Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 17

அத்தியாயம் – 17

மிருதுளாவின் கோபம் நியாயமானதுதான். சுஜித்தின் மூர்க்கத்தனத்தை எப்படித்தான் நியாயப்படுத்த முடியும்? அவள் உடலில் உள்ள காயங்களை பார்த்த பிறகும் கூட அவனுக்கு சார்பாக பேச எப்படி நமக்கு வாய் வந்தது! பொறுத்துக்கொள்ள முடியாமல்தானே அப்படிக் கத்தினாள். இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பது! – கண்ணில்விழுந்த துரும்பு போல் மனசாட்சி அவளை உறுத்தியது. அறைக்குள் அடைந்துக்கிடக்க முடியாமல் எழுந்து தோட்டத்திற்கு வந்தாள்.

 

சுஜித்தின் கார் உள்ளே வருவது தெரிந்தது. கையிலிருந்த அலைபேசியில் நேரம் பார்த்தாள். மதியம் இரண்டு மணி. நேற்று இரவு… அப்படிக் கூட சொல்ல முடியாது… இன்று அதிகாலை அர்ஜுன் ஹோத்ராவிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே சென்றவன், இப்போதுதான் வருகிறான். இவ்வளவு நேரம் எங்கு சென்று என்ன செய்து கொண்டிருந்தான்? – இடையிலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை தாண்டிக் கொண்டு அவனுடைய கார் சென்ற கேரேஜை நோக்கி விரைந்தாள்.

 

“எங்க போயிட்ட இவ்வளவு நேரமா?” – சத்தமிட்டபடி அவனிடம் நெருங்கினாள்.

 

“என்ன விஷயம்?” – நடந்து கொண்டே கேட்டான் சுஜித். அவன் முகம் வீங்கியிருந்தது. கண் இமைகள் தடித்திருந்தன. நன்றாக குடித்துவிட்டு எங்கோ கவிழ்ந்து கிடந்திருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

 

“நில்லு… எத்தனை தடவ போன் பண்ணினேன். எடுத்து எங்க இருக்கேன்னு சொல்லியிருக்கலாம்ல?” – அவனை தடுத்து நிறுத்திக் கேட்டாள்.

 

“ப்ச்… எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டுதான் செய்யணுமா? வீட்டுக்கு போயிருந்தேன். என்ன இப்போ?” – எரிந்து விழுந்தான்.

 

சுருக்கென்றிருந்தது அவளுக்கு. “சரி விடு… சாப்பிட்டியா?” – பொறுத்துக் கொண்டாள்.

 

“ம்ம்ம்… ம்ம்ம்” – முணுமுணுத்தபடி அவள் பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டு நடந்தான்.

 

அவனோடு சேர்ந்து நடந்தபடி, “நீபாட்டுக்கு ரிங்ல இறங்குறேன்னு சவால் விட்டுட்டு போயிட்டே. எனக்கு தூக்கமே வரல. சுஜித்… தேவையில்லாம எதுக்கு இந்த அடிதடி… ரெத்தமெல்லாம்? அர்ஜுன் பாய்கிட்ட பேசிப்பாரேன்…” என்றாள் கெஞ்சுதலாக. சட்டென்று நின்று அவள் பக்கம் திரும்பினான் சுஜித். கண்களில் கோபம் தெறித்தது.

 

“என்ன நினைக்கிற என்னைய பத்தி? நா என்ன கோழையா? ம்ம்ம்? ஆம் ஐ எ கவர்ட்?” – எகிறினான்.

 

சுமன் நிதானித்தாள். சற்று நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தவள் பிறகு மெல்ல அவன் கையை பிடித்தாள்.

 

“ஏன் இப்படியெல்லாம் பேசுற?” – அவனுடைய முரட்டு கையில் மென்மையாய் முத்தமிட்டபடி கேட்டாள்.

 

சட்டென்று அவள் பிடியிலிருந்து கையை வெடுக்கென்று பிடுங்கி கொண்டவன், “ஐம் நாட் எ ஃபூல். டோன்ட் ட்ரை டு பீ ஸ்மார்ட்” என்றான்.

 

“சுஜித்… ப்ளீஸ்… சுஜித்… நா சொல்றத கேளு… ப்ளீஸ்…” – சமாதானம் செய்ய முயன்றாள்.

 

அவனோ, அவளை அலட்சியம் செய்துவிட்டு நடையைக்கட்டினான். அவனை வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்த முயன்றாள் சுமன்.

 

“டோன்ட் டச் மீ” என்று எரிச்சலுடன் அவளை கீழே பிடித்து தள்ளிவிட்டு, “நீ… நீதான் இது எல்லாத்துக்கும் காரணம் டாமிட்…” என்று கடுங்கோபத்துடன் அவளை கைநீட்டி குற்றம் சாட்டினான்.

 

அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் சுமன். “ஒரு சின்ன வேலை… அதை கரெக்டா செய்ய முடியல உனக்கு. எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட. நீ செஞ்ச தப்புக்கு நா பே பண்ண போறேன். காண்ட் யு அண்டர்ஸ்டாண்ட் தட்? கெட் லாஸ்ட்… ஜஸ்ட்… கெட் லாஸ்ட்…” – வெறுப்புடன் கத்திவிட்டு விலகிச் சென்றான். கலங்கிய விழிகளுடன் அவன் முதுகை வெறித்தாள் சுமன்.

 

*******************

 

ஒரு வழக்கு தொடர்பாக மகல்பாட்னா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அஞ்சானி லால். அதே சமயம் இங்கே ஊருக்குள் நடந்த ஒரு பிரச்சனையில் கோர்த்தாவின் ஆட்கள் சிலர் சிக்கியிருந்தார்கள். அவர்களுடைய வழக்கும் அன்று விசாரணைக்கு வந்தது. அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த அர்ஜுன் ஹோத்ரா, எதேர்ச்சையாக அஞ்சானி லாலை சந்தித்தான். அது ஒரு திட்டமிட்ட சந்திப்பு என்பது அர்ஜுனை நிழல் போல் தொடரும் அவனுடைய மெய்காவலன் கூட அறியாத ரகசியம்.

 

கோர்த்தாவின் தலைவர் ராகேஷ் சுக்லா, டெல்லி சென்று வருவதற்கான பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அஞ்சானி லால் மூலம் அவருடைய பார்வைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த திட்டத்தின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்த அவருடைய பாதுகாப்புக்கு குழு, அதற்கான பதிலை இன்று அஞ்சானி லால் மூலம் அனுப்பியிருந்தது. கோர்த்தாவின் வழக்கறிஞர் என்கிற முறையில் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிய அர்ஜுன் ஹோத்ரா, கண்ணிமைக்கும் நேரத்தில் கோப்பை கைமாற்றிக் கொண்டு காரில் ஏறி பறந்தான்.

 

அன்று மாலை அவன் மாளிகைக்கு திரும்பிய போது, தோட்டத்தில் ஒரு கல் பெஞ்சில் மிருதுளா அமர்ந்திருப்பதை கவனித்தான். அந்திசாயும் வானத்தை நிலைத்துப் பார்த்தபடி எதையோ பறிகொடுத்தது போல் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டவனின் முகம் ஒரு கணம் கன்றி இயல்பு நிலைக்கு மீண்டது.

 

ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கிவந்து தலைவனுக்கு கதவை திறந்துவிட்டான் மெய்காவலன். மிருதுளாவிடமிருந்து பார்வையை விளக்கி , அவனை தலையசைத்து அங்கீகரித்துவிட்டு மாளிகைக்குள் நுழைந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அதற்கு பிறகு தொடர்ந்து சில மணிநேரங்கள் அவனுக்கு கடுமையான வேலையில் கழிந்தது. சமையலறையிலிருந்து இரவு உணவு தயாராகிவிட்ட செய்தி இன்டெர்க்காம் மூலம் வந்து சேர்ந்தது. அதன்பிறகு அலுவலரையிலிருந்து வெளியேறி மாடிக்குச் சென்று ரெஃப்ரெஷ் செய்துவிட்டு உணவு கூடத்திற்கு வந்தான்.

 

டைனிங் டேபிளில் மாலிக் மட்டும்தான் இருந்தான். டேவிட் வெளியூர் சென்றிருக்கிறான். ஆனால் சுஜித்?

 

“வேர் இஸ் ஹி?” – அலட்சிய தொனியில் கேட்டபடி தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான்.

 

“ரூம்ல இருக்கான்”

 

“குட்…” – பரிமாறப்பட்ட உணவில் கவனமானான். அதற்கு மேல் மாலிக்கும் எதுவும் பேசவில்லை. இரவு உணவு அமைதியாகவே கழிந்தது.

 

அன்று நாள் முழுவதும் கடுமையான அலுவல்கள் இருந்ததால் இப்போது சற்று ஆசுவாசமாக காற்று வாங்கலாம் என்று மாளிகைக்கு வெளியே வந்தவன் திகைத்து நின்றான்.

 

மாலை அவன் பார்த்த போது அமர்திருந்த இடத்திலேயே இப்போதும் அமர்ந்திருந்தாள் மிருதுளா. கால்கள் அனிச்சையாய் அவளை நோக்கிச் செல்வதை உணரவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது. அதற்குள் அவளுடைய பார்வை அவன் பக்கம் திரும்பிவிட்டது.

 

அன்று முழுவதுமே மனமும் உடலும் வெகுவாய் சோர்ந்து போயிருந்தது மிருதுளாவிற்கு. தோழி என்று எண்ணியிருந்தவளின் இன்னொரு முகம் அவளை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

 

‘நம் வயதை ஒத்த பெண்… இனிமையான குணம் கொண்டவள் என்று நாம் எண்ணியிருந்த பெண்… ஒரு கொலைக்கு துணை போயிருக்கிறாள். அதைப் பற்றி எந்த கலக்கமும் அவளிடம் இல்லை. எவ்வளவு இயல்பாக பேசுகிறாள்!’ – ஜீரணிக்க முடியவில்லை.

 

மனிதர்களற்ற காட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போல் உணர்ந்தாள். தாயின் மடிக்காக உள்ளம் ஏங்கியது. அறையிலேயே அடைந்து கிடைக்க முடியாமல் தோட்டத்தில் வந்து அமர்ந்தாள்.

 

திடீரென்று அனந்த்பூரிலிருந்து மறைந்துsவிட்டோம். தேடியிருப்பார்களா… போலீஸில் புகார் கொடுத்திருப்பார்களா? அம்மா அழுது கொண்டிருப்பார்களா! யார் ஆறுதல் சொல்வார்கள்கள்! – கண்ணீர் திரண்ட விழிகளுடன் கீழ்வானில் மறையும் சூரியனை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு, சூரியன் முற்றிலும் மறைந்து இருள் கவிந்த பிறகும் எழத்தோன்றவில்லை. அதிரும் பூமி அவளிடம் யாரோ வருவதை அறிவுறுத்தியது. திரும்பிப் பார்த்தாள். ‘அர்ஜுன் ஹோத்ரா!’ – சட்டென்று முகம் இறுக மௌனமாய் எழுந்து நின்றாள்.

 

“இங்க என்ன பண்ற?” – அதிகாரம்! கொலைகாரனின் குரலில் அதிகாரத்திற்கு என்ன குறைச்சல்.

 

“நத்திங்” – முணுமுணுத்தாள்.

 

அவள் கண்களில் பளபளத்த கண்ணீர், கூரிய அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

 

வீங்கியிருந்த அவள் நெற்றியையும், கையில் போடப்பட்டிருந்த கட்டையும் பார்வையால் அளந்தவன், “ஏதாவது வலி இருக்கா? டூ நீட் எ டாக்டர்?” என்றான்.

 

அவனை ஏறிட்டாள் மிருதுளா. ஓரிரு நிமிடங்கள் அவள் விழிகள் அவன் முகத்திலேயே நிலைத்திருந்தன. அந்த பார்வையில் கோபமிருக்கிறதோ என்று அவன் யோசிப்பதற்குள், மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டு தலையை குறுக்காக அசைத்தாள்.

 

அர்ஜுன் ஹோத்ராவின் தடித்த கீழுதடு பற்களுக்கிடையில் சிக்கி மீண்டது.

 

“மிருதுளா” – மென்மையாக அழைத்தான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

 

“என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லணும்” – உண்மையாக கேட்டான்.

 

“எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல. ஐம் ஓகே…” – பொய்யுரைத்துவிட்டு அவனிடமிருந்து விலகினாள் மிருதுளா.

 




10 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha says:

    Next episode quickly plse plse


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Next ep nithya


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Aju guilty yah feel panrana enna?? Sujith ah ring la vechu seiratha paaka aavala irukkom sisi. Adutha epiya seekram potrungalen plssssssssss


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD SIS


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Nice update pa. …….. unga kuttiku school set ayiducha.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    PAPPU PAPPU PAPPU PAPPU says:

    super ud ma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    நல்ல பதிவு சகோதரி…. தொடர்ந்து பதிவிடுங்கள்…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Seithathu thappu ithula kovam vera varutha sujith ku… Nice epi nithya


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Sis … arjun mrithula scenes innum konjam thanga


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      🙂 Maybe in next episode…

You cannot copy content of this page