காஜலிட்ட விழிகளே 10
2516
0
பிரசாத்தும் கார்த்திக்கும் மறுநாள் விடியலுக்கு கொஞ்சம் நேரம் இருக்கும்போதே கடற்கரை பக்கமாக உலாவினர். ஒரு அறையில் இருவர் என்ற கணக்கில் தங்கியது கார்த்திக்கின் நண்பர்கள் கூட்டம்.
கார்த்திக்கும் பிரசாத்தும் தங்கள் அறையைவிட்டு வெளியே வந்தபோது எதிரே ஒரு பெண்ணும் இரண்டு வாலிபர்களும் அவர்களைக் கடந்து சென்றனர். பக்கத்து அறை போலும்.
அவர்களைக் கடந்துவிட்டபோது பிரசாத் நக்கலாகச் சிரித்தான்.
கார்த்திக் அவனிடம், “டேய் நீ நினைப்பது சரிதான்! ” என்றான் சிரித்துக்கொண்டே கைகளில் ஏறியிருந்த குளிர்ச்சியை சரிகட்ட தேய்த்துவிட்டவன்.
“கார்த்திக் நீ ரொம்பத்தான் யூகிக்கிற! நான் ஒண்ணும் அந்தப் பொண்ணு யாருடைய லவ்வர் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை! ”
“ஆமா ஆமா நீ அதைப்பற்றியா யோசிப்ப? நாமயெல்லாம் யாரு? நீ என்ன நினைச்ச எப்படி நினைச்ச.. எல்லாம் எனக்குத் தெரியும்டா.. யூ ஆர் சிக் மை டியர்! ”
“நானா சிக்? சரி நீயே சொல்லு.. நேற்று ஒரு பையனுடன் அவளை சுவிம்மிங் கிளப்பில் பார்த்தேன். இப்ப இன்னொரு பையனுடன் கைகளை இறுககோர்த்துக்கிட்டு போறா.. அப்ப நான் என்ன நினைக்கிறதாம்? நான் சிக் கிடையாது. அவுங்க மூன்று பேரும்தான் சிக். இதைப் பார்க்கும் போது ஐ ஹேட் கேர்ள்ஸ்.. ”
“பிரசாத்.. ”
“இப்போ லவ்வர்ஸ்கூட இதேபோலத்தான் நடந்துக்கிறாங்க. தனியாக டேட்டிங் போறது.. நான் உன்னைச் சொல்லவில்லை. நீ ஒரு ஜென்டில்மேன் என்று எனக்குத் தெரியும். என்றும் எல்லை மீறமாட்ட. நான் இப்ப நம்மைக்கடந்து போன கேஸ் பற்றி சொல்றேன்.
இந்த மாதிரி இப்ப சென்னையில் நிறைய பார்க்கலாம். பொது இடத்தில் இடுப்பில் கைபோட்டு நடந்துபோறது.. கன்னா பின்னா என்று ஹக் பண்றது. ஒரு புதுமொழி உண்டு தெரியுமா? YOU CANNOT PISS HERE BUT YOU CAN KISS HERE! ஒரு அயல்நாட்டுக்காரன் அமேரிக்காவில் வைத்து நம்ம இந்தியனைப் பார்த்து சொன்னது.. ஆனால் இப்ப என்னடான்னா.. இதே இடத்தில் அந்த போர்ட்டு வைத்தால் சரியாக இருக்கும்ன்னு நினைக்கிறேன். கொட்டை எழுத்தில் எழுதிப்போடலாம் YOU CANNOT PISS HERE BUT YOU CAN KISS HERE! என்று. ”
கார்த்திக்இ பிரசாத்திடம் “டேய் பிரசாத் இது நாகரிக சென்னை. நாளைக்கு நீ உன் வீட்டுக்கு போ நான் என் வீட்டுக்கு போறேன். இப்ப நீ சொன்னதை நீயே நாளைக்கு தப்புன்னு சொல்வ. இது மார்டர்ன் சென்னை. அது கிலாசிக் சென்னை. ”
“என்னால் அப்படி நினைக்க முடியலை கார்த்திக். ஏன் என்று கேளேன். ”
“ஏன்?”
“ஏன்னா என்னோட உன்னோட கிலாசிக் சென்னையில் இருக்கும் பக்கத்துவீட்டு எதிர்வீட்டு பையனும் பொண்ணும் தான் இந்த மார்டர்ன் சென்னைக்கு வந்து போவதால்.. ”
“பிரசாத் நீ இருபது சதவீதம் இளவட்டங்களைப் பற்றி பேசுறடா.. ”
“பாஸ் உண்மையை மறைக்காதீங்க. இளவட்டம் என்ற வார்த்தையே வெரி ராங் ஆன்சர். ”
“சரி இளவட்டங்கள் மட்டும் இதில் இல்லை. இருபது சதம் ஜனத்தொகையைப் பற்றிப் பேசுற என்று வச்சிக்குவோம். இன்னும் நிரைய பேர் அப்பா அம்மாவுக்கு அக்காவுக்கு சொந்தக்காரங்களுக்கு பயந்து தான் காதல்கூட செய்யிறாங்கடா மச்சி! ”
“என்னை நம்பச் சொல்றியா? யார் அந்த ஃபூல்?”
“ஸ்ருதி! இன்னொரு ஃபூல் பேரும் நீ தெரிஞ்சிக்கணும்!”
“டேய்.. நீ சும்மா சொல்ற.. ”
“அந்த இன்னொரு ஃபூல் இஸ் மைசெல்ஃப்! நான்தான்.”
“நீங்க ரெண்டுபேரும் இங்கு தங்கினது? ”
“நானா சொன்னேன் தங்கினோம் என்று? ”
“அவுங்க பேசும் போது ஏன்டா அமைதியாக இருந்த?”
“நான் பொய் பேசலையே.. ”
“நீ ஒரு கல்லுளிமங்கன்டா மச்சான். நீ பொய் சொல்லலை. ஆனா நாங்க கிண்டல் பண்ணும்போதும் சிரிச்சதானே? ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசலை. நாங்க உன்னை பிளேபாய் என்று நினைச்சோமே? ”
“அப்போ எனக்கு கார்த்திக் என்ற பெயர் பிடிக்கலை! பிளேபாய் என்ற இமேஜ் பிடித்தது.”
“என்ன? ”
“ஏன்னா.. நான்தான் மார்டர்ன் சென்னையில் இப்ப இருக்கேனே.. ப்ளேபாய் சவுன்ட்ஸ் குட் மச்சி! ”
அதன் பிறகு கார்த்திக்கிற்கு முழுதாக இரண்டு மணிநேரம் தேவைப்பட்டது ஸ்ருதியுடனான காதலை பிரசாத்திடம் புரியவைக்க.
“டேய் கார்த்திக் முழுதாக ஒரு வருஷம் ஆறுமாசத்தில் நீங்க இரண்டு நிமிஷத்திற்கு மேல் தொட்டதுகூட கிடையாதா? ”
“ஹும் ஹும் ”
“சின்ன சின்ன சில்மிஷம்? ”
“லேது பாபா! ”
“ஒரு ஹக்? ”
“ச்ச! ச்ச! ”
“சும்மா ஒரு லாலிபாப் கிஸ்? ”
“அப்படினா என்னன்னுகூட எனக்குத் தெரியாதுடா.. ”
“ஒரு கிச்சு கிச்சு? ”
இல்லை என்று பரிதாபமாக தலையாட்டுபவனிடம் வேறு என்ன கேட்க என்று பிரசாத் ஒன்றும் கேட்கவில்லை. தன் தலையணை மீது அம்சமாக தலைவைத்து படுத்தவன் கண்களை இறுகமூடி யோசித்தான்.
யோசனை முடிந்ததும் கார்த்திக்கிடம் , திரும்பி “ஓ அவனா நீ? ” என்றான்.
கார்த்திக் அவனிடம் சொன்னான், “டேய் இப்படி நீங்க எல்லாரும் ஓட்டுவீங்க என்றுதான் நான் அவனுங்க கதை கட்டிவிட்டபோது அமைதியாக இருந்தேன். டேய் மச்சி என் மீசையை பார்த்துச் சொல்லு நான் அவனா? ”
“என்னடா நீ கண்ணைப் பார்த்துச் சொல்லு என்று சொல்வது போல மீசையை பார்த்துச் செல்லச் சொல்ற? உன்னைப் பார்த்து அதுவும் உன் மீசையைப் பார்த்து நான் அந்தக் கேள்வி கேட்டிருக்கக்கூடாது. சாரிடா! உன் நிலைமை அவ்வளவு பரிதாபமாக ஆகிடுச்சோ? ”
“ஆமாம்டா மச்சி. தருண்கூட தினம் எனக்காக ரொம்ப ஹெல்ப் பண்றான்! ”
“அப்படி என்னடா செய்யிறான் தருண் பயல்.. ரொம்ப தான் உருகிற? ”
ஆண்களுக்கும் பொறாமை வருமோ?
“எனக்காக தினம் தண்ணீர் மோட்டர் போட்டு தொட்டியை நிரப்புறான்டா! ”
“எதுக்குடா? ”
“டு டேக் எ கோல்ட்டு ஷவர்! ”
இதற்குத்தான் இதற்குத்தான் இந்த பதிலுக்குத்தான் பிரசாத் சிறுகுடலும் பெருகுடலும் வெளியே வந்து குதித்துவிடும் அளவிற்கு சிரித்தான்.
கார்த்திக்கும் சிரித்துக்கொண்டே பிரசாத் வாயில் ஜக் தண்ணீரை முழுதும் ஊற்றினான். தண்ணீர் புரையேறி அவன் இருமியபோது, அவர்கள் அறைக்குள் தற்செயலாக வந்த மற்ற நண்பர்கள் அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டபோது..
“யு நோ சம்திங் ” என்று பிரசாத் ஆரம்பிக்க..
“விக்கி , விமல் பசங்களிடம் ரூமில் இருக்கும் ஐயர்ன் பாக்ஸ் , காஃபி கெட்டில் , பீர் இவை எதையும் யூஸ் பண்ணக்கூடாது என்று சொல்லிடுங்க! எல்லாத்துக்கும் யானை விலை குதிரை விலை வச்சிருக்கான். அதைத்தான் நாங்க பேசிக்கிட்டுயிருந்தோம.” என்று அவசரமாக இடை மறித்தான் கார்த்திக்.
உடனே பிரசாத் சொன்னான் “ஆமாம்டா நீங்க எல்லாரும் டைனிங் ஹால் போங்க நாங்க இன்னும் கொஞ்ச நேரம் அந்த கர்மத்தைப்.. சீ சீ அந்த காஸ்ட்டைப் பற்றி பேச வேண்டியதிருக்கு. பேசிட்டு உடனே வந்திடுறோம். ”
அவர்கள் சென்றதும் “மச்சி ஒண்ணு சொல்லணும் டா!” என்று மீண்டும் ஆரம்பித்தான் பிரசாத்.
“ஆணியே புடுங்கவேண்டாம். கிளம்பு. நான் சாப்பிடப் போறேன். எனக்கு பசிக்குதடா. நீ வருவியா மாட்டியா? ”
“ஒண்ணே ஒண்ணுதான்டா. இதைச் சொல்லவில்லை என்றால் தலை பாரமாக இருக்கும்டா. இப்ப அங்க நாம சாப்பிடப்போகும் கோரியன் ஃபிஷ்ஃப்ரை சாப்பிட்டு நான் செத்துட்டேனா.. அப்புறம் எப்போதும் இதை சொல்ல முடியாதுடா மச்சி! ”
கார்த்திக் எதைக் கொண்டு அவனை அடிக்கலாம் என்று யோசிக்க..
“மச்சி இந்த புமி உருண்டையில் விவேகாநந்தர் போல தியாகராஜ பாகவதர் போல ஒரு ஐன்ஸ்டீனைப் போல கார்த்திக் என்ற மனித உருவமும் இருந்தது என்று சொன்னால் ஐம்பது வருஷம் கழித்து யாரும் நம்ப மாட்டாங்கடா.. ” என்றான்.
“தாங்க்ஸ்டா மச்சி. தருண் பயல்கூட என்னை இவ்வளவு புகழ்ந்தது இல்லைடா. ஏன் அவனைச் சொல்லணும்? என் ஸ்ருதிகூட என்னை போற்றி புகழ்ந்தது கிடையாதுடா மச்சி. ” என்றவன் அவன் தோளைத் தடவிக் கொண்டே பிரசாத்தின் முதுகின் பின்னால் இருந்த ஐயர்ன் பாக்ஸை ஆன் செய்தான். பிரசாத் மேஜைமேல் வைத்திருந்த அவனது விலையுர்ந்த சட்டை மேல் ஐயர்ன் பாக்ஸை உட்காரவைத்தான்.
அழகான ‘ஓட்டோ’ சட்டையில் பரஸ்டீஜ் ஐயர்ன் பாக்ஸ் ஆழமான ஓட்டைகள் போட்டது.
கார்த்திக் மகாபலிபுரம் போய்விட்டு சென்னைக்கு திரும்பும்போதே ஸ்ருதியின் அப்பா இரண்டு முறை அழைத்துவிட்டார்.
“கார்த்திக் நம்ம கிரிஜாவை நாளை பெண் பார்க்க வர்றாங்கப்பா! ” என்றார்.
முக்கியமான விஷயங்கள் பேசும்போது கைபேசியின் அலைவரிசைகள் துண்டித்துக் கொள்வதுபோல் இப்போதும் துண்டித்துக்கொண்டது அவனது கைபேசி.
நெட்வொர்க் பிரச்சனை என்று கைபேசியை பாக்கெட்டில் வைக்கப் போனபோது மீண்டும் கைபேசி அழைத்தது.
“என்ன கார்த்திக் நெட்வொர்க் இல்லையா? பிசியா இருக்கியா? ”
“டிராஃபிக் ஜாமில் நிற்குறேன் சார். சொல்லுங்க. ”
“நாளை காலை பத்து மணிக்கு வீட்டிற்கு வந்திடு! என்னப்பா கேட்குதா? ”
அப்போதுதான் பச்சை சிக்னல் விழுந்தது.
“ம் கேட்குது சார். டிராஃபிக் ஜாம். இப்ப ரூட் கிளியர் ஆகிடுச்சு.
எவ்வளவு நாள் சிக்னல் கிடைக்க வெயிட் பண்ணிருக்கேன்? ” என்று அவன் உளறிய போது ஸ்ருதியின் தந்தை என்ன என்ன? என்று இருமுறை கூப்பிட்டார்.
கார்த்திக் பற்களை கடித்துக்கொண்டான். “ஒண்ணுமில்லை சார். ரோட் கிளியர் ஆகிடுச்சுன்னு சொன்னேன்.” என்றான்.
ஆனால் மறுநாள் மாப்பிள்ளையைப் பார்க்க அவன் போனபோது அவன் மனதில் கிரிஜா கல்யாணம் முடிந்ததாகவே கணக்கிட்டுக்கொண்டான்.
ஏனெனில் மாப்பிள்ளை சார் உட்காரவேண்டிய சேரில் உட்கார்ந்திருந்தது பிரசாத்.
பிரசாத்தை மறுக்க ஏதேனும் ஒரு காரணம் உண்டா? இல்லையே.. அதனால் அவன் வரையில் கிரிஜா கல்யாணம் முடிந்தது என்றே எண்ணினான்.
அப்படித்தான் ஸ்ருதியின் வீட்டில் அணைவரும் எண்ணினர்.
பரிசம் கொடுத்து நிச்சயம் செய்த நாளில் கார்த்திக்கும் பிரசாத்தும் எப்போதும்போல் வஞ்சம் இல்லாமல் அரட்டை அடித்தனர்.
நண்பர்கள் கூட்டம் விஷயம் அறிந்து டிரீட் கேட்டு நச்சரித்தது.
பிரசாத்துடன் கொஞ்சம் நிறைய அரட்டை. மற்றவர்களிடம் அவன் அவிழ்த்துவிட்ட தனது காதல் கதைகள் என்று அந்த டிரீட் கார்த்திக்கிற்கு நல்லபடியாகவே முடிந்தது.
வீடு வந்து ஐஸ் வாட்டரை எடுத்துக் குடித்தவன் ஆனந்த விகிடனைப் புரட்டிப்பார்த்தபடி கண் அயர்ந்து சோபாவிலேயே உறங்கினான்.
அவன் சட்டைக் காலரின் பட்டனை ஸ்ருதி அவிழ்த்துவிட்டாள். அவன் காரணம் கேட்டதற்கு “ரொம்ப இறுக்கமாக இருக்கு கார்த்திக். ” என்றது ஸ்ருதியின் குரல். அதன்பிறகு ஸ்ருதி ஏன் இங்கே வந்தாள் என்ற கேள்வி வந்தது. சரி ஏதோ முக்கிய காரணம் இருக்கும் என்று எண்ணியவன் அவள் கேள்விக்கு முதலில் பதில் சொன்னான். அவனது கேள்விக்கு பிறகு அவளே பதில் சொல்வாள் என்று நம்பினான்.
“ஓ! அப்படியா கழற்றிடு! நீ என்ன செய்தாலும் நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீ தான் நான் என்ன செய்தாலும் கத்துற! ”
“கார்த்திக் நம்ம கல்யாணம் பற்றிப் பேச உங்க அப்பாவை வரச்சொன்னாங்கப்பா!
“ஸ்ருதி நம்ப முடியலைடி. கிரிஜா கல்யாணத்திற்கு முன்பே நம்ம கல்யாணமா? ” என்றவன் அவளது மோதிர விரலை முதல் முதலாகத் தொட்டான்.
“கார்த்திக் தருண் வந்திடப்போறான். கையை விடு. ”
“அந்த பக்கி லேட் நைட்தான் வரும்! உன் விரலைத்தானே தொட்டேன்? சும்மா அலட்டிக்காத! ” என்றவன் அவனது மோதிர விரலில் இருந்த மோதிரத்தை எடுத்து அவள் விரலில் போட்டு விட்டான்.
மோதிரம் லேசாக அசைந்தபோதும் கீழே விழும் நிலையில் இல்லை.
“அழகாக இருக்கு கார்த்திக்! ”
“ஸ்ருதி நமக்கு இப்ப கிறிஸ்டியன் முறைப்படி கல்யாணம் முடிஞ்சிடுச்சு! ”
“நைட் எட்டு மணிக்கு எந்த சர்ச்சில் கல்யாணம் செய்வாங்களாம்? ”
“ஸ்ருதி அமேரிக்காவில் வாஷிங்டனில் இப்ப காலை பத்து மணி தெரியுமா? ”
“அதனால் ”
“நம்ம கல்யாணம் செல்லுபடியாகும்!
“அதனால்? ”
“அதனால் நான் இப்ப உன் உதட்டில் கைவைப்பேனாம்! ”
“நான் அடிப்பேனாம். ”
“அடிக்க வந்த கையை ஒரே கையால் அப்படியே மடக்கி என் முதுகுக்கு பின்னால் நான் கட்டி வைப்பேனாம் ”
“இன்னொரு கை இருக்கே? ”
“எனக்கும் இன்னொரு கை இருக்கே? ”
“போ கார்த்திக் நான் கிளம்புறேன்.. ” என்றவளை அணைத்து “ஆனால் உதடுகள் ஒன்றே ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு கஷ்டமாக இருக்குது ஸ்ருதி. ” என்று அவள் இதழ்நோக்கி குனிந்தான்.
மூன்றே நிமடங்கள்தான் சென்றிருக்கும். அப்போதுதான் தருண் குரல் கேட்டு கார்த்திக் தனது உதடுகளை தனது தேவதையிடமிருந்து பிரித்தெடுத்தான்.
“கார்த்திக் நீ எப்படா கழுதையாக மாறின? ” என்ற தருணின் கேலியை கோபமான பதிலுடன் திருப்பிக் கொடுக்க நினைத்தவன் அருகில் ஸ்ருதி இல்லாததைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தான்.
ஆனால் அவனைக் காட்டிலும் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றுகொண்டிருந்தான் தருண்.
ஏனென்றால் அவன் தனது சாவிகொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தபோது கார்த்திக் ஆனந்த விகடன் அட்டைப் படத்தை உதடுகளால் அளந்து கொண்டிருந்தான். நனைந்து கசங்கிய அட்டைப்படத்தை பார்த்தவாரே நின்று கொண்டிருந்தான் தருண்.
அவனிடம் கொடுக்க நினைத்த பதிலை மனதிற்குள்ளே இழுத்துக்கொண்டு அரவம் இன்றி அறைக்குள் புகுந்தான் கார்த்திக்.
கார்த்திக் தனிமையில் இருந்த போதெல்லாம் இதுதான் நடந்தது. ஆனந்த விகிடனில் ஆரம்பித்தது மறுநாள் அவள் விகடனில் தொடர்ந்தது. பக்தி விகடன் மட்டும்தான் அவனிடம் தப்பிப் பிழைத்தது.
தலையணைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். கல்போல இருந்த தலையணையாவும் அவன் அணைத்த இறுக்கம் தாங்காமல் இளைத்துப் போனது.
சில நேரங்கிளில் ஸ்ருதியின் புகைப்படத்தை தாங்கிய கைபேசியும் அவனது உதடுகளால் எச்சில் ஆனது.
மோகம் எத்தனையோ நாட்கள் என்று சொல்வார்களே? அத்தனை நாளும் நம்ம கார்த்திக் தாக்குபிடிப்பானா?
கொஞ்சம் கஷ்டம் தான் என்றது ஆனந்த விகடன்.
ரொம்பக் கஷ்டம் தான் என்றது அவள் விகடன்.
சான்ஸே இல்லை
Comments are closed here.