Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு -22

அத்தியாயம் – 22

அன்றைய விடியலில் மிருதுளாவின் மனநிலை அமைதியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு நிம்மதியான தூக்கம் அவளை தழுவியது நேற்று இரவுதான். அர்ஜுன் ஹோத்ராவின் வார்த்தைக்கு அவளிடம் பாதிப்பு இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இங்கு அவளுக்கு ஆபத்து நேராது என்கிற நம்பிக்கையை அவளுக்குள் விதைத்துவிட்டான்.

 

‘இங்கிருந்து வெளியேறும் நாள் தொலைவில் இல்லை. சந்தர்ப்பம் பார்த்து பேசிவிட வேண்டும்’ – இதழில் தவழும் மெல்லிய புன்னகையுடன் பால்கனி திரையை விலக்கினாள். தோட்டத்தின் அழகை இங்கிருந்து பார்த்தால் நன்றாக இருக்குமே! – எதிர்பார்ப்புடன் வெளிப்பக்கம் பார்த்தவள் அதிர்ந்து இரண்டடி பின்வாங்கினாள். நொடி பொழுதில் அவள் முகத்திலிருந்த புன்னகையை கொன்று குடிகொண்டது மிரட்சி. மனதிலிருந்த அமைதி பறந்து போய்விட பதட்டம் பற்றிக்கொண்டது.

 

‘ஓ மை காட்! ஓ மை காட்! ஓ மை காட்!’ – உதடுகள் படபடக்க அவசரமாக கண்ணாடி கதவை தள்ளி திறந்து கொண்டு பால்கனிக்கு பாய்ந்தாள். இப்போது அந்த மனிதனின் அலறல் ஒலி அவளை உலுக்கியது. ஒரு கையால் அவன் பிடரியை பிடித்துக் கொண்டு மறுகை முஷ்டியை மடக்கி ஆக்ரோஷமாக அவன் முகத்தை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. சிதைந்து போன அவன் முகத்திலிருந்து தெறித்த ரெத்தம் இவன் முகத்தை சிவப்பாக்கியிருந்தது.

 

மிருதுளாவின் மனம் பாதைபதைத்தது… சுற்றி நின்று கொண்டிருந்த அரக்கர்களின் ஒருவனுக்கு கூட சிறிதும் மனிதாபிமானம் இல்லை. ஒரு உயிர் துடிதுடிப்பதை கண்டு சற்றும் பதறாமல் கைகளைக்கட்டிக் கொண்டு சிலை போல் நின்றார்கள்.

 

தரையில் துவண்டு விழுந்தவன் முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லில் நச்சென்று மோதினான் அந்த அசுரன். அவன் உடல் துள்ளிவிழுந்து துடித்து அடங்கியது.

 

“ஆ…!” – கண்களை மூடிக் கொண்டு அலறிவிட்டாள் மிருதுளா. தோட்டத்திலிருந்த அனைவருடைய பார்வையும் சட்டென்று இவள் பக்கம் திரும்பியது.

 

மிரண்ட முயல்குட்டி போல் கண்களை இறுக மூடி வெடவெடப்புடன் சுவற்றோடு சுவராக ஒட்டிக் கொண்டு நின்றாள். உஸ்-புஸ் என்ற வேக மூச்சுகளுடன் அவளை வெறித்துப் பார்த்த அர்ஜுன் ஹோத்ரா, “உள்ள போ…” என்று பெருங்குரலில் ஆணையிட்டான்.

 

உடல் தூக்கிப் போட, குரல் வந்த பக்கம் திரும்பியே பார்க்காமல் பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடியவள், நடுக்கத்துடன் கண்ணாடி கதவை தள்ளி மூடிவிட்டு, அவசரமாக திரையை இழுத்துவிட்டாள். வெளிப்புறத்தில் நடக்கும் கொடூரத்தை தன்னிடமிருந்து முற்றிலும் மறைத்தாள். இல்லையில்லை… வெளியே நரபலி கேட்டு தாண்டவமாடும் அசுரனிடமிருந்து தன்னை மறைந்து கொண்டாள்.

 

‘கோரம்… கொடூரம்…’ – அந்த காட்சியின் தாக்கம் அவளை முடக்கிப் போட்டுவிட்டது. கிட்டத்தட்ட அரைநாள் வரை அறையைவிட்டு அவள் வெளியே வரவே இல்லை. மதியத்திற்கு மேல் வயிறு கபகபக்கத் துவங்கிய போதுதான் மூளை பசியை உணர்ந்தது. வெளியே வந்தால் அவன் அறையை கடந்துதான் கீழே செல்ல முடியும். ஒருவேளை அவனை பார்க்க நேர்ந்துவிட்டால்! நினைக்கும் போதே ரெத்தம் தெறித்திருந்த அந்த கொடூர முகம் அவள் மனக்கண்ணில் தோன்றி நடுங்கச் செய்தது. பல்லை கடித்துக் கொண்டு உள்ளேயே இருந்தாள். ஆனால் எவ்வளவு நேரம் அப்படியே இருந்துவிட முடியும்.

 

ஒருகட்டத்தில் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். அவன் எதிர்பட்டுவிடக் கூடாது என்று உருப்போட்டது உள்ளம். அவன் முகத்தில் விழிக்கும் நினைவே அவளை அச்சுறுத்தியது. அவன் நிழலைக் நெருங்க கூட அவள் விரும்பவில்லை.

 

குனிந்த தலை நிமிராமல் ஒரே பாய்ச்சலில் அவன் அறையை கடந்து கீழே இறங்கியவள், எதிர்ப்படும் யாரையும் ஏறிட்டு பார்க்காமல் சமையலறைக்கு வந்தாள். கிட்சன் கவுண்டரிலிருந்து சில பழங்களையும், காஃபி மேக்கரிலிருந்து ஒரு கப் காபியையும் எடுத்துக் கொண்டு மீண்டும் மாடிக்கு வந்து அடைந்து கொண்டாள். அவனை பார்க்கவில்லை என்பதே அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

 

இரவு பத்து அல்லது பத்தரை இருக்கும். கனமான போர்வைக்குள் தன்னை புதைத்துக் கொண்டு கண்களை இறுக மூடியிருந்தாள் மிருதுளா. அன்று காலை கண்ட காட்சியை மறந்துவிட்டு உறங்க முயன்றாள். ரெத்தம் தெறித்த அந்த முகம் – வெறி பிடித்த கண்கள் – கொடூரன் – கொலைகாரன் – அசுரன்- அர்ஜுன் ஹோத்ரா – மூடிய இமைகளுக்குள் அத்துமீறி நுழைந்து அவளை அச்சுறுத்தினான்.

 

‘கடவுளே! ப்ளீஸ்… ப்ளீஸ்… ஹெல்ப் மீ…’ – அழாத குறையாக புலம்பியவள் புரண்டுபடுத்தாள். அவளை தாலாட்டுவது போல் காற்றில் தவழ்ந்து வந்து அவள் செவியை தீண்டியது பியானோவின் இசை. வெடுக்கென்று எழுந்து அமர்ந்தாள் மிருதுளா.

 

‘அவன்! அவனேதான்…’ – உள்ளம் பரபரத்தது. மறுகணமே ஆத்திரத்தில் தொண்டை அடைத்து கண்ணை கரித்தது. காரணம் அவன் வாசித்துக் கொண்டிருந்தது ஏதோ ஒரு பாடல் அல்ல… நேற்று அவள் வாசித்த பேசிக் நோட்ஸ்…

 

‘அடிப்படை நோட்ஸ் கூட அவனுடைய வாசிப்பில் எத்தனை இனிமையாக இருக்கிறது!’ – மிருதுளாவின் கண்ணீர் முத்துக்கள் விடுதலை பெற்று கன்னத்தில் உருண்டோடின.

 

அர்ஜுன் தொடர்ந்து திரும்பத்திரும்ப அதே நோட்ஸை வாசித்துக் கொண்டிருந்தான். தன்னை எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. அந்த புரிதல் அவள் வயிற்றுக்குள் புளியை கரைத்தது. கால்களை கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள்.

 

இசை ஓய்ந்து கனத்த அமைதியில் மூழ்கியது சூழ்நிலை. – ‘முடித்துவிட்டானா? அறைக்கு திரும்பப் போகிறானா? நம்முடைய அறையை கடந்துதான் செல்வான்… காலடி சத்தம் கேட்கிறதா?’ – ஏனோ அவள் கவனம் முழுவதும் செவியில் குவிந்தது.

 

அவனை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறாளா! அந்த இரக்கமற்ற இராட்சசனின் பக்கம் சாய்கிறாளா! – ‘நோ… நோ… காட்… ப்ளீஸ் ஹெல்ப் மீ…’ – அழுகையில் அவள் உடல் குலுங்கியது.

 

மீண்டும் பியானோ இசைந்தது. இந்த முறை பாடல்… அவள் உணர்வுகளை சுண்டியிழுக்கும் பாடல். ‘கடவுளே…!’ – காதை மூடிக் கொண்டாள். ஆனாலும் செவியை துளைத்துக் கொண்டு அவள் அடிநெஞ்சை தொட்டது அந்த இசை. அவளை உறுக்கிவிட்டு கரைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு பாடல் முடிந்தது… அமைதி சூழ்ந்தது… சற்று இலகுவாய் சுவாசித்தாள்.

 

‘க்ளட்ச்…’ – கதவு திறக்கப்படும் ஓசை… சட்டென்று அவள் உடல் விறைத்தது. நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லை. அவனை அறிய பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. அவளால் உணர முடிந்தது.

 

காலடி சத்தம் அவளை நெருங்கியது. மிருதுளாவின் இதயம் எகிறி குதித்து வெளியேற துடித்தது.

 

இப்போது காலடியோசை நின்றுவிட்டது. அவன் அருகில் தான் இருக்கிறான் என்பதை பறைசாற்றியது அந்த நறுமணம். அவன் அருகில் இருக்கும் போதெல்லாம் அவள் நாசி நுகர்ந்த நறுமணம்.

 

அவன் எதுவும் பேசவில்லை. மௌனம் கனமாக சூழ்ந்திருந்தது. நேரம் கழிந்து கொண்டே இருந்தது. அவன் வாயையும் திறக்கவில்லை… அங்கிருந்து நகரவும் இல்லை.

 

வேறு வழியில்லை. அவள்தான் இறங்கி வந்தாக வேண்டும். மெல்ல நிமிர்ந்தாள். வெள்ளை பைஜாமா அணிந்திருந்தான். அவன் மார்புக்கு மேல் அவள் பார்வை உயரவில்லை. ஆனால் அவனுடைய பார்வை தன் மீதுதான் இருக்கிறது என்பதை சத்தியம் செய்து சொல்ல முடியும் அவளால்.

 

முகத்தில் வந்து விழுந்த முடியை காதோரம் ஒதுக்கிவிட்டபடி கட்டிலிலிருந்து எழ எத்தனித்தாள் மிருதுளா.

 

“சிட்…” – ஒற்றை வார்த்தை தான்… அதையும் மென்மையாகத்தான் கூறினான். அதுவே அவளுடைய அசைவுகளை மொத்தமாய் முடக்கிவிட போதுமானதாக இருந்தது. உதட்டை கடித்துக் கொண்டு – ‘பிரீஸ்-ரிலீஸ்’ விளையாட்டில் உறைவது போல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

 

கட்டிலில், அவளுக்குப் பக்கத்தில் – அவள் முகத்தை பார்த்தபடி அமர்ந்தான் அர்ஜுன் ஹோத்ரா. தடித்திருந்த இமைகளும் சிவந்திருந்த முகமும், எட்டப்பனாய் மாறி அவளுடைய அழுகையை அவனிடம் காட்டிக் கொடுத்தது .

 

சற்றுநேரம் எதுவுமே பேசாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஆர் யு ஓகே?” என்றான் மெல்ல.

 

பதில் சொல்ல தயங்கி தாமதித்த மிருதுளா பிறகு தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்.

 

“லுக் அட் மீ…” – செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

 

“மிருதுளா… லுக்… அட்… மீ…” – வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டினான். அவள் பார்வை தானாக உயர்ந்தது.

 

“ஆர் யு ஓகே?” – மீண்டும் கேட்டான். அவள் மீண்டும் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

 

“வாயத் தெறந்து பதில் சொல்லு”

 

“எஸ்… ஐம் ஓகே” – குரல் கரகரத்தது. எந்த நேரத்திலும் உடைந்துவிடும் அபாயத்தில் இருந்தாள்.

 

சற்று நேரம் அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். பிறகு,

 

“மிருதுளா, அது என்னோட பிசினெஸ். அதை நா டீல் பண்ணித்தான் ஆகணும்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றான்.

 

மிருதுளாவின் நாசி விடைத்தது. கண்கள் கண்ணீரில் பளபளத்தன. மனித உயிரை பிசினஸ் என்று எப்படி அலட்சியமாக பேசுகிறான் என்கிற ஆத்திரம் அவளிடமிருந்து வார்த்தையாய் வந்து விழுந்தது.

 

“அவர்… அந்த… மனுஷன்… உயி…ரோட… இருக்காரா?” – காற்றடைத்த குரலில் தான் என்றாலும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டாள்.

 

அவன் முகம் இறுகியது. “என்னோட பிசினெஸை நீ கேள்வி கேட்கக்கூடாது. அதை நா விரும்ப மாட்டேன்” – அதிகாரமாகக் கூறினான்.

 

அறைவாங்கியது போல் சட்டென்று வாடியது அவள் முகம். கீழே குனிந்து கொண்டாள். கண்ணீர் முத்துமுத்தாக வடிந்தது. கீழுதட்டை மடித்துக் கடித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

 

“ஆல்ரைட்… ஐம்… சாரி….” – வெகுவாய் இறங்கிவிட்டது அவன் குரல். அவள் நிமிரவே இல்லை.

 

நடுங்கி கொண்டிருந்த அவள் மென்கரத்தை தன் கைகளுக்குள் கொண்டுவந்து மென்மையாய் வருடினான்.

 

“மிருதுளா… பேபி… நா உன்ன ஹர்ட் பண்ணணுன்னு நினைக்கல… நா… ஜஸ்ட்… என்னோட பாயிண்டை சொல்ல ட்ரை பண்ணினேன் அவ்வளவுதான். ஸீ… நீ அழறது எனக்கு… ஐ மீன்… ம்ம்ம்… டோன்ட் க்ரை ஓகே… என்னை பாரு… என்னை பா…ரு… லுக் அட் மீ… ஐம் சாரி… ஐம்… சா…ரி…” – அவளை சமாதானம் செய்துவிட துடித்தான்.

 

மிருதுளா நிமிர்ந்தாள். பார்வைகள் சந்தித்துக் கொண்டன. அவன் கண்கள் அவளிடம் சரணடைந்தது. அவனை இப்படி பார்த்தால்… அவன் இப்படி பேசினால் உலகமே மறந்துவிடும் போலிருந்தது அவளுக்கு. காலை தோட்டத்தில் பார்த்த கொடூரத்தை மறந்துவிட்டாள். தான் அவனிடம் அடைபட்டிருக்கிறோம் என்கிற நிதர்சனத்தையும் மறந்துவிட்டாள்.

 

தன்னுடைய முகவாட்டம் அவனை பாதிக்கிறது, மன்னிப்புக் கேட்க வைக்கிறது என்கிற ஒரு எண்ணம் மட்டும் தான் அவள் மனதில் மேலோங்கி நின்றது. அந்த எண்ணம் அவளுக்குள் ஒரு இதமான உணர்வை சுரக்கச் செய்தது.

 

“அவனை கொன்னுட்டேன்… ஏன்னா… அவன் வாழ தகுதியில்லாதவன்” – திடீரென்று பேசினான் அர்ஜுன். இனிய மயக்கத்திலிருந்து மீண்டு அவன் என்ன சொன்னான் என்பதை புரிந்துகொள்ளவே ஓரிரு நிமிடங்கள் ஆனது அவளுக்கு.

 

ஒருவழியாக அவள் புரிந்து கொண்ட போது, பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் அவளுடைய இனிமையான உணர்வுகளெல்லாம் அடங்கிப் போய்விட்டன. ஓர் உயிர் போய்விட்டது… அதுவும் அவன் கையால்… – கத்திப் பாய்ந்தது போல் உள்ளே வலித்தது.

 

“நைட் தூக்கம் வருமா?” – கலங்கிய குரலில் கேட்டாள்.

 

“ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நேத்துதான் நல்லா தூங்கினேன். அந்த தூக்கத்தை தேடித்தான் உன்கிட்ட வந்தேன். குட் நைட் சொல்லு” – அவன் குரல் அவளிடம் நெருக்கத்தைக் காட்டியது.

 

அவனுடைய பேச்சின் திசை மிருதுளாவிற்கு புரியாமல் இல்லை. நன்றாகவே புரிந்தது. ஆனால் அவனை மறுத்துப் பேசும் திராணிதான் அவளிடம் இல்லாமல் போய்விட்டது.

 

“குட் நைட்…” – புன்னகைக்க முயன்றாள்.

 

பிடித்திருந்த அவள் கையில் மென்மையாக இதழ்பதித்து, “குட் நைட்” என்று கூறி எழுந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

 




14 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma maheswari says:

    Sad ending oda story முடிக்க வேண்டாம் dear plz..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ok pa… sad ending illa… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samrithi says:

    Story ah remba azhaga konduporinga sis superb 👏 unga way of narration awesome 💐 Arjun semma keththu I love very much 😘 miruthula semma cute😍 interesting … Nice going…. Eagerly waiting for your next ud… quick ah vanga… Keep rocking 👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Miri yen arjun kita avala poga vida solli keka matura


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Naina says:

    Waiting for romantic scenes


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    நல்ல பதிவு……


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Krishnanthamira says:

    Miru pavam mulikura


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Arjun unakku thukam varum enga miru kuttikku


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    nice ud sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Mirthu n Arjun epadiyo thoongiduranga. But writer mam neenga engala thoonga vidakoodathunu sabatham eduthu irupeengalonu thonuthu.
    Semma epi n enna sollanu theriyala. Quick a next episode pls……


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Naina says:

      Correct ah sonnenga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Avvvvvvv.. Enna nadakudu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    என்ன நடக்குது தெரியலை பா மிருதுளா உனக்கு அவன் மேல.காதல் வந்துட்டா.அர்சூன் அவள பற்றி கண்டு பிடிக்குறது எப்ப பா


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Ayyo thalaya suthuthe… aju nee enna make da, purilaye…. kavunthutiya illata athuvum therila. Mrithuvoda nangalum pavam da… romba paavam

You cannot copy content of this page