Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 25

அத்தியாயம் – 25

கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் பொறுப்புணர்ச்சியுடன், தன் போக்கிற்கு ஆடை அணிமணிகளை தேர்வுசெய்துக் கொண்டிருந்தாள் பூஜா. அவள் தேர்வு செய்யும் ஒவ்வொரு ஆடையின் விலையும் கிட்டத்தட்ட தன்னுடைய ஒருமாத சம்பளத்திற்கு இணையாக இருப்பதைக் கண்டு திகைத்த மிருதுளா தன்னுடைய மறுப்பை பலமுறை அவளிடம் வெளிப்படுத்தினாள்.

 

“உனக்கு இதெல்லாம் உண்மையாவே வேண்டாம்னா நீ அர்ஜூன்கிட்டயே சொல்லியிருக்கணும்” என்று முகத்தில் அறைவது போல் கூறி அவள் வாயை அடைத்துவிட்டாள் பூஜா.

 

அவள் கண்களில் நட்பையும் அன்பையும் மட்டுமே பார்த்துப் பழகியிருந்த மிருதுளா அவள் காட்டிய இந்த திடீர் கடுமையில் முகம் வாடிப்போனாள். தன் மீது ஏன் அவளுக்கு இத்தனை கோபம் என்று புரியவில்லை அவளுக்கு. அதன் பிறகு அவளிடம் பேசவே தயக்கமாக இருந்தது. ஆனால் அவள் அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் பொருட்களை பார்த்துக் கொண்டு அமைதியாகவும் இருக்க முடியவில்லை. அவள் வாரியிறைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பணமும் இரத்தம் தோய்ந்த பணம். அந்த பாவத்தின் சுமையை தன் தோள்மீது சுமக்க மிருதுளா தயாராக இல்லை. எனவே,

 

“இந்த மாதிரி ட்ரெஸ்ஸெல்லாம் நான் யூஸ் பண்ண மாட்டேன். தேவையில்லாம வாங்காதீங்க. ஒரு செட் ஜீன்சும் ஒரு நைட் ட்ரெஸ்ஸும் மட்டும் போதும்” என்று உறுதியாக கூறிவிட்டு தன்னுடைய விருப்பத்திற்கு தேர்வு செய்து கொண்டாள். இதற்கான பணத்தைக் கூட எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று தோன்றியது.

 

அவளை ஓரிரு நிமிடங்கள் வெறுமையாக பார்த்த பூஜா வேறு எதுவும் சொல்லாமல் பணம் செலுத்துமிடத்தை நோக்கிச் சென்றாள். வரிசை நீளமாக இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த மிருதுளா, “ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்துடறேன்” என்றாள் பூஜாவிடம் அடக்கமாக. அவளும் விகல்பமில்லாமல் சரி என்று தலையை அசைத்தாள்.

 

கடந்த முறை அர்ஜுனோடு மருத்துவமனைக்கு வந்திருந்த போது செய்தது போலவே இன்றும் கழிவறைக்கு செல்லும் சாக்கில் ஒளிந்து மறைந்து ஓசி போனை கடன்வாங்கி தாயின் அலைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்றாள். அன்று போலவே இன்றும் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்தாள் மிருதுளா.

 

பூஜா பில் கவுண்டரிலிருந்து வெளியே வந்து இவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிளாஸ்டிக் பைகளை பிடித்திருந்தாள். கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதும், மிருதுளா எங்காவது தென்படுகிறாளா என்று கூட்டத்திற்குள் பார்வையால் துழாவுவதுமாக சற்று பரபரப்புடன் காணப்பட்டாள்.

 

அவசரமாக அவளிடம் ஓடிச் சென்ற மிருதுளா, “சாரி, லேட் பண்ணிட்டேனா?” என்றாள் சங்கடத்துடன்.

 

“நா உடனே ஹாஸ்ப்பிட்டல் போயாகணும். சீக்கிரம் வா” என்று அவள் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏறிய பூஜா, உடனடியாக இஞ்சினை ஸ்டார்ட் செய்து லாவகமாக டிராபிக்கில் புகுந்து பாய்ந்தாள்.

 

“என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” – அக்கறையுடன் கேட்டாள் மிருதுளா.

 

“ஒரு சென்சிட்டிவ் கேஸ்… சின்ன பொண்ணு… நான் தான் பார்த்துக்கிட்டிருக்கேன். திடீர்ன்னு அக்ரஸிவா ஆயிட்டாளாம். டியூட்டி டாக்டருக்கு ஹாண்டில் பண்ண முடியல. நா அங்க இருந்திருக்கணும். அதுதான் என்னோட முதல் பிரையாரிட்டி”

 

“ஐம் சாரி… என்னாலதான் உங்களால ஹாஸ்ப்பிட்டல்ல இருக்க முடியாம ஆயிடிச்சு” – வருத்தப்பட்டாள் மிருதுளா.

 

பூஜாவின் முகம் இறுகியது. எவ்வாவு முயன்றும் அவளால் உள்ளே பொங்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

“நா அர்ஜுனுக்காகத்தான் வந்தேன்” என்றாள் பட்டென்று.

 

இப்படி சட்டென்று முகத்தை முறித்துப் பேசும் பேசும் பெண் அல்ல பூஜா. குறைந்தபட்சம் மிருதுளாவிற்கு தெரிந்தவரை. ஆனால் இன்று ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்! – மிருதுளாவின் பார்வை அவள் முகத்தை படிக்க முயன்றது. ஆனால் பலனில்லை. சாலையை வெறித்தபடி இறுகியிருக்கும் முகத்தில் அவளால் எதை படித்துவிட முடியும்?

 

****************

 

அந்த பெண்ணுக்கு அதிகபட்சம் பதினேழு பதினெட்டு வயதுதான் இருக்கும். வெறி பிடித்தவள் போல் கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்து ரகளை செய்து கொண்டிருந்தாள். அந்த அறை முழுவதும் உடைந்த பொருட்களும் காகிதங்களும் சிதறிக்கிடந்தன. யாருக்கும் அவளிடம் நெருங்க முடியவில்லை. அவள் உடலில் நிறைய காயங்கள் தெரிந்தன. அவள் கண்களில் கரைபுரண்டோடும் கண்ணீரைக் கண்டு மிருதுளாவின் மனம் கசிந்தது. ஏதோ பாதிப்பில் அவள் மனம் புரண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.

 

அந்த பெண்ணை பூஜா மிக அழகாக கையாண்டாள். பேச்சு கொடுத்துக் கொண்டே அவளிடம் நெருங்கினாள்.

 

“வராத… கிட்ட வராத” என்று அலறியபடி கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கியெறிந்தபடி விலகிச் செல்லும் அந்த பெண்ணிடம், கனிந்த பார்வையோடும் இதமான வார்த்தைகளோடும் நெருங்கினாள் பூஜா.

 

அதுவரை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த அந்த பெண், பூஜாவின் அரவணைப்பில் மெல்ல மெல்ல அமைதியானாள். மூத்த சகோதரியின் – நெருங்கிய தோழியின் தோளில் சாய்வது போல் பூஜாவின் தோளில் சாய்ந்து விம்மி வெடித்து அழுதாள். அவள் முதுகை வருடி, தலையை கோதி ஆறுதல் மொழி பேசினாள் பூஜா.

 

விலகி நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “என்ன ஆச்சு அந்த பொண்ணுக்கு?” என்றாள் அருகில் நின்ற செவிலியரிடம்.

 

ஓரிரு நொடிகள் அமைதியாக நின்ற செவிலியரின் வாயிலிருந்து மெல்ல கசிந்தன அந்த வார்த்தைகள்.

 

“எங்க கிராமத்து பொண்ணுதான். ஏழை குடும்பம்… வேலைக்கு போயிட்டு ராத்திரி தனியா வரும் போது…” பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் தொண்டை அடைத்தது.

 

“வரும் போது?” – மிருதுளாவின் அடிவயிற்றிற்குள் ஏதோ ஒரு விசித்திர உணர்வு – பயமும் பரிதவிப்பும் கலந்த பயங்கர உணர்வு. ‘அப்படி எதுவும் இருக்கக் கூடாது கடவுளே’ என்று அவள் மானசீகமாக மன்றாடிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய பயத்தை உறுதி செய்தாள் செவிலிய சகோதரி.

 

“மனுஷ மிருகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டாம்மா…” – இதுவாகத்தான் இருக்கும் என்று ஊகித்துவிட்டாலும், தன் ஊகம் பொய்த்துப்போய்விட வேண்டும் என்றே அவள் மனம் விரும்பியது. ஆனால் இங்கே பொய்த்துப்போனது அவளுடைய விருப்பம்தான்.

 

விட்டுவிட்டு தோன்றும் விம்மலுடன் பூஜாவின் தோளில் சாய்ந்து கிடந்த அந்த சிறு பெண்ணை ஏறிட்டாள் மிருதுளா. கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

“போலீஸ் ஏதாவது ஆக்ஷன் எடுத்தாங்களா?” – வலுவற்ற குரலில் கேட்டாள்.

 

“கோர்த்தா ஆளுங்கமேல லோக்கல் போலீஸ் கைவைக்க மாட்டாங்கம்மா” – அமிலம் பாய்ந்தது அவள் செவிகளில். விருட்டென்று அவள் பக்கம் திரும்பினாள்.

 

“என்ன! கோ…கோர்த்தா ஆளா!” – இதயம் தாறுமாறாக துடித்தது. ஏனென்று புரியாத கோபம்… ஆத்திரம்… அவளை முழுமையாக ஆட்கொண்டது.

 

கோர்த்தா கொலைகார கூட்டம் என்று தெரியும். ஆனால் பெண்களை நாசம் செய்யும் நாசக்காரக் கூட்டமாகவும் இருக்கும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் காட்டுமிராண்டிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு மனிதன் துள்ளத்துடிக்க இந்த கொடூரர்களின் கையால் கொல்லப்பட்டதை கண்ணால் கண்ட பிறகும் இவர்களிடம் நற்பண்பை எப்படி எதிர்பார்த்தாள்! ஐயோ! கடவுளே! – அவள் மனம் தவித்தது. அந்த பெண்ணிற்காக… அந்த கொடூரன் கோர்த்தாவின் ஆள் என்பதற்காக… அவனுக்கு அர்ஜுன் அடைக்கலம் கொடுத்திருக்கிறான் என்பதற்காக… நடந்த அனைத்திற்கும் தானே காரணம் என்பது போல் குன்றினாள். அவள் மனதில் அர்ஜுன் ஹோத்ராவின் மீது துளிர்விட்டிருந்த அன்பு அப்படி அவளை குன்றச்செய்தது.

 

அவளுடைய அதிர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு நர்ஸ் ஏதோ விளக்கம் கூற எத்தனிக்கையில், பூஜா அவளை உள்ளே அழைத்தாள். இவளுடைய உதவி அவளுக்கு தேவைப்பட்டது. உள்ளே சென்ற செவிலியர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் இரத்த அழுத்தத்தை சோதிப்பதையும், ஏதோ மருந்தை சிரஞ்சில் ஏற்றி பூஜாவின் கையில் கொடுப்பதையும் பார்த்தபடி அசையாமல் நின்றாள் மிருதுளா.

 

அடுத்த நொடியே சிரஞ்சில் இருந்த மருந்து அந்த பெண்ணின் உடலில் பாய்ந்தது. அதற்கடுத்த சில நிமிடங்களில் அவள் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

 

வந்த வேலை முடிந்ததும் மிருதுளாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த போது, “அர்ஜுன்!” என்று முணுமுணுத்தாள் பூஜா.

 

‘அர்ஜுனா!’ – சட்டென்று மிருதுளாவின் பார்வை பூஜாவின் பார்வையை பின்தொடர்ந்து. அங்கே பார்க்கிங்கில் அர்ஜுனின் கார் நின்றது… உள்ளே அவனும் அமர்ந்திருந்தான். மிருதுளாவின் உடல் வெடவெடத்தது. பயத்தில் அல்ல… கோபத்தில் – வெறுப்பில்… கால்கள் பின்னிக்கொள்ள நடக்கமுடியாமல் பூஜாவை பின்தொடர்ந்தாள்.

 

“அர்ஜுன்! என்ன இங்க?” – அருகில் சென்று விசாரித்தாள் பூஜா.

 

“டேவிட் மேல ஒரு அட்டாக் ஆயிடிச்சு… ஹாஸ்ப்பிட்டள்ள இருக்கான். பார்க்க வந்தேன்”

 

“அட்டாக்கா! என்ன ஆச்சு? பயப்பட ஒன்னும் இல்லையே? இங்கேயா அட்மிட் பண்ணியிருக்கீங்க?” – பூஜா பதட்டத்துடன் வரிசையாக கேள்விகளை அடுக்க, மிருதுளாவோ இறுகி நின்றாள்.

 

அவளுடைய பார்வை தன் பக்கம் திரும்பவே இல்லை என்பதை கவனித்தபடியே, “இல்லல்ல… இங்க இல்ல… வெஸ்ட் வுட்ல தனியா போயி மாட்டிக்கிட்டான். அங்கேயே ஒரு ஹாஸ்ப்பிட்டள்ள அட்மிட் பண்ணியிருக்கோம். கொஞ்சம் பிளட் லாஸ் ஆயிருக்கு. மத்தபடி பெருசா பிரச்சனை ஒன்னும் இல்ல. நல்லா இருக்கான்” என்றான்.

 

“தேங்க் காட்… யாரு அட்டாக் பண்ணினது?”

 

“சீக்கிரம் தெரிஞ்சிடும்…” – மிருதுளாவை துளைத்து அவன் பார்வை.

 

“ம்ம்ம்… எனக்கு இங்க ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துடுச்சு. அதான்…” – அவள் முடிப்பதற்குள், அனைத்தும் தெரிந்தவனாக, “ஐ நோ…” என்றான்.

 

அவனுடைய குறிப்புப் பேச்சு மிருதுளாவின் கவனத்தில் பதியவில்லை. ஆனால் கண்காணிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பூஜாவிற்கு நன்றாகவே புரிந்தது.

 

“நீ போயி உன்னோட வேலையை கவனி. நா மிருதுளாவை கூட்டிட்டு போயிக்கிறேன்” என்று பூஜாவிடம் கூறிவிட்டு மிருதுளாவை பார்த்தான். அவள் உடல் மேலும் இறுகியது. முகத்தில் கடுமை கூடியது.

 

“கெட் இன் மிருதுளா…” – இயல்பாக அழைத்தான்.

 

துஷ்டனை கண்டால் தூர விலகு என்பார்கள். ஆனால் அவளுடைய துரதிஷ்டம், விலகிச் செல்ல முடியாத அளவிற்கு துஷ்டன் அவளை துரத்திக் கொண்டே இருக்கிறான்.

 

அவனிடம் வாதம் செய்யவோ வழக்காடவோ அவள் விரும்பவில்லை. எனவே வெறுப்பை விழுங்கி கொண்டு, பூஜாவிடம் தலையசைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

 

வெகுநேரம்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கார் நகரத்தை கடந்து காட்டு வழியில் புதுந்து எஸ்டேட்டை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், “என்ன விஷயம்?” என்றான் அர்ஜுன்.

 

மிருதுளா பதில் சொல்லவில்லை. ஜன்னல் பக்கம் பார்வையை பதித்திருந்தவள் அவன் பேசியதே கேட்காதது போல் அமர்ந்திருந்தாள்.

 

“மிருதுளா” – அழுத்தமாக அழைத்தான். இந்த முறை அவளால் கேட்காதது போல் பாசாங்கு செய்ய முடியவில்லை. தலையை மட்டும் அவன் பக்கம் திருப்பினாள். ஆனால் பார்வை உயரவில்லை. அவன் முகத்தை ஏறிட்டு பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.

 

“என்ன ஆச்சு?” – இணக்கமாகக் கேட்டான்.

 

அந்த குரலும்… பேச்சும்… பற்றிக்கொண்டு வந்தது. இப்படி பேசிப் பேசியே அவள் மதியை மழுங்கடித்துவிட்டானே! ஆத்திரம் பொங்கியது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “நத்திங்” என்று கூறிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

அந்த பெண்ணின் நிலையை எண்ணி மனம் தவித்தது. தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி கண்ணை கரித்தது. உதட்டை அழுந்த மூடிக் கொண்டு ஆத்திரத்தை விழுங்கினாள்.

 

அவளுடைய உடல்மொழியும் கலங்கிய முகமும் ஏதோ சரியில்லை என்று உணர்த்த அர்ஜுன் காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

 

அதுவரை இல்லாத பயம் சட்டென்று தொற்றிக்கொள்ள உடனே அவன் பக்கம் திரும்பினாள் மிருதுளா.

 

‘ஆள் நடமாட்டமில்லாத சாலை… எதற்கு காரை நிறுத்தினான்… என்ன செய்ய போகிறான்…’ – அவன் மீதே சந்தேகம் எழுந்தது. பெண்ணை சீரழித்தவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனை உத்தமன் என்ற எண்ண தோன்றும். கோபத்தை மிஞ்சிய பயம்… பயத்தை மிஞ்சிய கோபம் என்று இரு உணர்வுகளும் சரிக்கு சரியாய் போட்டிப்போட்டுக் கொண்டு மேலெழுந்தன.

 

அவளுடைய விசித்திர முகபாவம் அவனை குழப்பியது. இதற்கு முன் அவளை இப்படி ஒரு நிலையில் அவன் பார்த்ததே இல்லை.

 

“மிருதுளா. நீ ஏதோ பிரச்சனையில இருக்கேன்னு தெரியுது. என்னன்னு சொன்னாத்தானே என்னால ஏதாவது செய்ய முடியும். ப்ளீஸ் ஸ்பீக் அவுட்…” – ஆதரவாக அவள் கையை பற்றினான்.

 

அவ்வளவுதான்… அதுவரை உள்ளே பொங்கி கொண்டிருந்த வெடித்துக் கொண்டு வெளியேறியது.

 

“ஏ விடு என்னைய…” என்று வெடுக்கென்று அவன் கையை உதறிவிட்டு தனக்குள் ஒடுங்கினாள்.

 

சட்டென்று அவள் தன்னை ஒருமையில் விளித்ததை உணர்ந்து, “எக்ஸ்கியூஸ் மீ” என்றான் கனத்த குரலில். நொடியில் அவன் முகமே மாறிவிட்டது.

 

நொடி பொழுதில் எழுந்த கோபத்தில் வார்த்தை வெடித்துச் சிதறிவிட்டதே ஒழிய இப்படிப்பட்ட இடத்தில் அவனுடைய கோபத்தை தூண்டிவிட்டு அந்த கோபத்திற்கு அதற்கு இரையாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. எனவே, “ப்ளீஸ்… காரை எடுங்க” என்றாள் உடனே குரலை தனித்து. அதை சொல்லும் பொழுது அவள் குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது.

 

“என்ன சொன்ன இப்போ?” –

 

“கா…காரை ஸ்டார்ட்” – “அதுக்கு முன்னாடி” – அவளை இடைவெட்டி அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.

 

“அது… ஐம்… ஐம் ஜஸ்ட்…” – எதுவும் சொல்ல முடியாமல் தவித்தாள். கண்ணீர் கரைபுரண்டது.

 

“என்ன நெனச்ச என்னை பத்தி… தேர்ட் ரேட் பொறுக்கின்னா? ம்ம்ம்?” – குரலை உயர்த்தி அதட்டினான். கோபத்தில் தகித்தது முகம்.

 

‘தேர்ட் ரேட் பொறுக்கியோட கூட்டாளி… ரேப்பிஸ்டுக்கு ஹெல்ப் பண்ணின லோஃபர்’ – மனதில் நினைப்பதை வெளிப்படுத்த முடியாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

“உன்கிட்ட தப்பா நடக்கணும்னு நெனச்சிருந்தா நா இவ்வளவெல்லாம் சிரமப்படணும்ன்னா நினைக்கிற? நீ இன்னமும் என் வீட்ல என் கண்ட்ரோல தான் இருக்க. நியாபகம் இருக்குல்ல?” – இந்த குரல் முதல் நாள் அவளை மிரட்டிய குரல். பேஸ்மெண்டில் அவளை அச்சுறுத்திய குரல்.

 

மிருதுளாவின் இதயம் தறிகெட்டு துடித்தது. சுவாசம் சீரற்று ஏறி இறங்கியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் பல்கலைக் கடித்தான்.

 

‘ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி முழிக்கறத பாரு…’ – கடுமையான கோபமிருந்தாலும், மிரண்ட மான்குட்டி போல் திருதிருவென்று விழிப்பவளை மேலும் கலவரப்படுத்த முடியாமல் காரை எடுத்தான். ஸ்டியரிங் வீலை பற்றியிருந்த விதமும், அக்சிலேட்டரில் கொடுத்த அழுத்தமும் அவனுடைய கோபத்தின் அளவை படம்போட்டுக்காட்ட, செய்துவைத்த சிலை போல் அசையாமல் அமர்ந்திருந்தாள் மிருதுளா. அடுத்துவந்த பத்து நிமிட பயணமும் அமைதியாகவே கழிந்தது.

 

*******************

 

மிருதுளா கண்விழிக்கும் போது மாலை ஐந்து மணியிருக்கும். அந்த பெண்ணை பற்றி சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். உறங்கி எழுந்ததாலோ என்னவோ மனம் சற்று அமைதியடைந்திருந்தது. எழுந்து குளியலறைக்குச் சென்று ஒரு குட்டி குளியல் போட்டுவிட்டு வெளியே வந்தாள். அர்ஜுன் ஹோத்ரா என்னும் அரக்கனின் தயவில் வாங்கிய புது ஆடையை தொட்டுப் பார்க்கவே பிடிக்கவில்லை. பழைய ஆடையிலேயே ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டாள். இதுவும் அவனுடைய ரெத்தம் தோய்ந்த பணத்தின் பாவம் தான். ஆனால் வேறு வழியேயில்லை. இங்கிருந்து வெளியேறும்வரை… அல்லது அந்த முயற்சியில் உயிர்போகும் வரை… இதை சகித்துத்தான் ஆக வேண்டும். தலைவாரி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து ஒட்டினாள். காபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. ‘இங்கே இருப்பது காப்பியா… அல்லது அப்பாவிகளின் இரத்தமா!’ – மனசாட்சி கேள்விகேட்டது. ‘கடவுளே!’ – தலையை உலுக்கினாள். பூட்டிய அறைக்குள் மூச்சுவிடவே சிரமமாக இருப்பது போல் தோன்றியது. கீழே இறங்கி தோட்டத்திற்கு வந்தாள்.

 

“மிருது…” – மகிழ்ச்சி பொங்க அவளை எதிர்கொண்டாள் சுமன்.

 

அவள் மீது மிருதுளாவிற்கு கோபம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவள் இப்படி அன்போடு அழைக்கும் போது அவளால் முகத்தை திருப்பிக்கொள்ள முடியவில்லை. அதோடு முதலில் இருந்த கோபமும் இப்போது வெகுவாய் குறைந்துவிட்டதால் அவளும் தோழியைப் பார்த்து இயல்பாக புன்னகைத்தாள்.

 

இருவரும் பழைய நட்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சுஜித்தின் தற்போதைய ஆக்ரோஷ மனநிலையையும், அதனால் அவனுக்கும் தனக்கும் அவ்வப்போது ஏற்படுகின்ற மனக்கசப்பையும் கூறி வருத்தப்பட்டாள் சுமன்.

 

ஏற்கனவே அவள் மனம் அர்ஜுனையும் அவனுடைய கூட்டத்தையும் எண்ணி எரிந்துக் கொண்டிருந்தது. அந்த தீயில் எண்ணையை ஊற்றுவது போல் இவள் சுஜித்திற்காக உருகியதும் கடுங்கோபத்துடன் பொங்கிவிட்டாள் மிருதுளா.

 

“சுஜித்… சுஜித்… சுஜித்… இதை தவிர வேற எதுவுமே உனக்கு தெரியாதா? கண்ணு இருந்தும் ஏன் இப்படி குருடா இருக்க சுமன்? இங்க இருக்க யாரும் மனுஷங்களே இல்ல… அனிமல்ஸ்… புரியுதா உனக்கு?” – குபீரென்று சிவந்துவிட்ட முகத்துடன் கண்களை உருட்டி ஆக்ரோஷமாக சீறும் தோழியைக் கண்டு திகைத்த சுமன்,

 

“என்ன…? என்ன ஆச்சு?” என்றாள் எதுவும் புரியாமல் விழித்தபடி.

 

“ஒரு சின்ன பொண்ணு… பதினெட்டு வயசுகூட ஆகாத சி…ன்…ன பொண்ணு… இதே கோர்த்தா குரூப்ல இருக்க ஒருத்தன் அவளை என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா உனக்கு? அவனை இந்த கேங், சட்டத்திலிருந்து பத்திரமா சேவ் பண்ணியிருக்கு தெரியுமா உனக்கு? இப்படி ஒரு மட்டரகமான கேங்ல இருக்க ஒருத்தனுக்காக நீ… ச்சே… ப்ளீஸ்… யோசி… முழிச்சுக்க… இந்த சகதியிலேருந்து வெளியேற ட்ரை பண்ணு. ஜஸ்ட் ட்ரை டு கெட் அவுட் ஆஃப் திஸ் ஹெல் டாமிட்…” – வார்த்தைகள் வெறுப்புடன் வெளியே வந்து விழுந்தன.

 

“நோ… நீ தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்க மிருது”

 

“தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கேனா! சீரியஸ்லி!!! எவ்வளவு கூலா பேசுற நீ! ஒரு பொண்ணு பலியாயிருக்கா… ரேப்பிஸ்ட் ஒரு கோர்த்தா மேன்… போலீஸ் அவன் மேல ஆக்ஷன் எடுக்கல… காரணம் கோர்த்தா ஹெட்… இதெல்லாம் இல்லைன்னு சொல்றியா நீ? ஹாங்…?”

 

“இல்ல… நா அப்படி சொல்லல…”

 

“வேற? வேற எப்படி சொல்ற? உன்னோட நியாயம் எனக்கு புரியவே இல்ல… ஒரு பொண்ணா இருந்துகிட்டு இதை எப்படி நீ நியாயப்படுத்துவ? ஹொவ் குட் யு?” – கொந்தளித்தாள்.

 

“போலீஸ்கிட்ட மாட்டினா பெருசா என்ன ஆயிடும்னு நினைக்கிற நீ? ஆறு மாசமோ ஒரு வருஷமோ… திரும்ப வெளியில வந்து அதையேதான் செய்வான். ஆனா இங்க அப்படியெல்லாம் இல்ல. இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணிட்டா அவ்வளவுதான்… முடிஞ்சுது கதை” – அவள் என்ன சொல்கிறாள் என்று மிருதுளாவிற்கு புரிந்தது. ஆனால் நம்ப முடியவில்லை.

 

“நோ… நா உன்ன நம்ப மாட்டேன். நீ கோர்த்தாவுக்கு பரிஞ்சு பேசுற… கண்மூடித்தனமான சப்போர்ட் பண்ற. இது கொலைகார கூட்டம். இதுங்களுக்கு பிரின்சிபல்ஸ் எல்லாம் இருக்கவே முடியாது. எதையும் செய்ற மிருகங்கள். லிமிட்ஸே இல்லாத மான்ஸ்டர்ஸ்…” – வெறுப்புடன் முகத்தை சுளித்தாள்.

 

“இங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பிரின்சிபல்ஸ் இருக்கு மிருதுளா. ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதை தாண்டி ஒரு இம்மி நகர்ந்தாலும் தண்டனை ரொம்ப பெருசா இருக்கும்” – அழுத்தமாக கூறினாள் சுமன்.

 

“ஓஹோ! அப்படி என்ன பெரிய தண்டனையை அந்த ராட்சசனுக்கு கொடுத்துட்டீங்க?” – நக்கலாகக் கேட்டாள்.

 

“சாவு… கோரமான சாவு…”

 

“வாட்!”

 

“எஸ்… அவன் இப்போ உயிரோட இல்ல…”

 

மிருதுளாவிற்கு பேச்சு வரவில்லை. தோழியின் முகத்தை பார்த்தபடியே திகைத்து நின்றாள்.

 

“நேத்து காலையில தோட்டத்துல ஒரு சம்பவம் நடந்தது. பார்த்தியா நீ?”

 

மிருதுளாவின் புருவம் சுருங்கியது. ஆம் என்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

 

“அவன்தான்…”

 

“கடவுளே!” – கண்களை இறுக்கமாக மூடினாள். “ஹி இஸ் நாட் எ ப்ளடி டீனேஜர். அவ அப்பா வயசு இருக்கும் அவனுக்கு. அவன் எப்படி!” – மிருதுளாவின் மனம் கொதித்தது… கண்களில் கண்ணீர் கசிந்தது.

 

“இனி கோர்த்தால இருக்க யாருமே இப்படி ஒரு தப்பை செய்ய துணியமாட்டாங்க. அதனாலதான் அவனை பேஸ்மெண்டுக்கு கொண்டுபோகாம பப்லிக்கா… எல்லாருக்கும் முன்னாடி வச்சு முடிச்சாங்க. அது அவனுக்கு தண்டனை… மத்தவங்களுக்கு எச்சரிக்கை…”

 

‘அவன் வாழ தகுதியில்லாதவன்’ – அர்ஜுன் ஹோத்ராவின் குரல் அவள் செவியில் எதிரொலித்தது. அவளுடைய கொதிப்பு படிப்படியாய் அடங்கி உள்ளே ஒருவித திருப்தி படர்ந்தது. “அப்படி ஒரு சாவு அவனுக்கு தேவைதான்… ஹி டிஸர்வ் இட்…” – முதல் முறையாக ஒரு மனிதனின் கொடூர மரணம் அவளை மகிழ்வித்தது. இது குரூரமா! அரக்க குணமா! தெரியவில்லை. ஆனால் அவள் மனம் மகிழ்ந்தது.




10 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sandhana says:

    Can’t wait ! Please upload faster next nithya ma’am


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Arhitha says:

    Awesome epi sis . Please give regular updates ya !


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Enna mrithu baby. Neeyum jothila aikyam aaguraa pola therithe


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Emily Peter says:

    Arjun meethu Mirudhula virku konjame konjam pasam yetti parkkuma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Finally nithya epi potutenga thank you ma ! Inime daily updates kudunga ma wait panna ve mudila


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Hey Arjun Ava yaarunnu unakku terinthum konjama miruvirkum sollifu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha says:

    Nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Wow sis interesting ud👏 I think Mila Nayak family ah erupalo😴 anathapurla Ava save Panna try pannavan kuda evala parthu sock aaki etho munumunuthan… Athu aju Ku therinchutucho.. mm Mila amma phone enn reach aaga mattutu… Therinchuka eagerly waiting for your next ud 👍 keep rocking… Ud koduthathuku remba thanks sis
    .. superb ud….


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ha ha… Super Samri… Thank you so much… 🙂

You cannot copy content of this page