நிழல்நிலவு – 24
12235
23
அத்தியாயம் – 24
டேவிட் திறமைசாலிதான். ஆனால் நிச்சயமாக அர்ஜுன் ஹோத்ராவின் கண்ணை தட்டும் அளவிற்கு திறமைசாலி இல்லை. மிருதுளாவை அர்ஜுனுக்கு நெருக்கமாக உணவு கூடத்தில் கண்டபோது அவன் முகத்தில் தோன்றி மறைந்த அதிர்வையும் அதிருப்தியையும் அர்ஜுன் ஹோத்ராவின் கண்கள் அதிநுட்பமாக ஸ்கேன் செய்தது. அவனுடைய பார்வை ஏக்கத்துடன் அவள் மீது படிந்த போது அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
‘இவள் என்ன பெரிய பொக்கிஷமா…’ – எரிச்சலை மறைத்துக் கொண்டு, நண்பன் அவளிடம் கேட்ட கேள்விக்கு குறுக்கிட்டு பதில் கூறினான். அதோடு மாலிக்கைப் பற்றி விசாரித்து பேச்சின் போக்கையும் மாற்ற முயன்றான்.
ஆனால் அவனோ ஏதோ இழக்கக் கூடாததை இழந்துவிட்டது போல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு டிஃபனைக் கூட சாப்பிடாமல் போய்விட்டான். அப்படியென்ன மயக்கம்…? மடத்தனமான மயக்கம்… – கடுப்புடன் அவன் முதுகை வெறித்துக் கொண்டிருந்த போதுதான் அலைபேசியின் இடைவிடாத அழைப்பு அவனை இன்னும் சோதித்தது. கட்டுப்பாடிழந்து வெடித்துவிட்டான். எல்லாம் டேவிட் இடியட்டால் வந்த வினை.
அவன்மட்டும் சாதாரணமாக இருந்திருந்தால் அவனுக்கு இத்தனை கோபமும் வந்திருக்காது, அவளிடம் தன்னை உத்தமனாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இந்த சறுக்கலும் ஏற்பட்டிருக்காது.
நொடிப்பொழுதில் அவள் முகத்தில் எத்தனை கலவரம்! பயந்துவிட்டாள்… அதை ஒருவாறு அவன் மேக்கப் செய்துவிட்டான் என்றாலும், அவளுடைய ஆழமான நம்பிக்கையை பெற இன்னும் அவன் வேலை செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அலைபேசியை எடுத்து பூஜாவுக்கு அழைத்தான். அடுத்த ஒருமணிநேரத்தில் பூஜா அர்ஜுன் ஹோத்ராவின் அலுவலக அறையில் இருந்தாள்.
அன்று அவளுடைய வேலை திட்டங்கள் என்னவென்று கேட்டு தெரிந்துக் கொண்டு மிருதுளாவை ஷாப்பிங் அழைத்துச் செல்லுமாறு அர்ஜுன் கூறியதும், “ஷாப்பிங்கா!” என்று வியந்தாள்.
“எஸ்… ஷாப்பிங்கித்தான்… மிருதுளா இங்க வந்ததுலேருந்து சர்வன்ட்ஸ் யூனிபார்ம்லேயே இருக்கா. அவளுக்கு நல்ல ட்ரெஸ்ஸஸ், ஷூஸ் இன்னும் என்னென்ன தேவையோ எல்லாம் வாங்கணும். நீதான் அவகூட போயி ஹெல்ப் பண்ணனும்” என்றான்.
இது அவளுடைய வேலை இல்லை. மருத்துவமனையில் பேஷண்ட்ஸை விட்டுவிட்டு மிருதுளாவோடு ஷாப்பிங் செல்ல அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. அர்ஜுன் ஹோத்ராவை மறுத்துப் பேச முடியாமல் சரி என்று தலையாட்டிவிட்டு திரும்பினாள். அடுத்து அவள் மிருதுளாவை தேடித்தான் செல்வாள் என்பதை ஊகித்து, “மிருதுளா மாடில தங்கியிருக்கா… இன்டெர்க்காம் நம்பர் 15… கால் பண்ணினா கீழ வந்து உன்ன மீட் பண்ணுவா” என்றான்.
சட்டென்று அவன் பக்கம் திரும்பினாள் பூஜா. அடிவாங்கியது போல் சிறுத்துப்போய்விட்டது அவள் முகம்.
பூஜாவுக்கு கோர்த்தாவில் நல்ல பெயரும் மதிப்பும் உள்ளது… நேரடி தலைமைக்கு கீழே வேலை செய்யும் வாய்ப்பு பலமுறை அவள் கதவை தட்டியது. ஆனால் அவள் மறுத்துவிட்டாள். காரணம் அர்ஜுன் ஹோத்ரா…
அவனை அவளுக்குப் பிடிக்கும். பிடிக்கும் என்றால் சாதாரணமாக அல்ல. அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து ரசிக்கும் அளவுக்கு தீவிரமாகப் பிடிக்கும். உடனே அதை காதல் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம்.
கோர்த்தாவில் அவனுடைய உயரம் என்ன என்பது அவள் அறிந்ததுதான். கிட்டத்தட்ட தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கிறான். அவனை காதலித்து கைப்பிடிக்கும் பேராசையெல்லாம் அவளுக்கு இல்லை.
வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை தூரத்திலிருந்து ரசிப்பது போல் – திரையில் ரகளை செய்யும் ஷாரூக் கானை எட்டியிருந்தது ரசிப்பது போல் – கிரௌண்டில் சிக்ஸராக அடித்து தூள் செய்யும் தோனியை தள்ளியிருந்து ரசிப்பது போல் அர்ஜுன் ஹோத்ராவின் மீது அவளுக்கு ஒரு நட்சத்திர மதிப்பு இருந்தது… இருக்கிறது…
அப்படிப்பட்ட அர்ஜுன் ஹோத்ரா, ஏணியென்ன… லிஃப்டே வைத்தாலும் தன்னுடைய உயரத்தை எட்ட முடியாத ஒரு சாதாரண… மிகச் சாதாரண பெண்ணை தனக்கு இணையாக தேர்ந்தெடுத்துவிட்டான் என்கிற ஊகம் அவளை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கிவிட்டது.
அவனுடைய தகுதிக்கு ஏற்றார் போல் ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்தியிருந்தான் என்றால் அவள் மனம் ஆறுதலடைந்திருக்கும். ஆனால் இதை எப்படி அவளால் ஜீரணிக்க முடியும்.
தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூஜாவை வியப்புடன் நோக்கி, “வா…ட்?”என்று இழுத்தான்.
“அர்ஜுன்! ஆர் யு சீரியஸ்?”
“புரியல…” – அவன் புருவம் சுருங்கியது.
“நீ மிருதுளாவை கேர் பண்ற… அவ ரூமை கூட மாடிக்கு… இதெல்லாம்… எனக்கு புரியல… ஆர் யு சீரியஸ் அபௌட் ஹர்?”
“நன் ஆஃப் யுவர் பிசினஸ்” – முகத்தில் அடித்தது போல் கூறினான். அவள் முகம் கருத்துவிட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு பேசினாள்.
“எஸ் ஐ நோ… இது எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம் தான். ஆனா எனக்கு உண்மை தெரியிலன்னா தலை வெடிச்சிடும் அர்ஜுன்… ப்ளீஸ்”
“பூஜா… இன்னைக்கு எனக்கு ஆரம்பிச்சதே ரொம்ப கடினமான நாள்… அதை இன்னும் நீ கடினமாக்காத. லீவ் நௌ”
“ஆனா அர்ஜுன்…” – “நௌ…” – மீறவே முடியாத குரல். இறுகிய முகத்தோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் பூஜா.
*********************
அன்றைய காலை உணவு வேளையை மறக்க முடியாத பொக்கிஷ பொழுதாக மிருதுளாவிற்கு மாற்றிக் கொடுத்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவளுக்காக காத்திருந்தான், உணவு பரிமாறினான், அவளோடு சேர்ந்து உணவருந்தினான், இனிமையாக பேசினான், சிரித்தான் இடையில் ஒருமுறை அவனுடைய கோப முகத்தையும் பார்க்க நேர்ந்ததுதான்… ஆனால் அந்த கோபமும் அவனில் ஒரு பகுதிதானே! – புன்னகை மலர்ந்த முகத்துடன் லைப்ரரிக்குள் நுழைந்தாள் மிருதுளா. ஆம், அவளுக்கு புத்தகம் படிக்கும் வழக்கமிருந்தால் அவனுடைய லைப்ரரியை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறியிருந்தான் அர்ஜுன்.
அந்த அறைக்குள் நுழைந்ததுமே பியானோவில் அவன் அமர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றம் அவளை ஆச்சரியப்படுத்தியது. அவனுடைய மென்மையான தீண்டலில் இழையும் இசை இப்போதும் அவள் செவிகளில் எதிரொலித்தது. அதில் மெய்மறந்து அவள் கண்கள் தானாக மூடின.
“ஹேய்…” – அவன் குரல்…. அருகில் இருந்து அழைப்பது போலவே கேட்டது. எத்தனை ஆழமாக ஊடுருவிவிட்டான்! – “மிருதுளா….” – மீண்டும் அவளுக்கு மிக அருகில் ஒலித்தது அந்த குரல்.
குழப்பத்துடன் விழிதிறந்தாள். “ஆர் யு ஆல்ரைட்?” – ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அவள் எதிரில் நின்றான்.
“ஓ காட்!” – மிருதுளா கண்களை மூடிமூடித் திறந்தாள். தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் உருவம் மாயையா அல்லது நிஜமா என்கிற குழப்பம் தீர ஓரிரு நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு.
“ரூம்ல இருப்பேன்னு நெனச்சேன்” – மென்மையாகக் கூறினான். பூஜாவின் இன்டெர்க்காம் அழைப்பிற்கு அவளிடமிருந்து எந்த பதிலும் வராததையடுத்து, அவள் அர்ஜுனிடம் முறையிட அவன் நேரடியாகவே அவளை தேடி வந்துவிட்டான்.
“புக்ஸ் ஏதாவது படிக்கலாமேன்னு வந்தேன்”
“ம்ம்ம்… அப்புறம் படிச்சுக்கலாம். இப்போ நீ பூஜாகூட ஷாப்பிங் போய்ட்டுவா…”
‘என்ன!’ – மிருதுளாவின் விழிகள் பெரிதாக விரிந்தன. இந்த இரும்புக் கோட்டையிலிருந்து அவளை வெளியே அனுப்புகிறானா! அதுவும் பூஜாவோடு! தப்பிக்கமாட்டாள் என்று எண்ணுகிறானா! அவள் மீது நம்பிக்கை வந்துவிட்டதா! – உள்ளம் துள்ளியது. மறுநொடியே சங்கடத்தில் துவண்டது.
அவள் மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சிதான். ஆனால் அந்த நம்பிக்கைக்கு அவள் தகுதியானவள் தானா! பெயரை தவிர அவனிடம் அவள்கூறிய அனைத்தும் பொய்… – நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டாள். உண்மை தெரிந்தால் இந்த அன்பொழுகும் முகம் எப்படி பயங்கரமாக மாறும் என்பதை எண்ணிப் பார்க்கையிலேயே குளிர்பிறந்தது. ஆனாலும் உண்மையை உடைத்துவிடவே நினைத்தாள்.
“அது… நா… வந்து…” – உண்மையை சொல்லிவிட வேண்டும் என்பதுதான் அவள் விருப்பம். ஆனால் வார்த்தை வரவில்லை. பயத்தில் தொண்டைதான் உலர்ந்தது.
“என்ன மிருதுளா?” – கனிந்த குரலில் கேட்டான் அர்ஜுன்.
“அன்னைக்கு… நா…” – அவள் பேச முயன்று கொண்டிருக்கும் போது அவனுடைய அலைபேசி ஒலித்தது.
“ஓரு நிமிஷம்” என்று கையை உயர்த்தி அவளை தடுத்துவிட்டு, அழைப்பை ஏற்றவன் சட்டென்று பதட்டமானான்.
“டோன்ட்… டோன்ட் கெட் பேனிக்… ஆளுங்க வந்துகிட்டே இருக்காங்க… ஜஸ்ட் காம் டௌன் அண்ட் ஹாண்டில் தி சிச்சுவேஷன்” என்றபடி அங்கிருந்து வெளியேறியவன், சட்டென்று நின்று அவள் பக்கம் திரும்பி, “பூஜா வெயிட் பண்ணிட்டிருக்கா” என்று அவளையும் அறிவுறுத்திவிட்டு தடதடவென்று படிக்கட்டில் இறங்கினான்.
*********************
டேவிடை நோக்கி பாய்ந்து வந்த தோட்டா கார் கண்ணாடியில் மோதி தெறித்துப் பின்னால் விழுந்தது. புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி. ஷோரூமிலிருந்து காரை இறக்கியதும் முதல் வேலையாக அதன் அனைத்து கண்ணாடிகளையும் கழட்டிவிட்டு தோட்டா துளைக்காத கண்ணாடியை மாட்டி அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுதான் பயன்படுத்துவார்கள். கோர்த்தாவில் முக்கிய பொறுப்பிலிருக்கும் அனைவருமே பின்பற்றும் வழக்கம் இது. அந்த வழக்கம் எத்தனை பெரிய ஆபத்திலிருந்து அவனை இன்று காப்பாற்றிவிட்டது.
தோட்டா கண்ணாடியில் வந்து மோதிய கணமே சட்டென்று சீட்டுக்கு அடியில் பதுங்கிய டேவிட் அனிச்சையாய் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவினான். அடுத்த குண்டு மீண்டும் பாய்ந்து வந்து கண்ணாடியில் மோதியது. இந்த முறை தோட்டா எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை கணக்கிட்டுக் கொண்டு மெல்ல தலையை உயர்த்தினான்.
மறைத்துக்கொள்ள ஏதுவாக அங்கே என்ன இருக்கிறது என்பதை பார்த்தன். ஒரு சிறு பாறை… அதிகபட்சம் ஐந்து பேர் அங்கே மறைந்துகொள்ளலாம் என்று கணக்கிட்டான்.
மொத்தமாக வந்து தாக்கினால் சமாளிப்பது கடினம். நாம் தனி ஆள் என்பதையும் காட்டிக்கொள்ளக் கூடாது. தோட்டாவையும் வீணாக்கக் கூடாது. முடிந்த அளவு நேரத்தை கடத்த வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது முறையாக தாக்கிவிட வேண்டும். – சரியாக திட்டமிட்டுக் கொண்டு உதவிக்கு ஆட்களை அழைக்க முடிவெடுத்தான்.
அலைபேசியை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்து சுருக்கமாக விபரத்தைக் கூறினான். “வெஸ்ட் வுட் லேக்… தனியா இருக்கேன்… எவனோ அட்டாக் பண்றான். குரூப்பா இருக்க வாய்ப்பு இருக்கு… ஹெல்புக்கு ஆள் வேணும். மேக் இட் ஃபாஸ்ட்” – அழைப்பை துண்டித்தான்.
மறு நொடியே இன்னொரு குண்டு அவன் காரை பதம் பார்த்தது. ஆனால் அது வேறு ஒரு திசையிலிருந்து பாய்ந்து வந்தது. டேவிட் பதட்டமானான். இப்போது அவனுடைய பார்வை அந்த திசையை நோக்கியது. மரங்கள் அடர்ந்த பகுதி… எத்தனை பேர் வேண்டுமானாலும் மறையலாம்.
‘ஹெல்… ஹெல்… ஹெல்…’ – அவனுடைய பதட்டம் அதிகமானது. பதட்டப்பட்டால் காரியம் கெட்டுவிடும். தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டான்.
ஒரே துப்பாக்கி… ஆறு தோட்டாக்கள்… தனி ஆள்… சமாளிப்பது இயலாத காரியம். சூழ்நிலையின் தீவிரம் அவனுக்கு புரிந்தது. இப்போது எதிர்த்து போர் புரிவதைவிட தப்பிச் செல்லும் மார்க்கத்தை தான் பார்க்க வேண்டும்.
தோட்டா துளைக்காத கார் தான்… தாங்கும்… அடித்து ஓட்டிவிடலாம் என்று எண்ணி ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான். அடுத்த நொடியே, தடததடவென்று தொடர்ச்சியாய் வந்து பாய்ந்தது குண்டு மழை… முன்பக்க கண்ணாடியின் ‘விசிபிலிட்டி’ சுத்தமாக போய்விட்டது. இன்னும் எத்தனை நேரத்திற்கு அந்த கண்ணாடியும் தாங்கும் என்பது தெரியாது.
வேறு வழியே இல்லை… இப்போது அவன் போர் புரிந்துதான் ஆக வேண்டும். மீண்டும் சீட்டுக்கு அடியில் பதுங்கினான். கார் கதவை லேசாக திறந்து, கையை மட்டும் சற்று வெளியே கொண்டுச் சென்று அலைபேசி கேமிராவை ஆன் செய்து, டார்கெட்டை ஃபோக்கஸ் செய்து மணலில் ஊன்றி வைத்தான்.
இவனை சுட வேண்டும் என்றால் பாறைக்கு வெளியே சற்றாவது எட்டிப் பார்த்தால் தான் குறி வைக்க முடியும். அந்த சந்தர்ப்பத்தைத்தான் இவன் பயன்படுத்த வேண்டும். இவனுடைய குறிபார்க்கும் திறன் இன்று தெரிந்துவிடும்… கண்ணிவைத்துவிட்டு காத்திருக்கும் வேட்டைக்காரன் போல் காத்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் குண்டுமழை அவன் காரை துவம்சம் செய்தது. இவன் சீட்டுக்கு கீழே பதுங்கியிருந்ததால் தப்பித்தான். ஆனால் அந்த பக்கத்தில் கலஷ்னிகோவ் 47-ஐ கையில் பிடித்திருந்தவன் பொட்டில் அடிபட்டு கீழே விழுந்தான். ஒரே புல்லெட் தான். ஆள் காலி… அடுத்த சற்று நேரத்திற்கு எந்த சத்தமும் இல்லை.
ஐந்து நிமிடம் தான்… அடுத்த தாக்குதல் ஆரம்பமானது… இந்த முறை காட்டுப்பகுதியிலிருந்து… இந்த பக்கம் குறிபார்ப்பது சிரமம். எந்த மரத்தில் ஒளிந்திருக்கிறான் என்பதை கணிப்பது சிரமம். அப்படியே கணித்து குறி வைத்தாலும், அதே நேரத்தில் வேறு ஒரு மரத்திற்கு பின்னாலிருந்து வேறு யாராவது இவனை தாக்கும் வாய்ப்பும் உள்ளது. அது ஆபத்து… ஐந்து தோட்டாக்கள்… பார்த்து செலவு செய்ய வேண்டும்… பொறுமைகாத்தான் டேவிட்.
ஆனால் தொடர்ந்து சீறிக்கொண்டிருந்த தோட்டாக்கள் அவனை பொறுமையாக இருக்க விடவில்லை. பழையபடியே அலைபேசி கேமிராவின் உதவியுடன் ஆள் ஒளிந்திருக்கும் இடத்தையும், வெளியே வரும் சமயத்தையும் கவனித்தான். தாக்க முயன்றான். ஆனால் இந்த முறை வெற்றிக்கனி அவன் பக்கம் விழவில்லை. தோளில் குண்டடிபட்டு சரிந்தான். தாங்கமுடியாத வலி… வேதனையுடன் முனகியவன், சட்டையை கழட்டி பொங்கிப் பெருகும் ரத்தத்தில் வைத்து அழுத்தினான். ‘ஓ!!! ஷி…ட்!!!’ – பல்லை கடித்து வலியை சகித்தான். அர்ஜுனின் மீது ஆத்திரம் வந்தது.
அலைபேசியை எடுத்து, “வாட் த ஹெல் ஆர் யு டூயிங் மேன்… ஐம் டையிங் ஹியர்” என்று கத்தினான்.
“டேவிட்… லீசன் டு மீ… டேவிட் கேட்குதா… டோன்ட் லூஸ் யுவர் ஹோப்… ஆளுங்க கிளம்பிட்டாங்க. எனிடைம் அங்க இருப்பாங்க… ஓகே… ஸ்டே ஸ்டராங்… கொஞ்ச நேரம்… ஜஸ்ட் கொஞ்ச நேரம் சமாளி…” – அவன் பேசி கொண்டிருக்கும் போதே சரசரவென்று கோர்த்தாவின் மூன்று கார்கள் அங்கே வரிசைகட்டி வந்து நின்றன. அடுத்த சில நிமிடங்கள் அங்கே இடி இடிப்பது போல் ஒரே துப்பாக்கி சத்தம் முழங்கி ஓய்ந்தது. டேவிடை தாக்கிய மூவரும் சுட்டுக்கொல்ல பட்டார்கள். அதீத ரெத்தப்போக்கால் நினைவிழந்த டேவிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
23 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma maheswari says:
Friends let her take some time.. veetula guests vanthu இருக்காங்க சொன்னாங்க, அவங்களை வச்சுகிட்டு நான் ud kodukkanum அப்படினு லேப்டாப் எடுத்தா நல்லா இருக்குமா.. family always comes first Yaara இருந்தாலும், கண்டிப்பா ud கொடுக்கிறேன் சொல்லி இருக்காங்க தானே, வருவாங்க பா.. give some free space for her too..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ragini Ravi says:
Iyo kadavuleeeee next ud yepo Dan poduveenga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Sis unga blog ah na check Pani Pani remba tired aaiten😥 epo sis varuvinga? Soo sad ponga😩
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Latha says:
நித்யா next ud சீக்கிரம் போடுங்க plse
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Very sorry Latha… I’ll try to update soon…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
raj says:
Waiting your next ud …seekaram podunga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ok Raj…I’ll try my best…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Unknown says:
Ayyo nithya enga ud ah kanom.. start pantingla hide and seek ah ?! 😑😑🤨
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
No… Veetla velai adhigamaayidichchu pa… guest vandhirukkaanga… so monday ku melathaan ezhudha aarambippen… appuram regular ud irukum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Unknown says:
Hmm .. seekram potrunga pa wait panna mudila
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Eagerly waiting sis…epo nxt update kodupinga☺
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Umamanoj says:
Action movie partha mathiri iruku Nithya..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
As usual kalakkiteenga. Waiting for the next episode eagerly…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
அர்ஜுனோட காதல் நடிப்பு என்றால்…. எதற்காக????
மிதுவை பத்தி அவனுக்கு முக்கியமான ஏதும் நியூஸ் கிடைச்சிருக்கா?!?!?!
மிது உண்மையிலே அர்ஜுன் ஹோத்ரா வ காதலிக்கிறாளா?!இல்லை அதுவும் நடிப்பு தானா?!?!
மிது உண்மையிலே யாரு….?!
வில்லனோட daughter ஆ?!?! இல்லை வேற என்ன?!?!
யார் யார் என்ன திட்டம் போட்டுருக்கங்கா….????!
இங்க என்ன தான் நடக்குதுப்பா……
சீக்கிரம் ரகசியத்தை போட்டு உடைங்க ப்பா…..
தாங்க முடியல…. ஸ்ஸ்ஸ்ஸ்….. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு…..
then ஒருவழியா டேவிட் தப்பிச்சிட்டான்….
அடுத்து என்ன நடக்கும்….
ஹ்ம்மம்ம்……
நீங்க எங்களை ரொம்ப ரொம்ப சோதிக்கிறீங்க….. நாங்க பாவம்….😢 சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்கப்பா…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
இந்த மாதிரி gang war உண்மையா நடக்குதா?இந்த கதையில் வருவது போல கோர்தா மாதிரியான குழு உள்ளதா…..😢😢😢😢😢
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
இதுக்கெல்லாம் பயபடலமா…..அழ க் கூடாது…. ரொம்ப இளகிய மனம் உங்களுக்கு….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Nice ud sis….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Emily Peter says:
Miruthuva purinjuthan Arjun act pannarano yendru doubt
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Cha kadaisila nee ivlo than la AJU…. 😒😒😳
avlo peria kortha ku next thalaivan nu nee irukarthe waste… suman vishayatha avlo easya kandupudicha, ivlo naal un kottaikulla irukka… avala therinjika thuppu illa unaku…
THROGAM PANRA AJU… ITHU THAPPU
Oru chinna ponnoda unarvugaloda veyada vekka padanum aju nee.. I HATE YOU TO THE CORE….
mrithu un mayakkathulenthu konjam velila vaa.. kanna nalla theranthu pathu tholaa… ivan yennikume unna namba mattan..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vats says:
ம்ருது முழிச்சிக்கோ. பாசமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. அர்ஜுன் அ நம்பாத.
டேவிட் கேரக்டர் சூப்பர் ஆ இருக்கு. அர்ஜுன் அதையும் ல கண்டுபுடிச்சிட்டான். ஹ்ம்ம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Oh god 😏 last ah Arjun nadikarathu confirm aaitucha… Miruthula evlo weak eruka venam mmm pavam Avan nadikaranra unmai theruncha kandipa udanchu poituva but entha madhiri arakkan kita mayankurathu oru vitha muttal thanam than…ava anga kaithiya erukaratha kuda mayakathala maranthuta😐 sikiram Ava antha mayakathula erunthu veliya vanthu Arjun oda suya rupatha purunchukanum… Athukula love athu ethu nu ularita kudathu miruthu… Sikiram enga erunthu thappichu poitanum.. avanga amma epadi erukanga😥 superb ud sis 👏 keep rocking 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Ada Arjun Ava arumai unakku teriyalai.miru baby nambitiye avanai.devidai kaapaatriyaachaa.