்ருதி.
“கிரிஜா அக்கா என்னைப் பார்த்துப் பேசு! ” ஆனால் கிரிஜா ஸ்ருதியின் கண்களைப் பார்க்கவில்லை.
“இன்று ஒரு நாள் நான் கார்த்திக்குடன் தனியே இருந்ததால் என்னைப் பற்றி நீங்க நினைப்பது தப்புன்னு சொல்றேன்! கிரிஜா அக்கா , நான் கார்த்திக்குடன் பழகிய இரண்டு வருடமும் ஊர் சுத்தினேன் என்று நினைக்கிறியா? ”
“நான் இப்ப உன்னிடம் ஏதாவது கேட்டேனா ஸ்ருதி? நீயும் கார்த்திக்கும் அந்த ரூமில் ஒரு மணி நேரம் என்ன பண்ணுனீங்க? என் ஹஸ்பென்டுக்கு தெரிந்திருக்கு நீங்க லவ் பண்ணுவது. ஆனால் ஏன் எனக்கு விஷயம் தெரியலை? இதில் ஏதாவது ஒரு கேள்வி கேட்டேனா? நான் எப்போதுமே இந்த கேள்விகள் கேட்கப்போவது இல்லை. ஆனால் ஒண்ணு மட்டும் நான் உன்கிட்ட ரெக்குவஸ்ட் பண்ணிக்கிறேன். அப்பா ஊரிலிருந்து வரும்வரை நீ கார்த்திக்கை பார்க்க வேண்டாம்.
அப்பா வந்ததும் உங்கள் கல்யாணத்தைப் பற்றி பேசலாம். எனக்காக அதை மட்டுமாவது செய்வியா? இல்லை நான் உன் பெர்சனல் ஸ்பேஸில் தலையிடுறேனா? ஒரு மாதம் என் பேச்சைக் கேட்பதில் ஏதும் கஷ்டமிருக்கா? ”
“கிரிஜா அக்கா ப்ளீஸ்.. நான் இப்ப நீங்க என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றிதான் பேசிட்டுயிருக்கேன். என் கல்யாணத்தைப் பற்றி பேசலை! நீ என்னை நம்புறியா இல்லையா? ”
கிரிஜா ஆம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை.
மறுநாள் சாம்பாரில் காரம் அதிகமாக இருந்தது. உப்பு அதை விட அதிகமாக இருந்தது. காய்ந்த உருப்படிகள் மழையில் நனைந்துகொண்டே இருந்தது.
கிரிஜா ஸ்ருதியின் கைபேசிக்கு சார்ஜ் போடவில்லை. ஸ்ருதி கைபேசி வாங்கியபின் தினமும் கிரிஜாதான் அதற்கும் சேர்த்து சார்ஜ் போடுவாள்.
கிரிஜாவிற்கு திருமணம் ஆன அன்று அதைத்தான் சொல்லி ஸ்ருதியும் அவளும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தனர். கிரிஜா தான் புகுந்த வீடு போன பின் அந்த வேலையை வேலைக்கார பெண்ணிடம் ஒப்படைத்திருந்தாள். ஆனால் இன்று கிரிஜா வீட்டிலே இருந்த போதுகூட ஸ்ருதியின் செல்பேசியைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை.
கிரிஜா ஸ்ருதிக்கு பால் கூட ஆற்றிக் கொடுக்கவில்லை. இங்கும் அங்குமாய் ஸ்ருதி பரப்பிப் போட்டிருந்த சாமான்களை கிரிஜா தொடக்கூடயில்லை. அம்மா ஸ்ருதியிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எல்லாம் மாடி ரூம்மில் காhத்திக்கும் ஸ்ருதியும் செய்த திருவிளையாடலின் வினை.
“மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி.. இலவசமா ஒரு சினிமா.. ” என்று கார்த்திக் அந்த ரூமில் நன்றாகத்தான் பாடிக் காட்டினான்.
ஆனால் “கார்த்திக் ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் திஸ் லவ்வபிள் இடியட்! ” என்று மனதில் ஸ்ருதி காட்டுக் கத்து கத்தினாள் சரியாக ஜுலை 24 இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டில்!
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Konjam emotional epi n super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Bala Sundar says:
Thanks sister