நிழல்நிலவு – 23
11499
17
அத்தியாயம் – 23
ஈரத்தலையில் துண்டை சுற்றிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியேறிய மிருதுளாவை இன்டர்காம் அழைத்தது. எடுத்து பேசினாள். சமையலறையிலிருந்து தான் பேசினார்கள்.
“பிரேக்ஃபாஸ்ட் ரெடி மேம். சார் உங்களுக்காக வெயிட் பண்ணறாங்க”
“என்ன! யார் வெயிட் பண்ணறாங்க?” – அர்ஜூனாக தான் இருக்கும் என்று மயக்கம் கொண்ட மனம் அரை நொடியில் கணக்கு போட்டுவிட்டாலும், அறிவு கறாராக கடிவாளமிட்டு அவளை கட்டுப்படுத்தியது.
ஆனால், அந்த பக்கத்திலிருந்து வந்த பதில் அவள் அறிவின் ஆளுமையை வலுவிழக்கச் செய்தது.
“அர்ஜுன் சார்தான் மேம் வெயிட் பண்ணறாங்க. நீங்க கீழ வர எவ்வளவு நேரம் ஆகும்?” – மிருதுளா பதில் சொல்ல தயங்கினாள். நேற்றும் பியானோ அறையில் அவளுக்காக காத்திருந்தான். இன்றும் உணவுக்கூடத்தில் காத்திருக்கிறான். இதையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளவே அவளுக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. கனத்த மூச்சுக்காற்றை ஓரிரு முறை உள்ளிழுத்து வெளியேற்றிய பிறகு,
“ஆங்… பத்து… இல்ல… அஞ்சு…. அஞ்சு நிமிஷத்துல… வரேன்…” என்று தடுமாற்றத்துடன் கூறி அழைப்பை துண்டித்தாள்.
இந்த தடுமாற்றம் சரியா தவறா என்று தெரியவில்லை. இந்த உணர்வின் ஆழம் என்ன என்பதும் புரியவில்லை. ஆனால் மனம் மிதக்கிறது… இதுதான் வயதுக்கோளாறா! – சிந்தனை தொடர்வண்டி ஒரு பக்கம் தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், தலையிலிருந்த துண்டை கழட்டி எறிந்துவிட்டு, தலைவாரி சென்டர் கிளிப்பை அடித்துக்கொண்டு, நெற்றியில் ஒரு பொட்டை ஒட்டிக் கொண்டு, தடதடவென்று படிக்கட்டில் இறங்கினாள்.
அவன் நமக்காக காத்திருக்கிறானே என்கிற பரபரப்பும், அவசரமும் எந்த அளவுக்கு அவளிடம் இருந்ததோ அதே அளவுக்கு அதை அவனிடம் காட்டிக்கொள்ளக் கூடாது என்கிற எச்சரிக்கையும் இருந்தது. டைனிங் ஹாலுக்குள் நுழைவதற்கு முன், நின்று – மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
“ஹாய்…” – திடீரென்று பின்னாலிருந்து ஒலித்த அந்த குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
‘அர்ஜுன்! இங்க என்ன பண்றான்!’ – கருத்து அடர்ந்த நீளமான இமைமுடிகள் குடை போல் ஒருமுறை மூடி திறக்க, அழகிய அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
தொழில்முறை சந்திப்பிற்காக வெளியே செல்வது போல் முழுமையாக தயாராகியிருந்தான். ஹேர் ஜெல்லில் படிந்திருந்த சிலும்பலற்ற கேசம் முதல், புத்தம் புதிதாக பளபளக்கும் லெதர் ஷூ வரை, அரை நொடியில் அனைத்தையும் அவள் கண்கள் ஆராய்ந்துவிட்டன. ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ – மனதிற்குள் முணுமுணுத்தவள், அவசரமாக அள்ளி முடிந்து கொண்டு வந்த, தன்னுடைய தோற்றம் எப்படி இருக்கிறதோ என்கிற சங்கடத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்தாள்.
அவளை ரசனையுடன் ஆராய்ந்தது அவன் பார்வை. அதை உணர்ந்தவளின் கன்னங்கள் கதகதத்து செர்ரி பழத்தின் நிறத்தை கடன்வாங்கி கொண்டன.
“ஹாப்பி மார்னிங் பேபி…” – அவனுடைய கம்பீரக்குரலில் கலந்திருந்த சின்ன கிசுகிசுப்பு அவளிடம் நெருக்கமாய் உறவாடியது. கடந்தகாலமும் இல்லை எதிர்காலமும் இல்லை. அந்த க்ஷணம் மட்டுமே அவளுடையதானது. மெல்ல நிமிர்ந்தாள். நாணம் நிறைந்த அவள் கண்கள் ரசனை மிகுந்த அவன் பார்வையை சந்தித்தது. இதழ்களில் பூத்த மெல்லிய புன்னகையுடன், “யு டூ…” என்றாள்.
அவள் கைமணிக்கட்டைப் பற்றி, “வா…” என்று உள்ளே அழைத்துச் சென்றான் அந்த வசியக்காரன்.
டேபிள் அழகாக செட் செய்யப்பட்டிருந்தது. வழக்கமானதுதான். ஆனால் இன்று அவளுக்கு அதீத அழகாகத் தெரிந்தது. அவனுடைய அருகாமை செய்த மாயம் அது.
நற்பண்பில் சிறந்த மனிதனாக, அவள் அமர்வதற்கு வசதியாக இருக்கையை இழுத்து, அவள் அமர்ந்த பிறகு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான். அவளுடைய இளம் உள்ளம் பூத்துக்குலுங்கியது.
இதுவரை அவள் அந்த டைனிங் டேபிளில் உணவருந்தியதில்லை. மற்ற ஊழியர்களை போல கிட்சன் கவுண்டரில் அல்லது அறைக்கு எடுத்துச் சென்று உண்பாள். இது அர்ஜுன் ஹோத்ராவிற்கும் அவனுடைய நெருங்கிய சகாக்களுக்குமான பிரத்தியேக உணவுமேஜை. அங்கே அவளுக்கும் ஒரு இடம் இருக்கிறது! அதுவும் ஆளுமையழகனுக்கு அருகில்! – உள்ளும் புறமும் சில்லென்று உணர்ந்தாள் மிருதுளா.
“என்ன சாப்பிடற?” – பதார்த்தங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவன், அவளுடைய பதிலுக்கு காத்திராமல் இருவருக்குமே பரிமாறினான். அவள் விருப்பத்தை அவன் தேர்வு செய்வதில் கூட அழகை உணர்ந்தாள் மிருதுளா. தன் மீதான அவனுடைய ஆதிக்கம் அவளுக்கு ரசனைக்குரியதாக இருந்தது.
அவனுடைய அருகாமையை அனுபவித்தபடி அவள் உணவை ருசித்துக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு குரல் அவர்களுடைய தனிமையில் இடையிட்டது.
“ஹேய்… மார்னிங்…” என்றபடி உள்ளே நுழைந்த டேவிட், மிருதுளாவை அங்கே – அர்ஜுன் ஹோத்ராவிற்கு அருகில் பார்த்ததும் அதிர்ந்தான். ஒரு கணம்தான்… உடனே சுதாரித்துவிட்டான். தன் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக உள்ளே வந்தான்.
“மார்னிங் மேன்…” – உற்சாகமாக நண்பனை வரவேற்றான் அர்ஜுன்.
“ஹே… மிருதுளா! நைஸ் டு சி யு…” – முயன்று புன்னகைத்தான். அவனுடைய தடுமாற்றம் மிருதுளாவின் கவனத்தில் பதியவில்லை. அவள் இயல்பாக பதில் புன்னகை புரிந்தாள்.
“பார்க்கவே முடியிலேயே… எங்க போயிட்ட?”
“எங்கேயும் போகல. ரூமை மாடிக்கு மாத்தியிருக்கேன். அவ்வளவுதான். மாலிக் எங்க?” – குறுக்கிட்டு பதில் கூறிய அர்ஜுன் அடுத்த டாபிக்கிற்கு தாவினான்.
அவனுடைய குரலில் மாற்றத்தை உணர்ந்து அவன் பக்கம் திரும்பினாள் மிருதுளா. இல்லை… அது ஏதோ அவளுடைய கற்பனை… சாதாரணமாகத்தான் இருந்தான்.
“சுஜித் கூட ஜிம்ல இருக்கான். ரெண்டு பேரும் சேர்ந்துதான் பயிற்சி செய்யறாங்க.”
“ஓ…! – அவனுக்கு செவி கொடுத்தபடி மிருதுளாவின் தட்டில் குருமாவை பரிமாறினான்.
டேவிட்டின் முகம் இறுகியது. அங்கே நிற்க முடியாமல் காபிமேக்கரின் பக்கம் சென்றான்.
“டேவிட்… கமான் மேன்… எங்க போற?” – உண்மையான அக்கறையோடுதான் நண்பனை அசைத்தான் அர்ஜுன்.
“நா காபி எடுக்கத்தான் வந்தேன். ஒரு சின்ன வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருங்க” – கண்களை எட்டாத புன்னகையுடன் அவன் அழைப்பை மறுத்துவிட்டு விலகிச் சென்றான் டேவிட்.
அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஹோத்ராவை அலைபேசி அழைத்தது. யார் என்று கூட பார்க்காமல் அழைப்பை ரிஜெக்ட் செய்துவிட்டு மிருதுளாவின் பக்கம் கவனத்தை திருப்பினான்.
“ம்ம்ம்… சாப்பிடு… இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ…” – மீண்டும் அலைபேசி ஒலித்தது. ரிஜெக்ட் செய்துவிட்டு உணவை தொடர்ந்தான்.
இரண்டு மூன்று முறை நிராகரித்தப் பிறகும் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்ததில் எரிச்சலடைந்தவன் சட்டென்று அழைப்பை ஏற்று, “கட் பண்ணினா பிஸியா இருக்கேன்னு அர்த்தம். இன்னொருத்தரம் என்னுடைய நம்பரை டயல் பண்ண துணியாத. மீறினா விளைவுகளையும் சந்திக்க தயாரா இரு” – அமைதியாக ஒலித்த அந்த குரலில் பேரழிவின் அபாயமிருந்தது. ஒரு நொடியில் அவனிடம் தெரிந்த உட்சபட்ச மாற்றத்தைக் கண்டு திகைத்தாள் மிருதுளா. அதுவரை சாந்தமாக இருந்த அந்த முகத்தில் திடீரெண்டு அதீத கோபம் கொப்பளித்தது. வெகு நேரமாக மறைத்து வைத்திருந்த உணர்வு கட்டுப்பாடிழந்து வெளிப்பட்டுவிட்டது போல் தோன்றியது அவளுக்கு.
அச்சம் மேலோங்க கலவரத்துடன் அவனைப் பார்த்தாள் மிருதுளா. அவள் பக்கம் திரும்பாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தவன், ஓரிரு நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “ஐம் சாரி… சாப்பிடு…” என்றான் மென்மையாக.
இப்போது அவனுடைய பழைய இனிய முகம் திரும்பிவிட்டது என்றாலும் மிருதுளாவின் பதட்டம் குறையவில்லை.
கண்ணாடி குவளையில் சற்று முன் அர்ஜுன் ஊற்றி வைத்த நீரை எடுத்து அருந்தினாள். சில்லென்ற திரவம் உள்ளே இறங்கி அவளை சற்று ஆசுவாசப்படுத்தியது. ஆனாலும் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க மறுத்தது.
உணவை வீணாக்குவது அவனுக்கு பிடிக்காத செயல் என்பதை அவள் அறிந்திருந்தாள். மூச்சு முட்டமுட்ட… விழி பிதுங்கபிதுங்க… தட்டில் இருந்ததை முயன்று விழுங்கிவிட்டு எழுந்தாள். சுண்டுவிரலைக் கூட அசைக்காமல் தன்னுடைய தாளத்திற்கு அவளை ஆட வைத்துவிட்ட திருப்தியுடன் அவனும் எழுந்தான்.
******************
மிருதுளாவை முதல் முதலாக பார்த்த நிமிடத்திலேயே அவளுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகில் ஈர்க்கப்பட்டான் டேவிட். ஆனால் அவள் கோர்த்தாவின் எதிரியாக இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது. அதன் பிறகு ஒருநாள் அவள் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டாள்.
அன்று அவளுக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடக் கூடாதே என்று அவன் மனம் எத்தனை பதைபதைத்து. சுஜித்திடம் அவளை தனியாக விட்டுச் செல்ல பயந்து அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அவன் பேஸ்மெண்டை விட்டு வெளியே வரவில்லை.
அன்று அர்ஜுன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்ட போதும், அவள் தன்னை நிரபராதி என்று கூறி கண்ணீர்விட்ட போதும் அவன் மனம் அவள் பக்கம்தான் நின்றது. ஆனால் சூழ்நிலையும் சாட்சிகளும் அவளுக்கு எதிராக இருந்ததால் அவன் கைகள் கட்டப்பட்டுவிட்டன.
கோர்த்தாவின் மீது அவன் கொண்டிருக்கும் விசுவாசம் இன்றுவரை அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது. அவள் கோர்த்தாவிற்கு எதிரானவள் அல்ல என்று பூரணமாக நிரூபிக்கப்படும் வரையில் அவனால் அவளிடம் நெருங்க முடியாது. ஆனால் அர்ஜுன் நெருங்கிவிட்டான்.
இன்று காலை அவளை அவனோடு ஒன்றாக – சந்தோஷமாக பார்த்த போது உள்ளே ஏதோ கூர்மையாய் பாய்வது போல் வலித்தது. எதையோ இழந்துவிட்டது போல்… தோற்றுவிட்டது போல்… ஏதேதோ… அவனால் அர்ஜுனிடம் இயல்பாக பேசவே முடியவில்லை. சாப்பிடச் சென்றவன் காபியை மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
அவளுடைய அறையை மாடிக்கு மாற்றிவிட்டானாம்! சுத்தம் செய்வதற்கு கூட மேலே யாரையும் அனுமதிக்க மாட்டான். ஆனால் அவளுக்கு அங்கு அறையே ஒதுக்கியிருக்கிறான்! அவன், அவளை தன்னுடையவள் என்று பிரகடனப்படுத்திவிட்டான் என்பதை புரிந்துகொள்ள இந்த ஒரு விஷயமே போதும். – ‘ஓ அர்ஜுன்!’ – அவன் கலங்கினான். காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். மாளிகையிலிருந்து வெகுதூரம் வந்து, ஆள் அரவரமற்ற தனிமையான இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
மிருதுளாவின் சோகமான முகம் அவன் கண்ணெதிரில் தோன்றியது. அந்த முகம்தான் அவன் மனதில் ஆழப்பதிந்த முகம். இன்று அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள். அந்த சிரிப்பை அர்ஜுன் கொடுத்திருக்கிறான். – உண்மை சுடும்தான். சுட்டாலும் அதை எண்ணிப்பார்த்து அவன் உள்ளம்.
ஏற்றுக்கொள்ள சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் மிருதுளாவிற்கு தன்னைவிட அர்ஜுன்தான் தகுதியானவன் என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. கசப்பான உண்மையை மென்று விழுங்கிவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான். அப்போதுதான் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது அந்த தோட்டா.
17 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
mona shri says:
Sis kanalvizhi kaadhal la Dev ku model ah Potta actor name Enna sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
faisal qureshi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Sis Arjun Ku model ah potrukengala oru actor photo avaroda real name enna sis plz sollunga… Really handsome 😘 indian actor ah?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
danial afzal khan
google la parunga pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
K thank you sis….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Teena says:
Pakistani seriel actor
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vats says:
David is true. Arjun is playing game. Mridu try to see around you.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sandy says:
Please give regular updates ma and more Arjun mridhula scenes
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rinu says:
Idhe madiri daily update kodunga nithya..feeling so happy
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
super&interesting ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Acho 😨devid Ku ethum agakudathu sis pavam Avan miruthula mela real love ullavan but Arjun miruthuta nadikaranonu thonuthu sis aval bhagavan aalunu ninachu avata nerunki unmaiya vanganumnu epadi seirano avana purunchukave mudila… But small ud sis nxt time quick ah big ud kodunga… Story remba interesting ah poguthu… Keep rocking 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma maheswari says:
It is getting more Interesting.. super Nithya sis.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Confuse panuranga pa. Yaru nallavan yaru kettavanu theriyalaye ma. Ennnammmma eppppidi panureeeeengale ma. Superb n fantastic episode pa.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Bhagavathy Shanker says:
Sundu viralai kuda asaikama avalai aati vaitha thrupthi… Appo Arjun act than panran illaya? Already Antha Mafia Lead kitta sonna Business verq manasa uruthitte iruke?
Then David ah kuri vachathu Arjuna?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Aryana says:
Acho romba chinna ud.. next ud perusa podunga nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Miri emarathe Avan mugamudi potirukaan… En?.devit one side love analum era manasukaaran.devitkku kuri vaithathu arjunaa