முட்டகண்ணி முழியழகி – 7
2984
1
போடா.. போடா.. புண்ணாக்கு..
போடாத தப்புக்கணக்கு….
என்றுப் பாடிக்கொண்டிருந்த ஷாலினியைச் சிந்தனையுடன் பார்த்தாள் கனலி. தோழியின் பார்வையை உணர்ந்தவள், “பங்கு.. இந்த சாங்கு இப்போ எதுக்குன்னு உன்னோட மைண்ட் வாய்ஸ் ஓடுது, சரியா..?” எனவும், பதிலேதும் சொல்லவில்லை கனலி, ஆனால் பார்வையையும் மாற்றவில்லை. தான் சொல்லாமல் விடமாட்டாள் என்பது புரிய, “அது வந்து பங்கு, நீ ஆசைப்பட்ட மாதிரியே இந்த மேரேஜ் ஸ்டாப் ஆகப்போகுது.. , நிலவன் ப்ரதரே நிறுத்தப் போறார்.” எனவும்,
“என்ன உளர்ற லூசு, நீ என்ன செஞ்சு வச்ச..” கடுப்பாய்க் கேட்க,
“லுக் பங்கு, நான் உன்னை சேஃப் பண்ணிருக்கேன் சேஃப், சோ நீ தேங்க்ஸ் சொல்லனும், அதிய விட்டுட்டு எதுக்கு இப்போ காண்டாகி கடுப்பாகுற, நல்லதுக்கே காலம் இல்ல,..”
“நீங்க பன்ன நல்லதை இன்னும் சொல்லவே இல்ல மேடம்..”
“எஸ்.. எஸ்… சொல்றேன்.. அதுவந்து பங்கு செந்தில் அண்ணன் உங்கூட பேசிட்டு இருந்தாங்க தானே.. அப்போ உங்க ரெண்டு பேரையும் நெடுமாறன் ப்ரோ முரைச்சு முரைச்சு பார்த்திங்க்…” – ஷாலினி
“முரைச்சு பார்த்திங்க்… தென்..” – கனலி
“தென்… என்ன தென்… என்னமோ அவரோட திங்க்ஸை யாரோ ஆட்டயப் போட்ட மாதிரி ஒரு லுக்… நான் பக்கத்துல நிக்குறேன், நோ ரெஸ்பான்ஸ்.. என்னடா இந்த நெடுமாறன் இப்படி லுக்கிங்க்ன்னு எனக்கு திங்கிங்க்.. நான் வேர ரொம்ப அறிவாளியா, டக்குன்னு ஒரு ப்ளான், பட்டுன்னு எக்ஸ்கியூட் பண்ணிட்டேன், சட்டுன்னு இடத்தைக் காலிபண்ணிட்டாரு ப்ரதர்..” – ஷாலினி
“ஓ… ம்ம்ம்… அப்படியே நீ எக்ஸ்கியூட் பன்ன ப்ளானையும் சொன்னா நல்லா இருக்கும்..” – கனலி.
“அப்கோர்ஸ்.. ப்ளானும் நல்ல ப்ளான்தான, நீ வேர அழுதுட்டே இருந்தியா, செந்திலண்ணா உன் கண்ணைத் துடைச்சு, துடைச்சு ஆறுதல் சொன்னாரா..? நான் அதைக் கேட்ச் பண்ணீ, ப்ரோக்கிட்ட கொஞ்சம் மாத்தி சொன்னேன், சொன்னதும், நம்பினது என் தப்புக் கிடையாது பங்கு, அடு எப்படி அலசி ஆராயாம நம்பலாம். இவனெல்லாம் எப்படி யுஎஸ் போய் கிழிச்சான் தெரியல..” – ஷாலினி.
“அவன் என்னமோ கிழிச்சிட்டு போகட்டும்… நீ என்ன கிழிச்சன்னு இன்னும் முழுசா சொல்லவே இல்ல..” பொறுமை பறக்கத் துவங்கியிருந்தது குரலில்.
அதைக் கண்டுகொள்ளாமல், “அது பங்கு, நீயும் செந்தில் அண்ணாவும் லவ்வர்ஸ்ன்னு..” காது கொய்யென்ற சத்தத்தில் பேசுவதை நிறுத்தியிருக்க, உக்கிரப்பாரவையுடன் முன்னில் நின்றிருந்தாள் கனலி.
“பங்கு..” – அதிர்ச்சியாய்ப் பார்த்தவளை
“உனக்கு இப்போ சங்குதாண்டி, என்ன பண்ணித் தொலைச்சிருக்க நீ… இன்னும் நான் அவங்கிட்ட பேசக்கூட இல்ல. அதுக்குல்ல இதெல்லாம் என்னக் கூத்து..” என்று பொரிந்தவளிடம்,
“உனக்கு, நல்லது பண்ணத்தான்..” என மீண்டும் ஆரம்பிக்க,
“என்ன நல்லது..? எது நல்லது..? என்னைப் பெத்தவங்கள விடவா மத்தவங்க நல்லது பண்ணிட போறாங்க..” என்றுக் கத்தியவள், “ரூமைவிட்டு வெளிய வந்த, உன்னை சாவடிச்சுடுவேண்டி…” என்றவள் ஷாலினியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் வெளியேறினாள்.
நாயகியும், சந்திராவும் பூஜையறையில் தாம்பூலம் பை போட்டுக் கொண்டிருக்க, நாயகியிடம் வந்தவள், “அத்த.. மாமா நம்பர் வேனும் கொடு..” என, அவரும் யோசிக்காமல் கடகடவென சாரதியின் நம்பரைச் சொல்ல, அவளும் அதைக் கவனிக்காமல், டைப் செய்ய, அது ‘சாம்ஸ்’ எனக்காட்ட, கடுப்பானவள், “ஏன் அத்த, உன்னையெல்லாம் என் மாமா கூட வச்சு, எப்படி இத்தன வருசமா குப்பைக் கொட்டுறார்..” கத்த,
“ஏன் பொம்மிம்மா… நம்பர் சரியாதான சொன்னேன்…” என பாவமாய் விளிக்க, அதில் சிரித்தவள்,
“நம்பர் சரிதான், ஆனா நான் கேட்டது உன் வீட்டுக்கார் நம்பர் இல்ல, உன் மகன் நம்பர்…” என்றாள் அதிரடியாய்.
அப்பாடா… ஒரு வழியா என் மருமகன் நம்பர் கேட்குறா, மனசு மாறுரதுக்குள்ள கொடுத்து விடுங்கண்ணி..” – சந்திரா.
“அட நெசமாவா… நீ மாமான்னு சொன்னதும், அவரைன்னு நினைச்சுட்டேன்.. அதோட நீ முன்னபின்ன என் பையனை மாமான்னு கூப்பிட்டுருந்தா எனக்குத் தெரியும். நீ என்னைக்கு இப்படி கூப்பிட்டுருக்க..” எனத் தோள்பட்டையில் இடித்தவள், “என் போன்ல இருக்கு எடுத்துக்கோ, என் போன்ல இருந்தேக் கூப்பிடு, உடனே எடுத்துடுவான். என்மேல அம்புட்டு பாசம்..” நயகி.
அவளும் நாயகியின் போனில் இருந்து அழைக்க, எடுக்கவில்லை. இரண்டு, மூன்று முறை அழைத்தவள், அப்போதும் அவன் எடுக்காமல் போகவும், தன் போனில் இருந்து அழைக்க, உடனே எடுத்து விட, நாயகியைப் பார்த்து ‘எதுக்கு இந்த ஓவர் பில்டப்.’ என்ற நக்கல் பார்வையைக் கொடுத்துக் கொண்டே, “நான் பொம்மி பேசுறேன்..” என அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
னாயகிக்கோ முகத்தில் அசடு வழிந்தது, ‘இப்படி இவ முன்னாடி மண்ண கவ்வ வச்சுட்டானே.’ என உள்ளுக்குள் நிலவனை வறுத்துவிட்டு, வெளியே “எதாச்சும் வேலையா இருந்திருப்பான், அதுதான்..” என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார். சந்திராவும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
“ஹலோ..ஹலோ..” – கனலி
“ம்ம்.. கேட்குது…” – நிலவன்.
“எங்க இருக்கீங்க..”
“வீட்ல..”
“ஏன் வீட்ல… மண்டபத்தை விட்டு போகக் கூடாதுன்னு சொல்லிருக்கு தான…”
“ம்ப்ச்… இப்போ என்ன வேனும் உனக்கு… சீக்கிரம் சொல்லு..”
“எதுக்கு இவ்ளோ கோபம்… எனக்கு உங்கள பார்க்கனும், பேசனும், மேல மொட்டமாடிகு வாங்க..”
“என்ன பேசனும், ஏன் பேசனும், அதெல்லாம் வர முடியாது போடி…”
“போடி சொன்ன, நானும் போடா சொல்வேன்… நீங்களா வந்துட்டா ஓகே.. அப்புறம் ஆள் வச்சு தூக்குவேன்..”
“கிழிச்ச.. அந்தக் குட்டிச்சாத்தானுங்கள நம்பி எந்த ப்ளானும் போடாத, எல்லாம் என் கூட உக்காந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுதுங்க..”
“என்ன… உன் கூட வா… எப்படி நம்புறது, நான் நம்பமாட்டேன்..”
“ஒரு நிமிசம் இரு,” என்றவன், காலைக் கட் செய்து, வீடியோ காலில் அழைத்து அவளது கூட்டாளிகளை காண்பிக்க, “எட்டப்பன் துரோகிஸ்..” என்றவளின் முகத்தில் எள்ளும், கொல்லும் வெடித்தது.
“எங்கிட்ட தனியா மாட்டுவானுங்க அப்போ இருக்கு, நீ வர்ரியா, இல்லையா..? இன்னும் 10 நிமிசத்துல வர்ர..” என்று போனை ஆஃப் செய்தாள்.
‘எதுக்கு வர சொல்றா.. ‘ என்ட்ரவனின் எண்ணம் சற்று முன் அவன் பார்த்தக் காட்சியிலும், ஷாலினிக் கூறியதிலும் வந்து நின்றது.
மண்டபத்தில் தன் அறைக்கு வந்தவனுக்கு பிஸினஸ் கால் ஒன்று அவனின் வெளினாட்டு ஆபிசில் இருந்து வர, அடைப் பேச மண்டபத்திலேயே அமைத்திருந்த பூங்காவிற்கு வந்தான்.
அப்போது அங்கு கனலி ஒரு புதியவனின் தோளில் சாய்ந்தபடி அழுதுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் உள்ளுக்குள் நெருப்பு எரிய, அது புகையாய் காது வழியே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஷாலினி, அவனின் பார்வையைக் கண்டு என்ன நினைத்தாளோ, அடுத்து அவன் திரும்பும் முன், “அவர்தான் கனலி லவ் பன்றவர், இவருக்காகத்தான் மேரேஜ் வேண்டாம்னு சொல்றா.. இப்பவும் அவளுக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்ல, சொன்னாலும் யாரும் புரிஞ்சுக்கல, நீங்களாச்சும் புரிஞ்சு, இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணிடுங்க,” என, எதையெதையோ உளறிவிட்டு ஓடிவிட்டாள்.
அவள் கூறியதை உண்மையென்று நம்பவும் முடியவில்லை, பொய்யென்று ஒதுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்ற குழம்பிய நிலையில் இருந்தவனுக்கு, நாயகியின் செல்லில் இருந்து அழைப்பு வர, எரிச்சலில் எடுக்காமல் விட்டான்.
ஆனால் அடுத்துக் கனலி அழைத்தும், அவள் கூறியதும் இவனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது. காலையில் இருந்து அனைவரும் அவனைக் குழப்பி, குழப்பி ஒருவழியாக்க, இப்போது அவன் முடிவெடுத்து, ஒருவேளை அவனுடன் ஓடிப்போய் விடுவாளோ..’ என்ற பயமும் வந்து, ‘இந்தக் கல்யாணமே வேண்டாம்..’ என அவள் முகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு வந்து விடலாம் என ஒரு முடிவெடுத்து மொட்டை மாடிக்குச் சென்றான்.
‘ஏண்டி… ராங்கி, நான் தான் உன்னை வர வேண்டாம்னு சொன்னேன்ல, கேட்டியா..? இப்போ அங்க வலிக்குது, இங்க வலிக்குது சொல்லி மனுசன டென்சன் பன்ற….” என்றபடியே மனைவியின் காலை எடுத்து மடியில் வைத்துப் பிடித்து விட்டவனின் குரலில் ஏகத்துக்கும் கொஞ்சல் வழிந்தது செந்திலிடம்.
“நான் எங்க வலிக்குது சொன்னேன், என்னை பிடிச்சிக்கிட்டே, உரசிக்கிட்டே இருக்க, உங்களுக்கு ஒரு சாக்கு..” என்றபடியே காலை மாத்திக் கொடுத்தாள் தமிழரசி.
“ஏன் மாமா கனலி மாப்பிள்ளை உங்ககிட்ட பேசினாரா..? பேசனும்னு சொன்னீங்களே..?”
“பேசனும்டா.. கல்யாணம் முடியட்டும் பேசுறேன். அவளுக்கு இங்க இருந்து போரதுக்கு கஷ்டம். அதோட இங்க இருக்குற இந்தப் பிரச்சினையும் பாதியில நிக்குதுன்னு கவலை வேற, நான் பார்த்துக்குறேன்னு சொன்னாலும், உங்களுக்கு அது இன்னும் கஷ்டம்ன்னு சொல்லி, அதுக்கும் ஃபீல் பன்றா.. என்ன பன்றது.”
“அந்த அண்ணனுக்கு கனலியைப் பிடிச்சிருக்குதான், அவர் பார்க்குற பார்வையிலேயேத் தெரியுது. இந்தப் புள்ளதான் கிறுக்குத் தனம் பன்னிட்டு இருக்கா..”
”அதை நீங்க சொல்றீங்களா மேடம்… நீங்க பன்னாத கிறுக்குத்தனமா அவ பன்றா.. விடு எல்லாம் சரியாகிடும்… காலம் சிறந்த மருந்து… அதுக்கு எல்லாவற்றையும் மாற்றக் கூடிய சக்தி இருக்கு.. அதை அவங்க சரி செய்துடுவாங்க.. இப்போ உனக்கு எப்படி இருக்கு, தூங்கலாமா..?”
“இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம், இங்க நல்லாருக்கே..”
“குளிரெடுக்க ஆரம்பிச்சிடுச்சிடி வீம்புக்காரி, உடனே மூஞ்சைத் தூக்காதே.. கொஞ்ச நேரம் தான், போயிடனும்..” என்றவன் அவளைத் தன் மடியில் படுக்க வைத்தான்.
“சரி.. சரி… ரொம்ப க்ளாஸ் எடுக்காதீங்க, அப்புறம் உள்ளே இருக்க என் பையனும் என்னை மாதிரி அலறப் போறான்..” எனப் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தபடியே அவளும் படுத்தாள்.
மேலே வந்தவன் அங்கு கண்ட காட்சிகளைப் பார்த்து ஒரு வழியாக அனைத்தையும் யூகித்து மனதில் இருந்த பாரமெல்லாம் அகன்று, கதவின் ஓரமிருந்த சுவரின் மேல் சாய்ந்து கண்களை மூடியிருந்தான். மனம் ஒரு நிலையில் ஆசுவாசமாகியிருந்தது.
ஷாலினி கூட கனலிக்காகத்தான் இப்படி பொய் சொல்லியிருப்பாள் என்றும் புரிகிறது அவனுக்கு. அப்போது தன் பெயருக்கு பொருத்தமான பார்வையுடன், கைகளைக் கட்டிக்கொண்டு அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள் கனலி.
உள்ளுணர்வு உந்துதலில் கண் திறந்தவன் கனல் பார்வையுடன் நின்றிருந்தவளை பார்த்து, அசடு வழிய… அவந்து தலையில் நங்கென்று கொட்டிவிட்டு ஓடப்பார்த்தவளின் செய்கையை சட்டென்று உணர்ந்தவன், ‘ஏய்’ என்று அலறியவன், ஓடுவதற்காக திரும்பியவளின் வலது கையைப் பிடித்து இழுக்க, அவன் இப்படி செய்வான் என்று எதிர்ப்பாராதவளும் அவனின் மேலேயே விழ, விழுந்தவளைப் பிடித்தவனின் கைகள் அவள் மேனியில் ஏடாகூடாமாக பட, அதில் சிலிர்த்தவள், அவளைத் தள்ளிவிட்டு ஓட எடுத்த முயற்சிகளை முறியடித்து, தன்னுள்ளே புதைத்துக் கொள்வது போல இறுக்கியிருந்தான். திமிறிக் கொண்டே இருந்தவளை “ப்ச்.. சும்மா இருடி, குட்டிப்பிசாசு..” என்று கிசுகிசுக்க, “என்னைக் குட்டிப்பிசாசு சொன்னா கொன்னுடுவேன்..” என்று அப்படியே அவனிள் ஒடுங்கினாள்.
நொடிகள் கழிந்த வேலையில் அருகே தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்க, உணர்வு பெற்று இருவரும் விலக, அங்கே நமட்டுச் சிரிப்புடன் தமிழும், செந்திலும்ம் நிற்க, அவ்விரவிலும் அவள் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.
நிலவனை நிமிர்ந்து பார்க்காமல், விலக்கி விட்டு அவள் ஓடிவிட, கனலியின் செயலில் மூவரும் வாய் விட்டு சிரித்தாலும், நிலவனின் முகத்திலும் வெட்கத்தின் சாயல்.
பெண்களின் வெட்கம் அழகு என்றால்.. ஆண்களின் வெட்கம் பேரழகுதான். வேறுபுறம் திரும்பி தலையை அழுந்தக் கோதியவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே தமிழும் அவ்விடத்தை விட்டு நகர, செந்திலும், நிலவனும் வெகுநேரம் பேசியபடியே அமர்ந்திருந்தனர்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Sema story. Next episode seekiram podunga