Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 21

அத்தியாயம் – 21

மிருதுளா தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் புது அறைக்குள் நுழைந்தாள். அதை வெறும் அறை என்று சொல்லிவிட முடியாது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஸூட் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அந்த அறையின் ஆடம்பரமே அவளை அச்சுறுத்தியது. பலி ஆட்டுக்கு செய்யப்படும் மாலை மரியாதையை இந்த அறையோடு ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றியது. அமைதியாக உள்ளே வந்து அங்கே கிடந்த கோச் நுனியில் அமர்ந்தாள்.

 

அங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத மர்மம் அவளை கலவரப்படுத்தியது.

 

‘அம்மா நம்மை தேட முயற்சி செய்கிறார்களா? அம்மாவின் அலைபேசி ஏன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது?’ என்கிற கேள்விகள் அவளை குடைந்தது.

 

‘எப்படி இருந்தாலும் போனை ஆன் செய்யும் போது நம்முடைய மிஸ்ட் கால் தெரியும். அது எந்த ஊரிலிருந்து வந்த அழைப்பு என்பதையும் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். நாம் காணாமல் போன நாள்… அதே நாளில் அனந்த்பூரில் நடந்த கொலை… அந்த இடத்தில் தடயமாக கிடைத்த நம்முடைய பொருட்கள்….’ என்று யோசித்துக் கொண்டே வந்தவளின் சிந்தனை சங்கிலி, ‘கிடைத்திருக்குமா?’ என்கிற கேள்வியில் தடைபட்டு பிறகு, ‘எப்படியும் கிடைத்திருக்கும்… தவறிப்போக வாய்ப்பே இல்லை…’ என்று அறிவு எடுத்துக் கூறிய பிறகு தடையை கடந்து தொடர்ந்தது.

 

‘ஆகமொத்தம், அனைத்தையும் கூட்டி குறைத்து கணக்கிட்டுப் பார்த்தால் நாம் இங்கு சிக்கிக் கொண்டிருப்பதை போலீசார் கணித்துவிட மாட்டார்களா? நம்மை காப்பாற்ற வந்துவிட மாட்டார்களா?’ – அவலாசையில் அடித்துக் கொண்டது உள்ளம்.

 

மெல்ல எழுந்து அந்த அறையை ஆராய்ந்தாள். லிவிங் ஏரியா, கனெக்ஷன் பெட்ரூம், குளியலறை, பால்கனி, கிளோஸெட் அனைத்து இங்களிலும் தேவையான ஃபர்னிச்சர்ஸ்… சமையலறை மட்டும் இருந்தால் இது ஒரு மினி அப்பார்ட்மெண்ட் என்று தோன்றியது அவளுக்கு.

 

‘இவ்வளவு பெரிய அறையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கேமிரா இருக்கலாம்… வாய்ஸ் ரெக்கார்டர் இருக்கலாம்… அதனால்தான் நம்மை இந்த இடத்திற்கு மாற்றியிருக்க வேண்டும்…’ – திரில்லர் படங்களில் வரும் காட்சியை கற்பனை செய்து கொண்டு யோசித்தாள்.

 

பிள்ளைப்பூச்சியை பிடித்து வைத்துக் கொண்டு பெருச்சாளி என்று கூறும் இந்த கூட்டத்தைப் பார்த்து, ‘மூடர் கூட்டமே…’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

 

இரவு பத்து மணியிருக்கும்… மயான அமைதி என்பார்களே… அப்படி ஒரு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது அவளுடைய அறை. தரைத்தளத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் இங்கே – மேல் தளத்தில் அவளை தவிர வேறு யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. உறங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல் தவித்தபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பழகிக் கொண்டிருந்தாள்.

 

அப்போதுதான், காற்றில் தவழ்ந்து வந்து அவள் செவியை தீண்டியது அந்த ஓசை… நேரடியாக இதயத்தை தொட்டுத் தீண்டும் இனிய இசை. சட்டென்று தடைபட்டது மிருதுளாவின் நடை. ‘எங்கிருந்து ஒலிக்கிறது!’ – அவள் செவிப்புலன் கூர்மையானது. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். இடது பக்கம் அர்ஜுன் ஹோத்ராவின் அறை. வலது பக்க அறையிலிருந்துதான் ஓசை வந்தது.

 

ஆர்வத்துடன் முன்னோக்கி நடந்தாள். லேசாக கை வைத்ததுமே உள்நோக்கி நகர்ந்தது கதவு. உள்ளே பார்வையை வீசியவள் திகைத்தாள்.

 

முதல் பார்வையிலேயே அது ஒரு லைப்ரரி என்று தெரிந்தது. அங்கே நடுநாயமாக இருந்த அந்த வெண்ணிற பியானோவை, பட்டாம்பூச்சி மலரை தீண்டும் மென்மையுடன் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன அர்ஜுன் ஹோத்ராவின் விரல்கள். அவனுடைய ஸ்பரிசத்தில் இனிமையாய் சிணுங்கி அவளை அழைத்தது அந்த இசைப்பெட்டகம்.

 

கண்களை மூடி அவன் வாசிப்பில் லயித்து வாயிலிலேயே நின்றாள் மிருதுளா. வேறு ஏதோ உலகத்தில் சஞ்சரித்திருப்பது போல் தோன்றியது அவளுக்கு. பாடல் முடிந்த பிறகும் கூட அதன் அதிர்வுகள் அவள் செவியில் எதிரொளித்துக் கொண்டே இருக்க அசைவற்று நின்றாள்.

 

“யு லைக் இட்?” – அவன் குரல் கூட ஒரு இசை போலத்தான் அவளை வந்து எட்டியது.

 

வியப்புடன் அவன் முகத்தை ஏறிட்டாள். அவளால் நம்ப முடியவில்லை. அவன் ஒரு ‘கேங்ஸ்டர்’ என்று தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மென்மையும் அமைதியும் இருந்தது அந்த முகத்தில்.

 

“உள்ள வா” – அழைத்தான். மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் உள்ளே சென்றாள் மிருதுளா.

 

“உட்காரு” – எதிரில் கிடந்த சோபாவை கண்களால் காட்டினான். அமர்ந்தாள்.

 

அடுத்த பாடலை வாசிக்க துவங்கினான். அது அவள் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். பெற்றோருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்த காலத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். அந்த பாடலை எப்போது கேட்டாலும் அந்த நாட்களின் நினைவு அவள் நெஞ்சில் நிறையும். இப்போதும் அப்படித்தான்… கண்களில் கண்ணீர் கலங்கி நின்றது. அந்த தருணத்தில் தான், அவனுக்குள் ஒரு மென்மையான பக்கமும் இருக்கிறது என்பதை நம்பினாள் மிருதுளா. இசைக்கும் அவனுக்கும் இருந்த அந்த நெருக்கமான உறவு அவளை நம்பவைத்து. – பாடல் முடிந்து அறையில் நிசப்தம் சூழ்ந்தது.

 

மிருதுளாவின் பார்வை அவனை தவிர்த்து அறையை வட்டமடித்து. உள்ளே பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்த சிந்தனையை திசைதிருப்ப முயன்றாள்.

 

“அந்த கண்ணீருக்கு காரணம் நானா?” – அவளுடைய முயற்சியை முறியடித்தது அவன் குரல். மிருதுளா திரும்பவில்லை. ஆனால் அவளுடைய அசைவுகள் முற்றிலும் நின்று போயிருந்தன.

 

அவன் பதிலுக்காக காத்திருந்தான். நீடித்த மௌனம் அவளுக்கு அதை உணர்த்த, தலையை மெல்ல குறுக்காக அசைத்தாள். பிறகு அவன் புறம் திரும்பி பியானோவை சுட்டிக்காட்டி, “அந்த பாட்டு” என்றாள்.

 

அவனுடைய புருவம் சுருங்கியது.

 

“சின்ன வயசு நியாபகம்…” – முணுமுணுத்தாள்.

 

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “ஐம் சாரி” என்றான் மெல்ல.

 

அவள் புன்னகைக்க முயன்றாள். அவன் அடுத்த பாடலை வாசிக்க துவங்கினான். மிருதுளாவின் விழிகள் தன்னிச்சையாய் மூடின. எப்படி சொல்லி வைத்தது போல் அவளுக்கு நெருக்கமான பாடல்களாக வாசிக்கிறான்! – மனதில் படர்ந்த குழப்பத்துடன் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

 

அவன் கண் மூடி இசையோடு ஒன்றிப்போயிருந்தான். அவள் பார்வை அவன் முகத்திலேயே பதிந்திருந்தது. பெற்றோரின் நினைவில் தளும்பிக் கொண்டிருந்த மனம் தெளிந்து அவனை கிரகிக்கத் துவங்கியது. அவனுக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்தமானது என்று அவளுக்குத் தோன்றியது. இவருடைய ரசனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்துப்போகிறது என்பதை உணர்ந்த போது மனதின் ஒரு மூலையில் சிறு மகிழ்ச்சியை உணர்ந்தாள் மிருதுளா.

 

மூன்றாவது பாடல் முடிந்து அவன் கண்களை திறந்த போது இவருடைய பார்வையும் பின்னிக் கொண்டன. நொடிகள் கழிந்து கொண்டிருந்தது. வார்த்தைகளற்ற மோனம் இருவரையும் சூழ்ந்திருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களை முடித்த திறந்து தன்னிலைக்கு மீண்டான் அர்ஜுன்.

 

“மேஜிக்கல்…” – வியப்பில் விரிந்த விழிகளுடன் தன்னை மறந்து அவனை பாராட்டினாள் மிருதுளா.

 

அவன் இதழ்கடையோராம் லேசாக துடித்தது. கண்கள் சுருங்கின. ‘சிரித்தால்தான் என்ன! தலையா விழுந்துவிடும்!’ – அவள் பார்வை அவன் முகத்திலிருந்து விலகவே இல்லை.

 

“நீ பிளே பண்ணுவியா?” – இயல்பாகக் கேட்டான்.

 

“ம்ஹும்…” – உதட்டை பிதுக்கினாள்.

 

“கம்…” – அமர்ந்திருந்த ஸ்டூலிலிருந்து எழுந்தான். அவனுடைய நோக்கம் புரிந்த மிருதுளாவின் கண்களில் ஆர்வம் மின்னியது. ஆனாலும் தயக்கத்துடன், “இல்ல… எனக்கு வாசிக்க தெரியாது” என்றாள்.

 

“ஐ நோ… இப்படி வந்து உட்கார்… நா கற்றுத்தறேன்…” – அவளை ஊக்கப்படுத்தினான். அதற்கு மேல் அவள் தாமதிக்கவில்லை. ஆவலுடன் எழுந்து வந்து அந்த ஸ்டூலில் அமர்ந்தாள்.

 

ஒவ்வொரு கீயின் நோட்டையும் அவளுக்கு விலக்கிக் கூறி அடிப்படையை கற்றுக் கொடுத்தான். எபிசி எழுத்து முறையில் பேஸிக் நோட்ஸ் ஒன்றை பேப்பரில், எழுதி அதை ஸ்டாண்டில் பொருத்தி, “இதை ட்ரை பண்ணு” என்றான்.

 

மிகமிக இலகுவான நோட்ஸ் தான்… அதையும் தப்பும் தவாறுமாகத்தான் வாசித்தாள். ஆனாலும் அவளே வாசித்தாள்! – மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலிருந்தது. சந்தோஷத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

“குட்…” – அவன் முகத்திலிருந்த மெச்சுதல் அவளை உற்சாகப்படுத்தயது.

 

“இன்னொரு தரம் ட்ரை பண்ணவா?” – ஆசையோடு கேட்டாள்.

 

“ஸூர்…” – அவளை ஃபிரீயாக விட்டுவிட்டு முன்பு அவள் அமர்ந்திருந்த சோபாவில் சென்று அமர்ந்தான். சிறு பிள்ளையின் குதூகலத்துடன் அந்த நோட்ஸை மீண்டும் மீண்டும் வாசித்துப் பழகினாள் மிருதுளா. அவள் அலுத்துப் போகும் வரை அமைதியாக காத்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

 

அவளுக்கு அலுக்கவில்லை… ஆனால் இடம் பொருள் மறந்து அளவுமீறுகிறோம் என்கிற எண்ணம் தோன்றி சங்கடப்படுத்தியது. சின்ன புன்னகையுடன், “தேங்க் யு…” என்று எழுந்தாள்.

 

“நீ ரொம்ப சுலபமா கத்துக்கற… மியூசிக் உன்னோட ரெத்தத்திலேயே இருக்கு” என்றான்.

 

உண்மைதான்… அவளுடைய அன்னை நன்றாக பாடுவார். தாயின் நினைவில் மிருதுளாவின் முகம் வாடியது.

 

“ஐ டோன்ட் வாண்ட் டு சி யுவர் ஃபேஸ் லைக் திஸ்…” என்றான் ஆழ்ந்த குரலில். அவள் குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

 

இறுகியிருந்த அவன் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.

 

சற்றுநேர மௌனத்திற்குப் பிறகு, “நீ சந்தோஷமா இருக்கணும்னு நா விரும்பறேன்” என்றான். அவன் சற்று தடுமாறியது போல் தோன்றியது அவளுக்கு.

 

மிருதுளா முதலில் குழம்பினாள். பிறகு அவள் பார்வையில் சந்தேகத்தின் சாயல் கூடியது.

 

பெருமூச்சுடன் எழுந்து அவளிடம் நெருங்கினான் அர்ஜுன் ஹோத்ரா.

 

“எனக்கு புரியுது. உன்னோட பயம்… சந்தேகம்… எல்லாமே நியாயம் தான். ஆனா… ஒரு விஷயத்தை நீ எப்பவும் மறக்கக் கூடாது” என்று கூறி நிறுத்தினான்.

 

‘என்ன?’ – அவள் கண்கள் கேட்டது.

 

“என்னால உன்ன காயப்படுத்த முடியாது. என்னை மீறி வேற யாரும் உன்ன நெருங்க முடியாது. ஐ வில் ப்ரொடெக்ட் யு… ஆல்வேஸ்…”

 

அவன் குரலில் இருந்த அக்கறை – நெருக்கம் – உறுதி மிருதுளாவை தடுமாறச் செய்தது. அவள் உடல் நடுங்கியது… சிறு பெண்தானே… நிதானிக்க நேரமெடுக்கும் அல்லவா? அவளுடைய நிலையை நன்கு உணர்ந்தான் அர்ஜுன்.

 

“குட் நைட்…” – மெல்லிய குரலில் முணுமுணுத்துவிட்டு, வேரூன்றிவிட்ட கால்களை தரையிலிருந்து பிடுங்கி, வெகு சிரமப்பட்டு அடியெடுத்துவைத்து அங்கிருந்து நகர்ந்தாள் மிருதுளா.

 

தாடையை தடவியபடி அவள் முதுகை வெறித்த அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகள் அலட்சிய புன்னகையில் வளைந்தன.

 




6 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Aha ithu yetho sari illaye. Aju nee miruthuta unmaya vanga, love panra matiri nadikiya?? Aama nu mattum solidatha. Paavam da mrithu….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Daisy Mary says:

    கபட நாடகம் நடக்குதோ…?!?!?!
    யார் இங்கே ஆட்டி வைப்பது….?
    யார் இங்கே ஆட போவது….?!?!

    இப்போது அலட்சிய புன்னகை…
    அது ராட்சஷ புன்னகை ஆகுமா….?!
    அந்த புன்னகை க்கு சொந்தக் காரர் யாரோ…?

    கடைசியில் நடப்பது காதல் யுத்தமா? துரோக யுத்தமா?

    புதிர்களின் விடை அறிய ஆவலோ ஆவல்….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    அலட்சிய புன்னகை!!. அவள் தலை குப்புற கவிழ்ந்தபின் அவன் சுயரூபம் காட்டுவானோ!?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    miru unnai suthi paasa valai pinrno …………..arjun un real face than enna,,,,,,,,,


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Softy epi… but Arjun cheat panura mathiriye our feel pa. Neenga than doubt a clear pananum. Next epi a seekirama kudunga pa……

You cannot copy content of this page